PDA

View Full Version : எந்த டயர் ?

pathman
08-01-2007, 08:29 AM
எந்த டயர்?

படு புத்திசாலிகலான 4 எம்பிஏ படிக்கும் நணபர்கள் இறுதித்தேர்வுக்கு முதல் நாள் நன்றாக குடித்துவிட்டதனால் படிக்க முடியவில்லை அடுத்த நாள் காலையில் துயரம் மிக அவர்கள் யோசித்தனர் எப்படி தேர்வை 4 பேருக்காக மட்டும் தள்ளிபோட முடியும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கை கால்கள், உடை எல்லாவற்றிலும் கிரீஸ் எண்ணெய் தடவிக்கொண்டு தலை முடியை கலைத்துக்கொண்டு பரிட்சை ஹாலுக்குள் நுழைந்தார்கள். அய்யோ சார் என்று பரிட்சை தேர்வாளரிடம் கதறி அவருக்கு தங்களுக்கு நடந்த சோகக்கதையை சொன்னார்கள் நேற்று இரவு நகரத்தில் இருந்து காரில் வரும் போது வனாந்தரத்தில் கார் டயர் பஞ்சராகி எந்த வித உதவியும் இன்றி பல முயற்சிகளுக்கு பின்னர் வெறும் காலில் நடந்து இப்போதுதான் வந்து சேர்வதாக புலம்பினார்கள். சில நாட்களுக்கு பின்னர் தங்களுக்கு பரீட்சை எழுதுவதாக கேட்டுகொண்டார்கள்.தேர்வாளரும் சரி என்று ஒப்புக்கொண்டு 3 நாட்களுக்கு பின்னர் பரீட்சை என்று சொன்னார்.

நண்பர்கள் விழுந்து விழுந்து படித்து மூன்று நாட்களுக்கு பின்னர் தேர்வாளரிடம் சென்றனர்.
இது அசாதாரணமான கோரிக்கை ஆகவே பரீட்சையும் அசாதாரணமாகத்தான் இருக்கும் என கூறி நான்கு மாணவர்களுக்கும் 4 வெவ்வேறு பரீட்சை அறைகளில் ஒரே கேள்வித்தாளை கொடுத்து பரீட்சை வைக்கப்போவதாக சொன்னார்.

கேள்வித்தாளில் முதல் கேள்வியாக 5 மதிபெண்களுக்கு ஒரு எளிய கேள்வி இருந்தது. மாணவர்கள் வெகு எளிதில் அதனை முடித்துவிட்டார்கள். அடுத்து 95 மதிபெண்களுக்கு ஒரு கேள்வி இருந்தது

எந்த டயர் ?

arun
08-01-2007, 10:08 AM
கேள்விய முழுசா முடிங்க நண்பரே பதித்தமைக்கு பாராட்டுக்கள்

pgk53
08-01-2007, 01:26 PM
பாராட்டுகள் நண்பரே பத்மன் அவர்களே.
மிக அருமையான புதிர் போட்டுவிட்டீர்கள்.

நிச்சயமாக அந்த நான்கு நண்பர்களும் பொய் சொல்வதற்கு முன்பு இப்படி ஒரு கேள்வி வரும் என்பதை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

நிச்சயமாக அவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான விடையை எழுதியிருக்க இயலாது. அந்தக் கேள்விக்கு 95 மதிப்பெண்கள் கொடுத்திருந்ததினால் அவர்கள் நால்வருமே தேர்வில் வெற்றியடைய முடியாது.

பாராட்டுகள் நண்பரே!!!!!!!!!!!!!!

ஆதவா
08-01-2007, 02:16 PM
சபாச்,,, அருமையான புதிர்... தொடரட்டும் பயணம் எங்க மூளையை குழப்பி.

அறிஞர்
08-01-2007, 02:21 PM
தொடருங்கள் பத்மன்.... யாரும் பாஸாக போவதில்லை.... :rolleyes: :rolleyes:

ஷீ-நிசி
08-01-2007, 02:25 PM
நச் னு ஒரு கேள்வி! எந்த டயர்.... சூப்பரப்பு

மன்மதன்
08-01-2007, 05:02 PM
சபாஷ் சரியான கேள்வி ...

omnlog03
21-01-2007, 02:01 PM
Good joke

ஓவியா
21-01-2007, 02:13 PM
ரசித்தேன்

நச்சுனு ஒரு கேள்வி....ஹா ஹா

தொடரவும்

அன்புரசிகன்
05-07-2007, 01:27 PM
அந்த 4 பேரும் ஓவியன் அமரன் அக்னி மற்றும் மனோஜ் தானே...??? :D

namsec
05-07-2007, 01:52 PM
எந்த டயர் பஞ்சர் என்று வினா இருந்திருக்கும்

4 நண்பர்களும் 4ங்கு வெவ்வேறு பதில் எழுதியிருப்பார்கள்.

இதில் திறமையானவர் தேர்வாளர்தான்

அக்னி
05-07-2007, 01:57 PM
அந்த 4 பேரும் ஓவியன் அமரன் அக்னி மற்றும் மனோஜ் தானே...??? :D

அட அன்புரசிகன் கண்டுபிடித்துவிட்டாரே..

ஆமாம் தேர்வாளரே, அன்புரசிகனின் இந்தக் பதில் சரியானதா...???

மனோஜ்
05-07-2007, 02:09 PM
அட அன்புரசிகன் கண்டுபிடித்துவிட்டாரே..

ஆமாம் தேர்வாளரே, அன்புரசிகனின் இந்தக் பதில் சரியானதா...???

:1: தவறானது அதில் மாட்டியது அன்புரசிகன் அவர் முக்கியமாக இந்த ஐடியா கொடுத்தது போல அதான் என்னை மாட்டி விடுகிறார் ஹ:icon_blush:

அன்புரசிகன்
05-07-2007, 04:39 PM
அட அன்புரசிகன் கண்டுபிடித்துவிட்டாரே..

மனோஜ் இடம் 2 தடவை பட்டம் வாங்கியிருக்கிறேன். (கண்டுபிடிப்பிற்காக... :icon_cool1: )

:1: தவறானது அதில் மாட்டியது அன்புரசிகன் அவர் முக்கியமாக இந்த ஐடியா கொடுத்தது போல அதான் என்னை மாட்டி விடுகிறார் ஹ:icon_blush:

:icon_shok: இது உங்களுக்கே அடுக்குமா,,???? :grin:

மனோஜ்
05-07-2007, 04:41 PM
அடுக்குறதாலதான் சொன்னேன் ஹ ஹ ஹ

அக்னி
05-07-2007, 04:41 PM
மனோஜ் இடம் 2 தடவை பட்டம் வாங்கியிருக்கிறேன். (கண்டுபிடிப்பிற்காக... :icon_cool1: )

அப்போ மாடு யார் பிடிச்சாங்க...
இலக்கணப்பிழை எல்லாம் கண்டு கொள்ளப்படாது...

அன்புரசிகன்
05-07-2007, 04:45 PM
அப்போ மாடு யார் பிடிச்சாங்க...
இலக்கணப்பிழை எல்லாம் கண்டு கொள்ளப்படாது...

:smilie_abcfra: என்ன பிதற்றலப்பா? மாடா?

மனோஜ்
05-07-2007, 04:47 PM
ஆமா என்ன ஆது மாடு அக்னி

அக்னி
05-07-2007, 04:49 PM
:smilie_abcfra: என்ன பிதற்றலப்பா? மாடா?

ஆமா என்ன ஆது மாடு அக்னி

கன்று (கண்டு) பிடித்தது ரசிகன் என்றார்...
அதுதான் மாடு பிடித்தது யார் என்றேன்...
சத்தியமா நானில்லை..

அன்புரசிகன்
05-07-2007, 04:52 PM
கன்று (கண்டு) பிடித்தது ரசிகன் என்றார்...
அதுதான் மாடு பிடித்தது யார் என்றேன்...
சத்தியமா நானில்லை..

:sport009: ஆள விடுங்கப்பா சாமி...

மனோஜ்
05-07-2007, 04:52 PM
அநியாத்திற்கு கண்டுபிடிக்கிறீர் அக்னி
அன்பு பாருங்க என்னமாதிரி தெரிச்சு ஓடறாறு பாருங்க

அக்னி
05-07-2007, 04:58 PM
அநியாத்திற்கு கண்டுபிடிக்கிறீர் அக்னி
அன்பு பாருங்க என்னமாதிரி தெரிச்சு ஓடறாறு பாருங்க

உங்கள பாத்துதான் உங்கள மாதிரியே ஓடறாரு... நீங்க நில்லுங்க அவரும் நின்னுடுவாரு...

அன்புரசிகன்
05-07-2007, 05:01 PM
உங்கள பாத்துதான் உங்கள மாதிரியே ஓடறாரு... நீங்க நில்லுங்க அவரும் நின்னுடுவாரு...

ஆமா அக்னி... நீங்க என்ன பதில் விடைத்தாளில் போட்டீங்க?

மனோஜ்
05-07-2007, 05:01 PM
இங்பாருயா கிளம்பீட்டாங்கையா கிளம்பீட்டாங்க

அக்னி
05-07-2007, 05:03 PM
ஆமா அக்னி... நீங்க என்ன பதில் விடைத்தாளில் போட்டீங்க?

உங்கள மொபைல்ல கேட்டுத்தானே எழுதினேன்...

அன்புரசிகன்
05-07-2007, 05:08 PM
உங்கள மொபைல்ல கேட்டுத்தானே எழுதினேன்...

பொய்... என்னிடம் மொபைலே இல்லை... நீங்கள் சுட்டிப்பையனிடம் கேட்டிருக்கிறீர்கள்... :lachen001: :lachen001: :lachen001:

அக்னி
05-07-2007, 05:11 PM
பொய்... என்னிடம் மொபைலே இல்லை... நீங்கள் சுட்டிப்பையனிடம் கேட்டிருக்கிறீர்கள்... :lachen001: :lachen001: :lachen001:

அப்போ இருக்கு என்பதுதானே உண்மை யுவர் ஆனர்...
அவரே தன் பதிவால் ஒத்துக்கொண்டதால், இதனைத் தக்க ஆதாரமாகக் கொண்டு, நான் அன்புரசிகனிடம் தான் கேட்டு எழுதினேன் என்று தீர்ப்ப்புக்கூறுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இல்லாவிட்டால், கொல்லுவேன்...

அன்புரசிகன்
05-07-2007, 05:15 PM

வார்த்தைகளில் ஜாலம் பேசுவதே உமது திறமை...

ஆனாலும் மசியமாட்டான்... இந்த ரசிகன்.

ஓவியன்
05-07-2007, 05:16 PM
அந்த 4 பேரும் ஓவியன் அமரன் அக்னி மற்றும் மனோஜ் தானே...??? :D

ஹீ!,ஹீ!

முந்திவிட்டதால் நீர் இல்லையென்றாகி விடுமோ?

:icon_cool1: :icon_cool1: :icon_cool1: :icon_cool1:

ஓவியன்
05-07-2007, 05:16 PM
ஆனாலும் மசியமாட்டான்... இந்த ரசிகன்.

ஆமா நீர் என்ன அவித்த உருளைக் கிழங்கா மசிவதற்கு?:grin:

ஓவியன்
05-07-2007, 05:18 PM
அப்போ இருக்கு என்பதுதானே உண்மை யுவர் ஆனர்...
அவரே தன் பதிவால் ஒத்துக்கொண்டதால், இதனைத் தக்க ஆதாரமாகக் கொண்டு, நான் அன்புரசிகனிடம் தான் கேட்டு எழுதினேன் என்று தீர்ப்ப்புக்கூறுமாறு கேட்டுக் கொள்கின்றேன். இல்லாவிட்டால், கொல்லுவேன்...

அது!:4_1_8:

நம்மளைப் பற்றி தப்பவிப்பிராயம் பரப்பிய அன்பின் வம்புத் தனத்தை தோலுரிப்போம். :grin:

அக்னி
05-07-2007, 05:21 PM
ஆமா நீர் என்ன அவித்த உருளைக் கிழங்கா மசிவதற்கு?:grin:

மசிந்த பின் மசிக்க முடியாதுதானே...:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:

ஓவியன்
05-07-2007, 05:31 PM
மசிந்த பின் மசிக்க முடியாதுதானே...:music-smiley-010: :music-smiley-010: :music-smiley-010:

ஆமா நீர் இந்த திரியில் அன்பைப் போடுத் தாராளமாக மசித்த:4_1_8: பின்னர் நான் எப்படி மசிப்பது?:grin:

அக்னி
05-07-2007, 05:36 PM
உசுப்பேத்தி விட்டதே அன்புரசிகர்தானே...
மசித்த மசிப்பில் சித்தம் சிதறிவிட்டதோ...
காணவில்லையே...

அன்புரசிகன்
07-07-2007, 08:56 AM
ஆமா நீர் என்ன அவித்த உருளைக் கிழங்கா மசிவதற்கு?:grin:

ஓவியன் ஒரு கிழங்கர் என நிரூபித்துக்காட்டியுள்ளார்

ஆமா நீர் இந்த திரியில் அன்பைப் போடுத் தாராளமாக மசித்த:4_1_8: பின்னர் நான் எப்படி மசிப்பது?:grin:

தூங்கியது போதும்... துயில் விலக்கி எழுந்துவிடும். அதிகமாக கனவு காணக்கூடாது...

விகடன்
31-07-2007, 05:22 AM
95 மதிப்பெண்ணிற்கான கேள்வி கட்டுரைக்கேள்வியாக்கும். அதுதான் கேள்வியின் அளவு சிறியதாக இருக்கிறது......

எப்படி சரியாகச் சொன்னாய்? என்றுதானே கேற்கிறீர்கள்?

இந்தளவு காலமாக எத்தனை பரீட்சை எழுதியிருப்பேன். இதுகூடவா தெரியாது!

lolluvathiyar
31-07-2007, 06:12 AM
சத்தியமா பெயிலாயிருப்பாங்க*

அதிரடி அரசன்
01-08-2007, 08:39 AM
அதாங்க கார் டயர் :angel-smiley-010:

மனோஜ்
01-08-2007, 08:41 AM
கண்டுபுடிச்சுடாருயா டயருயா

அதிரடி அரசன்
01-08-2007, 08:42 AM
கண்டுபுடிச்சுடாருயா டயருயா

அப்படின்னா எனக்குதான் 95மார்க் :mini023:

மனோஜ்
01-08-2007, 08:45 AM
கண்டிப்பா 100 100 தான் போங்க ஆனா என்ன முன்னாடி உள்ள 1 மட்டும் இல்ல

அன்புரசிகன்
01-08-2007, 08:47 AM
அதிரடி அரசன் அவர்களே...

ஒரு செய்தியை மேற்கோள் காட்டும் போது அப்படியே முழுமையாக செய்யவதை தவிருங்கள். அது மன்றத்தின் அழகை கெடுத்துவிடும்.

தேவையான வரிகளை விட்டு மற்றயவற்றை நீக்கலாமே...

மன்றவிதிகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5133) தவறாது படியுங்கள்.

இது எனது அன்பான வேண்டுகோள். தவிர உங்கள் கலாய்ப்புக்களை தொடரலாம்.

அதிரடி அரசன்
01-08-2007, 08:59 AM
நன்றி அன்புரசிகன் அவர்களே :icon_35:

இளசு
02-08-2007, 04:15 AM
அதிரடி அரசன் அவர்களுக்கு

அன்புரசிகன் சொல்லியும் முழுப்பதிவையும் தேவையின்றி மேற்கோள் காட்டிப் பதித்தது − தேவையற்றது..

இங்கே பாருங்கள் .. மேலும் விளக்கங்கள் கிடைக்கும்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7309

உங்கள் புரிதல், ஒத்துழைப்புக்கு நன்றி!

சூறாவளி
11-07-2008, 06:16 AM
வெகுவாக ரசித்தேன்... ஆரம்பம் முதல் முடிவு வரை...