PDA

View Full Version : முடிந்தவர்கள் உதவவும்

மதுரகன்
10-01-2007, 05:39 PM
நான் இலங்கையில் இவ்வருடம் +2 இற்கு நிகரான உயர்தரப்பீட்சையில் சித்தியெய்தி மருத்துவக்கல்லூரி அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளேன் இன்னமும் கல்வியாண்டு ஆரம்பிக்கவில்லை..
நாட்டு சூழ்நிலை காரணமாக எனக்கு இந்தியா வந்து கல்வி பயிலும் எண்ணமும் உள்ளது.. அங்கு மருத்துவக்கல்லூரி அனுமதி பெறுவது எப்படி என தெரிந்தவர்கள் உதவவும்..
வேலூர் சிறந்ததென இங்கு கூறினார்கள்..

ஆதவா
10-01-2007, 05:46 PM

ஆமாமாம் வேலூர் பாளையங்கோட்டை, கோவை.. அப்படீன்னு பல இடங்கள் உண்டு...

மதுரகன்
10-01-2007, 06:01 PM
அனுமதி பெறுவது எப்படி...

(நீங்கள் கூறிய எல்லா இடங்களிலும் ஜெயிலும் உள்ளதே..)

தயவு செய்து அனுமதி பெறுவது பற்றித்தெரிந்தால் கூறுங்கள்..

ஆதவா
10-01-2007, 06:05 PM
அனுமதி பெறுவது எப்படி...

(நீங்கள் கூறிய எல்லா இடங்களிலும் ஜெயிலும் உள்ளதே..)

தயவு செய்து அனுமதி பெறுவது பற்றித்தெரிந்தால் கூறுங்கள்..

அட புரிந்து கொண்டீர்களே!@:D மன்ற நண்பர்களே உதவுங்கள்..

தயவு செய்து அனுமதி பெறுவது பற்றித்தெரிந்தால் கூறுங்கள்

ஜெயிலுக்கு அநுமதியா? உலகத்தில் மிக எளிதாக செல்லக் கூடிய இடம்.. இங்கே வாங்க மது.. நாங்க எதுக்கு கோயம்பத்தூர்ல கள்ள நோட்டு அடிக்கிறோம்? நீங்க வந்து ஜாயின் பண்ணுங்க...

அறிஞர்
12-01-2007, 02:08 PM
அட புரிந்து கொண்டீர்களே!@:D மன்ற நண்பர்களே உதவுங்கள்..

ஜெயிலுக்கு அநுமதியா? உலகத்தில் மிக எளிதாக செல்லக் கூடிய இடம்.. இங்கே வாங்க மது.. நாங்க எதுக்கு கோயம்பத்தூர்ல கள்ள நோட்டு அடிக்கிறோம்? நீங்க வந்து ஜாயின் பண்ணுங்க...

அவர் சீரியஸாக கேட்கிறார்.. நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள்.
-----------
அன்பரே... தமிழகத்தில் உள்ளவர்கள் +2 மதிப்பெண், நுழைவு தேர்வு அடிப்படையில் சேர்க்கப்படுவர். மதிப்பெண்ணை பொறுத்து தான் கல்லூரியை தேர்வு செய்ய இயலும்.

வெளிநாட்டினருக்கு தனி இடம் உண்டு. ஆனால் கட்டணம் சாதரண கட்டணத்தை விட அதிகம்.

எல்லா விவரங்கள் வலைதளங்களில் கிடைக்கும்
தாங்கள் கேட்ட வேலூர் கல்லூரி தளம் http://www.cmch-vellore.edu/main.asp

தமிழக பல்கலைகழங்கள் முகவரிகள் இங்கு உள்ளது. சென்று மருத்துவ கல்லூரிகளை பாருங்கள்.

http://www.tn.gov.in/department/hedu.htm

http://www.tnmmu.ac.in/

அகில இந்திய அளவில் உள்ள தளம்.

http://www.aiims.edu/

மன்மதன்
12-01-2007, 02:34 PM
அமெரிக்காவில் இருந்தாலும் அனைத்து தகவல்களையும் அறிந்து நண்பருக்கு உதவியிருக்கும் அறிஞருக்கு நன்றி.. எல்லா இடங்களிலும் கலாய்ப்பது அழகல்ல ஆதவரே..

அறிஞர்
12-01-2007, 02:45 PM
அமெரிக்காவில் இருந்தாலும் அனைத்து தகவல்களையும் அறிந்து நண்பருக்கு உதவியிருக்கும் அறிஞருக்கு நன்றி.... அன்பரே.... எல்லாம் கூகுள் இருக்க..... பயமேன்... :rolleyes: :rolleyes:

மதுரகன்
12-01-2007, 04:48 PM
நன்றி அறிஞரே ..
நானும் அதில் சில வலைத்தளங்களை ஏற்கனவே அணுகிவிட்டேன் தெளிவாக தகவல்களை திரட்டமுடியவில்லை.
1.எப்படி அனுமதிக்கு விண்ணப்பிப்பது,எப்போது விண்ணப்பிப்பது..
2.எமது நாட்டு மதிப்பெண்களை பயன்படுத்த முடியமா..
3.சிறப்பு மதிப்பெண் உடைய வெளிநாட்டவருக்கு ஸ்கொலர்சிப்(scholarship) இருக்கு என்கிறார்களே அதுபற்றி...

மேலதிக தகவல்கள் தேவை...

இளசு
13-01-2007, 10:13 AM
மதுரகனின் கேள்விகளுக்கு உகந்த பதில்கள் தந்த அறிஞருக்கு நன்றி.

ஆதவாவின் பதில்கள் இந்த இடத்தில் ரசிக்கத்தக்கனவாய் இல்லை.

------------------------------------------------------------

மதுரகன் அவர்களே,

பல மருத்துவக்கல்லூரிகளிலும் பெரும்பான்மை அல்லது அனைத்து இடங்களுமே சொந்த நாட்டுக்குடியுரிமை உள்ளவர்களுக்கு மட்டுமே என நினைக்கிறேன்.

அரசுக்கல்லூரியில் சில இடங்கள் வெளிநாட்டினருக்கும்
தனியார்கல்லூரிகளில் பல இடங்களும் ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

கல்விக்கட்டணமும் 'சேர்வதற்கான' கேப்பிடல் தொகையும் அதிகம் என நினைக்கிறேன்.

ஊக்கத்தொகை (ஸ்காலர்ஷிப்) பற்றி எனக்குத் தெரியவில்லை.

http://www.mciindia.org/

இந்தத் தளத்தில் அவர்களைத் தொடர்புகொள்ள வசதி இருக்கிறது.
உங்கள் கேள்விகளை மின்னஞ்சலியுங்கள். பதில் கிடைக்கும்.

http://www.tnmmu.ac.in/
தமிழக மருத்துவப்பல்கலை தளத்தில் தொலை-பேசி/நகல் எண்களும் உள்ளன. தொடர்புகொள்ளுங்கள்..

உங்கள் நோக்கம் நிறைவேற வாழ்த்துகள்.

மதுரகன்
13-01-2007, 03:32 PM
நன்றி இளசு அவர்களே நான் அவர்களை தொடர்புகொள்ள முயற்சிக்கிறேன்...

அறிஞர்
16-01-2007, 03:41 PM
சென்னையில் இருக்கும் நண்பர்கள் உதவ முடிந்தால் உதவுங்கள்....

poo
05-02-2007, 04:38 AM
நான் பணியாற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மெடிக்கல் கல்லூரியில்கூட வெளிநாட்டினருக்கு சில இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கேபிடல் தொகை பல இலகரங்கள்.. எனக்கு தெரிந்து ஏதேனும், நல்ல சேவை நோக்குடைய கல்லூரிகளில் முயற்சிப்பது நல்லது நண்பரே.

மயூ
05-02-2007, 05:35 AM
இலங்கைத் தமிழர்களுக்கு ஏதோ கோட்டா இருப்பதாகச் சொல்கின்றார்களே! அது இப்போ இல்லையா? எம்.ஜி,ஆர் ஆரம்பித்தது...

மதுரகன்
27-02-2007, 03:23 PM
முடிந்தவர்கள் விரைவில் உதவுங்கள்...

இலங்கைத் தமிழர்களுக்கு ஏதோ கோட்டா இருப்பதாகச் சொல்கின்றார்களே! அது இப்போ இல்லையா? எம்.ஜி,ஆர் ஆரம்பித்தது...

ஆனால் கேபிடல் தொகை பல இலகரங்கள்.. எனக்கு தெரிந்து ஏதேனும், நல்ல சேவை நோக்குடைய கல்லூரிகளில் முயற்சிப்பது நல்லது நண்பரே.

அப்படிப்பட்ட கல்லூரிகளை கூறுங்கள் அப்படி இல்லாவிடின் எவ்வளவு தொகை என்னறாவது கூறுங்கள் முடியுமா என பார்க்கலாம் எனக்கு கிடைத்திருப்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அங்கு நிலைமை மிக மோசம்...
ஆகவே விரைவில் உதவுங்கள் நண்பர்களே...

ஆதவா
27-02-2007, 03:28 PM
அவர் சீரியஸாக கேட்கிறார்.. நீங்கள் ஜோக் அடிக்கிறீர்கள்.

எல்லா இடங்களிலும் கலாய்ப்பது அழகல்ல ஆதவரே..

ஆதவாவின் பதில்கள் இந்த இடத்தில் ரசிக்கத்தக்கனவாய் இல்லை.

மிகுந்த மனவருத்தம்... மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. :mad:

மயூ
28-02-2007, 12:36 AM
மிகுந்த மனவருத்தம்... மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. :mad:
மன்னிப்பது அழகு அதனிலும் அழகு மன்னிப்புக் கேட்பது...
ஆதவா... இங்கே மிளிர்கின்றாய் நீ!!! :)

மதுரகன்
28-02-2007, 03:54 PM
மன்னிப்பது அழகு அதனிலும் அழகு மன்னிப்புக் கேட்பது...
ஆதவா... இங்கே மிளிர்கின்றாய் நீ!!!
ஐயோ யாராவது உதவுங்களேன்
மயூரேசன் உங்களுக்கு உயர்கல்வி அமைச்சர் பழக்கமா பல்கலைக்கழக இடமாற்றம் பெற உதவலாமே...

ஆதவா
28-02-2007, 04:05 PM
மன்னிப்பது அழகு அதனிலும் அழகு மன்னிப்புக் கேட்பது...
ஆதவா... இங்கே மிளிர்கின்றாய் நீ!!! :)

நன்றி.. என்னை நீங்கள் மன்னித்ததற்கு..:)

மயூ
28-02-2007, 05:11 PM
நன்றி.. என்னை நீங்கள் மன்னித்ததற்கு..:)
மன்னித்தோம் அருளினோம் நண்பா!!! :rolleyes:

மயூ
28-02-2007, 05:13 PM
ஐயோ யாராவது உதவுங்களேன்
மயூரேசன் உங்களுக்கு உயர்கல்வி அமைச்சர் பழக்கமா பல்கலைக்கழக இடமாற்றம் பெற உதவலாமே...
அது சரி ...
மூஞ்சூறுக்குப் போக வழி இல்லையாம் அதில தும்புத்தடியையும் கொண்டு போக வெளிக்கிடுதாம்...
மயூர ரேசரு களனியில படுற பாட்டை களனியின் ஏனைய கண்மணிகளிடம் கேளுங்கள்..
பி.கு: கண்மணிகளுக்குப் பரீட்சைகள் நெருங்கிட்டதால இங்க வரவு குறைஞ்சுட்டுதெண்டு நினைக்கிறன்.