PDA

View Full Version : முத்தம்



ஆதவா
13-01-2007, 01:24 AM
பழைய கவிதைகளில் ஒன்று.... முத்தம்.
முத்தம் ஒன்றும் அபாயகரமானதோ அல்லது அசிங்கமானதோ அல்ல. உணர்ச்சிகளின் வெளிப்பாடு. மன அலைகளின் மோதல். அன்பு ஆரோக்கியத்தின் தளபதி.
சிலர் வெறுக்கவும் செய்கிறார்கள்..... முத்தங்களைப் பெறாதவர்கள்..

இது காதலன் காதலியின் முத்தம்

சத்த மொன்றில்லாமல்
நின்றன் நாவிலே
நித்தம் நானெழுதும்
கவிதை இந்த
முத்தம்.

புத்தம் புதிதாய் பூத்திருக்கும்
ரோஜா போல் உன்னிதழ்
புத்துணர்ச்சியாய் பொங்கும்
காரண மென்
முத்தம்

கத்தும் காக முதல்
பிளிரும் யானை வரை
மொத்த முள்ள உயிரும்
செய்யும் காதலில்
முத்தம்

ரத்தம் கலந்துண்ணும் பல
தீவிர வாதிகள் திருந்த,
யுத்த மொன்று மில்லாமல்
செய்யும் காதல் தரும்
முத்தம்

சத்தாய் அமையுமென் மேனிக்கு
இனி நீ நின்னிதழால்
பித்தம் தலைக்கேறு முன்
தந்துவிடு எனக்கொரு
முத்தம்

படித்துவிட்டு எனக்கு வார்த்தை முத்தம் கொடுங்கள்

ஷீ-நிசி
13-01-2007, 06:25 AM
முத்தத்தை எவ்வளவு விளக்கினாலும் முடியாத்து.. உணர்வின் வெளிப்பாட்டில் மனிதன் கண்டுபிடித்த ஓர் உன்னதம்.. ஊடலின் தலைப்பு முத்தம்.... அருமை ஆதவா.. உங்க கவிதையெல்லாம் ஒரு மார்க்கமாவே இருக்கே..

டும்.. டும்.. டும்..

ஆதவா
13-01-2007, 01:17 PM
ஹி ஹி ஹி இல்லீங்க ஷீ... பழைய கவிதைப்பா!! சூடோட சூடா கொடுத்துட்டேன்பா!!...

நன்றி..

மதுரகன்
13-01-2007, 03:45 PM
எனக்கும் ஒரு சந்தேகம் ஷீ உறுதி செய்துவிட்டார் ஆதவா...
எப்படியாகிலும்

சத்த மொன்றில்லாமல்
நின்றன் நாவிலே
நித்தம் நானெழுதும்
கவிதை இந்த
முத்தம்
வார்த்தைகள் அற்புதம்....

முத்தம் ஆயுளை அதிகரிப்பதாக வேறு ஆங்கில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்...

ஆதவா
15-01-2007, 04:13 AM
எனக்கும் ஒரு சந்தேகம் ஷீ உறுதி செய்துவிட்டார் ஆதவா...
எப்படியாகிலும்

வார்த்தைகள் அற்புதம்....

முத்தம் ஆயுளை அதிகரிப்பதாக வேறு ஆங்கில விஞ்ஞானிகள் கூறுகின்றனர்...

நன்றி கலந்த முத்தம் மது.......

thoorigai
15-01-2007, 07:30 AM
ஆதவா,

உங்கள் முத்தம் பற்றிய சத்தம் அருமை.

நித்தம் உண்டா இந்த (கவிதைச்) சத்தம்!

ஆதவா
15-01-2007, 02:36 PM
ஆதவா,

உங்கள் முத்தம் பற்றிய சத்தம் அருமை.

நித்தம் உண்டா இந்த (கவிதைச்) சத்தம்!

நிச்சயமாக..... நன்றி கலந்த முத்தத்துடன்..
ஆதவன்