PDA

View Full Version : விடலைக் காதல்

ஆதவா
10-01-2007, 03:01 PM
இது கேள்வி பதில் நடையில்.... இறைவனிடம் நான் வேண்டுவதாக,,

மேனியெல்லாம் தூண்டுமய்யா-காதற்
கொள்ள கொங்கை மாந்தர் கண்டாள்
நாணி நானும் உம்மிடம் சொன்னேன்
நல்ல பதில் தாரு மய்யா!

காணி நிலமில்லாமல், பையிலே காசில்லாமல்
கையிலே வேலையு மில்லாமல் உனக்கு
வேணுமோடா இந்த காதல்! எனைநினைத்து
விட்டு ஒழிடா பட்டென அதை.

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்; வழியொன்று
சொல்லு மய்யா அதை விட்டொழிக்க.

கடவுளென எனைவிட நாளும் நின்றன்
தாய் தந்தையைப் போற்றடா
நடவும் இந்த காதல் கருமங்கள்
இனி வருமோ நாளும்?

உதறலெடுக்கு தய்யா இவர்
முகம் காணின், எந்நாளும்
பதற்ற மாகுதய்யா இராவு தோறும்
என்ன விடை இதற்கு?

கதறும் நின்மொழி கண்டே
பக்தா உமக்கருள்வேன்
இதழிலே விழும் வார்த்தைகளை
கவியாக் கினி காதல் விட்டு..

ஷீ-நிசி
10-01-2007, 03:33 PM
மேனியெல்லாம் தூண்டுமய்யா-காதற்
கொள்ள கொங்கை மாந்தர் கண்டாள்
நாணி நானும் உம்மிடம் சொன்னேன்
நல்ல பதில் தாரு மய்யா!

காதல் ஆரம்பிக்கின்ற கார்காலம். காதலிப்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்கின்ற இளைஞர்களும் உண்டா?

காணி நிலமில்லாமல், பையிலே காசில்லாமல்
கையிலே வேலையு மில்லாமல் உனக்கு
வேணுமோடா இந்த காதல்! எனைநினைத்து
விட்டு ஒழிடா பட்டென அதை.

காதல் செய்ய விரும்புகிறவன் ஒவ்வொருவனும் இதை யோசித்த பிறகு காதலிக்க வேண்டும்... (பின்ன சும்மாவா ஒரு படத்துக்கு போகனும்னாகூட குறைந்தது 100 ரூபாய் இல்லாம போக முடியாது.. அப்புறம் ஓட்டல், கடைசியா பாக்கெட்டில் இருக்கும் 50 பைசாவுக்கும் சுண்டல்..) அவசியம் இல்லைனா விட்டுடு என்கிறீர்கள். நல்லதுதான்!

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்; வழியொன்று
சொல்லு மய்யா அதை விட்டொழிக்க.

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்.. விடலை என்ற வார்த்தையை அழகாகவே உபயோகித்திருக்கிறீர்கள்!

இறைவனிடம் காதலுக்கு வழி கேட்காத இளைஞ்ர்கள் இல்லை என்றால் அது பொய்

கடவுளென எனைவிட நாளும் நின்றன்
தாய் தந்தையைப் போற்றடா
நடவும் இந்த காதல் கருமங்கள்
இனி வருமோ நாளும்?

பெற்றோர தவிக்க விடும் காதலர்களே! சற்று யோசியுங்கள்

உதறலெடுக்கு தய்யா இவர்
முகம் காணின், எந்நாளும்
பதற்ற மாகுதய்யா இராவு தோறும்
என்ன விடை இதற்கு?

எனக்கும் அனுபவம் உண்டு நண்பரே! இராவு மட்டுமல்ல பகலிலும் தான்

கதறும் நின்மொழி கண்டே
பக்தா உமக்கருள்வேன்
இதழிலே விழும் வார்த்தைகளை
கவியாக் கினி காதல் விட்டு..

அதெல்லாம் சும்மா, அந்த தெய்வம் வந்துட்டா, இந்த தெய்வமெல்லாம் out of focus மாமே!

ஆதவா நீங்கள் அனைவர் கவிதைக்கும் ஆற அமர விமர்சனங்கலை தருகிறீர்கள். உங்கள் கவிதைக்கு நான் தர ஆசைப்பட்டேன். உங்கள் அளவுக்கு இருக்காது. கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க.

வித்தியாசமான் கவிதை தான்

மதுரகன்
10-01-2007, 03:47 PM
அருமையான சிந்தனைகள் ஆதவா.. அதிலும் குறிப்பாக

உதறலெடுக்கு தய்யா இவர்
முகம் காணின், எந்நாளும்
பதற்ற மாகுதய்யா இராவு தோறும்
என்ன விடை இதற்கு? இந்த வரிகள் அருமை..
ஆனால் ஒன்று கூற விரும்புகிறேன் நீங்கள் ஒன்றும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.. இந்த சிந்தனையை செய்யுள் வடிவில் எழுதியிருப்பதை விட புதுக்கவிதை வடிவில் எழுதியிருப்பின் இன்னும் அற்புதமாய் வந்திருக்கும் என்பது அடியேன் கருத்து. பிழையிருப்பின் மன்னிக்கவும்.

ஆதவா
10-01-2007, 04:31 PM

மிக்க நன்றி ஷீ.. என்னோட அளவுங்கறதெல்லாம் கிடையாது... நீங்க நல்லாவே விமர்சனம் பண்றீங்க..

ஆதவா
10-01-2007, 04:41 PM
அருமையான சிந்தனைகள் ஆதவா.. அதிலும் குறிப்பாக
இந்த வரிகள் அருமை..
ஆனால் ஒன்று கூற விரும்புகிறேன் நீங்கள் ஒன்றும் நினைக்க மாட்டீர்கள் என எண்ணுகிறேன்.. இந்த சிந்தனையை செய்யுள் வடிவில் எழுதியிருப்பதை விட புதுக்கவிதை வடிவில் எழுதியிருப்பின் இன்னும் அற்புதமாய் வந்திருக்கும் என்பது அடியேன் கருத்து. பிழையிருப்பின் மன்னிக்கவும்.

நண்பரே இது நான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியது.. அதேசமயம் புதுக்கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இது மரபுக்கவிதை அல்லவே!! இந்தமாதிரி கவிதையில் நீங்கள் எழுதும் புதுக்கவிதைபோல் ஒப்புமைகள் இருக்காது. மற்றபடி இது புதுக்கவிதை வகைதான்.. பாரதியின் பல கவிதை நடைகளில் இந்த மாதிரி இருக்கும்.. அதாவது நான்கு சொற்கள் கொண்ட ஒரு வரி.. அதுவும் புதுக்கவிதைதானே!!. அவர் நிறைய மரபுக்கவிதை எழுதியிருக்கிறார்.

அவர் எழுதிய ஒரு பாடல் எனக்கு நினைவில்லை. மிக அற்புதம் புரிவதற்கும் கடினம் (யாராவது தேடியெடுங்களேன்)

கவுண்ட வுண்டதென மாரன் கனை பொழிய .... என்று துவங்கும்
அவர் சாதாரண புதுக்கவிதை வாதியல்ல... தனக்குத் தோன்றிய மிகக் கடினமான கவிதைகளை அடக்கிவிட்டு எளியவடிவில் அதேசமயம் மரபுக்கவிதை போலவும் கொடுத்துள்ளார்..

அந்த வகைதான் நான் கையாண்டேன்....

அதேசமயம் நீங்கள் சொன்ன புதுக்கவிதைபாணியிலே ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படியுங்களேன்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166007&postcount=14

மதுரகன்
10-01-2007, 04:56 PM
ஆதவா உங்கள் பதிலளிப்பிற்கு நன்றி..
நாங்கள் இங்கே பாரதியின் கவிதைகளை நவீன கவிதையாக வகைப்படுத்தியிருக்கிறோம்...
மரபுக்கவிதை..நவீன கவிதை..வசன கவிதை.. புதுக்கவிதை எனக்கூறுவோம்.... மற்றயபடி உங்கள் கவிதையில் தவறேதுமில்லை

ஆதவா
10-01-2007, 05:08 PM

அட!!! நவீன கவிதையா!! அருமை அருமை... இங்கே எங்கே? பாரதியைப் பற்றி நினைப்பவர்கள் கவிஞர்கள் மட்டுந்தான்.. மற்றப்டி அவர்கவிதையை இப்படி பிரித்தவர்கள் இங்கேயில்லை... மொத்தமாக அவர் புதுக்கவிதையின் தந்தை என்று சொல்லிவிடுகிறார்கள்..

வசன கவிதை அவரின் கண்டுபிடிப்பு... இது மாதிரி நாம் ஏதாவது கண்டுபிடிக்க முடிகிறதா? ம்ஹீம்.... எல்லாரும் மாஹாகவி யாகிவிடமுடியாதே!!

அதோடு நீங்கள் தவறு என்பதையும் சுட்டிக்காட்டலாம்... என்னடா இவன் எல்லாரோட கவிதைக்கும் விமர்சனம் பண்றானே நாம இவன் விமர்சனம் பண்ணா ஏத்துக்குவானா ? என்றெல்லாம் எண்ண வேண்டாம்.. என் விமர்சனம் என்பது என் எண்ணம்.. அவ்வளவுதான்.. எனைவிட பெரிய மனிதர்கள் இங்கே விமர்சனங்களை கையில் வைத்துக்கொண்டு நேரமின்மையால் சும்மா இருக்கிறார்கள்...

மதுரகன்
10-01-2007, 05:19 PM
நன்றி ஆதவா உங்களது விமர்சன அனுமதிக்கு ஆயினும் என்னால் பொதுப்படையாகவே விமர்சனம் செய்ய முடியும் உங்களைப்போல.. வேறு பிரித்து விமர்சிக்கும் திறமை என்னிடம் இல்லை...

ஆதவா
10-01-2007, 05:31 PM
நன்றி ஆதவா உங்களது விமர்சன அனுமதிக்கு ஆயினும் என்னால் பொதுப்படையாகவே விமர்சனம் செய்ய முடியும் உங்களைப்போல.. வேறு பிரித்து விமர்சிக்கும் திறமை என்னிடம் இல்லை...

அட என்னங்க திறமை?????? எல்லாம் நாமே வளர்த்துக் கொள்வதுதான்..

மதுரகன்
10-01-2007, 05:57 PM
நன்றி

தாமரை
10-01-2007, 10:44 PM
நண்பரே இது நான் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியது.. அதேசமயம் புதுக்கவிதைக்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?

இது மரபுக்கவிதை அல்லவே!! இந்தமாதிரி கவிதையில் நீங்கள் எழுதும் புதுக்கவிதைபோல் ஒப்புமைகள் இருக்காது. மற்றபடி இது புதுக்கவிதை வகைதான்.. பாரதியின் பல கவிதை நடைகளில் இந்த மாதிரி இருக்கும்.. அதாவது நான்கு சொற்கள் கொண்ட ஒரு வரி.. அதுவும் புதுக்கவிதைதானே!!. அவர் நிறைய மரபுக்கவிதை எழுதியிருக்கிறார்.

அவர் எழுதிய ஒரு பாடல் எனக்கு நினைவில்லை. மிக அற்புதம் புரிவதற்கும் கடினம் (யாராவது தேடியெடுங்களேன்)

கவுண்ட வுண்டதென மாரன் கனை பொழிய .... என்று துவங்கும்
அவர் சாதாரண புதுக்கவிதை வாதியல்ல... தனக்குத் தோன்றிய மிகக் கடினமான கவிதைகளை அடக்கிவிட்டு எளியவடிவில் அதேசமயம் மரபுக்கவிதை போலவும் கொடுத்துள்ளார்..

அந்த வகைதான் நான் கையாண்டேன்....

அதேசமயம் நீங்கள் சொன்ன புதுக்கவிதைபாணியிலே ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். படியுங்களேன்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=166007&postcount=14

இலக்கணமில்லாதது புதுக்கவிதை.
அதற்கோர் இலக்கணமா?
இலக்கணம் காண்போரே
இதைக் கொஞ்சம் விலக்கனும்
இல்லாட்டி விளக்கனும்

ஆதவா
11-01-2007, 01:31 AM
இலக்கணமில்லாதது புதுக்கவிதை.
அதற்கோர் இலக்கணமா?
இலக்கணம் காண்போரே
இதைக் கொஞ்சம் விலக்கனும்
இல்லாட்டி விளக்கனும்

செல்வரே! இலக்கணமில்லாதது புதுக்கவிதை என்று எதை வைத்துச் சொல்லுகிறீர்??

1. நான் வசனமாக எழுதினாலே அது புதுக் கவிதை ஆகிவிடமுடியுமா?
2. ஒரு கருத்தை பூடகமாக சொன்னால் அல்லது சொல்லாவிடில் அது புதுக் கவிதை ஆகிவிடமுடியுமா?
3. வரிகளால் அடுக்காமல் நீண்டு எழுதினால் அது புதுக் கவிதை ஆகுமா?
4. எளிமையாக இல்லாமல் கடினமாக எழுதினால் அது புதுக்கவிதை ஆகுமா?

எல்லாவற்றுக்கும் இலக்கணமுண்டு நண்பரே!! தமிழில் நீங்க்கள் இலக்கணத்தை விலக்கினால் தமிழே நம்மை விட்டு விலகிவிடும்.

நீங்கள் சொன்னதிலிருந்து ஒன்று......

புதுக்கவிதை எந்த இலக்கணத்திற்கும், அதாவது செய்யுள் இலக்கணத்திற்கு கட்டுப்படாதது.... மற்றபடி அதுவும் இலக்கணம் தான்..

இலக்கணமில்லை என்று சொன்னால் எதற்கு எதுகைகளை வைத்து எழுதுகிறீர்கள்?
ஒரு கருத்து சொல்வதே கவிதை என்பது கவிதை இலக்கணம் என்பதை ஒத்துக் கொள்கிறீரா?

இங்கே சிலர் வார்த்தை அமைப்பு சரியில்லை என்றால் சுட்டிக் காண்பிக்க்கின்றனரே? அது இலக்கணமில்லையா?

ஷீ-நிசி
11-01-2007, 03:08 AM
இலக்கணமில்லாதது புதுக்கவிதை.
அதற்கோர் இலக்கணமா?
இலக்கணம் காண்போரே
இதைக் கொஞ்சம் விலக்கனும்
இல்லாட்டி விளக்கனும்

புதுக்கவிதையின் இலக்கணம் என்பது
இலக்கணங்கள் ஏதும்
இல்லாமல் இருப்பதே!

ஆசைகள் இல்லமல் இருப்பதே
புத்தரின் ஆசை!

அதுபோல,

ஆதவா
11-01-2007, 04:57 AM
புதுக்கவிதையின் இலக்கணம் என்பது
இலக்கணங்கள் ஏதும்
இல்லாமல் இருப்பதே!

ஆசைகள் இல்லமல் இருப்பதே
புத்தரின் ஆசை!

அதுபோல,

நண்பரே நான் மேற்சொன்னதை சற்று கவனிக்கவும்

ஷீ-நிசி
11-01-2007, 05:21 AM
நண்பரே நான் மேற்சொன்னதை சற்று கவனிக்கவும்

புதுக்கவிதை எந்த இலக்கணத்திற்கும், அதாவது செய்யுள் இலக்கணத்திற்கு கட்டுப்படாதது.... மற்றபடி அதுவும் இலக்கணம் தான்..

ஆதவா, இதைத்தான் நான் வழிமொழிகிறேன்!

ஆதவா
11-01-2007, 02:34 PM
புதுக்கவிதை எந்த இலக்கணத்திற்கும், அதாவது செய்யுள் இலக்கணத்திற்கு கட்டுப்படாதது.... மற்றபடி அதுவும் இலக்கணம் தான்..

ஆதவா, இதைத்தான் நான் வழிமொழிகிறேன்!

மிக்க நன்றி ஷீ... அவர்களே

மதுரகன்
11-01-2007, 04:09 PM
முதலில் ஷீ அவர்களும் தாமரைச்செல்வன் அவர்களும் இலக்கணம் என்பது என்ன என்று விளக்கம்(வரைவிலக்கணம்) கூறுங்கள்..

பெரும்பாலும் உங்கள் கேள்விகளுக்கு விடை அங்கே கிடைத்துவிடும்..
இலக்கணமற்றது என்று எதனையும் கூற முடியாது என்பது அடியேன் கருத்து...

அறிஞர்
12-01-2007, 03:22 PM
மிக்க நன்றி ஷீ.. என்னோட அளவுங்கறதெல்லாம் கிடையாது... நீங்க நல்லாவே விமர்சனம் பண்றீங்க..
இருவரும் கலக்குகிறீர்கள்... ஒருவரும் ஒருவர் மாத்தி..... விமர்சனங்களால் கலக்குகிறீர்கள்....

அறிஞர்
12-01-2007, 03:28 PM
மேனியெல்லாம் தூண்டுமய்யா-காதற்
கொள்ள கொங்கை மாந்தர் கண்டாள்
நாணி நானும் உம்மிடம் சொன்னேன்
நல்ல பதில் தாரு மய்யா!

காதல் ஆரம்பிக்கின்ற கார்காலம். காதலிப்பதற்கு இறைவனிடம் அனுமதி கேட்கின்ற இளைஞர்களும் உண்டா?

காணி நிலமில்லாமல், பையிலே காசில்லாமல்
கையிலே வேலையு மில்லாமல் உனக்கு
வேணுமோடா இந்த காதல்! எனைநினைத்து
விட்டு ஒழிடா பட்டென அதை.

காதல் செய்ய விரும்புகிறவன் ஒவ்வொருவனும் இதை யோசித்த பிறகு காதலிக்க வேண்டும்... (பின்ன சும்மாவா ஒரு படத்துக்கு போகனும்னாகூட குறைந்தது 100 ரூபாய் இல்லாம போக முடியாது.. அப்புறம் ஓட்டல், கடைசியா பாக்கெட்டில் இருக்கும் 50 பைசாவுக்கும் சுண்டல்..) அவசியம் இல்லைனா விட்டுடு என்கிறீர்கள். நல்லதுதான்!

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்; வழியொன்று
சொல்லு மய்யா அதை விட்டொழிக்க.

விடலைப் பருவ மெய்தினேன் ஆதலால்
இவரைக் காணும் போதெல்லாம் எனக்கு
விடலையே என் காதல்.. விடலை என்ற வார்த்தையை அழகாகவே உபயோகித்திருக்கிறீர்கள்!

இறைவனிடம் காதலுக்கு வழி கேட்காத இளைஞ்ர்கள் இல்லை என்றால் அது பொய்

கடவுளென எனைவிட நாளும் நின்றன்
தாய் தந்தையைப் போற்றடா
நடவும் இந்த காதல் கருமங்கள்
இனி வருமோ நாளும்?

பெற்றோர தவிக்க விடும் காதலர்களே! சற்று யோசியுங்கள்

உதறலெடுக்கு தய்யா இவர்
முகம் காணின், எந்நாளும்
பதற்ற மாகுதய்யா இராவு தோறும்
என்ன விடை இதற்கு?

எனக்கும் அனுபவம் உண்டு நண்பரே! இராவு மட்டுமல்ல பகலிலும் தான்

கதறும் நின்மொழி கண்டே
பக்தா உமக்கருள்வேன்
இதழிலே விழும் வார்த்தைகளை
கவியாக் கினி காதல் விட்டு..

அதெல்லாம் சும்மா, அந்த தெய்வம் வந்துட்டா, இந்த தெய்வமெல்லாம் out of focus மாமே!

ஆதவா நீங்கள் அனைவர் கவிதைக்கும் ஆற அமர விமர்சனங்கலை தருகிறீர்கள். உங்கள் கவிதைக்கு நான் தர ஆசைப்பட்டேன். உங்கள் அளவுக்கு இருக்காது. கொஞ்சம் adjust பண்ணிக்கோங்க.

வித்தியாசமான் கவிதை தான்

இதுக்கு மிஞ்சி ஒரு விமர்சனம் வேண்டுமோ.. அழகாக அலசியுள்ளீர்கள்.....

ஆதவா
12-01-2007, 03:32 PM
முதலில் ஷீ அவர்களும் தாமரைச்செல்வன் அவர்களும் இலக்கணம் என்பது என்ன என்று விளக்கம்(வரைவிலக்கணம்) கூறுங்கள்..

பெரும்பாலும் உங்கள் கேள்விகளுக்கு விடை அங்கே கிடைத்துவிடும்..
இலக்கணமற்றது என்று எதனையும் கூற முடியாது என்பது அடியேன் கருத்து...

இதத் தாம்பா நான் சொன்னேன்