PDA

View Full Version : மதுரகன் கவிதைகள்

மதுரகன்
07-01-2007, 05:26 PM
தெரிந்துகொள்...

இதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத
என் படுக்கையறையில் நீ நுழைந்தால்
அங்கு உனக்காகக் காத்துக்கொண்டிருப்பவை....

இந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்
மெல்லிய இசையும்...

கண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்..

--மதுரகன்--

மதுரகன்
08-01-2007, 05:19 PM
உதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா
அவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...

கலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமா
அவற்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...

உடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்

கலைந்துபோன கனவுகள் அவள் நினைவுகொண்டே கவிதையாக்குங்கள்

மறைந்துபோகும் சூரியன் அவளில் மையல்கொண்டு வரச்செய்யுங்கள்

உறைந்துபோகும் பனிமலை அவள் உணர்வு சேர்த்தே உருகவையுங்கள்

விரிந்துகிடக்கும் வானம் அவள் முகத்தைக்காட்டி ஒடுங்கவையுங்கள்

வெடித்துப்பறக்கும் தீப்பொறி அவள் உதிரக்காற்றில் சுடராய் மாற்றுங்கள்

பரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்

சிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்

எழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று...

ஆதவா
08-01-2007, 05:43 PM
முதலாவதாக... வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்க்காக ஒற்றை வரிகளில் எழுதியமைக்கு பாராட்டுக்கள். அதே சமயம் மீண்டும் தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இரண்டாவதாக : தலைப்பு பொருந்தாததாக தோன்றுகிறது/. காதலியைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு அவளை இரக்கமற்றவள் என்றும் சொல்லுகிறீர். கவிதை நாயகன் இறந்தும் காதலியை பெருமையாகச் சொல்லுகிறானல்லவா? அவ்வளவே!!
மூன்றாவதாக: வாக்கியத்தின் ஒப்புமையும் சிந்தனையும் அருமை..

உதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா
அவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...

பூவின் இதழ்களை காதலியின் பெயராலேயே ஒன்று சேர்க்கிறீர்கள் சபாஷ்... இதழ்களுக்கு காதுகளும் இருக்கிறதா இந்த கற்பனை உலகில்?

கலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமா
அவற்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...

மிக அற்புதமான சிந்தனை மதுரகன்.. சற்று யோசிக்க வைக்கிறது.. ஒருவேளை என் காதலியின் மூச்சு பட்டாவது மழை வராதா என்று..

உடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்

அவள் பெயரில் என்ன அவ்வளவு ஒட்டுதல்?!? குமிழிகளின் சிதறல்களை ஒட்டவைக்கிறீர்களே! அருமையான வரிகள்

உவமைகள் அழகு.. சாதாரணமாக எதுகைகளும் அமைந்துள்ளது..

பரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்

நீங்க காதலியத்தான் சொல்றீங்களா? இவ்வளவு புனிதமாக நினைக்கிற காதலியை வேர்வை சிந்த வைக்கிறீங்களே! பாவங்க...

சிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்
எழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று

நீங்கள் கடைசி வரிக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்.
இன்னும் சில வரிகள் சேர்த்து இருக்கலாமென நினைக்கிறேன். அல்லது இன்னுமொரு அத்தியாயம் போடுங்கள்... நிறைய கற்பனைகள் வெளிவரும்.
ஆக,
கவிதை அருமை,, இன்னும் வேண்டும் பொறுமை. (தலைப்பிற்கு)

மதுரகன்
08-01-2007, 06:17 PM
நண்பர் ஆதவா அவர்களே இரக்கமற்றதன்மை என்பது தீய விடயங்களில் மாத்திரமில்லை. நல்ல விடயங்களிலும் காணப்படலாம் உதாரணமாக ஒருவீட்டில் விருந்துண்ண போகிறீர்கள் அவர்கள் ஒரேயடியயொக உணவு வைத்தார் என்மேல் இரக்கமில்லையா என கேட்பதில்லையா...

அடுத்தது கவிதை நாயகன் இறக்கவில்லை அவன் தனது கல்லறையை இப்போதே கற்பனை செய்கிறான்...

ஏனெனில் அவளின் இரக்கமற்ற அந்த அளவுகடந்த அன்பில் தான் மூழ்கி மூச்சடைத்து இறந்துவிடுவேன் என எண்ணி..

எப்படியாகிலும் உங்கள் விமர்சனம் என்னை உற்சாகப்படுத்துகிறது..

ஆதவா
08-01-2007, 06:29 PM

இது உங்கள் கோணத்தில் நன்றாகவே இருக்கிறது.. மேலோட்டமாகக் கண்டேன்.. அதனையே சொன்னேன்...

நல்ல கவி ஆற்றல்
தொடருங்க

ஆதவா
08-01-2007, 06:38 PM
இதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத
என் படுக்கையறையில் நீ நுழைந்தால்
அங்கு உனக்காகக் காத்துக்கொண்டிருப்பவை....

இந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்
மெல்லிய இசையும்...

கண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்..

--மதுரகன்--

நண்பரே இந்த கவிதைக்கு விமர்சனம் பண்ண தகுதியற்றவன் இருப்பினும் எனது எண்ணங்களைச் சொல்லுகிறேனே!

என் பார்வையில் இந்த கவிதை
ஒளிகூட நுழையாத படுக்கையறைக்கு காதலியின் பிரவேசம் அருமையான் கற்பனை... கண்ணீரோடு காதலன் காத்திருக்கிறான் என்றால் பிரிவு... விடுதலையளிக்கும் மெல்லிய இசை என்பது கூடல் அல்லது கற்பனை..
இது காதல் கவிதை என்றால் இவ்வாறு இருக்கலாம். கவிஞர் என்ன மனதில் வைத்திருக்கிறாரென்று தலைப்பை பார்த்தால் தெரிந்து கொள் என்று எழுதியிருக்கிறீர்களே!! எனக்கு புரியவே இல்லை பின்னெப்படி தெரிந்து கொள்ள...

உங்கள் கவிதைகளிரண்டும் கட்டுப்படா குதிரைகள்.. அந்த வேகத்தில் பயணம் செய்ய எங்களுக்கும் அவகாசம் வேண்டும்.

உங்கள் பதில்???
ஆதவா

அறிஞர்
08-01-2007, 06:48 PM
மதுரகனின் பதிப்புக்கள்... ஆரம்பித்துவிட்டன...
மெல்லிய இசையும், கண்ணீர் கண்களும் காதலனுக்கு இன்பம் தரும் என்பதில் சந்தேகமில்லை
---------
ஆதவனின் விமர்சனங்களை.. உங்களை சிறந்தவராக உருவாக்குவதற்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
--------

இளசு
08-01-2007, 10:36 PM
ஆதவனின் அழகிய விமர்சனத்துடன்
மதுரகனின் மதுரக்கவிதையை ரசித்தால்..

இரட்டை இன்பம்... இருவருக்கும் பாராட்டுகள்..!

இளசு
08-01-2007, 10:43 PM
இருள்.. தனிமை - பிரிவு, சோகம், ஆமையாய் ஒடுங்கிய கோலம்..
கண்ணீர், இசை - ஒன்று பாரம் கரைக்க, ஒன்று வெற்றிடம் நிரப்ப..

வருவாள் என்பது..
நம்பிக்கையா?
அறிவுப்பிழையா?

காலம் மட்டுமே இந்த இருளை மெல்ல அகற்றக்கூடும்..

-------------------------------------

ஓவியக்காட்சியாய் கவிதை தீட்டிய
மதுரகனுக்குப் பாராட்டுகள்..

ஷீ-நிசி
09-01-2007, 03:53 AM
எளிமையான கவிதை நண்பரே...

எழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று...
இந்த வரிகள் ஏற்கெனவே கேட்டதுபோல் உள்ளது...

எழுதி வையுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று...
வசந்த மாளிகைப் படத்தில் சிவாஜி பாடுவார் என்று நினைக்கிறேன்..

தவறு இருப்பின் தெளிவுப் படுத்துங்கள்

ஆதவா
09-01-2007, 04:41 AM

இருக்கலாம் ஷீ... இருந்தாலும் நாம் அதைப் பயன்படுத்துவதில் தவறில்லை... அல்லது.. வேறு தலைப்பு யோசிக்கலாம்

poo
09-01-2007, 06:00 AM
தெளிவான பார்வைகொண்டு கவி படைக்க வந்துள்ள மதுரகன் அவர்களுக்கு முதல் வாழ்த்துக்களும், தொடரும் பாராட்டுக்களும்!!

meera
09-01-2007, 02:35 PM
மதுரகன்,

முதலில் கவிதைக்கு ஒரு சபாஷ்.ஆதவா சொன்ன மாதிரி எனக்கும் அந்த கடைசி வரி புரியலை தான். ஆனா உங்க விளக்கம் அருமை.தொடர்ந்து பல நல்ல கவிதைகளை படைக்க வாழ்த்துகள்.

meera
09-01-2007, 02:36 PM
முதலாவதாக... வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்க்காக ஒற்றை வரிகளில் எழுதியமைக்கு பாராட்டுக்கள். அதே சமயம் மீண்டும் தொடரமாட்டீர்கள் என நம்புகிறேன்.
இரண்டாவதாக : தலைப்பு பொருந்தாததாக தோன்றுகிறது/. காதலியைப்பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டு அவளை இரக்கமற்றவள் என்றும் சொல்லுகிறீர். கவிதை நாயகன் இறந்தும் காதலியை பெருமையாகச் சொல்லுகிறானல்லவா? அவ்வளவே!!
மூன்றாவதாக: வாக்கியத்தின் ஒப்புமையும் சிந்தனையும் அருமை..

உதிர்ந்து போன பூவின் இதழ்களெல்லாம் மீண்டும் ஒன்றுசேர வேண்டுமா
அவற்றின் காதுகளில் அவளின் பெயரை உச்சரித்துப்பாருங்கள்...

பூவின் இதழ்களை காதலியின் பெயராலேயே ஒன்று சேர்க்கிறீர்கள் சபாஷ்... இதழ்களுக்கு காதுகளும் இருக்கிறதா இந்த கற்பனை உலகில்?

கலைந்து போன மேகக்கூட்டங்களெல்லாம் கணப்பொழுதில் ஒன்று சேர வேண்டுமா
அவற்றின் மத்தியில் அவளின் முச்சுக்காற்றை பரவவிடுங்கள்...

மிக அற்புதமான சிந்தனை மதுரகன்.. சற்று யோசிக்க வைக்கிறது.. ஒருவேளை என் காதலியின் மூச்சு பட்டாவது மழை வராதா என்று..

உடைந்துபோகும் நீர்க்குமிழிகள் அவளின் பெயரை எழுதி ஒட்டவையுங்கள்

அவள் பெயரில் என்ன அவ்வளவு ஒட்டுதல்?!? குமிழிகளின் சிதறல்களை ஒட்டவைக்கிறீர்களே! அருமையான வரிகள்

கலைந்துபோன கனவுகள் அவள் நினைவுகொண்டே கவிதையாக்குங்கள்

மறைந்துபோகும் சூரியன் அவளில் மையல்கொண்டு வரச்செய்யுங்கள்

உறைந்துபோகும் பனிமலை அவள் உணர்வு சேர்த்தே உருகவையுங்கள்

விரிந்துகிடக்கும் வானம் அவள் முகத்தைக்காட்டி ஒடுங்கவையுங்கள்

வெடித்துப்பறக்கும் தீப்பொறி அவள் உதிரக்காற்றில் சுடராய் மாற்றுங்கள்

உவமைகள் அழகு.. சாதாரணமாக எதுகைகளும் அமைந்துள்ளது..

பரந்துகிடக்கும் பூமி அவள் வியர்வை சேர்த்து புனிதமாக்குங்கள்

நீங்க காதலியத்தான் சொல்றீங்களா? இவ்வளவு புனிதமாக நினைக்கிற காதலியை வேர்வை சிந்த வைக்கிறீங்களே! பாவங்க...

சிதறிக்கிடக்கும் நினைவுகள் நெஞ்சில் காதல்கொண்டே ஒட்டவையுங்கள்
எழுதிவையுங்கள் என்கல்லறையில் இரக்கமற்றவள் அவள் என்று

நீங்கள் கடைசி வரிக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும்.
இன்னும் சில வரிகள் சேர்த்து இருக்கலாமென நினைக்கிறேன். அல்லது இன்னுமொரு அத்தியாயம் போடுங்கள்... நிறைய கற்பனைகள் வெளிவரும்.
ஆக,
கவிதை அருமை,, இன்னும் வேண்டும் பொறுமை. (தலைப்பிற்கு)

ஆதவா,அருமையான விமர்சனம். :D :D :D

மதுரகன்
09-01-2007, 04:01 PM
நன்றி ஆதவா உங்கள் தொடர் ஊக்கமளிப்பிற்கு...
இளசு, பூ, ஷீ-நிசி, மீரா உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

ஷீ-நிசி நீங்கள் கூறியது போல முதல் தலைப்பு வசந்தமாளிகை பாடல் வரிதான் அந்த வரியைக்கேட்டவுடன் சட்டெனத்தோன்றிய கவிதைதான் இது.. மற்றும் உங்கள் வரிகளில்
"கண நேரத்தில் உண்மைகள் பரிமாறிக் கொள்ளப்படுவது, நட்பில் மட்டும்தான். காதலில் கூட இது சாத்தியப்படுவதிலை" மிக மிக அற்புதம்..

மதுரகன்
09-01-2007, 04:12 PM
நன்றி கருத்தளித்த அனைவருக்கும்..
ஆதவா அவர்களே நான் உங்கள் கேள்விக்கு பதிலாக சொல்வது ஒன்றுதான் நான் கவிதைகள் என்ற பெயரில் என் விசித்திரமான உணர்வுகளை, நான் அறிந்த யதார்த்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்..

உணர்வுகள் மனத்திலிருந்து தெறிப்பவை மனத்தின் வேகம் சற்று அதிகம்தான் வாசித்து புரிவது கடினம்தான், உணர்ந்து பாருங்கள்...

"உணர்வுகள் மனத்திலிருந்து தெறிப்பவை"

ஓவியா
09-01-2007, 04:18 PM
மதுரகன்,
கவிதையை ரசித்தேன்....அருமை
தங்களின் விமர்சனமும் பலே
வாழ்த்துகளுடன் பாரட்டுக்கள்
தொடரவும் கவித்திரனை

ஆதவாவின் விமர்சனமும் அருமை,
விமர்சனம் கவிதைக்கு மிகவும் பொறுந்துகின்றது,....அழகும் சேர்த்துல்லது
பாரட்டுக்களுடன் வாழ்த்துக்கள்
தொடரவும் விமர்சனங்களை

மதுரகன்
09-01-2007, 04:21 PM
நன்றி ஓவியா உங்கள் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்..

ஓவியா
09-01-2007, 04:28 PM
நண்பரே இந்த கவிதைக்கு விமர்சனம் பண்ண தகுதியற்றவன் இருப்பினும் எனது எண்ணங்களைச் சொல்லுகிறேனே!

என் பார்வையில் இந்த கவிதை
ஒளிகூட நுழையாத படுக்கையறைக்கு காதலியின் பிரவேசம் அருமையான் கற்பனை... கண்ணீரோடு காதலன் காத்திருக்கிறான் என்றால் பிரிவு... விடுதலையளிக்கும் மெல்லிய இசை என்பது கூடல் அல்லது கற்பனை..

ஆதவா,
என்ன சிந்தனை!!!!!.....ரசித்தேன்

புதிய கவிராயர் ஆதவா வாழ்க..:D :D :eek:

மதுரகன்
09-01-2007, 04:39 PM
நன்றி ஓவியா...
உங்கள் கருத்துக்களுக்கு

ஓவியா
09-01-2007, 04:44 PM
என்ன சொல்ல, எப்படி சொல்ல, எதுக்கு சொல்ல அப்படீனு யோசித்து,
கண்ணியமாய், பக்குவமாய், கவியாய், எழுதிய எண்ணங்கள்
மிகவும் வித்யாசமான பார்வையில் கவிதை

மொத்தத்தில் சொல்லவந்ததை சொல்லியாகிவிட்டது

பாராட்டுக்கள்

ஆம நண்பா,
எதுக்கு கண்ணீர்.......ஓ ஆனந்த கண்ணீரா..:D

ஓவியா
09-01-2007, 04:46 PM
நன்றி ஓவியா...
உங்கள் கருத்துக்களுக்கு

கருத்து பதிக்கும் முன்னே நன்றி வணக்கம் போட்டுடீங்களே

ஓவேர் ஸ்பீடுதான்..............:D :D

மதுரகன்
09-01-2007, 04:55 PM
நன்றி ஓவியா..
கண்ணீர் காத்திருப்பினாலும் ஏக்கத்தாலும் தோற்றம் பெறுகிறது கவிதையில்..

மதுரகன்
09-01-2007, 04:55 PM
காத்திருப்பு

இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்..்்்..

ஓவியா
09-01-2007, 05:01 PM
சிலருக்கு நிஜத்திலும் தான்

ஓவியா
09-01-2007, 05:10 PM
நண்பரே இந்த கவிதைக்கு விமர்சனம் பண்ண தகுதியற்றவன் இருப்பினும் எனது எண்ணங்களைச் சொல்லுகிறேனே!

என் பார்வையில் இந்த கவிதை
ஒளிகூட நுழையாத படுக்கையறைக்கு காதலியின் பிரவேசம் அருமையான் கற்பனை... கண்ணீரோடு காதலன் காத்திருக்கிறான் என்றால் பிரிவு... விடுதலையளிக்கும் மெல்லிய இசை என்பது கூடல் அல்லது கற்பனை..

கவிதையில் ஒரு பிழையுண்டு சின்ன ராயரே

படுக்கையறையுனுல் முதல் முதலாக கால் பதிக்கும் அவளை மனைவியாக சிந்தனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் விமர்சனம்.

மதுரகன்
09-01-2007, 05:10 PM
உங்கள் தயவினை என் புதிய கவிதைகளிலும் காட்டுங்களேன்...

மதுரகன்
09-01-2007, 05:20 PM
வார்த்தைகளின் ஊடல் (குறும்பாத்தொகுதி)

உன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்
வாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,??..

உன் நான்கெழுத்துப்பெயரிலிருந்து நிராகரிக்கப்பட்ட
அதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன
மீதி 243 தமிழ் எழுத்துக்களும்...

அன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்
தீட்டிக்கொண்டிருந்த ஓவியத்தைத்தான் இன்று
என் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...

உன்னைப்பற்றி கவிதையெழுதும்போது மாத்திரம்
வார்த்தைகள் விலகியே நிற்கின்றன
ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து வசனங்களாக்குவதில்
போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...

உன்னுடைய வசீகரமான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்
எனக்கு அது நினைவுக்கு வந்தது
நீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்
பூத்திருந்தது...

மதுரகன்
09-01-2007, 05:31 PM
தவிப்புகள்

இறந்தகாலத்தில் மறைந்து போன அந்திப்பொழுதுகளின்
ஓர் ஓரத்தில்
கேட்பாரற்றுக்கிடக்கின்ற இருண்ட வனாந்தரமொன்றில்
வழிதெரியாத குகை ஒன்றினுள் நினைவிழந்து விழுந்துவிட்டேனா...

கோமா நிலையில் கோடிக்கணக்கான வருடங்களை
கழிக்கவென்றே உன் இதயத்துள் குதித்துவிட்டேனா...
உன் நினைவுகளின் பாதைகளின் முக்கிய திருப்பங்களில்
தொலைந்துவிட்டேனா...

ஒட்சிசன் வாயுவில் முக்குளித்த முதல்மனிதன்
நான்தான் போலும்
உன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை
தணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட
காரணமென்ன...

ஆதவா
09-01-2007, 06:02 PM
ஆதவா,
என்ன சிந்தனை!!!!!.....ரசித்தேன்

புதிய கவிராயர் ஆதவா வாழ்க..:D :D :eek:

அட!!! இப்பவே கட்சி ஆரம்பிச்சரலாம் போல இருக்கே!!!!

ஆதவா
09-01-2007, 06:03 PM
கவிதையில் ஒரு பிழையுண்டு சின்ன ராயரே

படுக்கையறையுனுல் முதல் முதலாக கால் பதிக்கும் அவளை மனைவியாக சிந்தனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் விமர்சனம்.

இருக்கலாம்..... கவி ராயரம்மா வாழ்க!!!!

மதுரகன்
09-01-2007, 06:11 PM
தயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...

ஓவியா
09-01-2007, 06:19 PM
உங்கள் தயவினை என் புதிய கவிதைகளிலும் காட்டுங்களேன்...

தயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...

அழாதீங்க நண்பா :)

நேரம் இருப்பின் கண்டிப்பா விமர்சனம் வரும்....,

இப்ப கொஞ்சம் பிசி.........

அருமை
பாரட்டுக்கள்
தொடரவும்
அப்படீனு போடவா.......நான் இந்த மாதிறி சிக்கன விமர்சனம் எழுதுவது மிகவும் குறைவு.....நேரமிருப்பின் விமர்சனம் போடுகின்றேன்

வணக்கம்

ஓவியா
09-01-2007, 06:23 PM
இருக்கலாம்..... கவி ராயரம்மா வாழ்க!!!!

ஆதவா,
இருக்கலாம் அப்படீனா???????????????? மனைவியாக இல்லாமலும் இருக்கலாமா??????

சரி,
உங்க பார்வையில் காதலியாகவே இருக்கட்டும்
நான் மனைவியாகவே பார்கின்றேன்

ஆதவா
09-01-2007, 06:30 PM
ஆதவா,
இருக்கலாம் அப்படீனா???????????????? மனைவியாக இல்லாமலும் இருக்கலாமா??????

சரி,
உங்க பார்வையில் காதலியாகவே இருக்கட்டும்
நான் மனைவியாகவே பார்கின்றேன்

நான் சொன்னது மனைவியாகக் கூட இருக்கலாம் னு!! அது இன்னும் இங்கே வலு சேர்க்கும் அல்லவா?

ஆதவா
09-01-2007, 06:31 PM
தயவு செய்து என் புதிய பதிப்புகளையும் விமர்சியுங்கள்...

மதுரகன்... உங்கள் படைப்புகள் அனைத்திலும் எனது பதில் நிச்சயம் இருக்கும்...

மதுரகன்
09-01-2007, 06:38 PM
நன்றி உங்கள் தொடரும் ஆதரவுகளுக்கு...
ஆதவா , ஓவியா உங்கள் ஆரோக்கியமான போட்டி தொடரட்டும்..
கவிதை எழுதியவன் என்ற முறையில் எனது கருத்து "ஒருதலைக்காதலின் சோகத்தில் காதலன் தன் காதலியிடம் கூறுவதாகவே இது அமைந்தது.. அதாவது இன்னமும் யாரும் அங்கு வரவில்லை சிலவேளை வந்தால் இவை அவளுக்காக காத்துக்கொண்டிருக்கும் என்பதே"...

ஆதவா
09-01-2007, 06:44 PM
[/SIZE][/B]

இறந்தகாலத்தில் மறைந்து போன அந்திப்பொழுதுகளின்
ஓர் ஓரத்தில்
கேட்பாரற்றுக்கிடக்கின்ற இருண்ட வனாந்தரமொன்றில்
வழிதெரியாத குகை ஒன்றினுள் நினைவிழந்து விழுந்துவிட்டேனா...

அட என்னமோ ஏதோன்னு நினச்சா நம்ம உடம்புக்குள்ள போறீங்கலா? அநேகமா இது உணவுக் குழல் னு நினைக்கிறேன்... சபாச் அருமையான கற்பனை. இறந்தகாலத்தில் ,மறைந்துபோன இரண்டுமே ஒன்றுதானே கிட்டத்தட்ட!! வனாந்திரம், குகை இவை இரண்டும் ஒட்டாததுபோல தோணுகிறது...குகை வழியே வனாந்திரம் என்று கூட எழுதலாமே!!

கோமா நிலையில் கோடிக்கணக்கான வருடங்களை
கழிக்கவென்றே உன் இதயத்துள் குதித்துவிட்டேனா...
உன் நினைவுகளின் பாதைகளின் முக்கிய திருப்பங்களில்
தொலைந்துவிட்டேனா...

ஏங்க, கோடிக்கணக்கான வருடம்? சில நிமிடம். அட வேண்டாம் சில வினாடிகள் போதாது? உன் நினைவுகளின் பாதையில் முக்கிய திருப்பமா? கொஞ்சம் யோசிக்க வைத்து எழுத வைக்கிறது... ஆனால் முக்கிய எந்த திருப்பம்?

ஒட்சிசன் வாயுவில் முக்குளித்த முதல்மனிதன்
நான்தான் போலும்
உன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை
தணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட
காரணமென்ன...

ஓட்சிசன் = ஆக்ஸிசன்.. சரிதானே! நீங்கள் இலங்கைப் பகுதியானவராகையால் இந்த மாதிரி வருகிறது. ஆக்ஸிசனில் முக்குளித்தவர்கள் நிறையபேர் இருக்காங்க.. இதற்கு முன்னாடி நீங்க சறுக்கி விழுந்தீங்கலே ஒரு குகை.. அதை இங்கே இணைத்திருக்கலாம்.
நீங்க கடல்ல குதிச்சீங்கன்னாகூட உடம்பு சுத்தமாகும்.. கொஞ்சம் அனுபவம் ஆகும்... இவ மனசுல குதிச்சி என்ன தெரிஞ்சது? உங்களுக்கு தெரியவேண்டிய பகுதிக்கு A சர்டிபிகேட்டு (தமிழில் = சான்றிதழ்) கொடுத்து பார்க்கமுடியாம பண்ணிட்டாங்க...

எங்கெங்கோ குதிச்சு கும்மாளம் போட்டு இங்கே கவிதை எழுது அசத்திரீங்க.... பிரமாதம்,

ஆதவா
09-01-2007, 06:58 PM
வார்த்தைகளின் ஊடல் (குறும்பாத்தொகுதி)

முதலாவதாக தலைப்பு!! "குறும்பா தொகுதி???? அப்டீன்னா? வார்தைகளின் ஊடல் எட்டிப்பார்க்கிறது..

உன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்
வாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,??..

உன் நான்கெழுத்துப்பெயரிலிருந்து நிராகரிக்கப்பட்ட
அதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன
மீதி 243 தமிழ் எழுத்துக்களும்...

ம்ம்ம்..... இனிமே நானெங்க கவிதை எழுதறது.. இப்படியெல்லாம் கற்பனை பண்றீங்க.. என்னால இந்த அளவுக்கெல்லாம் முடியாதுப்பா!!! பாவம் தமிழையும் கொஞ்சம் காதலிச்சு அந்த 243 எழுத்துக்களையும் காப்பாத்துங்க.

அன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்
தீட்டிக்கொண்டிருந்த ஓவியத்தைத்தான் இன்று
என் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...

ம்ம்ம்ம்.... அருமை அருமை///

உன்னைப்பற்றி கவிதையெழுதும்போது மாத்திரம்
வார்த்தைகள் விலகியே நிற்கின்றன
ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து வசனங்களாக்குவதில்
போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...

பொதுவாக காதலியைப்பற்றி கவிதை எழுதும்போது நிச்சயம் எழுத்தே வராது... (மன்றத்தில் அனுபவமுள்ள்வர்கள் இருக்கிறார்க்ளா?) அப்படியும் எழுத்து வந்தாலும் அவள் பெயரைத்தவிர எதுவும் வராது...
அருமையாக எழுதியிருக்கிறீர்... வசனம் = கவிதை அல்லதத பாடல் அல்லது வேறெதாவது சொல் சேர்த்திரிக்கலாம்... வசனமாக எழுதினால் அது கவிதை அல்லவே! ( வசனகவிதையோ?? )

உன்னுடைய வசீகரமான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்
எனக்கு அது நினைவுக்கு வந்தது
நீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்
பூத்திருந்தது...

அதாவது ரோஜாவான நீங்கள் அன்றுதான் பூக்கிறீர்கள் இல்லையா? காதலியின் புன்னகை பெற என்ன தவம் செய்யவேண்டியிருக்கிறது பாருங்கள்!!!! ரோஜாவாக மாறி அவளுக்கு ஏங்க வேண்டியிருக்கிறது...

முடிவாக... அற்புதமான சிந்தனைகளைத் தெளித்து கோலம் போட்டிருக்கிறீர்கள்.. வரி அமைப்பில் சற்று மாற்றம் கொண்டால் போதும்... அழகாக ஒரு ரோஜாப் பூ மன்றத்திலே தயார்,,, சூடுங்க கவிஞர்ஜளே!!

ஆதவா
09-01-2007, 07:02 PM
காத்திருப்பு

இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்..்்்..

உன்னையே நினைத்து உருகும் ஒரு நல்ல மனிதனின் கண்ணீர்த் துளிகளைத் தேடி வா இல்லையேல் உனக்கு கிடைக்காமல் போகும் எனது இறுதி சுவாசம்... கவிஞ்கரே இதுதானே விளக்கம்ம்... நன்று..

உங்களின் ஒவ்வொரு படைப்பும் அருமையாக இருக்கிறது... நடத்துங்கள்..

மதி
10-01-2007, 02:23 AM
மதுரஹன்..
அசத்திட்டீங்க... ஒரு வழியா நீண்ட காத்திருப்புக்கு பின் அவள் புன்னகை பூத்து ரோஜா மலர்ந்ததே..
சந்தோஷப்படுங்கள்..!

ஷீ-நிசி
10-01-2007, 02:55 AM
ஒவ்வொரு பகுதியிலும் காதல் தவழ்கிறது!

ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து வசனங்களாக்குவதில்
போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...

இதை மட்டும் இப்படி மாற்றினால் நன்றாக இருக்கும்

ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து கவிதையாக்குவதில் போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...

எப்ப்டியோ ரோஜா செடிப் பூத்துவிட்டதே, அதுவரையிலும் சந்தோஷம் தான்.. கவிதை அருமை வாழ்த்துக்கள் அன்பரே

ஷீ-நிசி
10-01-2007, 03:20 AM
காதல் ஏக்கம் நன்றாகவே உள்ளது..

வரிகளை கவிதை அமைப்புக்கு ஏற்றாற்போல் இன்னும் மெருகூட்டிக்கொள்ளுங்கள்!

ஷீ-நிசி
10-01-2007, 03:22 AM
உன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை
தணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட
காரணமென்ன...

கவிதை உலகில் புது வரிகள்?!... என்னைக் கவர்ந்த வரிகள்!

ஷீ-நிசி
10-01-2007, 03:31 AM
இதுவரை ஒளி கூட நுழைவதற்கு அனுமதிக்கப்படாத
என் படுக்கையறையில் நீ நுழைந்தால்
அங்கு உனக்காகக் காத்துக்கொண்டிருப்பவை....

இந்த உலகத்திலிருந்து உனக்கு விடுதலையளிக்கும்
மெல்லிய இசையும்...

கண்ணீரோடு காத்திருக்கும் ஒரு ஜோடிக்கண்களும்..

--மதுரகன்--

கூடவே இருளும் தான்...

ஓ அவள் அங்கே வருவதால்
இருளும் விலகிடுமோ?!

அதனால்தான் இருள் சேர்க்கப்படவில்லையோ?!

கவிதை அருமை நண்பரே!

meera
10-01-2007, 08:27 AM
வார்த்தைகளின் ஊடல் (குறும்பாத்தொகுதி)

உன்வீட்டுத்தோட்டத்தில் புதர்மறைவில் பூத்துள்ள ரோஜா நான்
வாடி உதிர்வதற்குள் உன் கண்ணில் படுவேனா,,??..

உன் நான்கெழுத்துப்பெயரிலிருந்து நிராகரிக்கப்பட்ட
அதிர்ச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கின்றன
மீதி 243 தமிழ் எழுத்துக்களும்...

அன்று காற்றிலே உன் கண்களும் உதடுகளும்
தீட்டிக்கொண்டிருந்த ஓவியத்தைத்தான் இன்று
என் விரல்கள் தாளிலே தீட்டிக்கொண்டிருக்கின்றன கவிதையாக...
உன்னைப்பற்றி கவிதையெழுதும்போது மாத்திரம்
வார்த்தைகள் விலகியே நிற்கின்றன
ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து வசனங்களாக்குவதில்
போதுமென்றாகிவிடுகின்றது எனக்கு...

உன்னுடைய வசீகரமான உதட்டில் புன்னகையைப் பார்த்தபோதுதான்
எனக்கு அது நினைவுக்கு வந்தது
நீண்டநாளாக பூக்காத அந்த ரோஜாச்செடி அன்று காலையில்தான்
பூத்திருந்தது...

மதுரகன்,

வார்த்தை விளையாட்டு அழகு.

காதல் வந்தாலே இப்படி தானா?(ஓவி இதுக்கு பதில் சொல்லிடு போங்க:D :D :D )

கவிதை அருமை.உங்க காதலி ரொம்ப பாவம் ஹி ஹி ஹி ஹி:D :D :D

meera
10-01-2007, 08:43 AM
காத்திருப்பு

இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்..்்்..

இது எச்சரிக்கையா?சாபமா?அல்லது மிரட்டலா? காதல் வந்தாலே இப்படி தாங்க தத்து பித்துனு உளர ஆரம்பிச்சடராங்க.(சத்தியமா நான் இந்த லிஸ்டில இல்லை:D :D :D )

மொத்தத்துல காத்திருப்பு கவிதைக்கு அழகு சேர்க்குது.பாராட்டுகள்.

மதுரகன்
10-01-2007, 03:59 PM
நன்றி ஆதவா , ஷீ-நிஷி உங்கள் கருத்துகளை தொடர்ந்து் எதிர்பார்க்கிறேன்..

ஆதவா...
உங்கள் விமர்சனத்திற்கு என் பதில்..
நிச்சயமாக நான் எழுதும்போது உடலுக்குள் செல்வதாக எண்ணவில்லை
காதலில் அகப்பட்டு திக்குத்தசை தெரியாது அல்லாடும் ஒருவனின் மனக்குமுறலாகவே எண்ணி எழுதினேன்.. உங்கள் பார்வையும் நன்றுதான்..

அடுத்து

ஏங்க, கோடிக்கணக்கான வருடம்? சில நிமிடம். அட வேண்டாம் சில வினாடிகள் போதாது?
இற்கு காதலில் அகப்பட்டு தவிக்கும் ஒவ்வொரு வினாடியையும் கோடிக்கணக்கான வருடங்களாக உருவகித்து எழுதினேன்..

நினைவுகளின் பாதையில் முக்கிய திருப்பமா? கொஞ்சம் யோசிக்க வைத்து எழுத வைக்கிறது... ஆனால் முக்கிய எந்த திருப்பம்?

இது உன்னை நினைத்துக்கொண்டு என் நினைவுகள் பயணிக்கின்ற போது
எங்கே இருக்கிறேன் என்ற புரியாது தொலைந்து விடுவதை குறிப்பிடுகிறேன்...
உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்...

மதுரகன்
10-01-2007, 04:06 PM
அருமை ஷீ-நிஷி
கவிதைக்குள் புதைந்துள்ள உண்மையை "அந்த இருள் அவளால் மட்டுமே விலக்கப்படக்கூடியது" என்பதை புரிந்து கொண்டுவிட்டீர்கள்.

மேலும் புதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..

எனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...

கவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..
கருத்துக்களை முளைக்கச்செய்ய வேண்டும்.....

நன்றி உங்கள் கருத்துக்களுக்கு....
வாழ்த்துக்கள் உங்கள் கவிதை நயக்கும் நுட்பத்திற்கு...

ஆதவா
10-01-2007, 04:26 PM
ஆதவா...
உங்கள் விமர்சனத்திற்கு என் பதில்..
நிச்சயமாக நான் எழுதும்போது உடலுக்குள் செல்வதாக எண்ணவில்லை
காதலில் அகப்பட்டு திக்குத்தசை தெரியாது அல்லாடும் ஒருவனின் மனக்குமுறலாகவே எண்ணி எழுதினேன்.. உங்கள் பார்வையும் நன்றுதான்..

நண்பரே என் எண்ணம் அப்படித்தான் எண்ணுகிறது இன்றளவும். நீங்கள் சொன்னது மறைமுகம்.. நானும் அப்படித்தான் எண்ணினேன்.. இருந்தாலும் ஒரு கவிதைக்கு இருவேறு விமர்சனங்களும் ஒரே கருத்தை வெளியிடுமானால் அது சிறந்தது என்பதற்கு வேறு எடுத்துக்காட்டு ஏது?

இது உன்னை நினைத்துக்கொண்டு என் நினைவுகள் பயணிக்கின்ற போது
எங்கே இருக்கிறேன் என்ற புரியாது தொலைந்து விடுவதை குறிப்பிடுகிறேன்...

இது உங்களிடம் கேள்வி கேட்பதாக நான் நினைக்கவில்லை
வாழ்க்கையில் முக்கிய பல திருப்பங்களுண்டு.. இருப்பினும் பதிலுக்கு நன்றி..

உங்கள் கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்

மதுரகன்
10-01-2007, 04:37 PM
ஒவ்வொருவருக்கும் நன்றி...

முதலில் ஆதவா உங்கள் தொடரும் விமர்சனங்களுக்கு நன்றி. விமர்சனங்களில் அசத்துறீங்க உங்களை வச்சு தமிழ் மன்றத்தில் விமர்சனங்களுக்கென தனிப்பகுதியே ஆரம்பிக்கலாம்...

விமர்சனத்திற்குரிய பதில் என் கவிதைகளை காதலியுடன் தொடர்பு படுத்துவதாகவே அமைத்தேன்.. மற்றும் இறுதி வரியில் றோஜா எனக்குறிப்பிட்டது உண்மைப்பூவையே நீண்டநாள் கழித்து மலர்ந்த அந்த அழகிய புன்னகையை நீண்டநாள் கழித்து மலர்ந்த அந்த அழகிய மலருக்கு உருவகித்தேன்...

ராஜேஷ் உங்கள் ஆதரவிற்கு நன்றி...

ஷீ உங்கள் பார்வையும் நன்றாகவே இருக்கின்றது நானோ வார்த்தைகள் சேர்ந்து வசனங்கள் தோன்றும் வசனங்கள் கூடி கவிதைகளாகும் என்ற பொருள்பட எழுதினேன்... உங்கள் கருத்து என்ன...

மீரா உங்கள் கருத்துக்கு நன்றி. ஏன் என் காதலி பாவம் என்றீங்க விளக்கம் தேவை...

ஆதவா
10-01-2007, 04:51 PM
ஷீ உங்கள் பார்வையும் நன்றாகவே இருக்கின்றது நானோ வார்த்தைகள் சேர்ந்து வசனங்கள் தோன்றும் வசனங்கள் கூடி கவிதைகளாகும் என்ற பொருள்பட எழுதினேன்... உங்கள் கருத்து என்ன...

நண்பரே!!! கோவிச்சுக்காதீங்க... நீங்கள்

ஒன்றையொன்று கட்டிக்கொள்ளவைத்து வசனங்களாக்குவதில்

என்று மட்டுமே எழுதியிருக்கிறீர்கள். அதன்பின்னோ முன்னோ வசனங்கள் கூடி கவிதையாகும் என்பதை எழுதவில்லை. இருந்தும் நீங்கள் மேற்சொன்னது உங்கள் மனதிலே எழுதப்பட்டது.. மன்றத்தில் வரவில்லை..

ஆயினும் குறையில்லா கவிதை..

மதுரகன்
10-01-2007, 04:57 PM
நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்...
மீரா நானும் இன்னமும் அந்த லிஸ்டில் இல்லை... கவிதைக்கு பொய்யழகுதானே.....

மதுரகன்
10-01-2007, 05:08 PM
இது உங்களிடம் கேள்வி கேட்பதாக நான் நினைக்கவில்லை
வாழ்க்கையில் முக்கிய பல திருப்பங்களுண்டு.. இருப்பினும் பதிலுக்கு நன்றி..

பலர் என் கவிதைகளையும் வாழ்கையுடன் இணைத்து கேள்வி கேட்பதுண்டு. ஆனால்.. கவிதை எல்லா இடங்களிலும் வாழ்க்கையுடன் பொருந்தாது..
உதாரணமாக என் காதல் கவிதைகளை வாசித்து அதில் உள்ள பெண் யாரென பலர் கேட்டுள்ளனர்.. ஆனால் என் வாழ்வில் அப்படி யொரு திருப்பம் இதுவரை ஏற்படவில்லை.(இப்போது எனக்கு வயது 19).

என் அவ்வளவு காதல் கவிதைகளும் என் கற்பனையில் உதித்த ஒருத்திக்கு சொந்தம் அவ்வளவே..

நீங்கள் கேட்ட திருப்பம் எத்தகையது..

மதுரகன்
10-01-2007, 05:14 PM
ஆமாம் நண்பரே.. ஆயினும்
புதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..

எனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...

கவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..
கருத்துக்களை முளைக்கச்செய்ய வேண்டும்.....

என் கருத்து அவ்வளவே ..
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்....

ஓவியா
10-01-2007, 05:16 PM
காத்திருப்பு

இந்தக்கண்ணீர்த்துளிகளின் காய்ந்து சென்ற சுவடுகளை
தேடியாவது நீ வர வேண்டும்.. ்்்..
இல்லை..
தன் உலகங்களையெல்லாம் உனக்குள்
சிருஷ்டித்துக்கொண்டவனின் இறுதி சுவாசம்
கூட உன்னை ஸ்பரிசிக்கும் வாய்ப்பை
இழந்துவிடுவாய்..்்்..

அழகான கவிதை
ஆழமான கருத்து

மதுரகன் உங்கள் அனைத்து கவிதைகளும் அருமை, சபாஷ்

கண்மூடி காதல் செய்து...
நிதம் நினைத்து நினைத்து...........................
சொல்ல தைரியமில்லா கோழையாய் வாழ்வதைவிட

முதலில் காதல் வரனும், பின் அதை சொல்ல தைரியம் வரனும் இல்லனா இப்படிதான் கவிதை வரும் :)

மதுரகன்
10-01-2007, 05:22 PM
நன்றி ஓவியா ...
அதற்காக என்னைக்கோழையாக்கி விடாதீர்கள் ..
என் கவிதைகளெல்லாம் ஓரு கற்பனைப்பெண்ணொருத்தியைப்பற்றி அமைந்தவையே...

ஓவியா
10-01-2007, 05:29 PM
நன்றி ஓவியா ...
அதற்காக என்னைக்கோழையாக்கி விடாதீர்கள் ..
என் கவிதைகளெல்லாம் ஓரு கற்பனைப்பெண்ணொருத்தியைப்பற்றி அமைந்தவையே...

அடடா, என்ன புரிந்துணர்வு :D

மதுரகன் சார்,
கோழை என்று நான் சூசகமாக சொன்னது தங்களையல்ல.......எ....தான்

:D :D

ஆதவா
10-01-2007, 05:29 PM
பலர் என் கவிதைகளையும் வாழ்கையுடன் இணைத்து கேள்வி கேட்பதுண்டு. ஆனால்.. கவிதை எல்லா இடங்களிலும் வாழ்க்கையுடன் பொருந்தாது..
உதாரணமாக என் காதல் கவிதைகளை வாசித்து அதில் உள்ள பெண் யாரென பலர் கேட்டுள்ளனர்.. ஆனால் என் வாழ்வில் அப்படி யொரு திருப்பம் இதுவரை ஏற்படவில்லை.(இப்போது எனக்கு வயது 19).

என் அவ்வளவு காதல் கவிதைகளும் என் கற்பனையில் உதித்த ஒருத்திக்கு சொந்தம் அவ்வளவே..

நீங்கள் கேட்ட திருப்பம் எத்தகையது..

நண்பரே இந்த மன்றத்திலேயே சிறியவன் நானென்று நினைத்தேனே@@@ எண்ணம் தேனில் ஊறிய பழமாக போட்டுதே!@@

நான் சொன்ன திருப்பத்தை நீங்கள் புரிந்து கொள்ளாமல் திருப்பிக்கேட்கிறீர்கள். பொதுப்படையாகத் தான் சொன்னேன். வாழ்க்கையில் பல திருப்பங்களுண்டு.. அது புத்தகம் போல ஒவ்வொரு தாளும் திருப்பங்கள் தான்.. இவ்வளவு ஏன்.? இந்த மன்றமே எனக்கு ஒரு திருப்பம்தான். கவிதைகளை எவ்வள்வு வீணடித்திருக்கிறேன் தெரியுமா? நான் எப்போதும் சும்மா இருந்தது கிடையாது. என் பர்ஸில் பணமிருக்குமோ இல்லையோ வெற்றுக் காகிதங்கள் இருக்கும். என் சட்டைப் பயில் 3 பேனாக்கள் வைத்திருப்பேன். எப்போதுமே!!(தொழிலுக்கு ரெண்டு,, தனிப்பட்ட முறையில் ஒன்று)
கவிதை தோணும்போழ்து எழுதுவேன். பின் காகிதம் எந்த கழுதைக்கு உணவு என்பது எனக்குத் தெரியாது போய்விடும். காணாமல் போய்விடும்.
இப்போது எல்லாமே மன்றத்தில் தெளித்துவிடுகிறேன்... இதுவும் திருப்பம் தானே!!

மதுரகன். என் வாழ்வுத் திருப்பங்கள் ஏராளம்.. நான் அநுபவித்தவையும் ஏராளம்..

ஆதவா
10-01-2007, 05:34 PM
ஆமாம் நண்பரே.. ஆயினும்
புதுக்கவிதை என்பது ஒருவிடயத்தை முழுமையாக கூறுவதில்லை கூறுவதுபோல் முயன்று கூறாது விட்டுவிடும்..

எனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...

கவிதை என்பது வாசகர் மனதில் கருத்துகளை விதைப்பதாக இருக்கக்கூடாது..
கருத்துக்களை முளைக்கச்செய்ய வேண்டும்.....

என் கருத்து அவ்வளவே ..
உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்....

அதெல்லாம் சரிதான். விதைத்தால் தானே முளைக்கும்???

மதுரகன்
10-01-2007, 05:41 PM
அப்படியா சங்கதி :D :D :D
சரி
ஆனால் என்னை சார் என்று அழைப்பதை தயவுசெய்து நிறுத்துவீர்களா..
ஏதோ 50 வயதானத போல் உள்ளது. :) :p :)

10-01-2007, 05:47 PM
அடடா, என்ன புரிந்துணர்வு :D

மதுரகன் சார்,
கோழை என்று நான் சூசகமாக சொன்னது தங்களையல்ல.......எ....தான்

:D :D

பாரதி காணாத புதுமைப் பெண்ணா இது/?????!!!?????!!!!????!~~~????!!!!

மதுரகன்
10-01-2007, 05:50 PM
அதற்கும் பதில் அங்கே உள்ளதே
எனவே வாசகர் இதயத்தில் கேள்விளை புகுத்தும்.. கேள்விகள் எண்ணங்களை விதைக்கும்.. எண்ணங்கள் கருத்துக்களை முளைக்கச்செய்யும் புதுக்கவிதையின் தத்துவமே இதுதானே...

கருத்துகள் அன்றாட வாழ்வில் அவர்களது ஒவ்வோர் செயற்பாடுகளிலும் , அனுபவங்களிலும் இருந்து மனதில் விதைக்கப்படும்.

கருத்துகள் அவர்களிடம் ஏற்கனவே நிறைய உள்ளன நாங்கள் வேறு புதிதாக விதைக்கவேண்டாம்.

விதைக்கப்பட்ட கருத்துகள் உறங்குகின்றன அவற்றை முளைக்கச்செய்வோம்..

உங்கள் கருத்து

மதுரகன்
10-01-2007, 05:51 PM
பழக்கதோஷம்

சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கண்களை மூடிக்கொணடு தென்றலை நுகர்வது
மழைதுமிக்கும் போது வானத்தைப்பார்ப்பது
சூரியனைப்பார்த்து கண்சிமிட்டுவது...
இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கடவுளை வணங்கும்போது கைகளை முத்தமிடுவது
சாலையில் செல்லும்போது சத்தமின்றிப்பாடுவது
காலையில் எழுந்தவுடன் கண்ணாடிபார்ப்பது..
இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
அதிகாலைப்பனித்துளிகளை இலைகளில் தேடி
நாவினால் ஏந்துவது
காலைச்சூரியன் வெயிலில் சூடுபட
கால்களை நீட்டி குளிர்காய்வது
இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்
சின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள் விட்டுப்போகவில்லை...

மதுரகன்

ஆதவா
10-01-2007, 06:01 PM
அதற்கும் பதில் அங்கே உள்ளதே

கருத்துகள் அன்றாட வாழ்வில் அவர்களது ஒவ்வோர் செயற்பாடுகளிலும் , அனுபவங்களிலும் இருந்து மனதில் விதைக்கப்படும்.

கருத்துகள் அவர்களிடம் ஏற்கனவே நிறைய உள்ளன நாங்கள் வேறு புதிதாக விதைக்கவேண்டாம்.

விதைக்கப்பட்ட கருத்துகள் உறங்குகின்றன அவற்றை முளைக்கச்செய்வோம்..

உங்கள் கருத்து

ஹி ஹி ஹி... நீங்கள் சொல்வது கருத்துக்கள் ஏற்கனவே புதைக்கப்பட்ட அதாவது விதைக்கப்பட்டவருக்கு..
எத்தனைபேர் உள்ளார்கள் கருத்துக்களை தூங்கவிட்டு.?
புதுக்கவிதைகள் படித்த அத்துணைபேரும் முளைக்கவிடுகிறார்களா?

பெரும்பாலும் கவிதைகளைப் படிப்பவர்கள் மிகவும் குறைவு. நம் கருத்துக்களை கவிதையாக்க நாம் கடினப்படவேண்டியதில்லை.. ஆனால் அவர்களுக்கு புரியவைக்க நிச்சயம் கடினப்பட வேண்டும். கவிதைகளை மேம்போக்காக படித்தாலே அவர்களுக்கு புரியவேண்டும். முதன்முதல் கவிதை படிப்பவர்கள் அல்லது கவிதையை எப்போதாவது படிப்பவர்களுக்கு ஒப்புமைகள் புரியாது.. அவர்கள் கால அவகாசமும் அதற்கு ஒதுக்குவதில்லை..

நம் மன்றத்தில் அனைவரின் கவிதையும் எளிமையானதும் அழகானதும் கூட.. சில சமயங்களில் சற்று கடினமாக நாம் கருத்தைத் துலாவும் வண்ணம் எழுதிவிடுகின்றனர்.. கவிதைமேல் ஈடு கொண்ட மக்களே கருத்தைத் துலாவுவார்கள். மற்றவர்கள் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்..

கவிதை புதுக் கருத்தை விதைக்கவேண்டும்.
அதேசமயம் பழைய விதைகளை முளைக்கவிட வேண்டும்...

மதுரகன்
10-01-2007, 06:06 PM
என் திருப்பங்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கூற முயல்கிறேன் அது தனிப்பட்ட பகுதியாக அமைந்தால் நன்றாக இருக்கும்...

என் முக்கிய திருப்பங்கள்..
உயர்தரவகுப்பு(உங்கள் +2) படிக்கும் போது தற்செயலாக அருமையாக கவிதை எழுதும் ஒருவன்(திலீபன்) அருகில் அமர்ந்து அவனை நண்பனாக பெற்றது.. அவன் கவிதைகளை கண்டு நாமும் எழுத வெண்டும் என தூண்டப்பட்டது...

தற்போது மருத்துவக்கல்லூரி அனுமதி பெற்றது..
போன்றவையே

மதுரகன்
10-01-2007, 06:15 PM
உங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்...

ஓவியா
10-01-2007, 06:34 PM
அப்படியா சங்கதி :D :D :D
சரி
ஆனால் என்னை சார் என்று அழைப்பதை தயவுசெய்து நிறுத்துவீர்களா..
ஏதோ 50 வயதானத போல் உள்ளது. :) :p :)

அப்படியெல்லாம் சங்கதி ஒன்னுமில்லை, ஒரு கற்ப்பனைக்கு போட்டேன்
எப்படியும் இன்னும் 30 வருடம் கழித்து இது நடக்கும்...அதான் முன்னாடியே கூப்பிட்டு பழகுகிறேன் :D

பாரதி காணாத புதுமைப் பெண்ணா இது/?????!!!?????!!!!????!~~~????!!!!

காதல்(லிக்க) ஆரம்பித்தால் பாரதியும் இதைவிட மோசமாக புலம்புவார் :D

மதுரகன்
10-01-2007, 06:41 PM
30 வருடம் கழித்து நடக்கிறது நடக்கட்டும்.. இப்ப அந்த மரியாதையெல்லாம் தேவையில்லை...

இளசு
10-01-2007, 10:32 PM
பிரத்தியேக ரசனைகளின் கூட்டு..
கையெழுத்து, நடை, குரல், உடல் மணம் போல்
தனித்தன்மை காட்டுவது...

இந்த ரசனைகள் இரசிக்கவைக்கின்றன..

பாராட்டுகள் மதுரகன்..

ஆதவா
11-01-2007, 02:10 AM
பழக்கதோஷம்

முதலாவதாக தலைப்பு... ஒற்றைவரியில் கவிதைக்கு ஏற்றதாக... தோஷத்தை விட்டுவிட்டு வழக்கத்தை வழக்கமாக சேர்த்தியிருக்கக்லாமே!

சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கண்களை மூடிக்கொணடு தென்றலை நுகர்வது
மழைதுமிக்கும் போது வானத்தைப்பார்ப்பது
சூரியனைப்பார்த்து கண்சிமிட்டுவது...
இப்படி

சில பழக்கங்கள் நம்மைவிட்டு போவதில்லை. ஞாபகங்களும்தான். அதில் நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ளது நிழலும் நிஜமுமாக இருக்கிறது... அதாவது உண்மையிலேயே தென்றலை நுகர்வதும் வானத்தைப் பார்பதும் கண் சிமிட்டுவது. மழைதுமிக்கும்போது என்றால் துமி = துளி.. அப்படித்தானே மதுரகன்?

சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
கடவுளை வணங்கும்போது கைகளை முத்தமிடுவது
சாலையில் செல்லும்போது சத்தமின்றிப்பாடுவது
காலையில் எழுந்தவுடன் கண்ணாடிபார்ப்பது..

ஆம்... கடவுளை வணங்கும்போது முத்தமிடுவது நானே செய்திருக்கிறேன். அருமையான ஞாபகம் மது. வணங்கி முடித்ததும் முத்தமிடுவேன்.. அதற்கு காரணம் ஏதுமில்லை. அதே போல் சாலையில் சத்தமின்றி பாடுவது, எங்கள் ஊர் சாலையில் சத்தத்துடன் பாடினாலும் யாருக்கும் கேட்காது. அவ்வளவு இரைச்சல்.. அது நான் செய்ததில்லை. காலையில் எழுந்ததும் கண்ணாடி பார்பதும் நான் பண்ணியதில்லை. சில பெண்கள் செய்வதைக் கண்டிருக்கிறேன்.. (என் தங்கை ஒரு உதாரணம்)

இப்படி
சின்ன வயதிலிருந்து எனக்கும் சில பழக்கங்கள் விட்டுப்போகவில்லை
அதிகாலைப்பனித்துளிகளை இலைகளில் தேடி
நாவினால் ஏந்துவது
காலைச்சூரியன் வெயிலில் சூடுபட
கால்களை நீட்டி குளிர்காய்வது
இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்
சின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள் விட்டுப்போகவில்லை...

உங்கள் கவிதைகளில் ஒப்பற்ற ஒப்புமைகள் எப்போதும் இருக்கும். இது கொஞ்சம் விதிவிலக்கு. அதிகாலை பனித்துளிகளை நாவிலே ஏந்துவீர்களா? அருமை சிந்தனையில் மட்டுமல்ல; செயலிலும் தான். இரண்டாவதாக காலைச்சூரியனை குளிர்காய பார்ப்பதும் அழகுதான்/

முடிவாக. ஞாபகக் கவிதை வகைதான் இது என்பதால் வார்த்தைகள் பற்றாது. இன்னும் ஒன்றிரண்டு பேராக்கள் இணைத்திருக்கலாம்.

சின்ன வயதிலிருந்து எனக்கும் எத்தனையோ பழக்கங்கள்

எனக்கும் என்பது சற்று நெருடல். அதேசமயம் அந்த வார்த்தை இப்படி என்ற வார்த்தைக்கு கீழ் போடவெண்டுமானால் ஒருமுறை மட்டுமே போட்டிருக்கலாம்..

இது உங்கள் செயல்களின் விளைவுகள் என்றால் நீங்கள் கவிதை எழுத்தில் மட்டுமில்லை என்பதை உறுதிப்படுத்துகிறீர்கள்.. ஒரு கவிஞனின் வெற்றி அங்கேயும் இருக்கிறது./

என் சின்ன வயது ஞாபங்களைத் தூண்டிவிடும் வண்ணம் அமைந்திருக்கிறது. ஒரு கவிதை அப்படித்தானே இருக்கவேண்டும்..

அழகிய பழக்கவழக்கம்......:)

ஷீ-நிசி
11-01-2007, 03:10 AM
சின்ன சின்ன ஞாபகங்கள்

அருமை நண்பரே!

மயூ
11-01-2007, 07:29 AM
ம்... சாலையில் நடக்கும் போது மெதுவாகப் பாடுவது... விருப்பமானவருடன் பேசுவது போல பேசிக்கொள்வது இது எனக்கும் இருக்கும் பழக்கம். :)

பரஞ்சோதி
11-01-2007, 07:53 AM
கவித்துவமான பழக்க வழக்கங்கள்.

இப்பழக்க வழக்கங்கள் என்றும் இனிமையானவை.

அருமையாக சொல்லியிருக்கீங்க.

மதுரகன்
11-01-2007, 03:43 PM
இளசு அவர்களே, ஆதவா, ஷீ, மயூரேசன்இ பரம்ஸ் நன்றி அனைவருக்கும் ... ஆதவா அவர்களே உங்கள் கருத்துகளை மனதில் ஏற்று அடுத்து வரும் கவதைகளில் இது போன்ற தவறுகளை திருத்த முயல்கிறேன்... ஒவ்வொரு முறையும் என் எண்ணத்தில் தோன்றுவதை அப்படியே எழுதிவிடுவேன்.. திருத்துவது கிடையாது.. அதுதான் இப்படி சில இடங்கள் வேறாடுவதாய் உள்ளது..

மதுரகன்
11-01-2007, 04:27 PM
காதலி

நான் உன்னை முதன்முறை பார்த்தேன்
உன்முகம் மொட்டுக்களுக்கு மலர்வதைக்
கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
சட்டென்று என் பக்கம் திரும்பினாய்
பூக்களால் கூட பரிசீலிக்கப்படாத நாணம்
உன்முகத்தில் தெரிந்தது...

நீ என்னை ஒருமுறை உற்று நோக்கியதுமே
என் அறையின் ஜன்னலோரப் பூந்தோட்டத்தில்
அதுவரை நிலைத்திருந்த கார்காலம் அகன்றது
என் மலர்வனங்கலெல்லாம் வசந்தகாலத்தை
சூடிக்கொண்டன...

அங்கு
உன்பார்வை ஒவ்வொருமுறை என்னைத்
தீண்டும்போதும் ஒவ்வொரு தளிர்களிலும்
மொட்டுக்கள் கருக்கொண்டன...
உன்சுவாசத்தின் வெம்மை என் இதயத்தை
குளிர்விக்கும் தருணங்களிலெல்லாம்
மகரந்தங்கள் சுகந்தம் பெற்றன...

உன் உதடுகளின் அசைவுகள் என்
உள்ளுணர்வுகளை உரக்கும் போதெல்லாம்
தென்றலில் இதம் கூடியது...
நீ முதன்முறை என்னைப்பார்த்து
புன்னகைத்தபோது என் தோட்டப்பூக்கள்
பூப்பெய்தின உன்னை நுகருவதற்காய்...

நான் உன் ஸ்பரிசங்களுக்காய் காத்துக்கிடந்தபோது
நீயும் நானும் மட்டுமே உள்ள
எம் உலகமே பனியால் உறைந்தது...
உன்னால் உயிர்பெற்றெழ....

மதுரகன்

ஷீ-நிசி
11-01-2007, 04:43 PM
அருமையான காதல் கவிதை நண்பரே...
உலகில் காதல் கவிதைகள் இல்லை என்றால் கவிதைகளின் எண்ணிக்கைகள் குறைவாகவே இருந்திருக்கும்..

ஆதவா
11-01-2007, 06:00 PM
நான் உன்னை முதன்முறை பார்த்தேன்
உன்முகம் மொட்டுக்களுக்கு மலர்வதைக்
கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தது.
சட்டென்று என் பக்கம் திரும்பினாய்
பூக்களால் கூட பரிசீலிக்கப்படாத நாணம்
உன்முகத்தில் தெரிந்தது...

அட!! அருமை மது! முகம், மொட்டுக்களுக்கு மலர்வதைக் கற்றுக் கொடுக்கிறதா? அருமை அருமை... இயற்கையின் அதிசயங்களை காதலில் தோய்க்கிறீர்கள். பூக்களால் பரிசீலிக்கப்படாத நாணம் என்பது அருமையான ஒப்புதல். காதல் கவிதைகளில் பூக்களின் இடம் இன்னுமிருக்கிறதை உறுதிபடுத்துகிறது. ஆங்கிலத்தில் சொன்னால் Excellent!!!

நீ என்னை ஒருமுறை உற்று நோக்கியதுமே
என் அறையின் ஜன்னலோரப் பூந்தோட்டத்தில்
அதுவரை நிலைத்திருந்த கார்காலம் அகன்றது
என் மலர்வனங்கலெல்லாம் வசந்தகாலத்தை
சூடிக்கொண்டன...

ம்ம்ம்,,,,, காதலியை இப்போதுதான் பார்க்கிறீர்கள். பின் அவளும் பார்க்கிறாள்.... மீண்டும் இயற்கையை வம்புக்கிழுக்கிறீர்கள். மது உண்மைய சொல்லுங்க ! உங்க வயது வெறும் 19 தானா?

அங்கு
உன்பார்வை ஒவ்வொருமுறை என்னைத்
தீண்டும்போதும் ஒவ்வொரு தளிர்களிலும்
மொட்டுக்கள் கருக்கொண்டன...
உன்சுவாசத்தின் வெம்மை என் இதயத்தை
குளிர்விக்கும் தருணங்களிலெல்லாம்
மகரந்தங்கள் சுகந்தம் பெற்றன...

அங்கு, அதாவது உங்கள் தோட்டத்தில்.. உங்களின் மேல் பார்வைபட தளிர்கள் கருக்கொண்டன என்பது அருமையான சிந்தனைதான்.. நானாக இருந்தால் பூக்கள் கருகிவிட்டன என்று எழுதியிருப்பேன்.. இது சற்று வித்தியாசம் தான்.
சுவாசத்தின் வெம்மை இதயத்தைக் குளிர்விக்கும் என்பது புதுக்கவிதைக்கே உண்டான இலக்கணம்..

உன் உதடுகளின் அசைவுகள் என்
உள்ளுணர்வுகளை உரக்கும் போதெல்லாம்
தென்றலில் இதம் கூடியது...
நீ முதன்முறை என்னைப்பார்த்து
புன்னகைத்தபோது என் தோட்டப்பூக்கள்
பூப்பெய்தின உன்னை நுகருவதற்காய்...

ஆங்... இப்போதானே தெரிகிறது. கருவெய்திய காரணமென்னவென்று.. தென்றலில் இதம் கூடி தோட்டத்துப் பூக்கள் பூப்பெய்தியது என்று அழகான இயற்கை கூடலை காதலாய் சொல்லியிருக்கிறீர்கள்.

நான் உன் ஸ்பரிசங்களுக்காய் காத்துக்கிடந்தபோது
நீயும் நானும் மட்டுமே உள்ள
எம் உலகமே பனியால் உறைந்தது...
உன்னால் உயிர்பெற்றெழ....

சற்று யோசிக்கவேண்டிய வரிகள்; உலகம் உம் காதலியால் உயிர்பெற்றெழுகிறதா!??? சிந்தனைகளை விண்வெளிக்கு அனுப்பி வேடிக்கை பார்க்கிறீர்கள். பூக்களிடம் உங்கள் கவிதையை சொல்லி சாகடித்துவிடப் போகிறீர்..

முடிவாக., இயற்கையான காதல். ஆரோக்கியமான காதல். காதலியை எப்படியெல்லாம் வர்ணிக்கவேண்டுமென்பதற்கு ஒரு அழகிய உதாரணம். பிழை யேதுமிருக்கிறதா கவிதையில்????? அழகிய மாந்தர் முன் அழகை சோதிப்பது ஆணழகா? மது!! நீங்கள் சின்ன வயதினராக இருக்கலாம். ஆனால் எண்ணம் பெரியவர். இயற்கையின் அசைவுகளை படம் பிடித்துக் காட்டுவதில் வல்லவர்..

உங்கள் காதலி கொடுத்து வைத்தவள்.

மதுரகன்
12-01-2007, 04:54 PM
மிக்க நன்றி ஷீ...
மிக்க மிக்க நன்றி ஆதவா...
உண்மையில் எனக்கு வயது 19தான் சந்தேகம் வேண்டாம் பிறந்தது 17.10.1987 இல் வேண்டுமானால் உங்கள் யாகூ முகவரிக்கு என் புகைப்படமொன்றை அனுப்பிவைக்கிறேன்.

அடுத்தது இல்லாத காதலிக்கு நீங்கள் கூறிய வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி..
நான் நினைக்கிறேன் இயற்கையைப்பற்றி நான் கொண்டுள்ள அதீத ஈடுபாடு இக்கவிதையின் வெற்றிக்கு உதவியிருக்கலாம்..

மதுரகன்
12-01-2007, 05:00 PM
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்தும் புதிய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

மதுரகன்
12-01-2007, 05:02 PM
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி தொடர்ந்தும் புதிய கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்...

மதுரகன்
12-01-2007, 05:11 PM
தலைப்புக்கள் எதுவும் தோன்றவில்லை

இலையுதிர்காலப்பொழுதுகளில் ஓர் நாள்
இலைவிரித்து நிற்கின்ற அந்த மல்லிகை
கலைக்கப்பட்ட கனவுகளின் சில அந்திம எண்ணங்கள்
திராவிடத்து இரவுப்பொழுதுகளின் கீற்றுக்களில் ஒன்று

மலர்களற்றுப் போய்விட்ட அந்த மலர்வனத்தில் ஒருசிலநிமிடங்கள்
பளிங்குகளால் வேயப்பட்ட அந்த பக்கததுச்சுவரில் படர்ந்தாய்

உன் இதழ்களின் ஓரங்களில் மறைக்கப்பட்டுள்ள இருட்டுயுத்தங்கள்
உன்வியாபகத்தன்மையின் வெற்றியின் பின்னணியில்
மறைந்து கொணடடிருக்கும் நிழல்மனிதர்களின் கறுப்புச்சரிதங்கள்
உன் வாசனையில் ஊறியிருக்கும் இரத்த நெடிகளின்
அபஸ்வரங்கள்

இலையுதிர்காலப்பொழுதுகளின் அந்தியில்
இதழ்பரப்பி நிற்கின்ற மல்லிகை மரத்தின்
இதழ்களின் ஓரம்
இன்னமும் பறந்து கொண்டிருக்கும் அந்தப்பூச்சிகளின்
கூடாரம்...

மதுரகன்

அண்ணாவின் ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் என்ற நூலைப்படித்தபின்
திராவிடப்போராட்டம் தொடர்பாக எழுந்த உணர்வலைகள்..
விளங்க கடினமான சொற்றொடர்கள் இருப்பின் என்னிடம் கேட்கவும் விளக்கம் தருகிறேன்.
நீங்கள் ஆதரவு தாருங்கள்...

ஆதவா
12-01-2007, 05:54 PM
தலைப்பு தோணாததினால் கவிதை சற்று விலகியோடும் அன்பரே!!
ஒருவகையில் புதுமைதான். எனக்கும் அதிகமாக தலைப்புகள் தோணுவதில்லை.

இலையுதிர்காலப்பொழுதுகளில் ஓர் நாள்
இலைவிரித்து நிற்கின்ற அந்த மல்லிகை
கலைக்கப்பட்ட கனவுகளின் சில அந்திம எண்ணங்கள்
திராவிடத்து இரவுப்பொழுதுகளின் கீற்றுக்களில் ஒன்று

மல்லிகை என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது மட்டுமே எனக்குத் தெரியவில்லை. (மனதுக்குள் சில மின்னல் வந்துபோகிறது...நீங்கள் திராவிடத்தை அல்லது தமிழைக் குறிப்பதாக இந்த விமர்சனம்
எழுதுகிறேன். அதுவாகக் கூட இருக்கலாம்.) உங்கள் கவிதைகளில் தேடல் அதிகமிருக்கிறது. உருவகப் படுத்தப்பட்ட அந்த மல்லிகை கலைக்கப்பட்ட கனவுகளின் அந்திம எண்ணங்கள்... அந்திம என்பது இரவு என்று நினைக்கிறேன். அருமையாக இருக்கிறது.

மலர்களற்றுப் போய்விட்ட அந்த மலர்வனத்தில் ஒருசிலநிமிடங்கள்
பளிங்குகளால் வேயப்பட்ட அந்த பக்கததுச்சுவரில் படர்ந்தாய்

மல்லிகை இப்போது, அதாவது இலையுதிர்காலத்தில் மலர்களில்லாத வனத்தில் பக்கத்துச் சுவரில் படர்கிறது..
தமிழாகக் கொண்டால் பக்கத்துச் சுவர் ஆங்கிலமெனக் கொள்ளலாம்.

இங்கே கவனிக்கவேண்டியவை : பக்கத்துச் சுவர்,

உன் இதழ்களின் ஓரங்களில் மறைக்கப்பட்டுள்ள இருட்டுயுத்தங்கள்
உன்வியாபகத்தன்மையின் வெற்றியின் பின்னணியில்
மறைந்து கொணடடிருக்கும் நிழல்மனிதர்களின் கறுப்புச்சரிதங்கள்
உன் வாசனையில் ஊறியிருக்கும் இரத்த நெடிகளின்
அபஸ்வரங்கள்

மிக ஊடுருவும் வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருக்கிறீர். வியாபகத் தன்மையின் வெற்றி (வியாபகம் = பரவிக் கிடப்பது.வியாபகம் ஒரு சமஸ்கிருத வார்த்தை, வியாபித்திருத்தல் என்று சொல்வதைக் கேட்டிருப்போம் )
பரவிய திராவிட வெற்றிக்கு பின் மறைந்துகிடக்கும் நிழல் மனிதர்களின் வரலாறு ஒப்பிடத்தக்க இரத்த நெடி என்பது அருமையான விளக்கம்.

இலையுதிர்காலப்பொழுதுகளின் அந்தியில்
இதழ்பரப்பி நிற்கின்ற மல்லிகை மரத்தின்
இதழ்களின் ஓரம்
இன்னமும் பறந்து கொண்டிருக்கும் அந்தப்பூச்சிகளின்
கூடாரம்...

கடைசியில் விளங்காதது பூச்சிகள்... திராவிடம் என்று என் மனதில் நினைத்திருந்தால் பூச்சிகள் எல்லாம் தலைகளா? (அரசியல்)
சற்று தேடலான கவிதையில் சரியான தலைப்பு இருந்திருந்தால் இன்னும் படிப்போர் கவனமாக படிப்பார்கள்..
கவிதை உங்களுக்கு சாபமாக்கப் பட்டிருக்கிறது. விமோசனமில்லால்.

அண்ணாவின் ஏன் வேண்டும் இன்பத்திராவிடம் என்ற நூலைப்படித்தபின்
திராவிடப்போராட்டம் தொடர்பாக எழுந்த உணர்வலைகள்..
விளங்க கடினமான சொற்றொடர்கள் இருப்பின் என்னிடம் கேட்கவும் விளக்கம் தருகிறேன்.
நீங்கள் ஆதரவு தாருங்கள்

இரண்டுமுறை கவிதையைப் படித்தபின்தான் இதைப் படித்தேன். அந்த நூலை நான் படித்ததில்லை. திராவிடப் போராட்டம் தொடர்பாக ஈழத்திலிருந்து எழுகின்ற உம் உணர்வலைகள் இங்குள்ளவர்களுக்கில்லை.

கடினமான வார்த்தைப் பிரயோகமில்லை. கவிதையின் உட்கருத்து ஆழமாகச் செல்லுகிறது.
என்மனதில் திராவிடமும் தமிழும் பொருந்துவதாகத் தோணுகிறது. இனி நம் மன்ற நண்பர்களின் மனதில் என்ன இருக்கிறது?

மதுரகன்
12-01-2007, 06:26 PM
நன்றி ஆதவா....
என் சிறிய விளக்கங்கள்..
மல்லிகை = தமிழ்மொழி
இலையுதிர்காலப்பொழுதுகளில் அதுவும் மலரற்ற மலர்வனத்தில் சுவரில் மல்லிகை படர்வது சாத்தியப்படுவது கடினம் அதுபோல கடினப்பட்டு தமிழ் வளர்கிறது தற்போது என்பது கருத்து..

பக்கத்துச்சுவர் தமிழ் பேசப்படும் இடங்கள் குறிப்பாக கவிதையில் தமிழ்நாடு..

ஏனையோரின் கருத்துகளுக்கு பின் மேலதிக விளக்கம் தருகிறேன்..
அவர்களும் முயலட்டும்....

ஆதவா
12-01-2007, 06:34 PM

புரிந்தது நண்பரே!! தமிழென நான் நினைத்தது சரிதான்..

பளிங்குகளால் வேயப்பட்ட அந்த பக்கததுச்சுவரில் படர்ந்தாய்

இந்த வரிகளை சற்று கவனமாக கவனித்திருந்தால் இன்னும் கொஞ்சம் சரியாக எழுதியிருப்பேன்.
இதற்கு மேலும் விளக்கம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

மதுரகன்
12-01-2007, 06:41 PM
நன்றி ஆதவா ஆதரவைத் தொடருங்கள்....
விளக்கம் முடியவில்லை பூச்சிகளுக்கு நான் விளக்கம் கூறவில்லையே...

ஆதவா
13-01-2007, 12:12 AM
நன்றி ஆதவா ஆதரவைத் தொடருங்கள்....
விளக்கம் முடியவில்லை பூச்சிகளுக்கு நான் விளக்கம் கூறவில்லையே...

வேறுயாரு? நாம் தான்.. தமிழர்தாம்

meera
13-01-2007, 09:46 AM
தலைப்புக்கள் எதுவும் தோன்றவில்லை

இலையுதிர்காலப்பொழுதுகளின் அந்தியில்
இதழ்பரப்பி நிற்கின்ற மல்லிகை மரத்தின்
இதழ்களின் ஓரம்
இன்னமும் பறந்து கொண்டிருக்கும் அந்தப்பூச்சிகளின்
கூடாரம்...

மதுரகன்

.
மதுரகன்,

அழகான கவிதைக்கு பாராட்டுகள்.ஒவ்வொரு வரியும் அழகு.கடைசி வரிகள் என்னை மிகவும் கவர்ந்தது.

இளசு
13-01-2007, 10:21 AM
அதிகாரம், ஆதிக்கம் ஆக்கிரமிக்கும்போதெல்லாம்
சுய அடையாளங்களை மீட்டெடுக்க ஒரு குழு கிளம்பும்..

மீட்டெடுக்கப்பட்ட விடுதலை, மொழி இவற்றில்
குருதி வீச்சம் அடியில்..
தேனெடுத்து வாழ்வு நடத்தும் பயனர் கூட்டம் நுனியில்..

எல்லாப் போராட்டங்களுக்கும் பொருந்தும் கவிதை.

பாராட்டுகள் மதுரகனுக்கும்
அழகாய் விளக்கவுரை அளித்த ஆதவாவுக்கும்.

மதுரகன்
13-01-2007, 03:39 PM
நன்றி அனைவருக்கும்...
ஆதவா.. தமிழ் என்ற மல்லிகைப்பூவுடன் எந்நேரமும் நெருங்கிய ஸ்பரிசத்தில் இருக்கும் பூச்சிகளாக அனைவரையும் குறிப்பிடமுடியாது...
அது இன்னமும் திராவிட வேட்கைகளுடனும் நிறைவேறாக்கனவுகளுடனும் வாழநிதுகொண்டிருக்கும் திராவிடப்போராளிகளைக்குறிப்பது...

ஆதவா
13-01-2007, 04:15 PM
மிக்க நன்றி

மதுரகன்
13-01-2007, 04:37 PM
நன்றியெல்லாம் எதுக்கு ஆதவா உங்கள் பார்வைக்கிரணங்களை மட்டும் எப்போதும் என்மீது படர விட்டால் போதும்...

மதுரகன்
13-01-2007, 05:34 PM
தொடரும் தவிப்புகள்

உன் மூச்சுக்குள் அகப்பட்டு
மூச்சுத்திணறி இறந்துவிடத் தவிக்கிறேன்
ஏனடி சுவாசிக்கமறுக்கிறாய் என்னருகில்

உன் பார்வைகளின் சுடரில் பொசுங்கிவிடவென்றே
என் உடலை வளர்க்கிறேன்
ஏனடி எனைப்பார்க்க மறுக்கிறாய்

ஏனடி என் இமைகள் இமைக்க மறுக்குதே
உன்னைக்கனவில் கண்டாலும்...

ஆதவா
13-01-2007, 05:40 PM
அருமையான கவிதை... தவிப்போடு இருக்கிறோம் அடுத்து காண, தொடருங்கள்.

மதுரகன்
13-01-2007, 05:54 PM
நன்றி

மதுரகன்
13-01-2007, 06:02 PM
அறிவித்தல்

வைகறையில் கடந்துபோகும் மேகங்களே
உங்கள் பயணத்தின் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்
அந்தத்திசையில் என் காதலி நீராடிக்கொண்டிருக்கிறாள்

அரண்மனை வாசல்களில் பொற்கிழிகளுக்காய்
காத்துக்கொண்டிருக்கும் கவிஞர்களே
உங்கள் சிந்தையை தயார்செய்து கொள்ளுங்கள்
அந்த வழியால் என்னவள் ஊர்வலம் வருகிறாள்...

ஆதவா
13-01-2007, 06:07 PM
அறிவித்தல்

வைகறையில் கடந்துபோகும் மேகங்களே
உங்கள் பயணத்தின் பாதையை மாற்றிக்கொள்ளுங்கள்
அந்தத்திசையில் என் காதலி நீராடிக்கொண்டிருக்கிறாள்

அரண்மனை வாசல்களில் பொற்கிழிகளுக்காய்
காத்துக்கொண்டிருக்கும் கவிஞர்களே
உங்கள் சிந்தையை தயார்செய்து கொள்ளுங்கள்
அந்த வழியால் என்னவள் ஊர்வலம் வருகிறாள்

நல்லது மது.. இதை இன்னும் தொடர்ந்து எழுதுங்கள்.. பாதியில் நின்றது போல தோற்றமளிக்கிறது.

பொற்கிழி???? பொற்கிளியா?
வழியால் ....?? வழியில்.

காதலியின் பிரவேசத்தை அறிவிக்கிறீர்கள்.. தொடரட்டும் பணி..

மதுரகன்
13-01-2007, 06:20 PM
கிழி = பணமுடிச்சு
பொற்கிழி = பொற்காசுகள் அடங்கியபை

வழியால் = வழியில்
நாங்கள் இங்கு வழியால் என்றுதான் பேசுவோம்

ஷீ-நிசி
14-01-2007, 03:20 AM
ஆதவாவின் கருத்துதான். பாதியில் நின்றது போல் உள்ளது.. இதுப் போல வார்த்தைகள் சில கவிதைகளுக்குத் தான் மிக அழகாக சிக்கும். நீங்கள் இந்தக் கவிதை எழுதிய நேரத்தில் உங்கள் மனம் மிக ரம்மியமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து. நீங்கள் அன்றே இந்தக் கவிதையைத் தொடர்ந்திருக்கலாம்.

மதுரகன்
14-01-2007, 04:14 PM
நன்றி ஷீ தொடர முயற்சிக்கின்றேன்...

மதுரகன்
14-01-2007, 04:47 PM
நினைவுகளின் ஸ்பரிசம்

எனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை
எத்தனையோ ஜென்மங்களுக்கு முன்பு
அந்த ஆகர்ஷ ஸ்பரிசங்களுக்குள் முழுமையாக
நனைந்திருக்கிறேன்

அந்த அழகிய பார்வையின் வெம்மைக்குள்
என்னை முழுமையாக உட்படுத்தியிருக்கிறேன்

ஏதோ உலகங்களை கடந்து மிதந்துசெல்லும்
மேகமூட்டங்களை ஊடுருவி
நட்சத்திரங்களும் தூசித்துணிக்கைகளும்
மட்டும் காணப்படும் அந்த பால்மண்டல வீதியில்
நீயும் நானும் சிறுவர்களாய் ஓடித்திரிந்திருக்கின்றோம்

சகோதரத்துவமா காதலா என்று உறுதியாக கூறமுடியாத
உணர்வுகள் உன்னைக்காணும் போது மாத்திரம் என்னில்...

ஓர் பெண்ணின் புன்னகையின் மையலில் இதயத்ததைப்பிடுங்கி
எறியும் இனம் புரியாத சுகததைப்பலமுறை அனுபவித்திருந்தாலும்
உனது உதடுகளில் இயல்பானதொரு புன்னகை கண்டாலே
அழுதுவிடுகிறேன் என்ன உணர்வு இது.?..

இந்த பந்தம் எத்தனை யுகங்களுக்கு முன்னால் முடிச்சுப்போடப்பட்டது
உலகப்புலன்களை முற்றாக துறந்துவிட்டு நான்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகள் என்னில் பரவும் கணங்களில் உடல்
உஷ்ணமேறி வியர்வைத்திவலைகளிற்குள் மூழ்கி
நினைவை இழக்கிறேன் ஏன்..??...

சற்று அருகிலே நீ கடந்து போனாலும் என்
இதயம் துடிக்கும் வேகம் இயற்கையை மீறி
பன்மடங்காக மாறுதே ஏன்...?...

நீ உதடு கடித்தாலும் என் உயிரும் உன்னால்
கடிபடுகின்றதே...
இந்த வலியில் மீண்டும் மீண்டும் என் கனவுகள்
மிதிபடுகின்றதே ஏனடி..

பல கோடி வருடங்களுக்கு நிறுத்தப்படாது
தொடரப்படவென்றே சபிக்கப்பட்டுவிட்ட
உறவு இது..........

மதுரகன்

ஆதவா
14-01-2007, 05:26 PM
எனக்கு சரியாக நினைவுக்கு வரவில்லை
எத்தனையோ ஜென்மங்களுக்கு முன்பு
அந்த ஆகர்ஷ ஸ்பரிசங்களுக்குள் முழுமையாக
நனைந்திருக்கிறேன்

மது... இப்போது காதல் காவியத்துள் அதுவும் நினைக்கும் காதல் காவியத்துள் நுழைந்துள்ளீர்கள்.. மன்றத்தில் தினமும் கவிதை எழுகிறீர்.. எப்படி நேரம் கிடைக்கிறது.. நமக்கு மற்றயதைப் படிக்கவே நேரம் போதவில்லை..
ஆகர்ஷ.... பரிபூரண வடமொழி.. அர்த்தம் விளங்கவில்லை.. விக்கி பீடியாவிலும் இல்லை.

அந்த அழகிய பார்வையின் வெம்மைக்குள்
என்னை முழுமையாக உட்படுத்தியிருக்கிறேன்

ஏதோ உலகங்களை கடந்து மிதந்துசெல்லும்
மேகமூட்டங்களை ஊடுருவி
நட்சத்திரங்களும் தூசித்துணிக்கைகளும்
மட்டும் காணப்படும் அந்த பால்மண்டல வீதியில்
நீயும் நானும் சிறுவர்களாய் ஓடித்திரிந்திருக்கின்றோம்

சின்ன வயதில் ஓடி விளையாடினோம் என்பதை கவிதையாக எப்படி சொல்லமுடியும் என்பதற்கு சரியான உதா...

சகோதரத்துவமா காதலா என்று உறுதியாக கூறமுடியாத
உணர்வுகள் உன்னைக்காணும் போது மாத்திரம் என்னில்...

எல்லா காதலருக்கும் உண்டாகும் முதல் உணர்வு இதுதான்...

ஓர் பெண்ணின் புன்னகையின் மையலில் இதயத்ததைப்பிடுங்கி
எறியும் இனம் புரியாத சுகததைப்பலமுறை அனுபவித்திருந்தாலும்
உனது உதடுகளில் இயல்பானதொரு புன்னகை கண்டாலே
அழுவிடுகிறேன் என்ன உணர்வு இது.?..

மது.... காதலில் இறங்கியபின் கவிஞனான யாரும் இந்த மாதிரி எழுதமுடியாது... அழுவிடுகிறேன் என்பது உங்கள் ஊர் வழக்கமா?

இந்த பந்தம் எத்தனை யுகங்களுக்கு முன்னால் முடிச்சுப்போடப்பட்டது
உலகப்புலன்களை முற்றாக துறந்துவிட்டு நான்
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும்
உன் உணர்வுகள் என்னில் பரவும் கணங்களில் உடல்
உஷ்ணமேறி வியர்வைத்திவலைகளிற்குள் மூழ்கி
நினைவை இழக்கிறேன் ஏன்..??...

ம்ம்ம்ம்..... நிர்வாகிகளே.... மதுவின் கவிதைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்.. அனைத்திலும் மெளன ஆர்ப்பாட்டம்.

சற்று அருகிலே நீ கடந்து போனாலும் என்
இதயம் துடிக்கும் வேகம் இயற்கையை மீறி
பன்மடங்காக மாறுதே ஏன்...?...

நீ உதடு கடித்தாலும் என் உயிரும் உன்னால்
கடிபடுகின்றதே...
இந்த வலியில் மீண்டும் மீண்டும் என் கனவுகள்
மிதிபடுகின்றதே ஏனடி..

காதல் ஏற்படுத்தும் கவிதை வலிகள் இவை...

பல கோடி வருடங்களுக்கு நிறுத்தப்படாது
தொடரப்படவென்றே சபிக்கப்பட்டுவிட்ட
உறவு இது..........

இத்தனை அழகாய் சொல்லிவிட்டு முடிவை மூன்றே வரிகளில்ல் முடித்துவிட்டீர்களே!!

வரிகளின் நீளம் அதிகமானதினால் கவிதைபோல கதையா என்று தோன்றுகிறது. சற்று குறையுங்கள். கவிதையின் ஒவ்வொறு இழையும் அழகாக பின்னப்பட்டு இருக்கிறது.. அருமை மது./. இன்னும் நம்புவதற்கில்லை நீங்கள் 19 வயதுக் காரரா?

மதுரகன்
15-01-2007, 04:42 PM
நன்றி ஆதவா உங்கள் தொடரும் ஆதரவிற்கு...
உங்களிடமிருந்தே வருவோம்

ஆகர்ஷம் எனும் சொல் "எல்லாவற்றிலும் உயர்ந்தது" எனவும் பொருள்படலாம்... அன்றில் "எவராலும் கொடுக்க முடியாதளவு உயர்ந்த" இப்படி பலவாறு கூறலாம்..
மேலதிக கருத்துக்கள் இருப்பின் மன்ற நண்பர்கள் உதவுக..

தினமும் கவிதை எழுதுவது பற்றி...
எனக்கு இன்னமும் பல்கலைக்கழக முதலாம் வருடம் ஆரம்பமாகவில்லை..
பகுதி நேரமாக கணினிக்கல்வியகமொன்றில் போதனாசிரியராக கடமைபுரிகிறேன்.. அது போக மீதி நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக கவிதைகளை தட்டச்சு செய்து கொள்வேன் பின்பு இங்கு நுழையும்போது அவற்றைப் பதிப்பேன்...

அத்துடன் நான் ஏற்கனவே பல டைரிகள் நிறைய கவிதை எழுதி வைத்திருப்பதால் அவற்றைப்பதிக்கவே நேரம் போதவில்லை...

அழுவதாக கூறியிருப்பது பற்றி கேட்டீர்கள்
தனிமையில் காதலியின் நினைவுகளுடன் காத்திருக்கும் காதலன் ஒருவனின் கண்களின் ஓரம் தடவிப்பாருங்கள் உண்மை புரியும்...

என்னால் எழுதியபின் வரிகளைக் குறைக்கமுடிவதில்லை எனவே இருபாகங்களாக பதிக்கலாமா...
உங்கள் ஆலோசனை தேவை...

நிச்சயமாகவே எனக்கு வயது 19 தான் நிரூபிக்க என்ன செய்ய வேண்டும் .. கடவுச்சீட்டின் பிரதியை அனுப்பவா...?... :) :)

ஆதவா
16-01-2007, 02:42 AM

ஆகர்ஷ நண்பரே!!! விளக்கத்திற்கு நன்றி.... எனக்கு சில கடினமான தமிழ் வார்த்தைகூட தெரிந்துவிடும் காரணம் நான் நிறைய தமிழ் நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் வடமொழி எழுத்துக்கள் அவ்வளவாக தெரியாது.... தினமும் கவிதை எழுதுங்கள்......

நண்பரே காதலில் அழுவதைக் கூட புரிந்துகொள்ளாமல் எவனும் கவிஞன் ஆகிவிடுவதில்லை.....
அழுவிடுவது என்ற சொல் உங்கள் ஊர் வழக்கமா என்று கேட்டிருந்தேன்... இரண்டு பாகமெல்லாம் வேண்டியதில்லை... வரிகளில் சொற்களை கஞ்சத்தனமாய் இட்டு விளக்கம் அதிகம் வரும்படி செய்யலாம்.... இது தொடக்கம்தான் நண்பரே!!! எழுத முற்படுங்கள்.. நாளடைவில் வந்துவிடும். மற்றபடி நீங்கள் எழுதுவதும் அருமையானதுதான்.. அப்படியே கூட எழுதலாம். படிப்பவர்களுக்கு சற்று நெருடலாக இருக்கலாம்... என் கவிதைகளிலும் இதே போன்ற நீளமிருக்கிறது. ஆனால் பதிப்பதில்லை..

ஒரு கவிதை நீளமாயிருந்தால் என்ன குறைவான நீளமாயிருந்தாலென்ன கருத்துக்கள் அடங்கியிருந்தால் அது புதுமைக்கவிதை தான்...... மாற்றுக்கருத்தே இல்லை.

தொடருங்கள்

அறிஞர்
16-01-2007, 01:27 PM
அருமை மதுரகன்...

இன்னும் இதை தொடருங்களேன்...

மதுரகன்
16-01-2007, 04:54 PM
விரைவில் எதிர்பாருங்கள் அறிஞரே...

மதுரகன்
16-01-2007, 04:56 PM
அழுவிடுவது என்று தவறாக பதிக்கப்பட்டு விட்டது. இப்பொதே திருத்தி விடுகின்றேன்...

மதுரகன்
16-01-2007, 05:13 PM
தெரிந்துகொள்ள மேலும்..

அந்த நாட்குறிப்பேடுகள் தொலைந்துபோயின....
உன் சுவாசத்தின் ஈர்ப்பில் சக்தி பெற்று
நட்சத்திரங்களுக்கு தாவிய பொழுதுகள்...

தொடரும் காத்திருங்கள்..

இளசு
17-01-2007, 08:35 PM
காதல் கொடி மேல் மழை தூவாமல்
காதல் தூதுக்கு மேகத்தை அழைக்காமல்..

புதிய சிந்தனை...

காதலும் கவிதையும் வளர வாழ்த்துகள் மதுரகன்..

பழகு தமிழில் சொற்கள் ஊடாடுவது
அழகுத் தமிழுக்கு மேலும் அழகு!

மதுரகன்
18-01-2007, 03:34 PM
நன்றி இளசு
என் கவிதைகள் அனைத்திலும் உங்கள் குறிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் கிடைக்குமா...

அறிஞர்
18-01-2007, 04:40 PM
உன்மனதில் என்னைப்பற்றிய எண்ணங்கள் இதுவரை
தணிக்கை செய்யப்பட்ட பகுதியாகவே காணப்பட
காரணமென்ன...

காலந்தாழ்த்தி படித்ததற்கு மன்னிக்கவும் அன்பரே...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

அவளின் நினைவுகள்... தவிப்புக்களை விட்டு விட்டு சென்றனவோ...

தணிக்கையிலிருந்து வெற்றிக்காண என்ன செய்யவேண்டும் என கேட்டு சொல்லவா...

அறிஞர்
18-01-2007, 04:41 PM
என் முக்கிய திருப்பங்கள்..
உயர்தரவகுப்பு(உங்கள் +2) படிக்கும் போது தற்செயலாக அருமையாக கவிதை எழுதும் ஒருவன்(திலீபன்) அருகில் அமர்ந்து அவனை நண்பனாக பெற்றது.. அவன் கவிதைகளை கண்டு நாமும் எழுத வெண்டும் என தூண்டப்பட்டது...

தற்போது மருத்துவக்கல்லூரி அனுமதி பெற்றது..
போன்றவையே
நல்ல நண்பர்களும், பாரட்ட சிலரும் அமைந்தாலே.. திறமைகள் பல வெளிவரும்... வாழ்த்துக்கள்...

தமிழ் இலக்கியத்திலும், படிப்பிலும் வெற்றிக்காண வாழ்த்துக்கள்

அறிஞர்
18-01-2007, 04:47 PM
உன் மூச்சுக்குள் அகப்பட்டு
மூச்சுத்திணறி இறந்துவிடத் தவிக்கிறேன்
ஏனடி சுவாசிக்கமறுக்கிறாய் என்னருகில்
...
தாங்கள் இறந்தவிடக்கூடாதென அக்கறையோ....

உன் பார்வைகளின் சுடரில் பொசுங்கிவிடவென்றே
என் உடலை வளர்க்கிறேன்
ஏனடி எனைப்பார்க்க மறுக்கிறாய்...
பாசத்தோடு வளர்ந்த உடல் பொசுங்கி விடக்கூடாதென அக்கறையோ.....

ஏனடி என் இமைகள் இமைக்க மறுக்குதே

உன்னைக்கனவில் கண்டாலும்...
இமைக்கும்போது காதலி மறைந்துவிடுவாள் என கண்கள் நினைத்ததோ என்னவோ.....

அருமையான வரிகள்...... தொடருங்கள்... அன்பரே...

மதுரகன்
18-01-2007, 04:50 PM
நன்றி அறிஞரே உங்கள் பதிலுக்கு..
என் கவிதைகள் பல இங்கு கேட்பாரற்று கிடக்கின்றன...
எந்த வித பதிலுமின்றி.. ஆதவாவின் விமாசனங்களே என்னை நடத்திச்செல்கின்றன..
உங்கள் அதரவு கிடைப்பின் என் மனம் மேலும் குளிரும்..
தயவு செய்து உங்கள் பதிவுகளை அங்கும் விட்டுச்செல்லவும்...

மதுரகன்
18-01-2007, 04:53 PM
நன்றி நன்றி அறிஞரே
என் பதிவுகள் குளிர்ச்சி பெறுகின்றன..
அந்கு உங்கள் மவுஸ் சொடுக்கப்பட்ட கணங்களில்...
உங்கள் ஆதரவைத்தொடருங்கள் அறிஞரே..,ஆதவா....

அறிஞர்
18-01-2007, 04:54 PM
உங்கள் அதரவு கிடைப்பின் என் மனம் மேலும் குளிரும்..
தயவு செய்து உங்கள் பதிவுகளை அங்கும் விட்டுச்செல்லவும்... இந்த பகுதியில் கவிதை மழைகள் பொழிகின்றன.... நேரமின்மையால் எல்லாவற்றையும் படிக்க இயலவில்லை...

ஆதவன் பொறுப்பாக ஊக்குவிக்கிறார்... அவரின் வழிநடத்துலில் செல்லுங்கள்.... நாங்களும் ஊக்குவிக்கிறோம்.மற்ற நண்பர்களும் படிப்பார்கள்.. கருத்து கூறுவார்கள்... காத்திருங்கள்....

மதுரகன்
18-01-2007, 05:55 PM
தாகமெடுத்தது உன்னை அருந்தினேன்
தாகத்தை தூண்டுவதற்காய் .........தமிழே

அவ்வப்போது தொடரும்(தேடல்கள்)...

மதுரகன்
18-01-2007, 05:57 PM
நீ என்னை ஸ்பரிசிக்கும் கணங்களில் மாத்திரம் நான் பஸ்பமாகின்றேன் உன்னில் உஷ்ணமேறி....

தொடரும்...

நம்பிகோபாலன்
18-01-2007, 08:11 PM
தமிழ் மொழியின் பற்று மட்டுமே எனக்கு புரிகிறது.....
கரு எதிர்பார்கிறேன்

இளசு
19-01-2007, 03:58 AM
நன்றி இளசு
என் கவிதைகள் அனைத்திலும் உங்கள் குறிப்பு இருக்கவேண்டும் என விரும்புகின்றேன் கிடைக்குமா...

மதுரகன்,

பணிப்பளுவால் அதிக நேரம் மன்றத்தில் செலவிட முடியாமையாலும்,

ஆதவா ,பெஞ்சமின் போன்றவர்கள் அளவுக்கு
ஆழமாக அழகாக விமர்சனம் இட முடியவில்லையே என்ற பொறாமை கலந்த ஆதங்கத்தாலும் ..

இந்தக் குறைபாடு..

என்னால் முடிந்தவரை இதை நிவர்த்திக்கிறேன்.

உங்கள் ஆர்வமான பங்களிப்புக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சி

farhan mohamed
19-01-2007, 04:04 AM
மதுரகன் அருமையான கவிதை
எனக்குஆதவனைப் போல் ஆழமாக விமர்சிக்கத் தெரியவில்லை. விமர்சிக்காவிட்டாலும் உங்கள் அனைத்து படைப்புகளையும் உள் வாங்கத்தவறுவதில்லை மிக்க அருமையான படைப்புகள் நண்பா என்றும் வளர்க உன் தொண்டு!

இளசு
19-01-2007, 04:49 AM
மதுரகன்,

1) தணிக்கை செய்யப்பட்ட பகுதி..
இதுவரை வாசித்திராத நவீன சொல்லாடல்.
அருமை. பாராட்டுகள்.

2) மருத்துவப்படிப்பில் சேர்ந்தமைக்கு வாழ்த்துகள்..
மனித நேயம், சேவைக்கு இதைவிட சிறந்த பணி அமைவது கடினம்.

3) ஆதாவாவுக்கு என் தனிப்பட்ட நன்றியும் பாராட்டும்.

படைத்த படைப்பை மன்றத்தில் இட்டு..
எத்தனை பேர் பார்த்தார்கள்..
எத்தனை பேர் கருத்திட்டார்கள்.. என
அடிக்கடி வந்து வந்து பார்த்துச் செல்லும்
படைப்பாளியின் மனநிலையை
நாமனைவருமே நன்கறிவோம்.

வெட்கங்கெட்ட தாய் - என கவிதையே இதற்காக
கவிஞர் நண்பன் இங்கே இட்டிருக்கிறார்.

குழந்தையை அலங்கரித்து கூடத்தில் கிடத்திவிட்டு
அதைக் கொஞ்சியவர்கள் எத்தனை பேர்
கன்னத்தைக் கிள்ளியவர்கள் எத்தனை பேர்
பொட்டு அளவைக் குறை எனக் குட்டியவர்கள் யார்
தாயின் மன உளைச்சலைக் கொட்டிய கவிதை அது..

அன்று அவருக்குச் சொன்னேன் -
இன்று உங்களுக்கும்..
ஆதவா, பர்ஹான், ஷீ-நிசி, லியோமோகன், பிச்சி, புஷ்பலதா, மதுரகன்
மற்றும் அனைத்து ஆர்வப் பங்காளருக்கும் சொல்கிறேன்..

படைப்பதே சுகம்..
படைக்க ஊறி நிரம்பிவிட்ட மனதால்
மலடியாய் மாறியிருக்க முடியாது..

வேறொரு நாளில் வாசிக்க, விமர்சிக்க கூட்டம் இருந்தாலும்
எழுது.. எழுது.. எனக் கட்டளையிட்டு படைப்புகளை
நம்மிடமிருந்து வரவழைக்க முடியாது..

ஊக்கங்களும் விமர்சனங்களும் ஊட்டச்சத்துகள்..
தேவைதான்... வளர்ச்சிக்கு..

வழங்க முடியா வண்ணம் நண்பர்களிடம்
பணி, நேரமின்மை.. இத்யாதி..

நாளை தேடிப்படிக்க அவர்கள் வருவர்..

அன்று அவர்கள் மனப்பசியாற்ற
இன்று... இக்கணம்...

ஊறிவரும் மனதை சோர்ந்து வற்ற விடாமல்
தொடர்ந்து பொழியுங்கள் பிரம்மாக்களே...

மதுரகன்
19-01-2007, 03:45 PM
நீங்கள் எதனை எதிர்பார்க்கிறீர்கள் நம்பி...
கவிதையின் பொருளையா...
விளக்கம் தேவை...

மதுரகன்
19-01-2007, 03:47 PM
நன்றி இளசு...

அறிஞர்
19-01-2007, 03:53 PM
போராட்டம் பற்றி நவீன கவிதை.... அருமை...

படிக்கும்பொழுது உந்தப்பட்டு.. எழுதும் கவிதைகளில் வீரியம் அதிகம்....

இன்னும் படியுங்கள், எழுதுங்கள்.. படையுங்கள்

மதுரகன்
19-01-2007, 04:08 PM
இளசு உங்கள் கருத்து என்னை உத்வேகமூட்டுகின்றது...
விரைவில் என் படைப்புக்கள் வெடிப்பதை உங்களால் தடுக்கமுடியாது....
நன்றி நன்றி நன்றி...

பரீட்சையை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருக்கும் மாணவன்போல
கவிதை வரிகளோடு தவமிருக்கும் தோழர்களே...

நீங்கள் அனைவரும் வாசிக்க வேண்டிய கருத்துகள்
வாசியுங்கள்....

மதுரகன்
19-01-2007, 04:22 PM
நிச்சயம் கொடுப்பேன் எதிர்பாருங்கள் அறிஞரே...

மதுரகன்
19-01-2007, 04:41 PM
இந்த இருள்

இந்த இருள் இன்று ஏனோ
என்னை அச்சுறுத்தவில்லை
இத்தனை நேரம் கண்விழித்து அறியாத
என் இமைகளுக்கு இன்னமும்
வலி எடுக்கவில்லை

ம்ம்ம்... இந்த நேரங்களில்தான்
சரித்திரங்களுக்கு அப்பாற்பட்ட காலப்பகுதியில்
எபிரேயத்தின் வீதிகளில் கலீனஸ் தேவதைகள்
விண்மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

இந்த நேரங்களில்தான் ஹிதாயுஸ் தேவனால்
சபிக்கப்பட்டு திசைமாறிப்போன தேவதைகள்
அவனை ஆராதிக்க
மலர்மொட்டுக்களை ஞெகிழ்வித்துக்கொண்டிருப்பார்கள்..

இந்த நேரங்களில்தான் ஹாயுத்யுன் இளவரசனின்
துணைசேரத்துடித்து உணர்விழந்து
திசைமாறி சித்தப்பிரமைகொண்டு நந்தவனங்களில்
திரிந்து கொண்டிருப்பார்கள்

இந்த நேரங்களில்தான் வேலையற்ற சில மூர்க்கதேவதைகள்
எங்கள் இளைஞர்களின் கனவுகளில் புகுந்து
அவர்கள் உணரும் பெண்களாய்ப்பரிணமித்து
ஒட்டுமொத்த வாழ்வையே அர்த்தமிழக்கச் செய்துகொண்டிருப்பார்கள்

இந்த நேரங்களில்தான் அருவமும் உருவமும்
புணர்ந்து அருவுருவம் தோன்றும்
புல் என்ற உருவம் தென்றல் என்ற அருவத்துடன்
கூடி பனி என்ற அருவுருவம் தோன்றும்

இந்த இருள் ஏனோ என்னை எதுவும் செய்யவில்லை

என் கண்களில் இன்னமும் தூக்கமில்லை
இந்த நந்தவனத்தின் புற்தரைகளுக்குள்
சர்ப்பம் போல ஊர்ந்தவாறு சுற்றித்திரிகின்றேன்...

என் சுவாசம் அடக்கி தூக்கம் நிறுத்தி
எப்படியாவது லீரா ராணியின் பணிப்பில்
மொட்டுக்களை துயிலெழுப்ப விரையும் அந்தரங்க
ஆகர்சிணிகளின் தரிசனத்தைப் பெற்றுவிடுவதென்று....

அந்த சாகரத்தில் சுகந்தம் தரும் மல்லிகை
மணத்தோடு மருவி நின்ற ரோஜாவின் இதழ்களை
நோக்கி...
அந்த அரும்புகளின் முனகல்களுக்காக மூச்சடக்கி
நான் காத்திருக்க

இந்த இருள் இன்னமும் என்னை எதுவும் செய்யவில்லை
என் கண்கள் சற்று சோர முற்படும் தருணங்களில்
எங்கோ விசிறப்பட்ட பூவிதழகள் போல்
பொன்னிறம் பெற்ற கைகள் அந்த ரோஜா
இதழ்களை அரவணைத்தன...

தொடரும் உங்கள் கருத்துக்களின் பின்...

பி.கு -இந்தக்கவிதையில் வரும் பெயர்கள் என் கற்பனையில் உதித்த கதாபாத்திரங்கள்

ஷீ-நிசி
19-01-2007, 04:44 PM
கவிதையில் வார்த்தைகள் விளையாடியுள்ளன.. குறிப்பாக நான் கேள்விப்படாத பாத்திர பெயர்கள். வித்தியாசமான கவிதை தான்!

மதுரகன்
19-01-2007, 05:57 PM
நன்றி ஷீ
ஆதரவைத்தொடருங்கள்..

ஆதவா
19-01-2007, 06:01 PM
வேலை இருந்ததால் இன்று முழுவதும் என்னால் வரமுடியவில்லை. பொங்கல் முடிந்ததும் வேலை ஆரம்பமாகிவிட்டது... இனி கவிதைப் பிரிவுகளுக்கும் சற்றே ஓய்வு கொடுக்கத்தான் வேண்டும்.........

இந்த இருள் இன்று ஏனோ
என்னை அச்சுறுத்தவில்லை
இத்தனை நேரம் கண்விழித்து அறியாத
என் இமைகளுக்கு இன்னமும்
வலி எடுக்கவில்லை

இருள் என்றுமே அச்சம்தான். கடும் இருட்டிலே பயமில்லாதவர்கள் யாவருமுண்டா? கண்கள் அதிக நேரம் விழித்திருந்தால் மிக்க வலியுண்டாவது அறிந்ததே!!! அழகிய தொடக்கம்......

ம்ம்ம்... இந்த நேரங்களில்தான்
சரித்திரங்களுக்கு அப்பாற்பட்ட காலப்பகுதியில்
எபிரேயத்தின் வீதிகளில் கலீனஸ் தேவதைகள்
விண்மீன் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

இந்த இடத்திலேயே இவை கற்பனை என்று தோன்றிவிட்டது.. கற்பனையிலும் அழகான ஒப்புமைகள் ஆளுகின்றன... அதாவது இருட்டிய பொழுதில்......

இந்த நேரங்களில்தான் ஹிதாயுஸ் தேவனால்
சபிக்கப்பட்டு திசைமாறிப்போன தேவதைகள்
அவனை ஆராதிக்க
மலர்மொட்டுக்களை ஞெகிழ்வித்துக்கொண்டிருப்பார்கள்..

இருட்டிய கணங்களில்.............. இந்த பெயர்களைப் பார்த்தால் கற்பனைபோலத் தெரியவில்லையெனினும், தமிழ் பெயர்களை ( பழமையான) உபயோகித்திருக்கலாம்.
ஞெகிழ் என்பது நெகிழ் ... அதாவது அவிழ்த்து என்பது பொருள்..
ஞெகிழும் பூஞ் சிறுகுழல்........... என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன்.... பின் தருகிறேன்.........

இந்த நேரங்களில்தான் ஹாயுத்யுன் இளவரசனின்
துணைசேரத்துடித்து உணர்விழந்து
திசைமாறி சித்தப்பிரமைகொண்டு நந்தவனங்களில்
திரிந்து கொண்டிருப்பார்கள்

ஹாயுத்யுன்..... கற்பனையிலாவது நாவில் நுழையும் பேர்களை வையுங்கள் மது.... இங்கே கவிதை முடியவில்லை மது............. நன்றாக கவனிக்கவும்.. இளவரசன் துணைசேரத்துடித்துத் திரிபவர்கள் யார்?

இந்த நேரங்களில்தான் வேலையற்ற சில மூர்க்கதேவதைகள்
எங்கள் இளைஞர்களின் கனவுகளில் புகுந்து
அவர்கள் உணரும் பெண்களாய்ப்பரிணமித்து
ஒட்டுமொத்த வாழ்வையே அர்த்தமிழக்கச் செய்துகொண்டிருப்பார்கள்

ஆமாமாம்..... எனக்குக்கூட வருவதுண்டு.... அவர்களுக்கு நீங்கள் பெயரை வைக்கவில்லையா?

இந்த நேரங்களில்தான் அருவமும் உருவமும்
புணர்ந்து அருவுருவம் தோன்றும்
புல் என்ற உருவம் தென்றல் என்ற அருவத்துடன்
கூடி பனி என்ற அருவுருவம் தோன்றும்

நல்ல கற்பனை............... புல்லும் தென்றலும் கூட பனியாகுமா????? பரவாயில்லையே நல்ல சிந்தனைதான்...........

அருவம் எனபதற்கு கவிதையிலேயே அர்த்தமிருக்கிறது...

இந்த இருள் ஏனோ என்னை எதுவும் செய்யவில்லை

ஏனுங்க!! மூர்க்கதேவதைகூடவா வரவில்லை?

என் கண்களில் இன்னமும் தூக்கமில்லை
இந்த நந்தவனத்தின் புற்தரைகளுக்குள்
சர்ப்பம் போல ஊர்ந்தவாறு சுற்றித்திரிகின்றேன்...

சுற்றுங்க சுற்றுங்க அப்பத்தானே கவிதை எழுத முடியும்...........

என் சுவாசம் அடக்கி தூக்கம் நிறுத்தி
எப்படியாவது லீரா ராணியின் பணிப்பில்
மொட்டுக்களை துயிலெழுப்ப விரையும் அந்தரங்க
ஆகர்சிணிகளின் தரிசனத்தைப் பெற்றுவிடுவதென்று....

நல்லது.. உடனே செய்யுங்கள். அழகான தரிசனம் கிடைக்கும்..... ஆகர்சிணி என்றால் தேவதையா? விளக்கவும்.

அந்த சாகரத்தில் சுகந்தம் தரும் மல்லிகை
மணத்தோடு மருவி நின்ற ரோஜாவின் இதழ்களை
நோக்கி...
அந்த அரும்புகளின் முனகல்களுக்காக மூச்சடக்கி
நான் காத்திருக்க

இந்த இருள் இன்னமும் என்னை எதுவும் செய்யவில்லை
என் கண்கள் சற்று சோர முற்படும் தருணங்களில்
எங்கோ விசிறப்பட்ட பூவிதழகள் போல்
பொன்னிறம் பெற்ற கைகள் அந்த ரோஜா
இதழ்களை அரவணைத்தன...

நண்பரே அழகிய கவிதைதான்.. சிந்தனைகள் அண்டபேரண்டங்களைத் தாண்டிச் சென்றுவிட்டது............... இன்னும் மிச்சமிருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்.. எழுதுங்கள்......
தொடருங்கள்..........

மதுரகன்
19-01-2007, 06:06 PM
நீங்கள் சொன்னால் சரிதான் ஆதவா...
எதிர்பார்த்திருப்பேன்...

மனோஜ்
19-01-2007, 06:17 PM
வரலாற்று கவிதை என்று கூறலாம் எ
அறுமை மதுரகன்

மதுரகன்
20-01-2007, 04:52 PM
மனோ இங்கு வரலாற்றுக்காட்சிகள் உருக்கொணரப்பட்டாலும் இது ஒரு வரலாற்றுக்கவிதை அன்று.

இளசு
20-01-2007, 09:17 PM
ஊஹூம்..
ஆதவாவின் விமர்சனம் ( பொழிப்புரை) படித்தபின்
ஏதாவது பின்னூட்டம் இடலாம் என்ற என்
எண்ணத்தில் மண்..!

மதுரகன் மனக்குதிரைப் பாய்ச்சலில்
எத்தனைக் கற்பனைப் பெயர்கள்..
எத்தனை புதிர் நிகழ்வுகள்..

அதே அலைவரிசையில் பயணித்தாலன்றி
இதை முற்றிலும் விளங்கிக்கொள்வது இயலாதது..

ஆனாலும்..

கவிதை வாசித்தவுடன் தோன்றுபவற்றைச் சொல்லலாம்தானே..
வாசிப்பவர் மனதில் வேறு வேறாய்த் தோன்றுவதும்
நல்ல கவிதைக்கு அடையாளம்தானே..

------------------------------

இருள்...
இரவு..
புரியாதது..
பயம் தருவது....
காற்று ஊளையாகும்
கயிறும் அரவமாகும்..

இருள்
அஞ்ஞானம்..
அந்தகாரம்..
ஆழ்கடல் மடி..

இருள்..
விடியலின் காத்திருப்பு..
சிகப்பு தப்புகளின் கருப்புப் போர்வை..
வெள்ளை வெட்கங்களின் சன்னல் சீலை..

இருள்..
மலர்களின் ஒப்பனை அறை..
ரசிகர்களுக்கு கற்பனையில் மட்டுமே..

இருள்..
மொட்டு அவிழ்வதை -இமை
கொட்டாமல் விழித்து எதிர்பார்த்தாலும்
சட்டென நழுவிய கணத்தை நம்மீது
விட்டெறிய காத்திருக்கும் எதிரி...

பிச்சி
21-01-2007, 01:39 AM
அருமையா இருக்கிரது,.

ஆதவா
21-01-2007, 03:49 AM
என்ன இளசு அவர்களே!!!! கவிதை பலமாய் இருக்கிறதே!!1

மதுரகன்
21-01-2007, 04:48 PM
நன்றி நன்றி அனைவருக்கும்..
இளசுவும் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டீர்களே...

ஆதவா உங்களுக்குரிய பதில்....
பாரசீக தேவதைகள் பற்றிய பலகுறிப்புகளை படித்திருந்ததால் அந்த சாயலில் பெயர்வைத்தேன் கவதையின் பாங்குக்கு அது தேவை என்று தோன்றியது பாரசீக சாயலாயிருப்பினும் பெயர்கள் நான் இட்டவையே..

அடுத்து

இளவரசன் துணைசேரத்துடித்துத் திரிபவர்கள் யார்?
தேவதைகளைத்தான் குறிப்பிட்டேன்
கவிதை முழுவதும் அவர்கள் வருவதால் மீண்டும் மீண்டும் கூறாது விட்டுவிட்டேன்..

ஆகர்சிணி என்பது ஒருவித தேவதைகள் என கேட்ட ஞாபகம் அல்லாவிடின் அதையும் கற்பனையாக்கிவிடலாம் உங்கள் ஆசைக்கு ஒருதமிழ்ப்பெயர்..
ஆகர்ஷிணி என்பதன் பொருள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவைகளை செய்யும் சக்தி படைத்தவள்.

சரியா??

மிகவிரைவில் அடுத்த பாகம் பதிக்கப்படும் காத்திருங்கள்...

மதுரகன்
25-01-2007, 05:13 PM
கருவறை

உலகில் மிக அமைதியானதும் புனிதமானதும்
அதுதான்.அதுதான் உலகத்திலுள்ள யாவருக்கும்
உருவமளித்தது.
அதில்தான் தடையேதுமின்றிக் குழந்தை பத்துமாதம்
நிம்மதியாக உறங்கமுடிகின்றது..
நாளைய நாளின் பயம் அதனிடம் இல்லை
ஏனெனில் இன்றைய நாளே அதற்குப்புலப்படவில்லை...
அதனால்தான் நன்மையும் தீமையும் அதற்குப்
பொருட்டாயில்லை...
கல்வியின் சுமை அங்கு திணிக்கப்படுவதுமில்லை
காதலின் சுமை அங்கு ஏற்கப்படுவதுமில்லை...
பாசம், நேசம், இன்பம், பக்தி என்ற எந்த உலகியல் பிரச்சனைகளும்
அங்கு இல்லை ஏனெனில்
உலகம் என்ற ஒன்று இருப்பதே அதற்குத்தெரிய
சாத்தியமுமில்லை....
கருப்பை இருட்டு அதற்கு கலக்கமாயில்லை
ஏனெனில் ஒளி என்ற ஒன்றைப்பற்றி அங்கு
அறிந்திருக்கப்படவுமில்லை....
அதற்குத்துன்பமெதுவுமில்லை ஏனெனில் இன்பமென்ற
ஒன்றை அது உணரவுமில்லை, துன்பத்தில் திளைத்திருக்கவுமில்லை...
ஏனெனில் இரைதேடி அலையும் பழக்கம் அங்கில்லை
சூழல் இயற்கை மாற்றங்களால் துன்புறுவதுமில்லை...
அங்கு ஐயங்கள் ஏதுமில்லை அங்கு
கல்வி கற்கத்தேவையும் இல்லை.
அதுதான் கருவறைத்தனித்துவம்..
ஆயினும் பல கருவறைக்குழந்தைகள்
அரைகுறை அர்ஜுனர்களால் அபிமன்யுவாக
களபலி இடப்படுகின்றனர்.
இதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...?

ஆதவா
25-01-2007, 05:20 PM
அருமை...... இருக்கிற பிள்ளை.... நிறைய "இல்லை"

பிச்சி
26-01-2007, 02:13 AM
கர்பப்பை! ஒரு பெண்ணுக்கு அவள் பெண்மை அடையச் செய்யும் கவிதையின் உட்கரு.. அதை ஆணாகிய நீங்கள் எழுதியதற்கு பாராட்டுக்கள்,.,

தமிழ்பித்தன்
26-01-2007, 02:29 AM
தாயின் பெருமையை கூறியிருக்கிறீர்கள் நன்றி

leomohan
26-01-2007, 05:50 AM
அருமை மதுரகன்.

இந்த வரி புரியவில்லை

அரைகுறை அர்ஜுனர்களால் அபிமன்யுவாக
களபலி இடப்படுகின்றனர்.
இதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...?

ஓவியா
26-01-2007, 04:18 PM
மதுரகன்,
அம்மாவின் கருவறை ஒரு அழகிய ஆரஞ்சுக்குளம்.

கருவறைத்தனித்துவம்....
தங்களின் அழகிய சிந்தனையை பாராட்டுகிறேன்

.......................................................................................................
இந்த வரி எனக்கும் புரியவில்லை

அரைகுறை அர்ஜுனர்களால் அபிமன்யுவாக
களபலி இடப்படுகின்றனர்.
இதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...?

ஆதவா
26-01-2007, 05:08 PM

ஏதாவது கெட்டவங்களைப் பத்தித்தான்னு நினக்கிறேன் ஓவி.

ஓவியா
26-01-2007, 05:16 PM
ஏதாவது கெட்டவங்களைப் பத்தித்தான்னு நினக்கிறேன் ஓவி.

கவிராயரே, தாங்களே நினைக்கிறேன்னு சந்தேகத்தோட பதிவு போட்டா, எப்படி????????????

ஆதவா
26-01-2007, 05:21 PM
கவிராயரே, தாங்களே நினைக்கிறேன்னு சந்தேகத்தோட பதிவு போட்டா, எப்படி????????????

ஆயினும் பல கருவறைக்குழந்தைகள்
அரைகுறை அர்ஜுனர்களால் அபிமன்யுவாக
களபலி இடப்படுகின்றனர்.
இதனால் கருவறைப்புனிதம் பாழ்படுமா என்ன...?

அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்...
என்னோட யூகம்
தவறான உறவால் விதைக்கப்பட்ட சிசுவை வதை செய்வது என்று நினைக்கிறேன்.... எனக்கு அது சரியென படுகிறது...

அறிஞர்
26-01-2007, 09:06 PM
அமைதியான... புனித இடம்.. அதற்கு இணை எதுவும் இல்லை. தங்களின் வரிகள் அருமை..

தாய்மையின் முக்கியத்துவம் அறிந்தவர்கள்.... கள பலி கொடுக்கமாட்டார்கள்...

இளசு
26-01-2007, 09:21 PM
நன்று மதுரகன்.. பாராட்டுகள்..

தாயின் புரதம், கனிமம் குறைந்தாலும்
தன்னலமாய் இன்னும் உறிஞ்சும் கரு..

கொடுப்பதன் முதல் உதாரணம் கருவறை..
தனக்கு மிஞ்சியதை அல்ல..
தன்னையே உருக்கி...

நஞ்சுக்கொடி என்பார்கள் தொப்புள்கொடியை..
பிஞ்சுக்கு உணவூட்டும் அமுதக்குழல் அது..

இது நம் முதல் பட்டு மெத்தை
இதமான வெப்ப பனிநீர்க் குளியல்

சிலிர்த்தாலும் உதைத்தாலும்
சிரித்து மகிழ்பவள் தாய் என
உறங்கும் கருவுக்கு
உணர்த்தும் பள்ளியறை.

மதுரகன்
27-01-2007, 02:43 PM
முதலில் அனைவருக்கும் நன்றிகள்..
அடுத்து மோகனின் வினாவிற்குரிய விளக்கம்
கவிதையில் நான் கருவறையின் சிறப்பிற்கு காரணங்களை எடுத்துரைத்துக்கொண்டு வருகிறேன்..
அப்படி சிறப்புடைய கருவறையில் நிம்மதியாக ஒரு குழந்தை உறங்கிக்கொண்டிருந்தாலும், அர்ஜுனனால் கருவறையிலேயே கல்வி கற்பிக்கப்பட்டு(அரைகுறையாக) அபிமன்யு இறப்பிற்கு அதுவே காரணமாகின்றது...
அது போல நிறைய நிகழ்வுகள் இடம்பெற்றாலும் கருவறைப்புனிதம் மங்காது என்பது எம் கருத்து...
ஐயோ ஆதவா அதுக்கு இப்படி எல்லாம் அர்த்தாம் போடாதீர்கள்..

ஆதவா
27-01-2007, 02:46 PM

நண்பர் மது.... என்பார்வையில் அது அப்படித்தான் தெரிகிறது... அதற்காக நான் வேறு பதிலும் சொல்ல முடியாது... விளக்கத்திற்கு நன்றி...........

(அர்சுனன் அபிமன்யு விஷயம் எனக்குத் தெரியாது)

மதுரகன்
27-01-2007, 02:50 PM
அப்படியா அர்சுனன் அபிமன்யு விஷயத்தை நான் கூறமாட்டேன் உங்களுக்குதான் பழையதை கதைப்பது பிடிக்காதே...

ஆதவா
27-01-2007, 02:52 PM
அப்படியா அர்சுனன் அபிமன்யு விஷயத்தை நான் கூறமாட்டேன் உங்களுக்குதான் பழையதை கதைப்பது பிடிக்காதே...

:D :D :D :D

மதுரகன்
28-01-2007, 05:17 PM
வாசகர்களிடம் ஒரு கேள்வி...
எங்கள் பகுதி நண்பர் ஒருவர் கூறினார்...
கவிதையில்
"அபிமன்யு" என்பதற்குப்பதில் "அராவான்" என இட்டிருக்கலாம் என ..
எது பொருத்தம்
நீங்களே கூறுங்கள்...

மதுரகன்
29-01-2007, 05:21 PM
2050 களில் ஓர்நாள்

ஈழத்தின் நான்காவது தலைமுறை வீதிகளில்
நடந்துகொண்டிருக்கும் பொழுதுகளில்

நடைப்பிணமாய்
ஜீவனற்றுக்கிடக்கின்ற இந்தச்சமுதாயத்தினுள் விட்டுப்பிரிய மனமின்றி
விலகாதுகிடக்கின்ற மனிதப்பணபுகளற்ற ஒடிசல்கள்...
ஏகாதிபத்தியங்களும் எதேச்சாதிகாரங்களும் எங்களுடைய
சந்ததிகளை இன்னமும் அலைக்கழித்தபடி..

அறுபத்து ஆறைக்கடந்துவிட்ட
என்னுடைய கிழட்டு நெஞ்சம் மீண்டுமொருமுறை சிலிர்க்கின்றது..
முற்றாக மழிக்கப்பட்டிருந்த என்னுடைய மீசையும்
துடிக்கின்றது...

கடந்த சில தசாப்தங்களுக்குள் உங்களால் உடைக்கப்பட்ட
என்னுடைய பற்கள் நெருமுகின்றன..
நரையேறிவிட்டு தளர்ந்து கிடந்த மயிர்க்கால்கள்
மீண்டுமொருமுறை குத்திட்டு நிற்கின்றன...
போராட்டகாலத்தில் ஒடிக்கப்பட்டு
தகடுவைத்துப் பூட்டபட்டுள்ள
என்னுடைய கைகள் மீண்டும் துடிப்பேறுகின்றன.......

செயலிழந்துகொண்டிருக்கும் நரம்புகளெல்லாம் மெல்ல மிடுக்கேறுகின்றன..
உயிரே போனாலும் உறுதியை விட்டுக்கொடோம்
என முழங்கி உடல்மீது சித்ரவதைகளின்
ரணங்களை ஆறாமல் இன்னமும் தாங்கி இதுவரை தளராத மனம்
மீண்டும் ஒருமுறை நடுங்குகின்றது..

ஒருகணம் நான் மீண்டும் பிறப்பெடுக்கிறேனோ
அந்த 2016களில் சிதைக்கப்பட்ட எமத இலட்சியங்களெல்லாம்
மீண்டும் கருக்கொள்கின்றனவோ...

மீண்டும் இழக்கப்பட என்னிடம் தோழர்களில்லை..
மீண்டும் ஒடிக்கப்பட என்கையில் திறன் இல்லை
மீண்டும் அறுக்கப்பட என் நரம்புகளில் பல இன்று உயிர்ப்புடன் இல்லை..
நான்கு தசாப்தங்களுக்கு முன் நான் தொலைத்துவிட்ட
இளமையின் சக்திகளெல்லாம் ஒருங்கு சேர்ந்து
மீண்டும் என் சுவாசப்பாதையில் குடியேறுகின்றது..

நரம்புகளில் கணத்தாக்கங்கள் திசைமாறுகின்றன
நாடிகளில் குருதியின் தகைப்பு கட்டைக் கடக்கின்றது..
இருதயத்துடிப்பு எல்லை மீறுகின்றது..
முளை தடம்மாறுகின்றது...
சிந்தை நினைக்கமறுக்கின்றது.

மனம் இச்சையை விட்டுவிலக மெல்ல உணர்விழக்கிறேன்
மெல்ல மீண்டும் உணர்வு பெறும்போது..
நான் கனவிலும் எண்ணியிருக்கவில்லை
இந்த 19 வயதில் நான் எப்படி
எதற்காக..? அனுபவிக்க மறுத்த போகங்களை
அடைய மறந்த கனவுகளை
மீண்டும் தொடரவா.?

தீர்ந்து போகாத என்னுடைய
சமுதாயப்பிறழ்வுகளை இம்முறையாவது சரியாக நிமிர்த்தி நிறுத்தவா..?
நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..

leomohan
29-01-2007, 05:40 PM
நெஞ்சை தொட்ட கவிதை.

மதுரகன்
30-01-2007, 02:58 PM
நன்றி மோகன் அண்ணா..

ஆதவா
30-01-2007, 03:19 PM
2050 களில் ஓர்நாள்

இந்த தலைப்பு போதுமே இது புதுமையானதென்று.....

ஈழத்தின் நான்காவது தலைமுறை வீதிகளில்
நடந்துகொண்டிருக்கும் பொழுதுகளில்

நண்பரே! ஒவ்வொரு ஈழத்தமிழனுக்கும் உண்டான கற்பனை...... ஆனால் நான்காவது தலைமுறை என்பது அதிகம்...... சீக்கிரமே உண்டாக வேண்டுவோம்.

நடைப்பிணமாய்
ஜீவனற்றுக்கிடக்கின்ற இந்தச்சமுதாயத்தினுள் விட்டுப்பிரிய மனமின்றி
விலகாதுகிடக்கின்ற மனிதப்பணபுகளற்ற ஒடிசல்கள்...
ஏகாதிபத்தியங்களும் எதேச்சாதிகாரங்களும் எங்களுடைய
சந்ததிகளை இன்னமும் அலைக்கழித்தபடி..

அந்தவரிகளில் நெஞ்சுப் பிளக்கிறது மது. வார்த்தை தேடத்தான் வேண்டும்.... ஆனால் இன்னமும் ஏகாதிபத்தியம் ஆர்பரிக்குமானால் அது தவறே... நான் வேண்டுவோமே! இம்மாதிரியான வார்த்தைகளுக்கு பஞ்சமுண்டாகவேண்டுமென்று...........

அறுபத்து ஆறைக்கடந்துவிட்ட
என்னுடைய கிழட்டு நெஞ்சம் மீண்டுமொருமுறை சிலிர்க்கின்றது..
முற்றாக மழிக்கப்பட்டிருந்த என்னுடைய மீசையும்
துடிக்கின்றது...

2050ல் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதைச் சுட்டும் வரிகள்

கடந்த சில தசாப்தங்களுக்குள் உங்களால் உடைக்கப்பட்ட
என்னுடைய பற்கள் நெருமுகின்றன..
நரையேறிவிட்டு தளர்ந்து கிடந்த மயிர்க்கால்கள்
மீண்டுமொருமுறை குத்திட்டு நிற்கின்றன...
போராட்டகாலத்தில் ஒடிக்கப்பட்டு
தகடுவைத்துப் பூட்டபட்டுள்ள
என்னுடைய கைகள் மீண்டும் துடிப்பேறுகின்றன.......

சில வார்த்தைக் கையாடல் மிக அருமை தோழரே!!! மன்றத்திலே என்னுடைய வார்த்தைகள் அதீதம் என்று சொன்னவர்கள் இனி உங்களையும் சொல்வார்கள்........ என்னுடையது வெறும் பழைய சரக்கு.... உங்களுடையது முற்றீலும் புதுமையானது. எழுத்துக்களில் தெரிகிறதே கற்பனை உருவம். அதுதானே கவிதை!! கண்களால் கொண்டு சென்று அந்த கிழவனின் பரிதாப நிலையைக் கவனிக்குதே மெல்ல..............

செயலிழந்துகொண்டிருக்கும் நரம்புகளெல்லாம் மெல்ல மிடுக்கேறுகின்றன..
உயிரே போனாலும் உறுதியை விட்டுக்கொடோம்
என முழங்கி உடல்மீது சித்ரவதைகளின்
ரணங்களை ஆறாமல் இன்னமும் தாங்கி இதுவரை தளராத மனம்
மீண்டும் ஒருமுறை நடுங்குகின்றது..

நண்பரே!! முன்னம் நீங்கள் சொன்னது கை கால்கள் துடிப்பாகின்றன என்று... இங்கோ மனம் தளர்ந்து போகிறதே!!!! மனம் உறுதியாய் இருந்தால்தானே உடலில் துடிப்பு மிஞ்சும்???? இங்கே உங்கள் விளக்கம் தேவை........

ஒருகணம் நான் மீண்டும் பிறப்பெடுக்கிறேனோ
அந்த 2016களில் சிதைக்கப்பட்ட எமத இலட்சியங்களெல்லாம்
மீண்டும் கருக்கொள்கின்றனவோ...

தளர்ந்துபோய் மீண்டும் பிறப்பு என்பது எனக்கு ஒட்டவில்லை. வார்த்தைகள் மட்டும் அழகாய் பட்டாலும் முந்திய வரிகளுக்கு விளக்கமிட்டீர்களேயானால் நான் புரிந்துகொள்வேன்.

மீண்டும் இழக்கப்பட என்னிடம் தோழர்களில்லை..
மீண்டும் ஒடிக்கப்பட என்கையில் திறன் இல்லை
மீண்டும் அறுக்கப்பட என் நரம்புகளில் பல இன்று உயிர்ப்புடன் இல்லை..
நான்கு தசாப்தங்களுக்கு முன் நான் தொலைத்துவிட்ட
இளமையின் சக்திகளெல்லாம் ஒருங்கு சேர்ந்து
மீண்டும் என் சுவாசப்பாதையில் குடியேறுகின்றது..
நரம்புகளில் கணத்தாக்கங்கள் திசைமாறுகின்றன
நாடிகளில் குருதியின் தகைப்பு கட்டைக் கடக்கின்றது..
இருதயத்துடிப்பு எல்லை மீறுகின்றது..
மூளை தடம்மாறுகின்றது...
சிந்தை நினைக்க மறுக்கின்றது.

வார்த்தைகள் இடியாக விழுகிறது......... கிழவன் என்ன நினைப்பான்? இதைத்தானே??

மனம் இச்சையை விட்டுவிலக மெல்ல உணர்விழக்கிறேன்
மெல்ல மீண்டும் உணர்வு பெறும்போது..
நான் கனவிலும் எண்ணியிருக்கவில்லை
இந்த 19 வயதில் நான் எப்படி
எதற்காக..? அனுபவிக்க மறுத்த போகங்களை
அடைய மறந்த கனவுகளை
மீண்டும் தொடரவா.?

தொடராதீர்கள் நண்பரே!!! அந்த வீதிகளில் உங்கள் பேரப்பிள்ளைகளோடு கிரிக்கெட் விளையாடும் ஒரு கனவு அட வேண்டாமப்பா நனவு ஏற்படும்..... என் விருப்பமும் அதுவே....

தீர்ந்து போகாத என்னுடைய
சமுதாயப்பிறழ்வுகளை இம்முறையாவது சரியாக நிமிர்த்தி நிறுத்தவா..?
நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..

கவிதையில் உங்கள் தெளிவு கொஞ்சம் எனக்குமட்டும் கட்டிப் போடுகிறது. காதலைத் தாண்டி எவ்வளவு உண்டு என்பதைக் காட்டும் வார்த்தைகள் நெஞ்சில் அலையாடுகிறது.. நான் கேட்ட விளக்கம் மட்டும் அளியுங்கள்.....................

தினவெடுத்து பாயநினைக்கும் உடல் அங்கங்கள் எப்படி மன ஒன்றிமை இன்றி எழும்? மீண்டும் வீழ நினைக்கும்போது ஏன் அங்கத்துத் துடிப்புகள் மிகவேண்டும்? யோசிக்கிறேன்... பதிலை யாசிக்கிறேன்...........

அறிஞர்
30-01-2007, 03:38 PM
2050 களில் ஓர்நாள்

நெஞ்சத்தை நெகிழ வைத்த வரிகள்....

எதிர்கால ஈழத்தை படம் பிடிக்கும் வரிகள்...

தங்களின் வயதான காலத்தின் ஏற்படும் உணர்வுகளை அழகாக விவரித்துள்ளீர்

ஈழத்தின் நிலை மாறவேண்டும்.. இந்த நிலை தங்களுக்கு வரக்கூடாது... என்ற பிராத்தனை எங்கள் உள்ளங்களில் இருந்து உங்களுக்காக எழுகிறது...

ஷீ-நிசி
30-01-2007, 05:21 PM
உண்மையிலேயே அழகான கவிதை தான் மதுரகன்.. ஏன் நான்காம் தலைமுறை வரை நினைக்கிறீர்கள்.. இன்னும் இருபது ஆண்டுகளில் இலங்கை சீர்படும் என்று என் உள்மனம் சொல்கிறது.. சில இடங்களில் வார்த்தைகள் எல்லாம் பிரமிக்க வைக்கிறது..
நான்கு தசாப்தங்களுக்கு முன் நான் தொலைத்துவிட்ட

ஆதவானின் கேள்வியை வழிமொழிகிறேன்...

மற்றபடி கவிதையின் மற்ற எல்லா பகுதிகளும் அசாதரண வார்த்தைகளால் நிரம்பி நிஜமாகவே அசரவைத்தன.. வாழ்த்துக்கள் மதுரகன்.

மனோஜ்
30-01-2007, 06:00 PM
2050 களில் ஓர்நாள்

அறுபத்து ஆறைக்கடந்துவிட்ட
என்னுடைய கிழட்டு நெஞ்சம் மீண்டுமொருமுறை சிலிர்க்கின்றது..
முற்றாக மழிக்கப்பட்டிருந்த என்னுடைய மீசையும்
துடிக்கின்றது...

உயிரே போனாலும் உறுதியை விட்டுக்கொடோம்
என முழங்கி உடல்மீது சித்ரவதைகளின்
ரணங்களை ஆறாமல் இன்னமும் தாங்கி இதுவரை தளராத மனம்
மீண்டும் ஒருமுறை நடுங்குகின்றது..

நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..

இந்த வரிகள் எனக்கு எத்தனை வயது அனாலும் என்னை யாரும் மாற்றமுடியாது என்று மாறுதட்டி கூறுகிறது
உனர்வை துர்ன்டும் கவிதை மதுரகன்..

மதுரகன்
31-01-2007, 04:10 PM
நன்றி ஆதவா , அறிஞரே , ஷீ , மனோ...
உங்கள் கருத்துப்பதிதல்களுக்கு..

உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுடையவனாகிறேன்..

முதலில் கவிதைநடக்கும் களம்..

நீங்கள் கூறுவது போல் சிங்கள் ஏகாதிபத்தியம் நடப்பதாக எண்ணி எழுதவில்லை..
எப்பாடுபட்டோ எமதுபோராட்டங்களில் எத்தனையோ உயிர்களை பறிகொடுத்தபின் உரிமை வென்றெடுத்தும் அதை சரியாக பயன்படுத்தாது
தமிழரே தமிழரை வதைக்கும் அடக்குமுறையொன்று புதியதாய் முளைத்து நடைபெறுவதாய் கற்பனைசெய்து எழுதினேன்.
(இதற்கு காரணம் யாராவது கேட்பின் பின் கூறுகிறேன் னல்லது தனிமடலில் தொடர்புகொள்ளலாம்)

இதுவரை தளராத மனம்மீண்டும் ஒருமுறை நடுங்குகின்றது..
மனம் தளரவில்லை நடுங்குகின்றது அதற்கு எம்மீதே ஏற்பட்ட கோபமோ எதிர்பார்ப்புகளுடன் வந்தபோது கிடைத்த ஏமாற்றமோ காரணமாக இருக்கலாம்...அதற்காக மனம் தளர்ந்ததாக அர்த்தமில்லை

அடுத்து பிறப்பெடுப்பதாக கூற காரணம் எங்த உரிமைகளை வென்றெடுக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதிட்டோமோ அதே உரிமைகளை பெற இன்று எம் தமிழரிடமே போரிடவேண்டிய நிலை...
எனவே பழைய எண்ணங்கள் வெறி மீண்டும் டீதான்றவே மீண்டும் பிறப்பெடுப்பதாக உணர்கிறேன்...

அடுத்தது எந்த உணர்வுமே மிகுதியாகும்போது நாடித்துடிப்பும் கூடும் அதிலும் மிகுதியானால் நினைவு தப்பும் இது இயற்கைதான்....

இது என்கருத்து உங்கள் கருத்து தேவை..?

மேலும் சந்தேகங்கள் இருப்பின் கூறவும்...
உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்
அனைவருக்கும் நன்றி...

மனோஜ்
31-01-2007, 04:34 PM
மதுரகன் ஒரு மனிதன் தனக்கு நேர்ந்த அவனால் சகித்து கொள்ள முடியாத சில நிகழ்ச்சிகளில் அவனது மனநிலை இந்த நிலைஅடைவது ஊறுதிதான் அந்த நிலையில் அவன் எதை செய்கிறோம் என்று கூட நினைப்பதில்லை நோடி பொழுதில் செய்து விடுவான் அந்த நிலையில் நடைபெற்ற தவறான நிகழ்வுகள் தினம் செய்திதாளில் வாசிக்க செய்கிறோம் அந்த நிலையை தான் நீங்கள் அடைந்ததாக கூறுகிறிர்கள்
சரியா

மனோஜ்
31-01-2007, 04:40 PM

31-01-2007, 05:06 PM
நன்றி ஆதவா , அறிஞரே , ஷீ , மனோ...
உங்கள் கருத்துப்பதிதல்களுக்கு..

உங்கள் கேள்விகளுக்கு பதில் கூறவேண்டிய கடப்பாடுடையவனாகிறேன்..

முதலில் கவிதைநடக்கும் களம்..

நீங்கள் கூறுவது போல் சிங்கள் ஏகாதிபத்தியம் நடப்பதாக எண்ணி எழுதவில்லை..
எப்பாடுபட்டோ எமதுபோராட்டங்களில் எத்தனையோ உயிர்களை பறிகொடுத்தபின் உரிமை வென்றெடுத்தும் அதை சரியாக பயன்படுத்தாது
தமிழரே தமிழரை வதைக்கும் அடக்குமுறையொன்று புதியதாய் முளைத்து நடைபெறுவதாய் கற்பனைசெய்து எழுதினேன்.
(இதற்கு காரணம் யாராவது கேட்பின் பின் கூறுகிறேன் னல்லது தனிமடலில் தொடர்புகொள்ளலாம்)

மனம் தளரவில்லை நடுங்குகின்றது அதற்கு எம்மீதே ஏற்பட்ட கோபமோ எதிர்பார்ப்புகளுடன் வந்தபோது கிடைத்த ஏமாற்றமோ காரணமாக இருக்கலாம்...அதற்காக மனம் தளர்ந்ததாக அர்த்தமில்லை

அடுத்து பிறப்பெடுப்பதாக கூற காரணம் எங்த உரிமைகளை வென்றெடுக்க சிங்கள அரசியல்வாதிகளுடன் வாதிட்டோமோ அதே உரிமைகளை பெற இன்று எம் தமிழரிடமே போரிடவேண்டிய நிலை...
எனவே பழைய எண்ணங்கள் வெறி மீண்டும் டீதான்றவே மீண்டும் பிறப்பெடுப்பதாக உணர்கிறேன்...

அடுத்தது எந்த உணர்வுமே மிகுதியாகும்போது நாடித்துடிப்பும் கூடும் அதிலும் மிகுதியானால் நினைவு தப்பும் இது இயற்கைதான்....

இது என்கருத்து உங்கள் கருத்து தேவை..?

மேலும் சந்தேகங்கள் இருப்பின் கூறவும்...
உங்கள் கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தும்
அனைவருக்கும் நன்றி...

எங்களுடைய
சந்ததிகளை இன்னமும் அலைக்கழித்தபடி..

இது உங்களுடைய வரிகள் மது........

உங்கள் பார்வையில் சிங்கள அரசு வீழ்ந்து தமிழ் அரசு நடைபெறும் காலமாக சொல்கிறீர்கள்......... அதை தலைப்பிலோ அல்லது பொருள் கொள்ளும்படியான ஒரு வார்த்தையோ வரியோ நீங்கள் வைத்திருக்கலாம்...
மேலே குறிப்பிட்ட வரியின்படி, இன்னமும் அலைக்கழிக்கிறது என்றால், இன்றிலிருந்து அன்றுவரை அலைகழிக்கப்படுகிறது என்று மட்டுமே பொருள் எடுத்துக் கொள்ளப்படும் மது...
மனம் தளர்வதற்கும் நடுங்குவதற்கும் மிகச்சிறிய இடைவெளி உண்டு..... எப்படியென்றால்.......... மனம் நடுங்கினால் இறுதியில் தளர்ந்துபோகும்...:) (மன்றத்தில் உள்ளவர்களிடம் கேளுங்கள்)
பிறப்பெடுத்த காரணம் நீங்கள் விளக்கியபின் தெரிந்ததே... ஆனால் அதில் தமிழ் அரசால் ஏற்பட்டவை என்பது முன்னமே குறிப்பிட்டிருந்தீர்களேயானால் பிழை தவிர்த்திருக்கலாம்.:)
தினவெடுத்து பாயநினைக்கும் உடல் அங்கங்கள் எப்படி மன ஒன்றிமை இன்றி எழும்? மீண்டும் வீழ நினைக்கும்போது ஏன் அங்கத்துத் துடிப்புகள் மிகவேண்டும்? இக்கேள்விக்கு உங்கள் பின்னூட்டமே விளக்கம் அன்றி கவிதை விளக்கவில்லை...
நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..... என்ற வரிகளை மீண்டும் படிக்கையில் உங்கள் விளக்கங்களும் அதன் அர்த்தங்களும் விளங்கிற்று..........இது என் கருத்து மட்டுமே.............

மதுரகன்
31-01-2007, 05:42 PM
சரிதான் மனோ..
ஆதவா...
கவிதயில் எல்லாவிடயங்களையும் கூறிவிட்டால் கவிதையை ரசிக்கமாட்டீர்கள் பொருளைத்தான் ரசிக்க முயல்வீர்கள்..
எனவேதாம் சந்தேகங்களை பின்னூட்டலில் விளக்க எண்ணினேன்...

மற்றையது..
எதேச்சாதிகாரங்களும் ஏகாதிபத்தியங்களும்தான் இன்னமும் லைக்களிப்பதாக கூறினேன்..
அது எங்கிருந்து வந்ததென கூறவில்லையே..?

மனம் நடுங்கினால் தளரவேண்டிய அவசியம் எப்பொழுதும் இல்லை...
சிலவேளை கோபத்தில் வெறியிலும் நடுங்கும் அப்போது வீறுகொண்டெழுமே அன்றி தளராது என்பது எனது கருத்து...

ஆதவா
31-01-2007, 06:00 PM
சரிதான்
ஆதவா...
கவிதயில் எல்லாவிடயங்களையும் கூறிவிட்டால் கவிதையை ரசிக்கமாட்டீர்கள் பொருளைத்தான் ரசிக்க முயல்வீர்கள்..
எனவேதாம் சந்தேகங்களை பின்னூட்டலில் விளக்க எண்ணினேன்...

நண்பரே!! ஒரு கவிதையில் எல்லா விடயங்களும் கொடுக்கவேண்டிய அவசியமில்லை........... ஆனால் அதையே சிந்திக்கும் அளவிற்கு செய்திருக்கலாமே!! உதாரணத்திற்கு உங்களுக்கு பின்னூட்டமிட்ட அறிஞர், ஷீ! ஆகியோர் நீங்கள் நினைத்த தமிழ் அரசைப் பற்றி நினைக்கவில்லை............... காரனம் அப்போதும் சிங்கள அரசு நடைபெற்றுக்கொண்டிருக்கும் என்ற எண்ணத்திலிருப்பார்கள்.. நானும் அவ்வாறே
அதேசமயம் நீங்கள் குறிப்பிட்ட சில வார்த்தைகள் கருவுக்கு வெளியே தான் அமர்ந்திருக்கிறது .... உதாரணம்: நான் மீண்டும் ஒரு யுகப்போரில்..

கவிதை குறையல்ல மது... எங்கள் பார்வையில் அது ஒரு கருத்தாகத் தெரிகிறது.. அது எங்கள் குறையல்ல.......... உங்கள் கருத்தை இன்னும் தெளிவாக சொல்லியிருந்தீர்களேயானால் உங்கள் கருத்தையே நாங்கள் பின்பற்றியிருக்க வாய்ப்புள்ளது....

எதேச்சாதிகாரங்களும் ஏகாதிபத்தியங்களும்தான் இன்னமும் லைக்களிப்பதாக கூறினேன்..
அது எங்கிருந்து வந்ததென கூறவில்லையே..?

நான் சொன்ன கருத்து இந்த ஊடகத்தின் வழியே புரியவாய்ப்பில்லாது போனது மது... எப்படி உங்களுக்குச் சொல்ல்வது என்று புரியவில்லை........

நான் எங்கிருந்து வந்தது என்று கேட்கவும் இல்லை........ சிங்கள ஏகாதிபத்தியம் நடைபெறவில்லை என்று கூறும் நீங்கள் இன்னமும் ஏகாதிபத்தியம் குறையவில்லை என்றும் சொல்லியிருக்கிறீர்கள்..... இதில் தமிழ் அரசு நுழையாதிருப்பதால்தான் குழப்பமே!
தமிழ் அரசு வந்தும் கூட ஏகாதிபத்தியம் குறையவில்லை என்று பொரூள்வரும்படி எழுதியிருக்கலாம்...... நீங்கள் நினைத்ததுவும் இதுவே!!

மதுரகன்
01-02-2007, 04:00 PM

__________________

நன்றி ஆதவா உங்கள் கருத்துக்களுக்கு...

அறிஞர்
01-02-2007, 07:10 PM
மதுரகனின் பின்னூட்டமும், ஆதவனின் விளக்கமும் கவிதையை தெளிவாக விளங்க வைத்தது... இருவருக்கு நன்றி..

மதுரகன்
03-02-2007, 05:10 PM
எனது சமுதாயமே

எனது சமுதாயமே
நடையை சற்றே தளர்த்தி பின்னோக்கித் திரும்பிப்பாருங்கள்
உங்கள் நிழல்கள் காணாமல் போயிருக்கும்...
முதுகுப்புறமாக கையால் தடவிப்பாருங்கள்
உங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...
காலிற்று கீழே உற்றுப்பாருங்கள்
உங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...

உங்களுழடய நிழல்கள் நிஜமானவையா..?
உங்களுடைய முள்ளந்தண்டுகள் உயிர்ப்புள்ளவையா..?
உங்களுடைய கால்தடங்கள் உறுதியானவையா..?

சமுதாய நீதியை சார்பு உடைமையாக்கிய புண்ணியவான்களே..
சரித்திரங்களை சாக்கடையாக்கிய சத்தியவான்களே..

வெட்கம் என்ற பண்பு எப்போது உங்களிடம் வரும்..
மற்றவர்களுடைய ஆடைகளின் தலைப்புகளுக்குள் ஒழிந்துகொண்டு
உங்கள் உடலை மறைக்கின்றதை உணர்கிறீர்களா..?

உங்கள் உடல் கோபத்தில் சிலிர்க்கவில்லையா..?
உங்கள் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கவில்லையா..
நடுத்தெருவில் நிர்வாணமாக நிறுத்தி
சவுக்கால் அடிக்கும் உணர்வு ஏற்படவில்லையா....?
உங்கள் கண்கள் துடிக்கவில்லையா..?

உங்கள் ஏழாவது தலைமுறையும் உங்களை
எட்டி உதைப்பதாக இதுவரை கனவுகள் வெளிப்படவில்லையா..?
தனிமையான பொழுதுகளில் மரணத்தின் வாயில்களாய் உலகம் மாறவில்லையா..
ஐந்து அறிவு உயிர்கள் கூட
உங்களை கேவலமாக பார்ப்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லையா..
நாம் மனிதர் என்ற எண்ணம் சிறிதேனும் மீதமிருக்கின்றதா..

உங்கள் கையால் ஒருபிடி உணவையேனும் திருப்தியாக உண்ணமுடிகின்றதா...
ஆயுளின் ஒருநிமிடத்தையாவது அனுபவித்து கழிக்க முடிகின்றதா

எங்களால் முடிகின்றது..
ஏனெனில்
எங்கள் நிழல்கள் நிஜமானவை...

ஆதவா
03-02-2007, 05:14 PM
நீங்கள் யார்?

மதுரகன்
03-02-2007, 05:23 PM
நீங்கள் யார்?

கேற்வி புரியவில்லை கவிதை அடிப்படையில் கேட்டால்..
எங்கள் நிழல்களையாவது நிஜமாக கொண்டுள்ள மனிதர்...

ஆதவா
03-02-2007, 05:28 PM
கேற்வி புரியவில்லை கவிதை அடிப்படையில் கேட்டால்..
எங்கள் நிழல்களையாவது நிஜமாக கொண்டுள்ள மனிதர்...

நினைத்தேன்...........

மதுரகன்
04-02-2007, 04:30 PM
நினைத்தேன்...........
சரி வழக்கம் போல உங்கள் விமர்சனம் எங்கே காணோம் ஆதவா..?

ஆதவா
04-02-2007, 05:01 PM
எனது சமுதாயமே!

உங்களிடமிருந்து ஒரு சமுதாயக்கவிதை வெளியே வந்திருக்கிறது. சற்று வித்தியாசமாய்/. கொஞ்சம் நேரமின்மை காரணமாகத்தான் நான் முன்பே கருத்து எழுதவில்லை. இனி----

எனது சமுதாயமே
நடையை சற்றே தளர்த்தி பின்னோக்கித் திரும்பிப்பாருங்கள்
உங்கள் நிழல்கள் காணாமல் போயிருக்கும்...
முதுகுப்புறமாக கையால் தடவிப்பாருங்கள்
உங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...
காலிற்று கீழே உற்றுப்பாருங்கள்
உங்கள் முள்ளந்தண்டுகள் காணாமல் போயிருக்கும்...

சமுதாயத் திற்கு ஒரு உருவம். (நம்ம அ ஆ படத்தில் வரும் பாத்திரம் நினைவுக்கு வருகிறது) அதற்கு ஒரு நிழலையும் கொடுத்து முள்ளந்தண்டுகளையும் (எலும்புகளையா சொல்கிறீர்கள் மது? ) தடவி, பார்க்கச் சொல்வது அருமைதான் மது./ உண்மையிலேயே சமுதாயம் என்ற உருவங்கள் நிறைந்த உலகத்திற்கு (நன்றாக கவனிக்க )உருவம் இருப்பதாக நினைப்பதும் அருமை.// சில கவிதைகளில் இம்மாதிரி நான் பார்த்திருக்கிறேன்.

உங்களுழடய நிழல்கள் நிஜமானவையா..?
உங்களுடைய முள்ளந்தண்டுகள் உயிர்ப்புள்ளவையா..?
உங்களுடைய கால்தடங்கள் உறுதியானவையா..?

தடவிப்பார் ! அது உண்மையா? அல்லது பொய்மையா ? அதுசரி முள்ளந்தண்டுகள் என்பது முதுகெலும்பு அல்லது உறுதியான எலும்பு என்று கொண்டால் சமுதாயத்திற்கு அவ்வகை எலும்புகள் ஏராளம்... மது,. கொழுப்புகளை விட்டு விட்டீர்களே!!! சமுதாயத்தில் பல அசிங்கக் கொழுப்புகள் இரத்தக்குழாயை அடைத்துக்கொண்டு நிற்கின்றன....

சமுதாய நீதியை சார்பு உடைமையாக்கிய புண்ணியவான்களே..
சரித்திரங்களை சாக்கடையாக்கிய சத்தியவான்களே..

ஏது அரசியல்வாதிங்களா? :D சமுதாயத்தை சீர்குலைக்கும் கனவான்களே என்று சொல்கிறீர்கள்...

வெட்கம் என்ற பண்பு எப்போது உங்களிடம் வரும்..?
மற்றவர்களுடைய ஆடைகளின் தலைப்புகளுக்குள் ஒழிந்துகொண்டு
உங்கள் உடலை மறைக்கின்றதை உணர்கிறீர்களா..?

மது முழுவதுமாய் கவிதை உருவகப் படுத்திக்கொண்டீர். இதில் வெட்கம் அடக்கம்.. எனக்கு புரிகிறது ஆனால் எழுதமுடியவில்லை. ஆடை சரிதான்./.. அதென்ன தலைப்பு??? எனக்கு விளங்கவில்லை.. பொதுவாக பெண்களுக்குத்தான் தலைப்பு என்று வரும். ஆண்களுக்கல்லவே!!!

உங்கள் உடல் கோபத்தில் சிலிர்க்கவில்லையா..?
உங்கள் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்கவில்லையா..
நடுத்தெருவில் நிர்வாணமாக நிறுத்தி
சவுக்கால் அடிக்கும் உணர்வு ஏற்படவில்லையா....?
உங்கள் கண்கள் துடிக்கவில்லையா..?

அட போங்க மது! இவர்களுக்கு வெட்கமிருந்திருந்தால் என்ன ஆவது?? கோபம் அதுக்கெல்லாம் இல்லை. ரோஷமில்லை... ரோஷமிருந்தால்தானே மயிரெழுந்து நிற்கும்.. வேறெதுவுமேயில்லல..

உங்கள் ஏழாவது தலைமுறையும் உங்களை
எட்டி உதைப்பதாக இதுவரை கனவுகள் வெளிப்படவில்லையா..?
தனிமையான பொழுதுகளில் மரணத்தின் வாயில்களாய் உலகம் மாறவில்லையா..
ஐந்து அறிவு உயிர்கள் கூட
உங்களை கேவலமாக பார்ப்பதாக ஒருபோதும் உணர்ந்ததில்லையா..
நாம் மனிதர் என்ற எண்ணம் சிறிதேனும் மீதமிருக்கின்றதா..

இன்னுமின்னும் கேள்விகள் அடிக்கிக்கொண்டு போனாலும் சமுதாயம் அல்லது இந்த கனவான்கள் தனிமனிதம் அல்லவே! கேள்விகளின் சாரங்கள் அருமையாகப் படுகிறது. ஈழத்திலிர்ந்துகொண்டு கேள்விகள் இல்லை என்றால் என்னாவது?

உங்கள் கையால் ஒருபிடி உணவையேனும் திருப்தியாக உண்ணமுடிகின்றதா...
ஆயுளின் ஒருநிமிடத்தையாவது அனுபவித்து கழிக்க முடிகின்றதா

நண்பரே நீங்கள் ரெம்பவும் மனிதனாக்கி விட்டீர்கள். இவர்களை. நன்றாக பொழுது போக்குகிறார்கள் அவர்கள். நாம்தான் இங்கே வீணாக கழிக்கிறோம்

எங்களால் முடிகின்றது..
ஏனெனில்

எங்கள் நிழல்கள் நிஜமானவை...

கடைசி மூன்று வரிகள் அழகானவை./ கொஞ்சம் யோசிப்பும் அவசியம்.....

மொத்ததில்---

சமுதாயம் என்பது ஒரு கூட்டுக் குடும்பம்.. எல்லாவகை உணவும் கலந்து இருக்கும் பதார்த்தம். அங்கே நிறைகளும் குறைகளும் ஏராளம். அது சமுதாயத்தின் குற்றமல்ல மது//////// நீங்கள் சொன்னீர்களே கடைசி வரிகள். நிஜமான நிழல்கள் உடைய மனிதர்கள், அவர்களின்றியும் சமுதாயமேது? நீங்கள் கேட்கவேண்டியவை சமுதாயத்தைப் பார்த்தல்ல.. ஏனெனில் முன்பே சொன்னதுமாதிரி சமுதாயம் ஒரு தனிமனிதம் அல்ல....
கனவான்களை (நீங்கள் சொன்ன) கேட்கவேண்டிய கேள்விகளும் சமுதாயத்தையே சாரும்..

கவிதையைப் பொருத்தவரை நேர்த்தியைக் கொடுக்கும் பாங்கு உங்களிடம் நிறையவே இருக்கீறது. உள்ளத்தின் வெளிப்பாடு கவிதை......... உங்கள் உள்ளத்தில் சமுதாயத்தைப் பற்றிய எண்ணம் நாங்கள் கண்டு கொண்டாலும் சற்று பரிசீலனை செய்யுங்கள். நீங்களும் அதே வெட்கமில்லாத கோபமில்லாத சமுதாயத்தில்தான் இருக்கிறீர்கள் என்று////////// உங்கள் கோபம், வெட்கம் ரோஷம் ஆகியவை நிஜமான நிழலாய் இருக்கும் பஷத்தில் சமுதாயத்தின் நிழலை நீங்கள் குறை சொல்ல அவசியமென்ன? அல்லது ஏழு தலைமுறைக்கு முன் இளித்த மனிதர்களைக் குறைசொல்வதில்தான் அர்த்தமென்ன?

இதை உருவகம் என்றே சொல்வார்கள் (இலக்கணப் புலிகள் உதவிக்கு,....) ஒரு அரூபத்தை சொரூபமாக மாற்றி கேள்விக் கணைகள் தொடுப்பது.//// ( இல்பொருள் உவமையா? ) அடுத்தடுத்து கவிதைகள் படைத்து கண்களைக் கட்டிப் போடுங்கள்...

வாழ்த்துக்கள்..

மதுரகன்
08-02-2007, 04:51 PM
முதலில் நன்றி ஆதவா..?
அடுத்து

ஆடை சரிதான்./.. அதென்ன தலைப்பு??? எனக்கு விளங்கவில்லை..
தலைப்பு என்பது முனை/கரை எனப்பொருள்படும்..
ஆண்களுக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படலாம்..உ+ம்:வேட்டித்தலைப்பு

சமுதாயம் என்பது ஒரு கூட்டுக் குடும்பம்.. எல்லாவகை உணவும் கலந்து இருக்கும் பதார்த்தம். அங்கே நிறைகளும் குறைகளும் ஏராளம். அது சமுதாயத்தின் குற்றமல்ல மது//////// நீங்கள் சொன்னீர்களே கடைசி வரிகள். நிஜமான நிழல்கள் உடைய மனிதர்கள், அவர்களின்றியும் சமுதாயமேது? நீங்கள் கேட்கவேண்டியவை சமுதாயத்தைப் பார்த்தல்ல.. ஏனெனில் முன்பே சொன்னதுமாதிரி சமுதாயம் ஒரு தனிமனிதம் அல்ல....
கனவான்களை (நீங்கள் சொன்ன) கேட்கவேண்டிய கேள்விகளும் சமுதாயத்தையே சாரும்..

சமுதாயத்தை திரும்பிபார்க்கிறார்கள் என்றால் அவர்கள் சமுதாயத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்பது பொருள்..
அது கொள்கை அளவினதாயும் இருக்கலாம்...
எனவே சமுதாயத்திலிருந்து விலகியுள்ள நிழல்களையாவது நிஜமாகக்கொண்ட மனிதகூட்டத்தில் ஒருவனின் அறைகூவலாகவே இக்கவிதை வெளிப்படுகின்றது...

ஷீ-நிசி
08-02-2007, 04:58 PM
மது, உங்கள் கவிதைகளில் நீங்கள் உபயோகப்டுத்தும் வார்த்தைகள் நல்ல வித்தியாசமானதாய் இருக்கிறது... வாழ்த்துக்கள்..

ஆதவா
08-02-2007, 05:03 PM
முதலில் நன்றி ஆதவா..?
அடுத்து

தலைப்பு என்பது முனை/கரை எனப்பொருள்படும்..
ஆண்களுக்கும் இந்த சொல் பயன்படுத்தப்படலாம்..உ+ம்:வேட்டித்தலைப்பு

...

உங்கள் வார்த்தை விளக்கங்களுக்கு நன்றி.....

மதுரகன்
08-02-2007, 05:13 PM
இதை உருவகம் என்றே சொல்வார்கள் (இலக்கணப் புலிகள் உதவிக்கு,....) ஒரு அரூபத்தை சொரூபமாக மாற்றி கேள்விக் கணைகள் தொடுப்பது.//// ( இல்பொருள் உவமையா? ) அடுத்தடுத்து கவிதைகள் படைத்து கண்களைக் கட்டிப் போடுங்கள்...

உங்களுக்காக உவமை மற்றும் உருவகம் பற்றி எனக்கு தெரிந்த அளவில்
விளக்கம்...
உவமை என்பது ஒரு பொருள் போல மற்றொன்று இருப்பதாக கூறுவது..
உருவகம் என்பது ஒருபடி மேலே போய் அந்தப்பொருளே இதுவோ என வியந்து கூறுவது...
கணினி பாஷையில் உவமை என்பது a=b என define செய்வது..
உருவகம் என்பது a as integer என declare செய்வது..

உவமை - நிலவொத்தமுகம்
உருவகம் - முகநிலா..முகச்சந்திரன்..

என் விளக்கம் போதுமா..?

மதுரகன்
19-02-2007, 04:55 PM
மன்ற அன்பர்களே எனது கவிதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானதும் சிறந்தவற்றையும் என்று நான் கருதுபவற்றையே இங்கு பதிக்கிறேன்....
என்றும்போல் உங்கள் ஆதரவை நல்குவீர்....

மதுரகன்
17-05-2007, 05:02 PM
இரவிடம் பிசாசுகளில்லை

என் பிஞ்சுப்பருவங்களின் கனவுகள் உணர்த்தியதுபோல இரவிடம்
பிசாசுகளில்லை...
உண்ண மறுக்கும் உணவை வற்புறுத்தி ஊட்டும்போது அம்மா கூறியது
போல இரவிடம் பிசாசுகளில்லை..
என்னருகே தூங்கிக்கொண்டிருந்த அப்பாவின் கைகளை இறுகக்கட்டிக்
கொண்டு பயப்பட்ட இரவிடம் பிசாசுகளில்லை..
நிலா வெளிச்சத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் என்னை உள்ளே
அழைக்கவென்றே பாட்டி கூறியதுபோல இரவிடம் பிசாசுகளில்லை

இன்று தூங்க மறுக்கும் தம்பியை தூங்கவைக்க நான் சொல்வதைப்
போல இரவிடம் பிசாசுகளில்லை

மனோஜ்
17-05-2007, 05:06 PM
நினைவலைகள் அருமை கவிதையாய்
தொடருங்கள் மதுரகன்

அக்னி
17-05-2007, 05:07 PM
நடைமுறை வாழ்வின் சம்பவங்கள், உங்கள் கவிதைகளில் ஒளிரும் போலுள்ளதே...
வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

மதுரகன்
17-05-2007, 05:10 PM
நன்றி அக்னி மற்றும் மனோஜ்
என் முந்தைய கவிதைகள் படித்திருக்கிறீர்களா..?

அக்னி
17-05-2007, 05:15 PM
நன்றி அக்னி மற்றும் மனோஜ்
என் முந்தைய கவிதைகள் படித்திருக்கிறீர்களா..?

இல்லை மது இனித்தான் பருகிச் சுவைக்கவேண்டும்...

மனோஜ்
17-05-2007, 05:23 PM
காதலி என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்தது மதுரகன்

மதுரகன்
20-06-2008, 06:12 AM
என்னை உருக்கிய வரிகள்
உபயம் கவிக்கோ.அப்துல் ரகுமான்
(ஓவ்வொரு கவியும் உணர்வுடன் வாசிக்கவேண்டியது)

"என்னுடைய ஆறாவது விரலினூடாக
சிலுவையிலிருந்து இரத்தம் வடிகிறது
ஆம் என்னுடைய மாம்சம்
வார்த்தை ஆகின்றது"

ஓவியன்
20-06-2008, 07:30 AM
நலமா மதுராகா..!!

படிப்புக்கள் எப்படி போகின்றன...??

நேரம் கிடைக்கையில் முன்பு போல கவிதைகளைப் படைக்கலாமே...!!

மதுரகன்
21-06-2008, 01:26 PM
நலம்தான் நண்பரே! மீண்டும் எனது கவிதைகள் இடம்பெற ஆரம்பித்து விட்டனவே!!

ஓவியன்
21-06-2008, 02:18 PM
ஆமாம், ஆமாம்..!!

மேற்படி பதிவினைப் பதித்த பின்னரே அதனை நான் கண்டு கொண்டேன்..!! :D:D:D

பரவாயில்லை, தொடர்ந்து கலக்க என் வாழ்த்துகளும்...!! :icon_b: