PDA

View Full Version : போலீசில் மாட்டிய ஆதவன்

ஆதவா
10-01-2007, 07:00 PM
மன்றத்து நண்பர்களுக்கு முதலில் நன்றி.. என்னோட ரஷ்யாகாரி காதலுக்கு நல்ல பின்னூட்டம் கொடுத்தீர்கள்.. இதோ
அடுத்து..

நண்பர்களால் பல உதவிகள் நடக்கும்.. உபத்திரவங்கள்? அதிலும் அவர்கள் பங்கு பெறாமலே!!

2005 டிசம்பர் 5. ஞாயிறு.

திருப்பூரில் எப்போதுமே டிசம்பர் 6 ஒட்டிய வாரங்களில் பதட்டமிருக்கும்.. காவல் கெடுபிடி அதிகமாக இருக்கும். அல்லா
கோயில்களிலும் ஹிந்து மசூதிகளிலும் இறைவனுக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கும்ம்.. காரணம் சொல்லவேண்டியதில்லை.
டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினம்.. அதனால்தான்.
அப்படிப்பட்ட பொன்னான வேளையில் சாயுங்காலமாக எனக்கு ஒரு போன்.. நண்பன் கதிர் (பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது) மறுமுனையில்..

அவன் கோயம்புத்தூரில் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறான். அதிகம் அவனைப் பற்றி
சொல்ல வேண்டியதில்லை. போன் செய்தவன் திடீரென்று " திருப்பூர்ல தாண்டா இருக்கேன் புது பஸ்டாண்டுகிட்ட வையிட்
பண்றேன். சீக்கிரம் வாடா!" என்றான்.
அவன் திருப்பூருக்கு வருவது அது முதல்முறையல்ல.. நிறையமுறை வந்திருக்கிறான். எப்போது வந்தாலும் அந்த பாழாப்
போன புது பஸ்டாண்டிலேயே காத்திருப்பான்..
அன்று வருவதாகச் சொன்னதால் நான் கிளம்பிச் சென்றேன் புது பஸ்டாண்டுக்கு. அங்கே போலீஸ் கூட்டம் மக்களைவிட
அதிகமாக இருந்தது.. எனக்கு எந்த பயமும் இல்லை. வரவேண்டியவன் அங்கே இல்லை. அதனால் கொஞ்சம் துலாவினேன்..
அவன் அங்கு இல்லை.. ஒருவேளை பஸ் வர வர போன் செய்திருக்கலாம். காத்திருந்தேன். காத்திருந்ததோடில்லாமல்
அங்குமிங்கும் அலைந்து துலாவுகையில் ஒரு ஏட்டு என்னை ஏறெடுத்துப் பார்த்தான்.
" டேய்! இங்க என்னடா பண்ற?" அவன் வார்த்தையில் மரியாதையில்லை.
" ஃப்ரண்ட் வரதா சொன்னுங்க; அதனாலதான் அவனுக்காக வெயிட் பண்றேனுங்க" இது நான்
" உன்னை இன்ஸ்பெக்டர் வரச் சொன்னார்; என்னன்னு கேளு"
" சார் நான் என்ன சார் பண்ணினேன்? "
" அய்யாட்ட வந்து சொல்லுடா!"
அவர் சொன்ன அந்த இன்ஸ்பெக்டர் ரொம்ப பிஸியாக இருந்தார். ஊடாக இந்த ஏட்டு சென்று , " சார் இவன் அங்கெயும்
இங்கெயும் சுத்திகிட்டு இருந்தான். கொஞ்சம் டவுட். என்னன்னு விசாரிச்சா பெரிய இவனாட்டம் பதில் சொல்றான்." போட்டுக்
கொடுத்துவிட்டான். எனக்கு வேட்டு வைத்துவிட்டான்.
இன்ஸ்பெக்டர், " தம்பி! இங்க வா!" மரியாதை கலந்து.
"சார்"
" இங்க என்ன பண்ற?"
"ஃப்ரண்ட் வரதா சொன்னுங்க; அதனாலதான் அவனுக்காக வெயிட் பண்றேனுங்க சார்"
" எந்த ஊரு?"
"கோயம்புத்தூருங்க சார்"
"ஓஹோ! என்ன சப்ளை பண்றான்"
"சார் அவன் ஸ்டீல் கம்பனி வெச்சுருக்கான். அதுதான் சப்ளை பண்றான்"
"ரெம்ப புத்திசாலித்தனமா பேசற. அவன் வந்துட்டானா இல்லையா?"
"தெரியலை சார்"
"அவனுக்கு செல்லு கில்லி ஏதாவது இருக்கா?"
"இருக்குங்க சார்"
" சரி போன் போட்டு எங்க இருக்கான்னு கேளு.."
போன் செய்தேன்.................... " The Airtel you are trying to reach is currently switched off; please try later" னு ஒரு
அழகான பெண் குரல் கேட்டது...
ஆஹா!!! மாட்டவுட்டுட்டானே!! போலீசு நம்மள சந்தேகப்படுதே னு கவலைப் பட்டேன்.. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டார்.
" என்னப்பா! எங்க இருக்கான்?"
" சார் ! செல்ல ஆஃப் பண்ணிட்டான் சார்!"
" என்ன தம்பி! ஊருக்கு வரதா சொன்னவன் எப்படி ஆஃப் பண்ணுவான்? நீ இங்க வந்தே அரமணிநேரம் இருக்கும்ல... அந்த
நேரத்தில கருமத்தம்பட்டியிலிருந்தே வந்துர்லாமே!! பொய் சொல்றியா?"
" சார் இல்லீங்க சார்! எப்படியும் வந்துர்வான்..."
நேரம் போனது.... இரண்டு மணிநேரம். நின்று கொண்டே இருந்தேன்.. கால் வலி வேறு. இவனும் வருவதாகத் தெரியவில்லை..
போனும் எடுக்கவில்லை.. சரியான கோபம் அவன் மேல். கைக்கு மட்டும் கிடைத்தால் அடுத்த நாளே நான் ஜெயிலில்
இருப்பேன் கொலைக் கேஸுக்கு.
மெல்ல மெல்ல இன்ஸ்பெக்டரிடம் போய்,
" சார்! என்ன பிரச்சனைன்னு தெரியல. அவனக் காணோம். நான் வீட்டுக்கு போகணும் சார்"
" என்னப்பா! ஒருத்தன் வர்வான்னு சொன்ன. அப்றம் வரலீங்க்ற.. உன்மேல எனக்கு மைல்டா டவுட் வருதே!! நீ ஹிந்து வா
இல்லை முஸ்லீமா?
" ஹிந்துங்க"
" டிசம்பர் 6 என்ன தேதின்னு தெரியுமா? உங்க ஆளுங்கெல்லாம் எங்க? எங்க குண்டு வைக்கலாம்னு ப்ளான்
பண்ணியிருக்கீங்க.. (சிரித்துக்கொண்டே)
" சார்! நான் அப்படிப்பட்ட பையனில்லைங்க சார், இதப் பாருங்க என்னோட விசிட்டிங் கார்ட் (பர்ஸிலிருந்து உருவி) இது
என்னோட XXXX Bank Debit card, இன்னொன்னு XXXX Bank Debit card. ப்ரீதி ஆர்ட்ஸ் ங்ற பேர்ல அப்பாகிட்ட வேலை
செய்றேன். பெரிய நிறுவனம். நீங்க வேண்ணா வந்து கேளுங்க. (textiles Field ல எங்கப்பா திருப்பூர்ல ரொம்ப பிரபலம்). நான்
எங்கயும் யாருகிட்டயும் வேலை செய்யல.. என்ணோட சொந்த தொழில் "
இன்ஸ்பெக்டர் எல்லத்தையும் பார்த்தார். " சரி நம்ம நார்த் ஸ்டேசன்ல வந்து சொல்லீட்டு போ! போன் நம்பர் கொடு! என்று
எழுதி வாங்கிக் கொண்டார்.
போகும்போது, "தம்பி! இந்தமாதிரி தேவையில்லாம் சுத்தாத.. உன்ன உன்னோட ஃப்ரண்டு மாட்டிவுட்டான் பாத்தியா!! நீ நல்ல
நிலமையில இருக்க. கெடுத்துக்காத." என்று சிலபல அட்வைஸ் பண்ணி அனுப்பி வைத்தார்,
அப்பாடா போதும் போதுமென ஆகிப்போச்சு..
அதுக்கப்பறம் அவனே போன் பண்ணி " சும்மா சொன்னேண்டா " அப்டீன்னான்,,, எனக்கு கோபம் தலைக்கெறிப் போய் அவனைத் திட்டியதுடன் அவனோடு சுமார் 6 மாதகாலம் பேசவேயில்லை... இப்ப கொஞ்சம் சகஜம் ஆகியாச்சு..

leomohan
10-01-2007, 07:18 PM
ஆதவனின் அனுபவங்கள் - நிறைய இருக்கும் போலிருக்கே.

ஓவியா
10-01-2007, 08:55 PM
ஆதவா
பாதி படிக்கும் போழுதே எனக்கு ரொம்பவே கவலையாகிடுச்சு, இப்படியெல்லாம் நண்பர்கல் இருக்கதான் செய்யுறாங்க,

அப்படியே காவல் அதிகாரி எதாவது அவார்டு வாங்க உங்களை தூக்கி உள்ளே போட்டிருந்தால்!!!
நினக்கவே கசக்குது, எதிர்காலம் கேள்விகுறிதான்.

ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்க தம்பி

ஆதவா
11-01-2007, 01:39 AM
ஆதவனின் அனுபவங்கள் - நிறைய இருக்கும் போலிருக்கே.

நண்பரே !! எனக்கு சின்ன வயதுதான்.. ஆனால் நிறைய பார்த்துவிட்டதாக எனக்குள்ளே ஒரு பெருமை.. (இன்னும் பார்க்காதது பலவுண்டே!! குறிப்பாக திரூமணம்.)

மேற்சொன்னது ஒரு சிறு சம்பவம்தான்.. உங்கள் வாழ்க்கையிலும் அம்மாதிரி நடந்திருக்கலாம்..:)
ஆனால் ரஷ்யாகாரி மிகப் பெரிய சம்பவம். அதையே சமாளித்துவிட்டேன்..

நன்றி மோகன்..

ஆதவா
11-01-2007, 01:44 AM
ஆதவா
பாதி படிக்கும் போழுதே எனக்கு ரொம்பவே கவலையாகிடுச்சு, இப்படியெல்லாம் நண்பர்கல் இருக்கதான் செய்யுறாங்க,

அப்படியே காவல் அதிகாரி எதாவது அவார்டு வாங்க உங்களை தூக்கி உள்ளே போட்டிருந்தால்!!!
நினக்கவே கசக்குது, எதிர்காலம் கேள்விகுறிதான்.

ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்க தம்பி

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்... அந்த இன்ஸ்பெக்டருக்கு என்மேல் அவ்வளவாக சந்தேகமில்லை. அதனால்தான் என்னவோ கையூட்டு கூட வாங்கவில்லை.
அந்த இன்ஸ்பேக்டருக்கே ஒரு நன்றி சொல்லலாம்.

பரஞ்சோதி
11-01-2007, 07:49 AM
உண்மையில் மறக்க முடியாத அனுபவம்.

ஆதவன் உங்க நண்பரை விட நீங்க கவன குறைவாக இருந்திருக்கீங்க. அனுபவங்கள் மூலமாகத் தானே பாடங்கள் படிக்கிறோம்.

இது போன்ற நேரங்களில் நீங்க அருகில் இருக்கும் டீக்கடை, அல்லது ஹாயாக அமர்ந்திருக்கும் வகையில் காத்திருக்க வேண்டும், மேலும் பல இடங்களிலும் ஆட்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும், வேண்டும் என்றால் உங்களுக்கு துணையாக ஏதாவது தெரிந்த பஸ் ஸ்டாண்ட் கடைக்காரரை காட்டி இருக்கலாம், அவரும் போலிஸிடம் தம்பி இந்த ஊர் தான்னு சொல்லியிருப்பார். உங்க நண்பரிடம் போன் இருந்ததால் அவரை நீங்க சொல்லும் இடத்திற்கு வரச் சொல்ல வேண்டும், அல்லது அங்கே தாண்டா நிக்கிறேன்னு பொய் சொல்லியிருக்கணும்.

என் நண்பர் ஒருவரும் இப்படி தான் 10 கிலோ மீட்டர் தூரத்தில் வரும் போதே வீட்டில் கீழ் நிற்கிறேன், உடனே வா என்பார், நான் போக மாட்டேன், மீண்டும் மீண்டும் தொடர்ந்து மிஸ்ட் கால் வந்தால், ஆகா ஆள் வந்துட்டார்ன்னு போய் பார்ப்பேன், இல்லைன்னா நான் அரை மணிக்கும் மேல் காத்திருக்கணும். ஆளுக்கு ஏற்ப நாம இருக்கணும், இல்லேன்ன தொல்லை தான்.

ஆதவா
11-01-2007, 08:57 AM

ஆமாம் நீங்கள் cஒல்வது cஅரிதான்

மன்மதன்
12-01-2007, 04:10 PM
அய்யோ பாவம் ஆதவா.. இனி கவனமா இருங்க..

ஆதவா
12-01-2007, 04:11 PM
அய்யோ பாவம் ஆதவா.. இனி கவனமா இருங்க..

இப்பல்லாம் அவ்ளோ சீக்கிரம் யாரையும் நம்பறதில்லை...

மனோஜ்
19-01-2007, 04:53 PM
ஆதாவா அவர்களே அனைவருக்கும் ஒரு பாடம் தான்

ஷீ-நிசி
19-01-2007, 05:01 PM
ஆதவா, இப்பதான் படித்தேன்..

கொஞ்சம் மிஸ்ஸாயிடுச்சி போல, இல்லனா
நான் உன்ன சன் செய்திகள்ல தான் முதல்ல பார்த்திருப்பேன். இல்ல ஆதவா

ஆதவா
19-01-2007, 05:05 PM
ஹி ஹி ஹி........... ஆமாமாம்..... அந்த நண்பன் இந்த மன்றத்திலயும் வந்தான்.............

Narathar
23-01-2007, 01:43 AM
சரி நான் அடுத்தமாதம் திருப்பூர் வர்ரேன்................
பஸ் ஸ்டான்ட் வரைக்கும் கொஞ்சம் வரமுடியுமா?

farhan mohamed
23-01-2007, 04:10 AM
ஒரு நண்பன் வேலையால மற்ற நண்பர்களுக்கும் வேட்டுதான். ஏன்டா திரும்ப யாராவது சொன்னா போகமாட்டீங்க பாருங்க.

மயூ
23-01-2007, 04:11 AM
தமிழகப் பொலீசின் அன்பான உபசரிப்பைப் பார்த்தா புல்லரிக்குது!

ஆதவா
23-01-2007, 05:40 AM
சரி நான் அடுத்தமாதம் திருப்பூர் வர்ரேன்................
பஸ் ஸ்டான்ட் வரைக்கும் கொஞ்சம் வரமுடியுமா?

அய்யோ சாமீ!!! ஆளை வுடுங்க.........

ஆதவா
23-01-2007, 05:42 AM
ஒரு நண்பன் வேலையால மற்ற நண்பர்களுக்கும் வேட்டுதான். ஏன்டா திரும்ப யாராவது சொன்னா போகமாட்டீங்க பாருங்க.

ஆமாமாம்...... கரீட்டு பா!!! தோ பாரு. நாரதரு வரேங்குராரு இன்னா பண்ண? பூலாமா? இல்லா வேணாமா?

ஆதவா
23-01-2007, 05:42 AM
தமிழகப் பொலீசின் அன்பான உபசரிப்பைப் பார்த்தா புல்லரிக்குது!

விஜயகாந்து ஆச்சி...........சாரி ஆட்சி........

இளசு
23-01-2007, 07:36 AM
பல சமயங்களில் நண்பர்களின் இந்தவகைத் திருவிளையாடல்கள் சுபமாய் செல்லச்சண்டை, கு'பீர்' சிரிப்பில் முடிந்துவிடும்..
சில சமயம் இப்படி பகீர் திருப்பங்கள், கசப்பில் கொண்டுபோய்விடும்.

இளமை, நட்பு, உற்சாக -உரிமைக் கிண்டலில்
இந்த வகை 'ராங் கால்'கள் முழுமையாய்த் தவிர்க்க முடியாதவை.

சேதமில்லாமல் முடிந்ததில் நிம்மதி.

பகிர்ந்தமைக்கு நன்றி ஆதவா.

pradeepkt
23-01-2007, 04:46 PM
ஆதவா, இந்த மாதிரி அனுபவங்களில் பாடம் கற்றுக் கொண்ட பலரில் நானும் ஒருத்தன். ஆனால் பாருங்கள், எப்பவுமே நமக்கு படிச்சுத் தெரிஞ்சிக்கிறதுல எதுவும் புரியுறதில்லை. பட்டுத் தெரிஞ்சிக்கிறது இருக்கு பாருங்க, அது பட்டுனு பச்சுனு ஒட்டிக்கிரும்!!!

paarthiban
23-01-2007, 04:51 PM
எச்சரிக்கை தரும் அநுபவம் நன்றி

நான் இதுபோல் பிரண்ட்ஸ்கிட்ட வம்பு கிண்டல் செய்வேன். இனிமே பண்ண மாட்டேன்.
நன்றி

sham
09-02-2007, 08:35 AM
என்ன சார்! இப்படியெல்லாமா மாட்டிறீங்க?
உங்கட நாட்டிலயெல்லாம் சந்தேகப்படும்படி இருந்தாதான் புடிப்பாங்க. ஆனா நம்ம நாட்டில தமிழெண்டாலே வந்து புடிச்சிடுவாங்க................

ஆதவா
09-02-2007, 08:37 AM
எச்சரிக்கை தரும் அநுபவம் நன்றி

நான் இதுபோல் பிரண்ட்ஸ்கிட்ட வம்பு கிண்டல் செய்வேன். இனிமே பண்ண மாட்டேன்.
நன்றி

உங்கள் வார்த்தைக்கு நன்றி........

ஆதவா
09-02-2007, 08:38 AM
என்ன சார்! இப்படியெல்லாமா மாட்டிறீங்க?
உங்கட நாட்டிலயெல்லாம் சந்தேகப்படும்படி இருந்தாதான் புடிப்பாங்க. ஆனா நம்ம நாட்டில தமிழெண்டாலே வந்து புடிச்சிடுவாங்க................

ஓ அப்படிவேற ஒன்னு இருக்கா? நம்ம நாடு அதுக்கு எவ்வளவோ பரவால்ல.............

maganesh
09-02-2007, 08:40 AM
பாத்து நடந்துக்கனும். அது நண்பனா இருந்தாலும் என்பதை என்பதை உணர்ந்து கொண்டேன் உன்னாலே.

அறிஞர்
10-02-2007, 03:01 AM
நானும் இப்பதான் பார்த்தேன்..

நம்மூர்ல் போலிஸ் கையில் மாட்டினா அதோகதி தான்..

இது மாதிரி நண்பர்களை என்ன பண்ணுவது.. எதில் எதில் விளையாடுவது என விவஸ்தை இல்லையா....

பூமகள்
31-08-2007, 10:06 AM
ஆகா..அதவா....தம்பி... நல்ல வேலை தப்பிச்சே.....!

இப்ப தான் பார்த்தேன்.. என்னப்பா... இப்படி அங்கும் இங்கும் அலைஞ்சு ஒரே இடத்தில குட்டி
போட்ட பூனை மாதிரி இருந்தா அப்புறம் போலீசுக்கு சந்தேகம் தானே வரும்..??

நீ பாதுகாப்பாக ஏதாவது டீ கடையில் அமர்ந்து சாப்பிட்டிட்டு இருந்து, உன் நண்பருக்கு
கால் பண்ணி பேசி இருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காது தானே...???:icon_nono:
அதுவும் அவ்வளவு இக்கட்டான நாளில்...??
சரி.. இனி பாதுகாப்பாய் இருப்பாய் என்று நினைக்கிறேன்.
பகிர்ந்ததற்கு நன்றிகள் அன்புத் தம்பி ஆதவா.

lolluvathiyar
02-09-2007, 06:09 AM
போலீஸில் மாட்டிய ஆதவா என்ற தலைப்பை பார்த்தவுடன் ச ந்தோசத்துடன் வந்து படித்து பார்த்தேன்.
அடடா தம்பித்து விட்டாரே. வருத்தம் தான். சரி என்ன செய்வது. நாடு ரொம்ப கெட்டு போயிருக்கும்

உங்கள் அனுபவம் உன்மையிலேயே சங்கடமான விசயம். கோவையில் ஒவ்வொரு வருசமும் டிசம்பர் 6 அன்று போலீஸ் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்தால், அவகளுக்காவே யாராவது வந்து குண்டு வப்பாங்க போல இருக்கும்.
அவுங்களையும் சொல்லி குற்றமில்ல பாவம் அவுங்க என்ன பன்னுவாங்க. கடமைய செய்யராங்க.
ஆதவா போல நிதானமா பொருப்பா படபடப்பில்லாம பதில் சொன்ன எந்த பிரச்சனையும் பன்ன மாட்டாங்க*

மலர்
09-09-2007, 01:53 PM
போலீஸில் மாட்டிய ஆதவா என்ற தலைப்பை பார்த்தவுடன் ச ந்தோசத்துடன் வந்து படித்து பார்த்தேன்.
அடடா தம்பித்து விட்டாரே. வருத்தம் தான். சரி என்ன செய்வது. நாடு ரொம்ப கெட்டு போயிருக்கும்

அதே சந்தோஷத்தோடுதான் நானும் வந்தேன்........ ச.,,, கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி...

இது மாதிரி நண்பர்களை என்ன பண்ணுவது.. எதில் எதில் விளையாடுவது என விவஸ்தை இல்லையா....

அதெப்படி எல்லா நண்பர்களும் ஓரே மாதிரயா இருப்பார்கள்...
வாழ்க்கை என்றால் கொஞ்சம் திரிலிங் வேணுல்ல... அதுக்குத்தான் இதெலாம்

என்னோட விசிட்டிங் கார்ட் (பர்ஸிலிருந்து உருவி) இது
என்னோட XXXX Bank Debit card, இன்னொன்னு XXXX Bank Debit card

விசிட்டிங் கார்ட் யாருக்கு வேணும்
இப்படி கொடுத்தா எப்படி... எந்த பங்க்...பின் நம்பர்,,,அப்புறம் யூசர்நேம் பாஸ்வேர்டு எல்லாம் யாரு தருவா.....

சாராகுமார்
09-09-2007, 02:13 PM
நண்பர்களுக்குள் இதுவெல்லாம் சகஜமய்யா சகஜம்.நல்ல அனுபவம்.

சூரியன்
14-09-2007, 11:38 AM
இன்னைக்குதான் இந்த பகுதியை பார்த்தேன்..

திருப்பூரில் போலீஸ் எல்லா நாள்லயும் புடிச்சு வசூல் பண்ண பார்ப்பாங்க...ஓரு பரபரப்பான நாளில் சொல்லவே வேண்டாம்.

இது நாள் வரைக்கும் நான் ஒரு முறை கூட* போலீசிட*ம் சிக்கிய*து இல்லை.

பென்ஸ்
14-09-2007, 11:39 AM
இன்னைக்குதான் இந்த பகுதியை பார்த்தேன்..

திருப்பூரில் போலீஸ் எல்லா நாள்லயும் புடிச்சு வசூல் பண்ண பார்ப்பாங்க...ஓரு பரபரப்பான நாளில் சொல்லவே வேண்டாம்.

இது நாள் வரைக்கும் நான் ஒரு முறை கூட* போலீசிட*ம் சிக்கிய*து இல்லை.

நானும் உங்களை மாதிரி மாட்டியது இல்லை.