Log in

View Full Version : நான் -இன் விளக்கம் வேண்டுமா?

nonin
12-01-2007, 02:18 PM
நண்பர்களே, வணக்கம்.
நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா?
இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர்.
மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன்.தமிழ்மன்றத்தில் கலைத்தென்றலை நாடிவந்துள்ளேன்.

meera
12-01-2007, 02:41 PM
வாருங்கள் நானின் அழகான அறிமுகம்.

ஆதவா
12-01-2007, 02:42 PM
நண்பர்களே, வணக்கம்.
நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா?
இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர்.
மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன்.தமிழ்மன்றத்தில் கலைத்தென்றலை நாடிவந்துள்ளேன்.

அட!யாளத்தோடு வந்திருக்கும் நானின் அவர்களுக்கு
ஆதவனின் முதற்கண் வணக்கம்.
ஆயினும்
அறிமுகம் போதவில்லை
காயினி காற்றின்றி பழமாவதில்லை
இல்லாதான் எனக்குறித்து
இல்லாத பெயரைச் சூடி
இதைக்
கல்லாதானுக்கு உரக்கச் செய்யுங்கள்.
நல்ல பாறையிலே நீர் மோத
இல்லாது போகுமா அலை?
எல்லா வல்ல இறைவனின்
நல்லா சி உமக்குண்டு....

அன்புடன்---------

அறிஞர்
12-01-2007, 03:09 PM
வாருங்கள் புதுமை பித்தரே......

நமக்கு வெளியே இருந்து உலகை பார்க்க பழகிவிட்டால்... ஏற்ற தாழ்மை மாறும்.. வாழ்க்கையை அழகாக வாழலாம்.

குறிப்பு : அடிக்கடி வெளியே இருந்து பார்த்து மூளை குழம்பினால் நான் பொறுப்பல்ல...

franklinraja
12-01-2007, 03:26 PM
வருக நானின்...

நானில்லை...
எனக்குள் இருக்கும் அன்பை நான் ஒளித்துவிட்டால்...
நான்.. நானில்லை தான்..!

மதுரகன்
12-01-2007, 05:30 PM
நானின் உங்களை அறிமுகம் செய்யும் பாங்கும் பெயர்த்தெரிவும் வியக்க வைக்கின்றது...
வாழ்த்துகள்
ஆனால் தேடுபவர்களெல்லாம் முட்டாள் தனத்துடன் இல்லை...
கல்வி இருந்தும் தேடுபவன் கற்றது கைமண்ணளவு என்பதை புரிந்தவன்..

அமைதி இருந்தும் வெளியே தேடுபவன் உயிரின் அமைதியை விட சடத்தின் அமைதி உயர்ந்ததென உணர்ந்தவன்...

நிம்மதி இருந்தும் வெளியே தேடுபவன் தனக்குள்ளே நிம்மதியை தொலைத்துக்கொண்டவன் அவன் தேடுவது நிம்மதியை மீளக்கண்டெடுக்கும் வழிமுறையை அதற்கு அவன் தன்னை நோக்கி திரும்ப வேண்டும் தன்னிடம் திரும்பிவிட்டால் தேடல்கள் நிறைவடையும் அவன் தேவைகள் நிறைவடையுமா... இன்னும் எவ்வளவோ கூறலாம்... அவ்வளவும் இங்கு வேண்டாம்...

உங்கள் தேடல்கள் உங்களுக்குள் தொடரட்டும்
தமிழ் மன்றம் எண்ணற்ற அற்புதங்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றது...

மதுரகன்.

thoorigai
13-01-2007, 06:17 AM
நண்பர் நானின் அவர்களே,

தங்கள் வரவு நல்வரவாகுக.

வித்தியாசமாக அறிமுகப்படுத்திக்கொண்டீர்!
விவரமாகவும் பறிமாறிக்கொள்வீரென நம்புகிறோம் :)

வாழ்த்துக்கள்

nonin
13-01-2007, 07:27 AM
அட!யாளத்தோடு வந்திருக்கும் நானின் அவர்களுக்கு
ஆதவனின் முதற்கண் வணக்கம்.
ஆயினும்
அறிமுகம் போதவில்லை
காயினி காற்றின்றி பழமாவதில்லை
இல்லாதான் எனக்குறித்து
இல்லாத பெயரைச் சூடி
இதைக்
கல்லாதானுக்கு உரக்கச் செய்யுங்கள்.
நல்ல பாறையிலே நீர் மோத
இல்லாது போகுமா அலை?
எல்லா வல்ல இறைவனின்
நல்லா சி உமக்குண்டு....

அன்புடன்---------

காலை வர கண்கள் பனித்து(ளி)

சோலை பூவெலாம் மாதவம் செய்யும் ஆதவா வணக்கம்.

இல்லாதானுக்கு மோனைப்பஞ்சம் வந்தோ தங்களை

கல்லாதான் எனத் தாழ்த்திகொள்ளல் கண்டு வருந்தினேன்

நம்முள் கருக்கொள்ளும் ஞானத்தை பற்றி கூறும்கால்

பாறை அலையெனும் பருப்பொருள் பற்றி பகரவில்லை நண்பா

தத்துங்கடல் தாவும் அலை பூவின் மர்மத்தில் வண்டு மயங்கும் நிலை

இத்தனையும் முற்றும் உண்மை. மறுக்கவில்லை - பணத்தை

தேடி தேடி சுகங்களை நாடி நாடி இன்னும் பட்டம் பதவி பெற்ற பேரும்

வெற்றி என தாங்கள் வறையறுத்த கோட்டை தொட்டபின்னரும் தன்னுள்

வெற்றிடத்தை உணரும்போதுதான் இந்த சொல்லின் பொருளை

உற்றறிய முடியும்.

தங்களின் வாழ்த்துரைக்கு நன்றிகள் பல....

பிச்சி
13-01-2007, 08:05 AM
வாங்க வாங்க

இளசு
13-01-2007, 08:09 AM
வாருங்கள் நானின் அவர்களே

உங்கள் அறிமுகமும் ஆதவாவின் கவிதை வரவேற்பும் உங்களின் பதில் கவிதையும்..

அழகும் ஆழமும் கொண்டவை..

இணைந்து பங்களியுங்கள். வாழ்த்துகள்!

nonin
13-01-2007, 08:17 AM
நானின் உங்களை அறிமுகம் செய்யும் பாங்கும் பெயர்த்தெரிவும் வியக்க வைக்கின்றது...
வாழ்த்துகள்
ஆனால் தேடுபவர்களெல்லாம் முட்டாள் தனத்துடன் இல்லை...
கல்வி இருந்தும் தேடுபவன் கற்றது கைமண்ணளவு என்பதை புரிந்தவன்..

அமைதி இருந்தும் வெளியே தேடுபவன் உயிரின் அமைதியை விட சடத்தின் அமைதி உயர்ந்ததென உணர்ந்தவன்...

நிம்மதி இருந்தும் வெளியே தேடுபவன் தனக்குள்ளே நிம்மதியை தொலைத்துக்கொண்டவன் அவன் தேடுவது நிம்மதியை மீளக்கண்டெடுக்கும் வழிமுறையை அதற்கு அவன் தன்னை நோக்கி திரும்ப வேண்டும் தன்னிடம் திரும்பிவிட்டால் தேடல்கள் நிறைவடையும் அவன் தேவைகள் நிறைவடையுமா... இன்னும் எவ்வளவோ கூறலாம்... அவ்வளவும் இங்கு வேண்டாம்...

உங்கள் தேடல்கள் உங்களுக்குள் தொடரட்டும்
தமிழ் மன்றம் எண்ணற்ற அற்புதங்களை உங்களிடம் எதிர்பார்க்கின்றது...

மதுரகன்.

தங்களின் வரவேற்ப்புக்கு நன்றி மதுரகன்.
முட்டாள்தனமான தேடல் என இங்கு குறிப்பிடபடுவது தேவைகளின் தேடல் அல்ல.தேவைகள் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடும் எனினும் எனக்கு அது ஆதாரத்தேவைகளும்(உணவு,காற்று,நீர்,காமம்....)
அத்தியாவசியதேவைகளும்(உடை,வாழ்விடம்,பணம்....)தான்.

அமைதியில் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது? தன்னுள்ளே கண்டுகொண்ட பின்னர் அங்கே கேள்விகள் ஏது? அப்படி நான் கண்டுகொண்ட அமைதி
உயர்ந்ததா? தாழ்ந்ததா?என மீண்டும் தேடுவதாக சொல்பவன் அறிவிலி.
மரணத்தில் ஏது உயர்வு? தாழ்வு? மாரடைத்து செத்தவனையெல்லாம் சிவலோக,வைகுந்தபதவி அடைந்தார் என்றும், மண்டைநசுங்கி செத்தவனையெல்லாம் துர்மரணம் என்றும் நாம்தான் கற்பித்துகொள்கிறோம்
படைப்புக்கு எந்த பேதமமுமில்லை.

நீங்கள் சொல்வது விளங்கவில்லை. தன்னுள்ளே நிம்மதியை தொலைத்தவன் எவ்வாறு அதை மீண்டும் பெறும் வழியை வெளியே தேட
முடியும்? தன்னுள்ளே இருந்தும் தேடுவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். தன்னிடம் ஒரு பொருளை வைத்துக்கொண்டு அதை வெளியே தேடுபவர் யார்?
நல்லது.என் அடையாளப்பெயர் குறித்த இட்டுகட்டலாக இதை கொள்ளவேண்டாம். எத்தனையோ ஞானிகளுக்கு பட்ட உண்மையாக கொள்ள வேண்டுகிறேன்.
எனை அறியாது புண்படுத்தியிருப்பின் மன்னிக்கவும்.
நன்றி.

thoorigai
13-01-2007, 09:38 AM
நானின் என்றொரு நல்முத்து, நவிழ்ந்த கவிதைத்துளிகளும், கருத்து தெளிப்புகளும்
களிப்பூட்ட தவறவில்லை. ஆதவன் தந்த ஆதரவும் அபாரம்.

தொடரட்டும் சிதறல்கள்.

ஓவியா
13-01-2007, 11:21 PM
நண்பர்களே, வணக்கம்.
நான் நானின். என்ன பேர் புதுமையாய் இருக்கிறதா?
இது ஒரு அடையாள குறீயீட்டுப்பெயர்.
மனிதன் தனக்குள் எல்லாம் அடங்கியிருப்பதை உணராமல் அமைதி,நிம்மதி,கடவுள்,சுகம்.. மற்றபிற எல்லாம் தனக்கு வெளியே இருப்பதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமாக தேடுகிறான் என்பதை குறிக்கும் விதமாக "தன்னுள் இல்லாதவன்" NON-IN என்று பெயர் சூடியிருக்கிறேன்.தமிழ்மன்றத்தில் கலைத்தென்றலை நாடிவந்துள்ளேன்.

வணக்கம் நண்பரே

தங்கள் வரவு நல்வரவாகுக

தென்றல் திசை பார்த்துவீசாது...இங்கு தங்களுக்கும் தமிழ்த்தென்றலின் சுகம் கிட்டும்

Narathar
15-01-2007, 11:08 AM
உங்கள் முதல் பதிவே அசத்தலாக உள்ளது நீங்கள் ஒன்றும் இல்லாதவர் அல்ல நிறைய அறிந்தவர் போல தெரிகிறது.
உங்களிடமிருந்து இன்னும் அறிய ஆவலாய் உள்ளோம்........
தொடருங்கள்

மன்மதன்
15-01-2007, 05:37 PM
அழகு தமிழில் அறிமுகம் கொடுத்த நானின் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உங்கள் பதிவுகளை தாருங்கள்.