PDA

View Full Version : எப்படி லீவு எடுப்பது? இதோ உள்ளது வழி...gayathri.jagannathan
10-01-2007, 04:02 AM
அவசரமாக எனக்கு இரண்டு நாள் லீவு தேவைப்பட்டது...

பணியிடத்தில் எனக்கு வேலை பளு அதிகம்......

நேராப் போயி லீவு கேட்டா பாஸ் கண்டிப்பா லீவு குடுக்கமாட்டார்... என்ன பண்றது....???

"ஆங் ஒரு ஐடியா...ஏதாவது கிறுக்குத்தனமான வேலை பண்ணினா பாஸ் அதை பாத்துட்டு... இந்த பயலுக்கு வேலை பளு காரணமா மன அழுத்தம் ஜாஸ்தியா போச்சு.. ரெண்டு நாள் லீவு குடுத்துட்டு அப்பறமா வேலை வாங்கலாம்னு நெனைப்பாரு இல்லயா?... அதனால என்ன பண்ணலாம்னு" யோசிக்கறேன்....

"அடடா அதுக்கும் ஒரு வழி கண்டு பிடிச்சிட்டேன்... சபாஷ் டா டேய்.. உன் மூளையே (!!!) மூளை..." என்னை நானே தட்டி கொடுத்துக்கொண்டு...

மறுநாள் காலை உத்தரத்தில இருக்கும்ல பல்ப், அத கழட்டி எறிஞ்சுட்டு அந்த எடத்துல நான் தொங்க ஆரம்பிச்சேன்...
கொஞ்சம் வினோதமா சத்தம் கூட போட்டேன்...

எனக்கு அடுத்த காபினில் வேலை பார்க்கும் தோழி அதிசயித்து பார்த்து கேட்டாள் " என்னடா ஆச்சு உனக்கு?!!"... நான் அவளிடம் எனது திட்டத்தை கூறினேன்...

வந்தார் பாஸ் என்னை பார்த்தார்...
அவர் கண்களில் ஆச்சரியம் + குழப்பம்..
என்னிடம் கேட்டார்... " பயலே ஏண்டா இப்படி தொங்கர?"

அங்க தான் நீங்க ஐயாவோட புத்திசாலித்தனத்த நோட் பண்ணனும்... நான் சொன்னேன்.. " உங்களுக்கு தெரியலையா பாஸ், நான் ஒரு லைட் பல்ப்...!!!"

நான் நினைச்சா மாதிரியே... அவர் எனக்கு ரெண்டு நாள் லீவு குடுத்து " தம்பி போயி நல்ல ரெஸ்ட் எடுத்துட்டு வாப்பா ... அப்புறமா வேலை பாக்கலாம்னு" சொல்லிட்டாரு....

கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு ன்னு பாடிக்கிட்டே (மனசுக்குள்ள தான் :D :D !!) போறேன்... என் பின்னாடியே என்னோட பக்கத்து காபின் தோழியும் வந்துட்டா...

பாஸ் அவளை பார்த்து கேட்டார் "நீ எங்கம்மா போற?"

அதுக்கு அவ சொன்னா... " சாரி சார்!! என்னால இருட்டுல வேலை பார்க்க முடியாது !!"ன்னு சொல்லிட்டு நடையை கட்டிட்டா..... :angry:

மதி
10-01-2007, 04:11 AM
செம பல்ப்...
எங்கிருந்துங்க புடிக்கிறீங்க...இது மாதிரியெல்லாம்.

படிக்க நகைச்சுவையாயிருந்தாலும் பல மென்பொருள் நிறுவனங்களில் இது மாதிரி நடந்துகிட்டு இருக்கு. நண்பனொருவனை ராப்பகலா உழைக்க வச்சதால உடல்நிலை சரியில்லாம போய் டாக்டர்கிட்ட போனப்ப அவர் கேட்டிருக்கார்..

"நண்பர்கள்கிட்ட பேசுறியா..?"

"எப்பவாவது.."

"இது தான் ஆரம்பம். இனிமே நரம்பு தளர்ச்சிதான்..ஒழுங்கா தூங்கு. நண்பர்கள்கிட்ட அடிக்கடி பேசு. சரியாயிடும்..இல்லாட்டி....சாரி.."

அன்னிக்கு பயந்தவன் தான் இப்பல்லாம் மேலாளர்கிட்ட சண்டை போட்டுட்டு ராத்திரி சீக்கிரமா 10, 11 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போயிடறான். எல்லோருக்கும் போன் போட்டு யாரும் ரொம்ப நேரம் வேலை பாக்காதீங்கன்னு வேற சொல்லுறான்.

பென்பொருள் பொறியாளர் மற்றும் வல்லுநர்களே...ஜாக்கிரதை.

leomohan
10-01-2007, 04:26 AM
பல்ப் ட்யூப்லைட்டாக மாறாதிருந்தால் சரிதான். இப்படியெல்லாம் செய்தால் நமக்குள்ளே ஒரு கீழ்பாக்கம் உருவாகிவிடும். ஜாக்கிரதை :D

Mano.G.
10-01-2007, 04:28 AM
அடடா மனித வள நிர்வாகிக்கு
எப்படி எப்படி லீவு எடுக்கராங்க என டிப்ஸு
கொடுத்ததற்கு மிக்க நன்றி
இனிமேல் நானும் கவனமா இருப்பேனே.

மனோ.ஜி

leomohan
10-01-2007, 04:31 AM
அடடா மனித வள நிர்வாகிக்கு
எப்படி எப்படி லீவு எடுக்கராங்க என டிப்ஸு
கொடுத்ததற்கு மிக்க நன்றி
இனிமேல் நானும் கவனமா இருப்பேனே.

மனோ.ஜி

ஐயோ தப்பு பண்ணி வாத்தியார்கிட்டே மாட்டிகிட்ட கதையாச்சே. காயத்ரி ஜாக்கிரதை, நாம் மனோவின் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். இப்படி நம்ம கைவசம் இருக்கற எல்லா வித்தைகளையும் சொல்லித்தரக்கூடாது. :D

அறிஞர்
10-01-2007, 05:21 PM
விட்டா லீவுக்காக எல்லாரையும் உத்திரத்தில தொங்க விட்டுருவாங்க... போல......

சிரிப்பு அருமை காயத்ரி

ஓவியா
10-01-2007, 06:21 PM
படித்து சிரித்தேன்

ஐடியா சூப்பர்

நன்றி காயத்ரி

இளசு
10-01-2007, 11:20 PM
ஹாஹா... அபாரம் காயத்ரி... பாராட்டுகள்..

நாயகன் சாதா லைட் .
தோழி பவர் லைட்..
மேலாளர்தான் டியூப் லைட்..

(நான் மனோஜியைச் சொல்லலீங்கோ.. அவர்தான் கப்புன்னு பாயிண்ட்டைப் பிடிச்சுட்டாரே..)

மதி.. நீங்க பென்ஸைப் பற்றியா சொல்றீங்க?!!!!

arun
22-01-2007, 11:52 AM
நல்ல வழி தான் போங்க இதை கடைபிடித்து பாக்க வேண்டியது தான்

விகடன்
16-08-2007, 05:30 AM
நல்ல அலுவலகமாக இருக்கிறதே.
வேலைக்கு இடம் காலியாக இருந்தால் தெரியப்படுத்துங்கல். நான் வந்துவிடுகிறென்.

தாமரை
19-08-2007, 05:39 AM
இந்த ஐடியாவை செயபடுத்த முனைந்த சதா பாவம், பத்து நாளா தொங்கிகிட்டு இருக்கார்..

சிவா.ஜி
19-08-2007, 08:21 AM
அருமையான பதிவு காயத்ரி. ஆனால் இரண்டு நாளுக்காக இப்படி செய்யப்போய்...நிரந்தரமாக கீழ்பாக்கம் அனுப்பிடப்போறாங்க....அந்த பல்பை.