PDA

View Full Version : நாம் நுழையும் தளங்களை மற்றவர்கள் கண்டுபி

saguni
07-01-2007, 10:59 PM
எனது கம்பெனியின் உலாவும் கணிணியை பயன்படுத்துகிறேன்.அவர்கள் நாம் செல்லும் தளங்களை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுவதில் வல்லவர்கள். 24மணிநேரமும் எங்கள் கம்பெனியின் செர்வரிலேயேவா உட்கார்ந்திருக்க முடியும்?அவர்களுக்கு தெரியாமலிருக்க Temporary Internet Files, Delete cookies, history எல்லாவற்றையும் அடிக்கடி அழித்து விடுகிறேன். எங்கள் சர்வர் மட்டுமின்றி வெளியே உள்ள செர்வரில் இருந்து நுழையும் தளங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இவை சாத்தியமா? இவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என நண்பர்கள் கூறமுடியுமா?

Gurudev
18-01-2007, 11:45 AM
நான்காவதாக இன்னொன்றையும் செய்யவேண்டும். IE ஆயின் Tools-->Internet Options -->Content -->Auto Complete வரும் பெட்டியில் Web Addresses என்பதன் முன் உள்ள Tick ஐ எடுத்துவிடுங்கள். இவையெல்லாம் Manual ஆக செய்யும் வேலைகள்.

இந்த வேலைகளை தானாகவே செய்யும் Evidence Eliminator என்றொரு மென்பொருளும் உண்டு.

leomohan
18-01-2007, 12:27 PM
எனது கம்பெனியின் உலாவும் கணிணியை பயன்படுத்துகிறேன்.அவர்கள் நாம் செல்லும் தளங்களை கண்டுபிடித்து எச்சரிக்கை விடுவதில் வல்லவர்கள். 24மணிநேரமும் எங்கள் கம்பெனியின் செர்வரிலேயேவா உட்கார்ந்திருக்க முடியும்?அவர்களுக்கு தெரியாமலிருக்க Temporary Internet Files, Delete cookies, history எல்லாவற்றையும் அடிக்கடி அழித்து விடுகிறேன். எங்கள் சர்வர் மட்டுமின்றி வெளியே உள்ள செர்வரில் இருந்து நுழையும் தளங்களையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. இவை சாத்தியமா? இவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என நண்பர்கள் கூறமுடியுமா?

உங்கள் கணினியில் நீங்கள் எந்த மென்பொருள் பயன்படுத்தியும் பிரயோஜனம் இல்லை. மேலும் நீங்கள் குக்கீக்களை அழிப்பதாலோ அல்லது உலாவி வரலாறை அழிப்பதாலோ உங்கள் கணினியில் வந்து யாராவது சோதனை செய்தால் தான் தவிர்க்க முடியும்.

ஆனால் நீங்கள் எந்த தளத்திற்கு செல்கிறீர்கள் என்பதை இப்படி கணிப்பதில்லை அவர்கள். அவர்களிடமும் மத்திய கட்டுபாடு வழங்கி ஒன்று உள்ளது. அனைத்து இணையதள கோரிக்கைகளும் அதன் மூலம் செலுத்தப்படுகின்றன. பிறகு அவர்கள் நீங்கள் வணிகத்திற்கு சம்பந்தமில்லாத தளங்கள் சென்றால் அதை கண்காணிக்கிறார்கள். கீழ் கண்ட மென்பொருட்களில் ஒன்று உபயோகத்தில் இருக்கலாம்.

http://www.websense.com

http://www.surfcontrol.com

http://www.securecomputing.com

omnlog03
22-01-2007, 03:06 AM
So how to evade from them too?

ஷீ-நிசி
22-01-2007, 03:21 AM
உங்கள் கேள்விக்கு விடை இல்லை என்பதே என் கருத்து. network monitoring மூலம் மிக சுலபத்தில் கண்டுபிடித்திட முடியும். ஒரே வழி. system administrator-யை உங்கள் நண்பனாக்கிக்கொள்ளுங்கள்.

leomohan
22-01-2007, 09:44 AM
So how to evade from them too?

ஆஹா, ஷீ சொன்னது போல நண்பராக்கி கொள்ளுங்கள், இல்லை பிரச்சனை உள்ள தளங்களை வீட்டிற்கு வந்து உலாவுங்கள். :)

Narathar
22-01-2007, 12:04 PM
ஆஹா, ஷீ சொன்னது போல நண்பராக்கி கொள்ளுங்கள், இல்லை பிரச்சனை உள்ள தளங்களை வீட்டிற்கு வந்து உலாவுங்கள். :)

வேலை செய்யும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டுக்கு கட்டுப்படுவதே சாலச்சிறந்தது.................

வேண்டுமானால் வீட்டில் வந்து சொந்தமாக உலாவுங்கள்!

இது என் தனிப்பட்ட ஆலோசணை!

விகடன்
03-02-2007, 11:05 AM
உங்கள் அனைத்து நடவடிக்கைகளையும் உங்கள் கணிணியில் பார்த்துத்தான் கண்டுகொள்கிறார்கள் என்றால் மேற்கூறிய முறைகளால் தாங்கள் இணையத்தை பார்த்திருக்கிறீர்கள் என்பதற்கான அடையாளங்களை உங்கள் கணிணியில் இருந்து மாத்திரம் நீக்கி தப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் தங்கள் கருத்துப்படி நெட்வேக்கில் கரைகண்டவர்களால் கையாளப்படுவதாக தென்படுகிறது. அதலால் உங்களை பிறிதொரு கணிணியிலிருந்தே கவனிக்கக்கூடியவாறே அவர்களின் நடவடிக்கை அமையப்பெற்றிருக்கும். உங்கள் கணிணியில் இருப்பதைப்போலவே கம்பனியில் இருக்கும் சேவரிலும் பதிவுகளை மேற்கொள்ள முடியும். அவற்றை அழிப்பது என்பது அட்மின்னால் மாத்திரமே முடியுமான காரியம். இரண்டு வழிகள் உண்டு,
1. அட்மின் இரகசிய குறியீட்டை அறிந்து நீங்களே சென்று அன்றாடம் அழித்துக்கொள்ளல். ( பல நாள் திருடன் ஒருநாள் அகப்படும் சந்தர்ப்பம் நிறையவே உண்டு)

2. அட்மினிற்கு ஏதாச்சும் கொடுத்து (அவருடைய வீக்னசை அறிந்து உணவு, தண்ணி...... இறுதிக்கட்டமாக உதை) உங்கள் வழிக்கு கொண்டு வருவதே.

சுபன்
03-02-2007, 08:17 PM

ஏன் உள்ள போகவா??!!