PDA

View Full Version : கொஞ்சமுடியா(ஆ)தவா



ஆதவா
09-01-2007, 07:22 PM
பிஞ்சே!
பிரித்தியலா சொத்தே!
பிரிய விளக்கே!
ஒளியே
ஒளியின் கதிரே!
ஒளிய விரும்பா சூரியனே!
பஞ்சே!
படுத்துருளும் கனவே!
காரியின் சினமே!
மாரியின் மனமே!
நஞ்சே!
நானுண்ணும் இன்பமே!
பஞ்சமே!
பாதியில் வந்த சொந்தமே!
நெஞ்சமே!
நெஞ்சில் சுமந்த தழும்பே!
மஞ்சமே!
இரவின் இரவியே!
கொஞ்சவும் முடியாத
பேடியடா நான்
என்ன செய்ய?
ஆணாய் பிறந்துவிட்டேன்!!

காரி என்றால் இந்திரன் (மழைக்கு காரணம் இந்திரனல்லவா,,,)
நஞ்சே" என்ற வார்த்தை சேர்த்ததை "நஞ்சாக" படிக்கவேண்டாம்..
அதற்கு வேறு அர்த்தமிருக்கிறது.. என் பாட்டி அடிக்கடி இந்த வார்த்தை உபயோகிப்பார்.. "நஞ்சுக்கொடி" அதன் அர்த்தம் தொப்புள் கொடி...

meera
10-01-2007, 08:51 AM
ஆதவா,

மன்னிக்கனும்.இந்த கவிதைல என்ன சொல்லவரீங்கனு எனக்கு புரியலை.ஆண்கள் பாவம்னு சொல்லரீங்களா??

கவிதைக்கு விளக்கம் தர முடியுமா???

ஆதவா
10-01-2007, 10:48 AM
ஆதவா,

மன்னிக்கனும்.இந்த கவிதைல என்ன சொல்லவரீங்கனு எனக்கு புரியலை.ஆண்கள் பாவம்னு சொல்லரீங்களா??

கவிதைக்கு விளக்கம் தர முடியுமா???

எனக்கு கொஞ்சத் தெரியாதுன்னு சொல்ல வரேன்...

மதுரகன்
10-01-2007, 05:34 PM
அடடா என்ன ஒரு கேள்வி என்ன ஒரு பதில்.... கவிதையை விட இது நல்லா இருக்கே..

இளசு
10-01-2007, 10:35 PM
இப்படி அழகழகாய்க் கொஞ்சிவிட்டு
கொஞ்ச முடியாதவர் என்றால்
நம்பமுடியாதவா..!

அருமை! பல வரிகள் குளத்தில் குளித்த தென்றலாய்.. புதுசாய்..
பாராட்டுகள்!

ஆதவா
11-01-2007, 01:33 AM
இப்படி அழகழகாய்க் கொஞ்சிவிட்டு
கொஞ்ச முடியாதவர் என்றால்
நம்பமுடியாதவா..!

அருமை! பல வரிகள் குளத்தில் குளித்த தென்றலாய்.. புதுசாய்..
பாராட்டுகள்!

மிக்க்க நன்றி இளசு அவர்களே

gragavan
11-01-2007, 04:30 AM
கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது. இது சிந்துபைரவி படத்தில் வரும் பாத்திரம் ஒவ்வொரு நடிகருக்கும் பொருத்தமாகப் பாடும்.

ஆதவா
07-06-2007, 01:58 AM
நன்றிங்க ராகவன்... நன்றியை நீண்ட நாட்கள் கழித்து சொன்னமைக்கு பெருந்தன்மையோடு மன்னிப்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு.....