PDA

View Full Version : படித்துவிட்டு செல்பவர்களுக்கு

அறிஞர்
12-01-2007, 02:53 PM
தினமும் மன்றத்திற்கு 50 பேருக்கு மேல் வருகிறார்கள். படைப்புக்களை படித்து விட்டு சென்றுவிடுகிறார்கள்.

படைப்பாளிகளை ஊக்குவிப்பது நம் கடமை.

நம் அறிவுக்கு, நேரத்திற்கு தீனி போடும் உள்ளங்களுக்கு ஒரு சில வரி தான் எழுதுங்களேன். அது அவர்களை ஊக்குவிக்கும் படைப்பும் அதிகமாகும்.

meera
12-01-2007, 02:59 PM
உண்மை தான் அறிஞ்சரே!

நிச்சயம் ஊக்கம் அளிக்கலாம்.பலருக்கு அலுவலக பணி அதிகம்.அட இந்த லிஸ்ட்ல நம்ம பேரு இல்லைங்க. ஹ ஹ ஹ

franklinraja
12-01-2007, 03:30 PM
மிக்க சரி...

எழுதத் தூண்டும் டானிக்கே, அழகான பின்னூட்டங்கள் தானே..! :D

ஓவியா
13-01-2007, 01:07 AM
படைப்பாளியை ஊக்குவிப்பது நமது கடமை.
வாய்ப்பிருப்பின் கடமையை சரிவர செய்வேன்

என்னுடைய தனிபட்ட கருத்தாக ஓரிருவரிகள்

என் அன்பு நண்பர்களே,
தயவு செய்து தங்களின் படைப்பில் மட்டும் கவனத்தை காட்டி விமர்சனங்களை எதிர்ப்பார்க்காமல், மற்ற மன்ற படைப்பாளர்களின் படைப்பினையும் படித்து கருத்து கூருங்கள். முக்கியமாக ஒரு வார்த்தை (அருமை, பாராட்டுக்கள்) கருத்துக்களை தவிருங்கள், வாய்ப்பிருப்பின் ஒரு வரியாவது விமர்சியுங்கள். தமிழின்பால் நாம் கொண்டுல்ல பற்று நமக்கு ஒரு அழகிய (நட்பை) உறவை இங்கு உருவாக்கிதரும்

தங்கத்தமிழும், தமிழ்ப்பற்றும், நமது அன்பும் தமிழ்மன்றத்தில் அரசமரத்தின் ஆணிவேர்போல் நீண்டு நெடுநாள் வளர அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பணிவுடன்

ஆதவா
13-01-2007, 01:12 AM

உதை வழிமொழிகிறேன்.

இராசகுமாரன்
21-01-2007, 06:33 AM
அறிஞர், ஓவியா-வின் கூற்றுகள் சரியே..

இங்கே படைப்புகளை பதிப்பவர்கள் எதிர்பார்பதெல்லாம் காசோ, பணமோ, பரிசோ, மெடலோ அல்ல, உங்கள் இரண்டு வரி கருத்துக்களையே...! அது பாராட்டோ, அல்லது விமர்சனமோ, உங்கள் மனம் திறந்து கூறுங்கள் நண்பர்களே....!!

leomohan
21-01-2007, 06:48 AM
முற்றிலும் ஏற்க வேண்டிய கருத்துக்கள்.

1. படிக்க மட்டும் வரும் உறுப்பினர்கள்.
2. எழுத மட்டும் வரும் உறுப்பினர்கள்.
3. படிக்கவும் எழுதவும் வரும் உறுப்பினர்கள்.

இதல் முதல் ரகத்தை சேர்ந்தவர்கள் பல சமயம் தமிழ் தட்டெழுத்து முடியாதவர்களாக இருக்கிறார்கள். அல்லது அலுவலக கணினி பயன்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். அதனால் தமிழ் மென்பொருட்களை ஏற்ற முடியாமல் இருக்கலாம்.

இவர்களுக்கு மட்டும் ஆங்கிலத்தில் விமர்சனம் எழுத விதிவிலக்கு அளித்தால் அவர்கள் தங்கள் கருத்துக்களை இட ஏதுவாகும். இதுவே பலரை பின்னூட்டம் இட தயங்க செய்கிறது என்பது என் எண்ணம்.

இரண்டாவது ரகத்தினர், ஒரு வேளை அதிகம் எழுதுபவர்களாக இருக்கலாம். இவர்கள் வாரத்தில் ஒரு நாளாவது மற்றவர்களுடைய பதிப்பை படித்து விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும்.

மூன்றாவது ரகத்தினருக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் உங்கள் படைப்புகளின் உள்ளடக்கத்தை ஒரு இடத்தில் பதித்தால் உங்களுடைய படைப்புகள் விட்டுப்போகாமல் மற்றவர் படிக்க உதவும். மேலும் நீங்கள் கதை கவிதைகள் எழுதும் பட்சத்தில் கவிதைகளை விரும்பி படிப்போர் உங்களுடைய உள்ளடக்கத்திற்கு சென்று உங்களுடைய கவிதைகளை மட்டும் படிக்க உதவும். உதாரணத்திற்கு என்னுடைய அறிமுகப்பகுதியில் இருக்கும் உள்ளடக்க பதிப்பை காணுங்கள்.

நன்றி

ஷீ-நிசி
21-01-2007, 08:07 AM
படைப்பாளியை ஊக்குவிப்பது நமது கடமை.
வாய்ப்பிருப்பின் கடமையை சரிவர செய்வேன்

என்னுடைய தனிபட்ட கருத்தாக ஓரிருவரிகள்

என் அன்பு நண்பர்களே,
தயவு செய்து தங்களின் படைப்பில் மட்டும் கவனத்தை காட்டி விமர்சனங்களை எதிர்ப்பார்க்காமல், மற்ற மன்ற படைப்பாளர்களின் படைப்பினையும் படித்து கருத்து கூருங்கள். முக்கியமாக ஒரு வார்த்தை (அருமை, பாராட்டுக்கள்) கருத்துக்களை தவிருங்கள், வாய்ப்பிருப்பின் ஒரு வரியாவது விமர்சியுங்கள். தமிழின்பால் நாம் கொண்டுல்ல பற்று நமக்கு ஒரு அழகிய (நட்பை) உறவை இங்கு உருவாக்கிதரும்

தங்கத்தமிழும், தமிழ்ப்பற்றும், நமது அன்பும் தமிழ்மன்றத்தில் அரசமரத்தின் ஆணிவேர்போல் நீண்டு நெடுநாள் வளர அனைவருக்கும் வாழ்த்துக்கள்

பணிவுடன்

ஓவியா, ஆதவா இவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.. ஒவ்வொரு படைப்பாளியும் தன் படைப்பின் நிலையை வெகு வாஞ்சையாய் எதிர்நோக்குகிறான்.. நம்முடைய பின்னூட்டங்கள் படைப்பாளிக்கு புது உற்சாகம் அளித்திடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

உற்சாகம் அளிப்போம்! ஊக்கப்படுத்துவோம்!!

thoorigai
23-01-2007, 09:29 AM
நமது எழுத்துக்கு பதில் வருமின், அது தரும் இன்பமே அலாதிதான்.
நமது புகைப்படத்தை நாமே பார்க்க ஆவல் தரும் இன்பத்தை போல...

அதே போல் நாமும் மற்றவரின் படைப்புக்களுக்கு பதில் கருத்தை தெரிவித்தோமானால் அதுவே நாம் அளிக்கும் ஊக்கமாகும்.

பதிலூக்கமளிப்போம். நட்பு பழகுவோம் தமிழுலகத்தில்.

pradeepkt
23-01-2007, 04:59 PM
நல்ல கருத்து நண்பர்களே!

நானும் ஒவ்வொரு முறையும் நிறைய எழுத வேண்டும் என்று வருவேன். ஆனால் வந்திருக்கும் படைப்புகளைப் படிக்கவே நேரம் போய்விடும். அலுவலக வேலைகள் கூடக் கழுத்தைப் பிடிக்கின்றன. அச்சமயம் ஒரு பதில் எழுதுவதை விடப் பல பதிவுகள் படிப்பது முக்கியமாகப் படுகிறது. என்ன செய்ய? மன்னிக்க!

இனி என்னால் ஆன பொழுது என் நேர்மையான கருத்தைச் சொல்கிறேன்.

ஓவியா
09-02-2007, 07:01 PM
புதிய நண்பர்களே,

இந்த பதிப்பினை சற்று கண்ணோட்டமிடுங்களேன்

தாழ்மையுடன்
ஓவியா

praveen
20-02-2007, 01:01 PM
நன்றி நண்பர்களே, நானும் இத்தளத்தில் பதிந்து 4 மாதமாகியும் இங்கு உலா வராமலிருந்தேன். தற்போது தான் நேரம் கிடைத்தது. என்னிடம் இருக்கும் தமிழ் சம்பந்தப்பட்ட விசயங்களை இங்கே பதிந்து அனைவருடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

அறிஞர்
20-02-2007, 01:04 PM

நல்லது ஆசோ... தங்களின் பங்களிப்பு தொடரட்டும்...

suraj
19-04-2007, 07:20 PM
நானும் சேர்ந்து 1/2 வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது .என் தவறை உணர்கிறேன்.
இனி படைப்பாளிகளை ஊக்குவிப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

ஓவியா
19-04-2007, 07:29 PM
வணக்கம் சூரஜ்,

வந்ததும் முக்கிய திரிகளை கண்டு (களித்து) கருத்திடுவது மிகவும் வரவேற்க்கதக்க சேவை. நல்ல சபைப்பணிவு தங்களுக்கு. நன்றி.

இணைந்திரூங்கள் நண்பரே.

ஆதவா
19-04-2007, 07:35 PM
நானும் சேர்ந்து 1/2 வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது .என் தவறை உணர்கிறேன்.
இனி படைப்பாளிகளை ஊக்குவிப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
வருடங்கள் ஓடினாலும், இப்போது வந்துவிட்டீர்களல்லவா!!! அந்த பாசமே போதும்...

வளருங்கள்
வளர்த்துங்கள்..

மனோஜ்
19-04-2007, 07:46 PM
ஆரம்பிங்க சூரஜ் உங்கள் பதிவுகளை:icon_v:

leomohan
19-04-2007, 08:47 PM
நானும் சேர்ந்து 1/2 வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது .என் தவறை உணர்கிறேன்.
இனி படைப்பாளிகளை ஊக்குவிப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

நல்வரவு சூரஜ். அடிக்கடி வந்து அசத்துங்கள்.

ஓவியன்
22-04-2007, 05:09 AM
ஒரு கலைஞனை ஊக்குவிக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதுவும் மிகவும் இலகுவானது.........

அந்த கலைஞனை மெதுவாகத் தட்டிக் கொடுத்தால் போதும், அந்த உற்சாக டொனிக் அவரை சிகரம்வரையேற்றும்.

அதனை செய்ய நமக்கேது தடை??

aren
22-04-2007, 05:37 AM
நானும் சேர்ந்து 1/2 வருடத்திற்கு மேல் ஓடிவிட்டது .என் தவறை உணர்கிறேன்.
இனி படைப்பாளிகளை ஊக்குவிப்பேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

வாருங்கள் சூரஜ். உங்கள் பதிவுகளை இங்கே படையுங்கள். நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
22-04-2007, 10:36 PM
ஒரு கலைஞனை ஊக்குவிக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதுவும் மிகவும் இலகுவானது.........

அந்த கலைஞனை மெதுவாகத் தட்டிக் கொடுத்தால் போதும், அந்த உற்சாக டொனிக் அவரை சிகரம்வரையேற்றும்.

அதனை செய்ய நமக்கேது தடை??

ஆமாம் ஓவியன்,
ஆனால் அணைவரும் இதை பின்பற்றுவதில்லை.
இந்த திரியின் நோக்கமே, அதை உணர்த்ததான். :angel-smiley-026:

poo
23-04-2007, 06:40 AM
இதெல்லாம் சொல்லித் தெரிய வேண்டாம்.. தானே புரிந்து, உள்ளே இருந்து வர வேண்டும்.... ஆனால் என்ன செய்வது.. எதையுமே இங்கே உரக்கச் சொல்லவேண்டும்.. இல்லையேல் உறைக்கச் சொல்ல வேண்டும்..

தமிழனுக்கு இருக்கும் அடிப்படை பண்பு .. சிலநேரம் தடைகளினால் முடியாமல் போகும்.. ஆனால் எந்நேரமும் அதைச் செய்பவர் மறந்துவிடலாம்.. தமிழ் படிப்பதை.. இங்கே தமிழ் படிப்பதை.

namsec
13-05-2007, 03:53 PM
இந்த திரியை பார்த்ததிலிருந்து இனி நானும் தவறமல் ஊக்கமளிக்க காத்திரிக்கிறேன்

சூரியன்
15-05-2007, 02:53 PM
இந்த திரியை பார்த்ததிலிருந்து இனி நானும் தவறமல் ஊக்கமளிக்க காத்திரிக்கிறேன்

ஒன்று էš

அறிஞர்
15-05-2007, 02:57 PM
இந்த திரியை பார்த்ததிலிருந்து இனி நானும் தவறமல் ஊக்கமளிக்க காத்திரிக்கிறேன்

ஒன்றுபட்டு உழைப்போம் முன்னேறுவோம்.
வாருங்கள் மிக்கி....

படைப்பாளிகளை ஊக்குவிக்கும்பொழுது.. நமக்கும் படிக்க நிறைய தீனி கிடைக்கும்... அது என்ன திடீரென... திஸ்கி தமிழ்..

தீபா
15-05-2007, 03:49 PM
ஊக்கமில்லையேல்
உயர்வில்லை
தொடர்ந்து ஊக்கமளிப்பேன்
அனைவரின் இடத்திலும்
இடம் பிடிப்பேன்
நன்றி தமிழ்மன்றம்

அறிஞர்
15-05-2007, 04:47 PM
ஊக்கமில்லையேல்
உயர்வில்லை
தொடர்ந்து ஊக்கமளிப்பேன்
அனைவரின் இடத்திலும்
இடம் பிடிப்பேன்
நன்றி தமிழ்மன்றம்
அனைவர் மனதிலும்
இடம் பிடியுங்கள்...
தங்களுக்கென
தனிமுத்திரை...
பதியுங்கள்..

அமரன்
15-05-2007, 05:02 PM
இத்திரியால் பலர் மனந்திருந்துவது மனதுக்கு உற்சாகமளிக்கின்றது. எல்லாம் அறிஞருக்கே சொந்தம்.

அமரன்
15-05-2007, 05:03 PM
நானும் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். வாரத்தில் இருநாள் எனது படைப்புகளைப் பதிவது மற்றய நாட்களில் படித்துப் பின்னூட்டமிடுவது.

சக்தி
15-05-2007, 06:00 PM
நானும் இனிமேல் மற்றவர்களின் படைப்புக்களை படித்து பின்னூட்டம் இடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

vijayan_t
16-05-2007, 12:42 AM
உன்மைதான், பதிவுக்கு பதிலுரைத்தல், விமர்சம் செய்தல் இவைகளே பதிவாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் டானிக் ஆகும். கடுமையான வேலைப்பளுவினிலும் மன்றத்தில் உலாவஉம்போது, சில நிமிடத்துளிகள் இதற்கென செலவிடுவது ஒன்றும் சிரமமில்லை.இப்பொழுதுஈருந்து நானும் இதை பின்பற்றுகின்றேன்.

அறிஞர்
16-05-2007, 01:08 AM
நானும் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். வாரத்தில் இருநாள் எனது படைப்புகளைப் பதிவது மற்றய நாட்களில் படித்துப் பின்னூட்டமிடுவது.நல்ல முடிவு...
ஒரு படைப்பாளிக்கு தான் மற்றொரு படைப்பாளியின் கஷ்டம் தெரியும்.
ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தி வளர்வோம்.

அறிஞர்
16-05-2007, 01:09 AM
நானும் இனிமேல் மற்றவர்களின் படைப்புக்களை படித்து பின்னூட்டம் இடுவேன் என்று உறுதியளிக்கிறேன்.
உறுதிமொழி.. கடைசிவரை நிலைக்கையில் அனைவருக்கும் மகிழ்ச்சியே...

அறிஞர்
16-05-2007, 01:10 AM
உன்மைதான், பதிவுக்கு பதிலுரைத்தல், விமர்சம் செய்தல் இவைகளே பதிவாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் டானிக் ஆகும். கடுமையான வேலைப்பளுவினிலும் மன்றத்தில் உலாவஉம்போது, சில நிமிடத்துளிகள் இதற்கென செலவிடுவது ஒன்றும் சிரமமில்லை.இப்பொழுதுஈருந்து நானும் இதை பின்பற்றுகின்றேன்.
உங்களின் படைப்புகளுக்கு என்று நாங்கள் ரசிகர்கள்...
நீங்கள் இன்னும் சாதிக்கவேண்டும் என்பது எங்கள் ஆவல்.
சக நண்பர்களும் வளருவது உங்களுக்கு இன்பம் தரும் விசயம் தானே.
ஒன்றாய் வளருவோம்.

அறிஞர்
23-05-2007, 04:31 PM
இன்றைய தினம் வந்தவர்கள் 113 பேருக்கும் மேல்.... ஆனால் பதிந்தவர்கள் 41 பேர் தான்...

இந்த எண்ணிக்கை இன்னும் கூடவேண்டும் என்பதே அனைவரின் ஆவல்....

அக்னி
23-05-2007, 05:47 PM
"ஒவ்வொரு படைப்பாளியின் வரிகளுக்குப் பின்னேயும் உன் ஒரு வரி இருந்தால்..,
நீயே படைப்பாளி ஆகிவிடுவாய்..."

நண்பர்களே கருத்தில் கொள்ளுங்கள்...

அமரன்
23-05-2007, 06:00 PM
"ஒவ்வொரு படைப்பாளியின் வரிகளுக்குப் பின்னேயும் உன் ஒரு வரி இருந்தால்..,

நீயே படைப்பாளி ஆகிவிடுவாய்..."

நண்பர்களே கருத்தில் கொள்ளுங்கள்...

உண்மை உறவுகளே. என்னை எனக்கு அடையாளம் காட்டியது நான் படித்து பின்னூட்டமிட்ட என் பதிவுகளும்தான்.

அறிஞர்
23-05-2007, 06:43 PM

இரு படைப்பாளிகளின் கருத்துக்களும் படித்துவிட்டு செல்பவர்களை ஈர்க்கும் என எண்ணுகிறேன்.

mashiva88
25-05-2007, 01:40 PM
padaippukkal patriya ennangal thatezhtthu theriamaiyal tamilenglishl solla anumathithal en pondrourukku uthaviyaha yerukkum.

அக்னி
25-05-2007, 01:51 PM
padaippukkal patriya ennangal thatezhtthu theriamaiyal tamilenglishl solla anumathithal en pondrourukku uthaviyaha yerukkum.

நண்பரே...
உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்...
தமிழில் எழுதுவது சுலபம்..
இங்கே
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2 (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=2)
சென்று பொறுமையாக அறிந்துகொள்ளுங்கள்.

அறிஞர்
12-06-2007, 05:09 PM
மன்றத்திற்கு மறைந்து வந்து... மன்றத்தின் செயல்பாடுகளை வேவு பார்க்கும் கூட்டத்தை என்னப் பண்ணுவது.

"துஷ்டனை கண்டால் தூர விலகு" என்ற பழமொழி உண்டு....

பிடிக்காத இடத்திற்கு வந்து வேவு பார்க்கும் வேலைகளை என்று தான் கைவிடுவாரோ... சிலர்.

அன்புரசிகன்
12-06-2007, 05:19 PM
விட்டுவிடுங்கள் அறிஞரே... காய்க்கும் மரத்திற்குத்தான் கல்லெறி விழும். சோதனைகள் தாண்டும் போதுதான் சாதனைகள் பிறக்கும்...

எறிபவர்கள் எறியட்டும். அவர்களுக்கு ஒரு சவால்.

நாம் சாதிப்போம்.

அக்னி
12-06-2007, 05:28 PM
தங்களால் முடியாதவர்கள்தான்..,
எங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்...

மன்றத்திற்கே பெருமை...

அமரன்
12-06-2007, 06:41 PM
கட்டமொம்மனும் எட்டப்பனும் பிறந்தது நம் தமிழில் அல்லவா? நாம் கட்டப்பொம்மர்களாக இருப்போம். காவியம் படைப்போம்.

ஓவியா
20-06-2007, 07:40 PM
அன்பு, அகினி, அமரன் உங்களின் பதிவுகளுக்கு மிக்க நன்றி.

அன்று உங்கள் மூவரையும் வழிமொழிந்ததற்க்கு இன்று பெருமை கொள்கிறேன்.

நன்றி.

விகடன்
20-08-2007, 04:24 AM
ஆமாம் நண்பர்களே.
படித்துவிட்டு உங்களிற்கு பிடித்த வசீகரித்த வரிகளை குறிப்பிட்டு அதற்கு விமர்சியுங்கள். எதிராண கருத்துக்களிருப்பின் எழுதியவர் மனதை காயப்படுத்தாமல் ஆரோக்கியமான முறையில் போட்டுவையுங்கள். வழங்கப்படும் பின்னூட்டங்கள் படைப்பாளிகளிற்கு ஊக்கமளித்து முன்னேற்றப்பாதைக்கு வழிவகுக்கவேண்டுமே தவிர கடமைக்கு செய்யப்பட்டதாக இருந்துவிடக்கூடாது.

பார்த்தீர்களா நண்பர்களே!!!.
அறிஞர்/நிர்வாகிக்கே பின்னூட்டமிட்டுவிட்டேன்.

lolluvathiyar
20-08-2007, 05:54 AM
சில திரிகளை ஆர்வமில்லாத காரணத்தால் படிக்காவிட்டாலும் தவறில்லை.
ஆனால் படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் போகாதீர்கள் நண்பர்களே.
பின்னூட்டம் என்பது வெறும் பாராட்டு வார்த்தைகள் அல்ல.
படைத்தவர் கருத்துக்கும் உங்களை கவரா விட்டாலும், தவறை சுட்டி காட்டுங்கள். முயற்ச்சிக்கு பாராட்டு தெரிவித்து. மேலும் முயற்ச்சி செய்ய உற்சாகம் தாருங்கள். இல்லையா கடைசியாக நக்கலாவது பண்ணுங்கள்.

படைத்தவர் கருத்துக்கும் நீங்கள் உடன்படாவிட்டாலும் அதை தெரிவியுங்கள்.

முக்கிய குறிப்பு முழு பின்னூட்டம் செய்கிறே என்று காட்ட முழு படைப்பையும் கோட் பண்ணி அருமை என்று ஒரு வார்த்தை அல்லது இரண்டு ஸ்மைலீஸ் போடுவதை தவிருங்கள்.

பூமகள்
20-08-2007, 06:42 AM
ஓவியா அக்காவின் கருத்திற்கு நானும் வழிமொழிகிறேன். நிச்சயம் விமர்சனங்களே நல்ல படைப்பாளியை உருவாக்கும்.

அந்த ஆக்கப்பணியில் இனி மன்றத்து தூண்களோடு நானும் சேர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

sadagopan
20-08-2007, 07:07 AM
ஓவியா அக்காவின் கருத்திற்கு நானும் வழிமொழிகிறேன். நிச்சயம் விமர்சனங்களே நல்ல படைப்பாளியை உருவாக்கும்.

அந்த ஆக்கப்பணியில் இனி மன்றத்து தூண்களோடு நானும் சேர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்ல படைப்பாளிக்கு ரசிகனின் பாராட்டு தானே மகிழ்ச்சி , விருது எல்லாம்

நட்புடன்

சடகோபன்

ஓவியா
24-08-2007, 06:13 PM
ஓவியா அக்காவின் கருத்திற்கு நானும் வழிமொழிகிறேன். நிச்சயம் விமர்சனங்களே நல்ல படைப்பாளியை உருவாக்கும்.

அந்த ஆக்கப்பணியில் இனி மன்றத்து தூண்களோடு நானும் சேர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி பூ. :icon_dance::icon_dance:

அக்னி
24-08-2007, 06:36 PM
"ஒவ்வொரு படைப்பாளியின் வரிகளுக்குப் பின்னேயும் உன் ஒரு வரி இருந்தால்..,
நீயே படைப்பாளி ஆகிவிடுவாய்..."

முன்னர் நான் இட்ட பதிவுதான்.
மீண்டும் புதுப்பிக்கின்றேன்...

ஓவியன்
24-08-2007, 07:05 PM
அருமையான கருத்து அக்னி!!! :nature-smiley-002:

புதியவர்கள் கவனத்திற் கொள்ளவேண்டிய வரிகளிவை..................!! :nature-smiley-002:

தளபதி
25-08-2007, 03:21 AM
உண்மை, படைப்பாளிகளுக்கு அவர்களுக்குக் கிடைக்கும் பின்னூட்டமே சிறந்த ஊக்குவிப்பாகும். தோழர்களே!! படைப்போம், படிப்போம், ஊக்குவிப்போம்.

ipsudhan
27-08-2007, 10:59 AM
என்ன செய்வது, ஏதாவது பயனுள்ள திரி தொடங்கலாம் என்றால் என் நேரம் முழுவதையும் அலுவலக மற்றும் வியாபர தொடர்புகள் அசுர பசியுடன் உண்டு விடுகின்றன,கிடைக்கும் சில நிமிடங்களில் படிக்கதான் முடிகிறது.

எனக்கு இங்கு வரும் ஒவ்வொரு முறையும் சிறிது வருத்தம் தோன்றும், மற்றவர்களிமிருந்து கற்றும் கொள்ளும் நாம் பதிலுக்கு ஏதும் செய்ய வில்லையே என்று அதே சமயம் குப்பையையும் போட விரும்பவில்லை.

அதனால் என்னை மன்னித்து விட்டு விடுங்கள்.

அக்னி
27-08-2007, 12:08 PM
என்ன செய்வது, ஏதாவது பயனுள்ள திரி தொடங்கலாம் என்றால் என் நேரம் முழுவதையும் அலுவலக மற்றும் வியாபர தொடர்புகள் அசுர பசியுடன் உண்டு விடுகின்றன,கிடைக்கும் சில நிமிடங்களில் படிக்கதான் முடிகிறது.

காலம் உங்களுக்கு காலத்தை ஒதுக்கித் தரவேண்டும்...
நீங்கள் மன்றத்தில் வலம் வரவேண்டும்...
தருணங்கள் வரும் வரை, காத்திருப்போம்... என்றும் இணைந்திருங்கள்...
நன்றி!

பி.கு:
இயலுமானால், ஒரு வரியில் பாராடுதல்களை, உணர்வுகளை கூறிப்போவது,
படைப்பாளிகளுக்கு உற்சாகத்தையும், உங்களுக்கு திருப்தியையும் அளிக்குமல்லவா...

சாராகுமார்
27-08-2007, 03:00 PM
படைப்புகளை பாராட்டுவோம்.மன்றம் நல்ல நட்பை தந்துள்ளது.நட்பை மதிக்க படைப்புகளை பாராட்டுவோம்.நன்றி.