PDA

View Full Version : Ubuntu அறிமுகம்



மதுரகன்
12-01-2007, 07:02 PM
Ubuntu - மக்களுக்காக Linux

என்ன அது என்று குழம்பிடாதீங்க....

உங்களுக்காவே ஒரு அற்புதமான Operating System உருவாக்கி அதுவும் இலவசமாக அதுவும் தபால்மூலமாக வீட்டிற்கு அதுவும் எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் அனுப்புகிறார்கள் என்றால் நம்ப முடியுமா..

நான் தபாலில் 25 பிரதிகள் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன்... வியக்கவைக்கின்றது Ubuntu. தோற்ற வடிவமைப்பு ஒலி மென்பொருட்கள் அத்தனையும் அற்புதம்...

தொடரும்.....

மதுரகன்
13-01-2007, 04:43 PM
முதலில் உங்களுக்கு இலவச CD வேண்டுமா..
www.ubuntu.com இல் shipit free cds இல் பதிவு செய்துவிடுங்கள் ஒருமாதத்தினுள் உங்கள் கையை அடையும்..
மீதி விபரங்கள் பின்னர்...

தொடரும்...

ஷீ-நிசி
13-01-2007, 04:46 PM
எப்படி load பண்ணுவது சிக்கல் ஒன்றும் இல்லையா?

மதுரகன்
13-01-2007, 05:01 PM
நீங்க எதனைக்கேட்கிறீர்கள் Website இல் இலவச சீடிக்கு அனுமதி பண்ணுவதையா.. ஒப்பரேட்டிங்சிஷ்டம் லோட் பண்ணுவதையா...

ஷீ-நிசி
13-01-2007, 05:03 PM
ஒப்பரேட்டிங்சிஷ்டம் லோட் பண்ணுவதை.. நான் Register பன்னிட்டேன். ஏதாவது postal charge கேட்பாங்களா

மதுரகன்
13-01-2007, 05:17 PM
இல்லை எந்தவித போஸ்டல் சார்ஜ் உம் இல்லை முற்றிலும் இலவசம்..
ஒப்பரேட்டிங் சிஸ்டம் லோட் செய்வது பற்றி அடுத்த பதிப்பில் தருகிறேன்...

குஹப்ரியன்
29-01-2007, 04:04 PM
அட போங்க சார். நான் மெனக்கெட்டுனு உபுந்து டிவிடி-யய் பதிவிறக்கம் செய்து பொருத்தினேன், MP3 பாட்ட கூட பாடமாட்டேங்குது, ipv6 பிரச்சனைய சரி செஞ்ச பின்பும் புதுமென்பொருட்களை சேர்க்க முடியல.
முதல் முறையா லினக்ஸ் பயன்படுத்தறவங்களுக்கு என் பரிந்துரை:-

மான்ட்ரீவா(Mandriva) 2007 அல்லது நாப்பிக்ஸ்(Knoppix) 5 பயன்படுத்துங்க. இலகுவா பயன்படுத்தலாம், மத்ததெல்லாம் உங்கள பாடா படுத்தும். இது நான் பல அடி பட்டு சொல்லறேன். நம்புங்க

அறிஞர்
29-01-2007, 04:07 PM
குஹப்பிரியனின் பதில்கள் சிந்திக்க வைக்கிறது.

----
பயன்படுத்தியவர்கள்.. தெளிவாக சொன்னால்.. மற்றவர்களுக்கு வசதியாக இருக்குமே...

மதுரகன்
29-01-2007, 04:44 PM
நான் உங்கள் அளவிற்று லினக்ஸ் அறிவற்றவன்..
இப்படி ஒரு விடயம் இருப்பதை தெரிவிக்கலாமே என்று எண்ணி கூறினேன்..
உங்கள் கருத்திற்கு நன்றி...
எனக்கு லினக்ஸ் இல் சில பிரச்சனைகள் உள்ளது..
உங்களால் தீர்க்கமுடியுமா குகப்பிரியனே..

பாரதி
29-01-2007, 05:00 PM
அட போங்க சார். நான் மெனக்கெட்டுனு உபுந்து டிவிடி-யய் பதிவிறக்கம் செய்து பொருத்தினேன், MP3 பாட்ட கூட பாடமாட்டேங்குது, ipv6 பிரச்சனைய சரி செஞ்ச பின்பும் புதுமென்பொருட்களை சேர்க்க முடியல.
முதல் முறையா லினக்ஸ் பயன்படுத்தறவங்களுக்கு என் பரிந்துரை:-

மான்ட்ரீவா(Mandriva) 2007 அல்லது நாப்பிக்ஸ்(Knoppix) 5 பயன்படுத்துங்க. இலகுவா பயன்படுத்தலாம், மத்ததெல்லாம் உங்கள பாடா படுத்தும். இது நான் பல அடி பட்டு சொல்லறேன். நம்புங்க

அன்பு குஹப்ரியன்,

எனக்கும் லினக்ஸ் கற்றுக்கொள்ள ஆசை.

சில வருடங்களுக்கு முன்னர் சூஸி லினக்ஸ் நிறுவினேன். இணையத்தொடர்பு கொள்ளவே முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் உபுண்டு 5.0 நிறுவினேன். இதிலும் இணையத்தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நிறுவுவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை. ஆனால் இணையம் இன்றி அதில் பணி செய்ய என்னால் இயலவில்லை.

நோப்பிக்ஸ் - லைவ் சி.டியை மட்டும் சோதனை செய்து பார்த்தேன். எல்லா லினக்ஸ் இயங்குதளங்குகளின் வேகமும் என்னை வியக்க வைக்கின்றன.

எந்த லினக்ஸ் மென்பொருளை நிறுவினால், பிரச்சினையின்றி இணையத்தொடர்பு கொள்ள முடியும் என்று கூற முடியுமா..? எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, லினக்ஸ் இயங்குதளத்தை உபயோகிக்கும் நண்பர்கள் தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களை பற்றி தகவல் தந்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன்.