PDA

View Full Version : உலகக்கோப்பை கிரிக்கெட்- உத்தேச அணி



ஆதவா
13-01-2007, 12:21 AM
மண்ணைக் கவ்வ நம் அணி ரெடியாகிவிட்டது

மீசையில் மண் ஒட்டாமல் நமக்கு ஆப்பு வைக்க புறப்படும் நம் வீரர்களின் விபரம் இதோ!!!

ராகுல் டிராவிட், வீரேந்திர ஷேவாக், டெண்டுல்கர், கைப், தோனி, இர்பான் பதான், முன்னப் படேல், ஸ்ரீசாந்த், அஜித் அகர்கர், சுரேஷ் ரெய்னா, ரமேஷ் பவார், அனில் கும்ளே, ஆர்.பி.சிங், தினேஷ் மோங்கியா, வி.ஆர்.வி. சிங், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், கங்குலி, பார்தீவ் படேல், யுவராஜ் சிங், ஜாஹீர்கான், வி.வி.எஸ். லட்சுமணன், கவுதம் காம்பீர், ரோஹித் ஷர்மா, பத்ரிநாத், இஷாந்த் ஷர்மா, ராஜேஷ் பவார், ஜோஹிந்தர் ஷர்மா, சேட்டேஷ்வர் புஜரா.

நன்றி: வெப்உலகம்

Narathar
15-01-2007, 11:53 AM
உலக கிண்ணத்தை இலங்கை கிரிக்கெட் அணி இம்முறை கைப்பற்றுமா?

இலங்கை கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தற்போது நாடு திரும்பியுள்ளது.

இலங்கை, நியூஸிலாந்து அணிகளிடையே முதலில் நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளிலும் இதன்பின் நடைபெற்ற இரண்டு `20-20' போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றன.


இதன்பின்பு இவ் இரு அணிகளுக்குமிடையில் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றன. சர்வதேச ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூஸிலாந்து அணி இலங்கை அணியைவிட முன்னிலை வகிப்பதினாலும் இந்த ஒருநாள் போட்டித் தொடர் நியூஸிலாந்து மண்ணில் நடைபெறுவதினாலும் இதில் கூடிய வெற்றி வாய்ப்பு நியூஸிலாந்து அணிக்கே இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.

இக்கருத்துகள் அனைத்தையும் பொய்ப்பிக்கும் விதத்தில், கடும் குளிரையும் சமாளித்து, இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 1 ஆவது போட்டியில் வெற்றி பெற்றனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற 2 ஆவது, 3 ஆவது போட்டிகளில் நியூஸிலாந்து அணி வெற்றிபெற்றது. இத்தோல்விகளுக்கு துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடாததே முக்கிய காரணம் என்று இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தனா தெரிவித்தார்.

2-1 என்ற ரீதியில் முன்னணி வகித்த நியூஸிலாந்து அணி 4 ஆவது போட்டியிலும் வெற்றி பெற்று, தொடரை தனதாக்கிக் கொள்ளும் என்றே அனைவரும் எதிர்பார்த்தார்கள்.

4 ஆவது போட்டியில் தான் இலங்கை வீரர்களின் பலம் அனைவருக்கும் தெரியவந்தது. இப்போட்டியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான சனத்ஜெயசூரியா தனது திறமையை வெளிப்படுத்தினார். இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஜெயசூரியா 44 பந்துகளை சந்தித்து 5 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 70 ஓட்டங்களைப் பெற்றார். இவர் அடித்த 5 சிக்சர்கள் மூலம் ஒருநாள் போட்டியில் உலகில் அதிக சிக்சர்களை அடித்த (222) வீரர் என்ற புதிய சாதனையை ஏற்படுத்தினார். பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இலங்கை வீரர்களின் சிறந்த பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது. 73 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி 189 ஓட்டங்களினால் இலகுவாக வெற்றிவாகை சூடியது. நியூஸிலாந்து அணியின் கிரிக்கெட் வரலாற்றில் இத்தோல்வி மிக மோசமான தோல்வி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 ஆவது போட்டி மழை காரணமாக முற்றாகக் கைவிடப்பட்டது. இதன் காரணமாக சாம்பியன் கிண்ணம் இரு அணிகளுக்கும் சமனாக வழங்கப்பட்டது.
நியூஸிலாந்தின் சுற்றுப் பயணத்தில் இலங்கை வீரர்கள் காட்டிய திறமையினால் இலங்கை அணி உலகக் கிண்ணப் போட்டியில் ஒரு வலுவான அணியாகத் திகழப் போகின்றது என்பதை அனைவரும் தெரிந்து கொண்டுள்ளனர். குறிப்பாக, சனத்ஜெயசூரியாவின் அதிரடி துடுப்பாட்டம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியிருப்பது, எதிரணியினருக்கு, கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

1996 ஆம் ஆண்டு இலங்கை உலகக் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு ஜெயசூரியாவின் அதிரடி துடுப்பாட்டமே முக்கிய காரணமாக இருந்தது. இதுபோல், இம்முறை உலகக் கிண்ணப் போட்டியிலும் ஜெயசூரியா துடுப்பாட்டத்தில் சிறந்து விளங்கக் கூடுமென்று அனைவரும் எதிர்பார்க்கின்றார்கள்.

இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்த்தன, கடந்த ஆண்டு டெஸ்ட் போட்டியில், ஒரு இன்னிங்ஸில் தென்.ஆபிரிக்க அணிக்கு எதிராக 374 ஓட்டங்களைப் பெற்றதினால், 2006 ஆம் ஆண்டு துடுப்பாட்டத்தில் 1 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேபோல், 2006 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில், குமார் சங்கக்கார 1 ஆம் இடத்தில் இருக்கின்றார். இவர் 36 போட்டிகளில் மொத்தம் 1,333 ஓட்டங்களைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

முத்தையா முரளிதரனும் கடந்த ஆண்டு 11 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி மொத்தம் 90 விக்கெட்டுகளைக் கைப்பற்றி 1 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர்களைத் தவிர, சகல துறைகளிலும் சிறந்த வீரர்களாகத் திகழும் மக்ரூப், சமிந்தவாஸ், வேகப்பந்து வீச்சு வீரர்களான மலிங்கபண்டார, டில்கார பெர்னாண்டோ ஆகிய வீரர்களும் கடந்த ஆண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள். மொத்தத்தில் இம்முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக இலங்கை அணி திகழ்வதுடன், அவுஸ்திரேலிய அணிக்கும் பெரும் சவால் அணியாக, இலங்கை அணி திகழும் என்றும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.


thanx to thinakural

அறிஞர்
16-01-2007, 12:59 PM
நாரதரை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. எப்படி இருக்கிங்க? தொடர்ந்து வந்து எங்களை ஊக்கப்படுத்துங்கள்.
-----------
இந்திய அணி - கோப்பையை கைப்பற்றுவது என்பது கடினமான காரியம்.

மேற்கு இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புக்கள் அதிகம். அடுத்ததாக இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.

Narathar
17-01-2007, 02:18 PM
இந்திய அணி - கோப்பையை கைப்பற்றுவது என்பது கடினமான காரியம்.

மேற்கு இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்புக்கள் அதிகம். அடுத்ததாக இலங்கை, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான்.

நான் மன்றத்தாரை ஊக்குவிப்பது சரி......
நீங்கள் உங்கள் நாட்டுக்காரர்களை ஊக்குவிக்க வேண்டாமா?..........
(வந்ததும் வராததுமா அன்பர் அறிஞ்ரையே வம்புக்கிழுப்பதா? நாராயணா!!!)