PDA

View Full Version : ஒரு உண்மை



gayathri.jagannathan
09-01-2007, 03:44 AM
http://i128.photobucket.com/albums/p180/Gayathri_Jagannathan/C8423830.gif?t=1168345214

மதி
09-01-2007, 03:59 AM
நல்ல கவிதை...
இதை சற்று பெரிய அளவில் இடக்கூடாதா..???
படிக்க சற்று சிரமமாய் உள்ளது...

இந்தக்கவிதையின் கருப்பொருள் நீண்ட காலமாய் விவாதத்தில் உள்ளது. தொலைத்தொடர்பு முன்னேற்றத்தால் உலகுடன் பேசமுடிந்த நமக்கு, நமக்காக வீட்டில் காத்திருக்கும் உறவுகளுடன் பேச நேரமில்லாமல் போனது கொடுமையே.. யோசித்துப் பார்க்கையில் இப்போது இது சற்றே மாறி வருகிறதென்றே தோணுகிறது. என்னையும் என்னை சுற்றியுள்ள நட்புவட்டத்தையும் பார்க்கையில்.

ஆதவா
09-01-2007, 04:40 AM
சற்று பெரியதாக காட்டவும்

gayathri.jagannathan
09-01-2007, 08:12 AM
அந்த படத்தை எப்படி இடுவது என்று தெரியவில்லை அதனால் தான் attach செய்தேன்...

அப்படியே copy,paste செய்ய முடிவதில்லை...

insert image option ல் செய்யலாம் என்று பார்த்தால் அது ஒரு url ஐ கேட்கிறது...

என்ன செய்வது? மன்திறததினர் சற்றே உதவினால் நலம்

(ஆங்கில கலப்புக்கு மன்னிக்கவும்.. சரியான தமிழ் வார்த்தைகள் தெரியவில்லை ) :p :p

gayathri.jagannathan
09-01-2007, 08:19 AM
நல்ல கவிதை...
இதை சற்று பெரிய அளவில் இடக்கூடாதா..???
படிக்க சற்று சிரமமாய் உள்ளது...

இந்தக்கவிதையின் கருப்பொருள் நீண்ட காலமாய் விவாதத்தில் உள்ளது. தொலைத்தொடர்பு முன்னேற்றத்தால் உலகுடன் பேசமுடிந்த நமக்கு, நமக்காக வீட்டில் காத்திருக்கும் உறவுகளுடன் பேச நேரமில்லாமல் போனது கொடுமையே.. யோசித்துப் பார்க்கையில் இப்போது இது சற்றே மாறி வருகிறதென்றே தோணுகிறது. என்னையும் என்னை சுற்றியுள்ள நட்புவட்டத்தையும் பார்க்கையில்.

இந்த முன்னேற்றத்தால் நமது குடும்பக்கோப்புகள் குறைந்து வருகின்றன என்பது எனது வருத்தம்... நமது கலாசாரத்தின் அடிப்படையே இந்த குடும்பச் சங்கிலி தான் என்னும் பொழுது இந்த தொலை தொடர்பு முன்னேற்றததால் அந்த சங்கிலியில் பிளவு ஏற்பட்டுள்ளது....

கலாசார அடிப்படையே ஆட்டம் கண்டுள்ளது... ஆனால் மிகச் சொற்பமான மக்கள் இன்னும் நமது கலாசாரத்தை கட்டி காப்பதில் முயற்சி, ஊக்கம் காட்டி வருகின்றனர்... மற்றவர்கள் அதைக் கண்டு திருந்தினால் சரி.....

ஆதவா
09-01-2007, 09:06 AM
முதலில் உங்கள் படத்தை ஏதாவதொரு படங்கள் சேமிக்கும் தளத்தில் அப்லோடு செய்யுங்கள்..

உதா: imageshake அல்லது photobucket

அவர்கள் முகவரி தருவார்கள். அதை இங்கே insert Image என்ற பொத்தானைக் கொண்டு இடுங்கள்.... உங்கள் படம் பெரிதாகத் தெரியும்

ஷீ-நிசி
09-01-2007, 09:11 AM
காயத்ரி அவர்களே.. என்னவென்று படிக்க முடியவில்லை. அந்த தொகுப்பை நீங்களே இங்கு பதித்திடுங்கள்..

gayathri.jagannathan
09-01-2007, 11:27 AM
முதலில் கொடுத்துள்ள சுட்டியில் சென்று கவிதையை படிக்கவும்...

ஆதவா... நீங்க சொன்ன மாதிரி தான் செஞ்சேன்... ஆனாலும் படம் வரலையே.. .வெறும் சுட்டி தானே வருது....என்ன பண்றது?

ஆதவா
09-01-2007, 11:33 AM
முதலில் கொடுத்துள்ள சுட்டியில் சென்று கவிதையை படிக்கவும்...

ஆதவா... நீங்க சொன்ன மாதிரி தான் செஞ்சேன்... ஆனாலும் படம் வரலையே.. .வெறும் சுட்டி தானே வருது....என்ன பண்றது?

அதெல்லாம் சரிதான்... Insert Image என்று ஒரு பட்டன் இருக்கிறது பாருங்கள் அதிலே இடவேண்டும்

ஷீ-நிசி
09-01-2007, 01:36 PM
ம்.. இப்பொழுது படிக்க முடிகிறது...

மனைவியின் கையைத் தொட்டதை விட
மெளசைத் தொட்டதே அதிகம்.
பிள்ளைகளின் விரல் தொட்டு
ஸ்பர்சித்ததை விட கீபோர்டை
ஸ்பர்சித்ததே அதிகம்!

யோசிக்கவேண்டிய வரிகள்

வரவுகளை எதிர்நோக்கி
உறவுகளை விலகிவிட்டு
ஓடுகிறவர்களின் எண்ணக் குமுறல்கள்

மதுரகன்
09-01-2007, 04:32 PM
..........
..........
என்ன சொல்வதென்றே தெரியவில்லை உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் அவகாசம் கேட்கின்றது...
..........
..........

gayathri.jagannathan
10-01-2007, 03:57 AM
..........
..........
என்ன சொல்வதென்றே தெரியவில்லை உண்மையை ஏற்றுக்கொள்ள மனம் அவகாசம் கேட்கின்றது...
..........
..........


அந்த அவகாசத்தில்.. எதிரே இருக்கும் உண்மைக்குள் நாம் மூழ்கி விடுவோம் போலிருக்கிறது...

பென்ஸ்
10-01-2007, 07:06 AM
காயத்ரி....

அருமையான கவிதையை கொடுத்தமைக்கு நன்றி.....

கவிதை உரிமையாளருக்கும் (சேஷாத்ரி) பாராட்டுகள்....

நமது சொந்த கவிதைகளை மட்டுமே இந்த பகுதியில் பதிப்பது வழக்கம். நமக்கு பிடித்த கவிதைகள், பகிர நினைத்த அடுத்தவர் கவிதைகளை "இலக்கியம், புத்தகங்கள்" பகுதியில் பதிப்பது வழக்கம்....
மேலும் ... பிறர் கவிதையை கொடுக்கும் போது அவர்களது பெயரை கொடுத்து "நன்றி" என்று சொல்லுவது உத்தமம்.

இப்போ கவிதை:
குழந்தையில் விரலுக்கு பதிலாய் -- கீபோர்ட்
மனைவியின் கரங்களுக்கு பதிலாய் --- மவுஸ்
ப்ராஜக்ட் டெட்லைன் என்று நன்பன் திருமணம் கட்டு
மீட்டிங் என்று குடும்பத்துடம் இரவுணவு கட்டு...

இது எதானால் என்று கேட்டால்... ?? உம் பதில் என்ன???

எதாவது "சப்பை கட்டும்" பதில் தான் தருவீர்....

வாழ்க்கையில் நாம் எல்லாம் முதன்மை படுத்துதல் செய்து வாழ்ந்து வருகிறோம்... இந்த முதன்மை படுத்துதல் நாம் அறிந்தோ, அறியாமலோ (அன்கான்சியஸ்) முதன்மை படுத்துகிறோம்... இதில் நாம் நம்முடைய அடிப்படை தேவைகளான அன்பு, குடும்பம், பாதுகாப்பு, இது எல்லாம் பூர்த்தி அடைந்ததாக நினைத்து கொண்டு அதை விட முக்கியமான புகழ், பதவி போன்றவற்றை தேடுகிறோம்...
இதில் உறவுகள் காயபடும்...

அந்த காயத்துக்கு மருந்து வைக்காமல், காயத்தை "வேலையினாலதான் வரலை", "இப்படியாயிடுச்சு...அப்படியாயிடுச்சு" என்று ஈகோ டிபன்ஸ் செய்ய ஆரம்பிக்கிறோம்....
காயம் வலிக்கும் போது... அழுவோம், புலம்புவோம்... மருந்தை பற்றியும் பேசுவோம் ... ஆனால் , அதை குணபடுத்த நினைப்பவரக்ள் குறைவு....

சுருக்கமா: மனமிருந்தால் வழி உண்டு...

மதி
10-01-2007, 07:20 AM
உண்மை பென்ஸ்..
மனமென்று ஒன்று இருந்தால்..

sarcharan
10-01-2007, 07:23 AM
உண்மைகளை கூறும் கவிதை. ஆனால் என்ன செய்ய பாதி யுத்ததில் இருக்கிறோமே...

ஷீ-நிசி
10-01-2007, 09:18 AM
உண்மைகளை கூறும் கவிதை. ஆனால் என்ன செய்ய பாதி யுத்ததில் இருக்கிறோமே...

ஒன்று வெற்றி பெற முயற்சியுங்கள்.. அல்லது யுத்தத்திலிருந்து பின் வாங்குங்கள்.. தொடர்ந்து யுத்ததிலேயெ இருக்காதீர்கள். கடைசியில் உங்கள் வெற்றியை பகிர்ந்துக் கொள்ள யாருமே இருக்க மாட்டார்கள்..
இந்த யுத்தத்தில் பின்வாங்கினாலும் தவறில்லை!