PDA

View Full Version : நான் சமுதாய யதார்த்தத்திற்கு உதவாதவன்



மதுரகன்
07-01-2007, 04:51 PM
இன்னும் எனக்கு பெயர் சூட்டவில்லை ஏனெனில் என்ன பெயர்தான் சூட்டினாலும் "சமுதாய யதார்த்தத்திற்கு உதவாதவன்" எனும் பெயர்தான் எஞ்சிவிடப்போகின்றது உண்மையில் நான் தேடும் யதார்த்தம் வேறு... சும்மா அழைக்க மட்டும் - மதுரகன்

ஆதவா
07-01-2007, 05:29 PM
மதுரகன்.. அழகான தமிழ் பெயர்.. சமுதாய எதார்த்தத்தை விட்டுத் தள்ளுங்கள்... இங்கே உங்கள் ஆர்ப்பாட்டத்தை காண்பியுங்கள்...

வாருங்கள், மதுரகன். உங்களை மது என்றே கூப்பிடலாமே!!

மது மிக அழகான பெயர்.. நம்மாளுங்க கெடுத்து வெச்சிருக்கானுங்க.. எங்களுக்கு உங்கள் படைப்பின் போதை ஏற்றுங்கள்

உள்வரவு
நல்வரவு

மதுரகன்
07-01-2007, 05:34 PM
நன்றி ஆதவா... உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவைதாம் என்னை இங்கு இழுத்துவந்துள்ளன..

இளசு
07-01-2007, 07:38 PM
வாருங்கள் மதுரகன் அவர்களே...

ஆதவாவின் கவிதைகளால் கவரப்பட்டு வந்தது - மிக்க மகிழ்ச்சி தருகிறது..

உங்கள் படைப்புகள், கருத்துகளை அள்ளித் தாருங்கள்..

வாழ்த்துகள்..

அறிஞர்
08-01-2007, 02:01 PM
வாருங்கள் மதுரகன்....

எல்லாரும் ஒருவிதத்தில் சமுதாய யதார்த்தத்திற்கு உதவாதவர்களாக/உதவியானர்களாக இருப்பர்.....

தங்களின் பங்குக்கு இங்கு கருத்துக்களை, படைப்புக்களை கொடுங்கள்...

ஆதவா
08-01-2007, 02:13 PM
நன்றி ஆதவா... உங்கள் கவிதைகளில் பெரும்பாலானவைதாம் என்னை இங்கு இழுத்துவந்துள்ளன..

ஆஹா!! எனக்கு ரெம்ப பெருமை பா!! இங்க என்னவிட நெறய பேர் இருக்காங்க.. அசாத்துங்க மது....

ஷீ-நிசி
08-01-2007, 02:40 PM
இன்னும் எனக்கு பெயர் சூட்டவில்லை ஏனெனில் என்ன பெயர்தான் சூட்டினாலும் "சமுதாய யதார்த்தத்திற்கு உதவாதவன்" எனும் பெயர்தான் எஞ்சிவிடப்போகின்றது உண்மையில் நான் தேடும் யதார்த்தம் வேறு... சும்மா அழைக்க மட்டும் - மதுரகன்

ஆரம்பமே தத்துவ மழை பொழிகிறீர்களே.... வாங்க வாங்க

meera
08-01-2007, 02:45 PM
வாங்க வாங்க மதுரகன்.அசத்துங்க.
அட நம்ம ஆதவாக்கு தெரிஞ்சவரா?
வரவேற்கிறோம்.

ஆதவா
08-01-2007, 02:51 PM
வாங்க வாங்க மதுரகன்.அசத்துங்க.
அட நம்ம ஆதவாக்கு தெரிஞ்சவரா?
வரவேற்கிறோம்.

இல்லீங்க மீரா. எனக்கு அவர தெரியாது.. இனிமே தெரிஞ்சுக்கலாமே...

மதுரகன்
08-01-2007, 03:51 PM
நன்றி! நன்றி! நன்றி! உங்கள் கருத்துக்களுக்கும் வழிகாட்டல்களுக்கும்..

நிலவொளியில் சூரியன் நிலைகுலைந்து கிடக்கின்ற
சந்துப்பொழுதுகளில் சிலநொடிகள்

கலைத்துப்போடப்பட்ட காகிதங்களுக்கு மேல்
ஓர் எழுது கோலின் நர்த்தனம்

எழுதி எழுதி வரண்டுவிட்ட சிந்தைகளுடன்
சடமாகி ஓடுகின்ற மூடர்களின் மூட்டத்தில்

தோல்சிலிர்க்கின்ற அந்தப்பனிப்பொழுதில்
சுரீரென்றது சுட்டது உங்கள் சொற்கள்.....

மன்மதன்
08-01-2007, 04:30 PM
எனது அன்பான வரவேற்புகள் மதுரகன்..

மதி
09-01-2007, 02:56 AM
வரவேற்கிறோம் மதுரஹன்..
நீங்களும் உங்கள் படைப்புகளைத் தந்து அசத்துங்கள்..!

leomohan
09-01-2007, 06:34 AM
வாருங்கள் மதுரகன். உங்கள் வரவு நல்வரவாகட்டும். நாம் அனைவருமே யதார்த்தத்திற்கு உதவாதவர்கள் தான். கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் இவர்கள் அனைவரும் இதில் அடக்கம்.

ஆனால் யதார்த்தவாதிகளாக இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறோம்.

Mano.G.
09-01-2007, 08:33 AM
ஒரு முற்போக்கான அறிமுகம்/
அத்தோடு ஒரு "யதார்த்தத்திற்கு உதவாதவன்" என
கூறி மன்றத்தில் அனைவரையும்
எழுத தூண்டிய மதுரகன்
அவர்களே உங்களை
இங்கு வரவேற்பதில் மகிழ்ச்சி

மனோ.ஜி

மதுரகன்
09-01-2007, 04:37 PM
நன்றி .... நன்றி ..... நன்றி.......

தயவு செய்து என் கவிதைகளையும் விமர்சியுஙகள்...

உங்கள் ஆதரவு தொடர்ந்தும் தேவை

ஓவியா
09-01-2007, 04:58 PM
மதுரகனுக்கு அன்பான வணக்கங்கள்

வருக வருக வருக
தங்களின் வரவு எங்களின் மகிழ்ச்சி

மை தீரும்வரை எழுதுங்க!!!!முடியாதா....
ம்ம் புரியுது தடச்சு தேயும் வரை.......பதிவு போடுங்க

பரஞ்சோதி
11-01-2007, 08:54 AM
வாருங்கள் நண்பரே!

உங்களை தமிழ்மன்றத்தில் வாழ்த்தி வரவேற்கிறேன்.

மதுரகன்
11-01-2007, 03:45 PM
நன்றிகள் ஓவியா, பரஞ்சோதி...

Narathar
23-01-2007, 06:56 PM
சரி! நாம ஏற்கனவே அறிமுகமாகி விட்டோம்................
என்றாலும் வாயிலில் உங்களை வரவேற்பதுதானே முறை.
வாழ்த்தி வரவேற்கின்றேன்.............

மனோஜ்
23-01-2007, 07:03 PM
வந்ததும் கலக்கிட்டிங்க மதுகரன் வாழ்த்துக்கள்

மதுரகன்
27-01-2007, 04:05 PM
நன்றி நாரதரே,மனோ உங்கள் பதிவை இன்றுதான் பார்த்தேன்...

மயூ
28-01-2007, 03:28 AM
சற்றே பிந்திய வரவேற்புத்தான்!
வாருங்கள் மதுரகன்.. இலங்கையிலிருந்தும் தமிழ் மன்றத்திற்கு புதிய மக்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது :)

aren
28-01-2007, 03:49 AM
வந்த சில நாட்களிலேயே மன்றத்தின் முக்கிய பங்களிப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறீர்கள். பாராட்டுக்கள். நீங்கள் மேன்மேலும் பல படைப்புகளை இங்கே வழங்க வாழ்த்துக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

மயூ
28-01-2007, 04:00 AM
மதுரகன் உங்கள் சீரியர் ஒருவர் இங்கே எம்முடன் களனிப் பல்கலையில் படிக்கின்றார்...
நீங்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி உள்ளீர்களாமே!

சொல்லவே இல்லை!!!!

ஓவியா
28-01-2007, 10:15 AM
மதுரகன் உங்கள் சீரியர் ஒருவர் இங்கே எம்முடன் களனிப் பல்கலையில் படிக்கின்றார்...
நீங்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி உள்ளீர்களாமே!

சொல்லவே இல்லை!!!!

அப்படியா கதை

வாழ்த்துக்கள் மது

மன்றத்தில் இளசுக்கு ஒரு வலது கை கிடைத்தாகிவிட்டது ;)

இப்பவே அதிரடியான மருத்துவ கேள்விகளை தயார் செய்யும்
ஓவியா

மதுரகன்
28-01-2007, 03:40 PM
நன்றி அனைவருக்கும்...

மதுரகன் உங்கள் சீரியர் ஒருவர் இங்கே எம்முடன் களனிப் பல்கலையில் படிக்கின்றார்...
நீங்கள் மருத்துவக் கல்லூரிக்குத் தெரிவாகி உள்ளீர்களாமே!

சொல்லவே இல்லை!!!!
சீரியர் என்று யாரைக்கூறுகிறீர்கள் மயூரேசன்...
மற்றது நான் மருத்துவபீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதை ஏற்கனவே ஒரு பதிவில் கூறிவிட்டதால் அக்கறை கொள்ளவில்லை...


அப்படியா கதை

வாழ்த்துக்கள் மது

மன்றத்தில் இளசுக்கு ஒரு வலது கை கிடைத்தாகிவிட்டது

இப்பவே அதிரடியான மருத்துவ கேள்விகளை தயார் செய்யும்
ஓவியா

ஐயோ இப்பவே மிரட்டிடாதீங்க...
உங்கள் வாழ்த்துக்கு நன்றி..
இளசு மருத்துவரா...?
தெரியாம போச்சே...

மயூ
29-01-2007, 01:31 PM
[quote=மதுரகன்;170575]நன்றி அனைவருக்கும்...

சீரியர் என்று யாரைக்கூறுகிறீர்கள் மயூரேசன்...
மற்றது நான் மருத்துவபீடத்திற்கு தெரிவுசெய்யப்பட்டதை ஏற்கனவே ஒரு பதிவில் கூறிவிட்டதால் அக்கறை கொள்ளவில்லை...
[quote]

மருத்துவப் பீடம் தெரிவாகிவிட்ட மிடுக்காக இருக்கலாம் அனாயசமாகப் பதில் சொல்கின்றீர்கள்...

ம்.... நான் அந்தப் பதிவைப் பார்க்கவில்லை.. ஆயினும் அது இங்கே அறிமுகப் பக்கத்தில் போடப்பட்டிருக்க வேண்டியது..:rolleyes:

உங்கள் சீனியர் என்று சொன்னது கிரிசாந்... தன்னை DJ Krishanth என்று சிங்களப் பெட்டயளிடம் சொல்லித் திரியிறார்..:eek:

மதுரகன்
29-01-2007, 03:48 PM
உங்கள் சீனியர் என்று சொன்னது கிரிசாந்... தன்னை DJ Krishanth என்று சிங்களப் பெட்டயளிடம் சொல்லித் திரியிறார்
கிரிசாந்தனா
அவர் வவுனியாவிலிருந்து வந்தவரா..?
தகவல் தொழினுட்பமா படிக்கிறார்...?

பிச்சி
29-01-2007, 03:52 PM
உங்கள் வரவு நல்வரவு. உங்கள் கவிதைகள் மிக அருமை. நன்றாக நயனமாக எழுதுவதோடு இல்லாமல் இந்த பேதையின் பேழைக்கு அவ்வப்போது வந்து பிச்சிப்பூ வாசனை நுகருகிறீர்கள்
நலமே வருகவென
பிச்சி

pradeepkt
30-01-2007, 03:29 AM
மதுரகன்,
உங்களுக்கு வரவேற்புகள். இளம் மருத்துவரா தாங்கள்? அதிலும் நம்ம மயூரனுக்கு வேற தெரிஞ்சவராப் போயிட்டீங்க! உங்க நண்பரிடம் இருந்து மயூரேசன் பல்வேறு தகவல்களைப் பெற்று மன்றத்தில் ஏற்றி விடுவானே... அடடே...

மயூரா, கேட்கிறதா??? :D

மயூ
30-01-2007, 05:04 AM
மதுரகன்,
உங்களுக்கு வரவேற்புகள். இளம் மருத்துவரா தாங்கள்? அதிலும் நம்ம மயூரனுக்கு வேற தெரிஞ்சவராப் போயிட்டீங்க! உங்க நண்பரிடம் இருந்து மயூரேசன் பல்வேறு தகவல்களைப் பெற்று மன்றத்தில் ஏற்றி விடுவானே... அடடே...

மயூரா, கேட்கிறதா??? :D
:mad: :mad: :mad: :D :D :D
அவரு என்னோட யூனியரு...
ஏற்கனவே இங்க வந்து செல்லத் தொடங்கியுள்ளார்... வாயைத் திறந்தார்னா.... அப்புறம் ..... :confused: :D

மயூ
30-01-2007, 05:06 AM
கிரிசாந்தனா
அவர் வவுனியாவிலிருந்து வந்தவரா..?
தகவல் தொழினுட்பமா படிக்கிறார்...?
ஆமாம்
ஆமாம்
இல்லை முகாமையும் தகவல் தொழில்நுட்பமும்.. (Management and Information Technology)

மதுரகன்
31-01-2007, 04:11 PM
ஆமாம்
ஆமாம்
இல்லை முகாமையும் தகவல் தொழில்நுட்பமும்.. (Management and Information Technology)


ஆகா எனக்கு அவரைதெரியுமே...
அவர் என்னைப்பற்றி என்ன சொன்னார்...

மதுரகன்
31-01-2007, 04:12 PM
மதுரகன்,
உங்களுக்கு வரவேற்புகள். இளம் மருத்துவரா தாங்கள்?
நான் மருத்துவர் இல்லை..
மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவன் அவ்வளவே...

மயூ
01-02-2007, 07:22 AM
ஆகா எனக்கு அவரைதெரியுமே...
அவர் என்னைப்பற்றி என்ன சொன்னார்...
என்னென்ன எல்லாம் சொல்லக்கூடாதோ அத்தனையும் சொல்லிட்டார் :eek:

மதுரகன்
01-02-2007, 03:01 PM
என்னென்ன எல்லாம் சொல்லக்கூடாதோ அத்தனையும் சொல்லிட்டார்

அப்படியானால் பரவாயில்லை..
நான் நினைத்தேன் சொல்லவேண்டியதை எல்லாம்
சொல்லியிருப்பார் என்று...
சொல்ல கூடாததைத்தானே சொல்லியிருக்கிறார்..

இது எப்படி இருக்கு :) :) :)

மதுரகன்
05-05-2007, 06:39 PM
இன்று தமிழ் மன்றத்தில் மீண்டும் பிறப்பெடுக்கிறேன் பழையபடி தொடர்வதாய் உறுதி பூண்டு வாழத்துங்கள் என்னை...
தடைகள் வராது தொடர ...

ஆதவா
05-05-2007, 06:46 PM
வாருமய்யா மது.... ரொம்பநாட்களாக உம் போதை இல்லாமல் இருக்கிறேன்.. சீக்கிரம் ஊற்றுங்கள் கவித்தேன்களை

அக்னி
05-05-2007, 06:49 PM
வாழ்த்துக்கள் மதுரா...
நீங்கள் விட்ட இடைவெளியில், மன்றத்தில் புகுந்து கொண்டவர்களில் நானும் ஒருவன். எனவே உங்களை வரவேற்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது சந்தோஷம். உங்கள் தடைகள் நீங்கி, தொடர்ந்து மன்றம் வர இறைவனின் ஆசிகள் வேண்டி... வருக வருக என வரவேற்கின்றேன்..

ஒரு துளி கவிதையில் உங்கள் சிந்தனாசக்தியின் வீரியம் தெரிகிறது. தொடர்ந்திடுங்கள்...

சக்தி
06-05-2007, 02:50 AM
கவிதை அட்டகாசம், உங்கள் வரவு நல்வரவாகுக

சுட்டிபையன்
06-05-2007, 03:05 AM
இன்று தமிழ் மன்றத்தில் மீண்டும் பிறப்பெடுக்கிறேன் பழையபடி தொடர்வதாய் உறுதி பூண்டு வாழத்துங்கள் என்னை...
தடைகள் வராது தொடர ...

வாருங்கள் தலைவா, இம்முட்டு நாளா எங்கே ஆளைக் காணசவில்லை, ஒண்டு மட்டும் சொல்லுறேன் மயூ கூட சேர்ந்தா செருப்பால அடி வாங்கிறது நிச்சயம்:D

ஓவியன்
06-05-2007, 03:46 AM
இன்று தமிழ் மன்றத்தில் மீண்டும் பிறப்பெடுக்கிறேன் பழையபடி தொடர்வதாய் உறுதி பூண்டு வாழத்துங்கள் என்னை...
தடைகள் வராது தொடர ...

மதுரகா!
மீண்டும் மலரும் உங்கள் புதிய பிறப்பு!
இனிய ஒரு வரலாறை எழுதட்டும் இந்த தமிழ் மன்ற்றில்...

மதுரகன்
06-05-2007, 05:31 PM
நன்றி நன்றி நன்றி அனைவருக்கும்...

ஷீ-நிசி
06-05-2007, 05:43 PM
வரவேற்புகள் நண்பரே!

மதுரகன்
06-05-2007, 05:45 PM
நன்றி ஷீ

ஓவியா
06-05-2007, 05:45 PM
நீண்ட இடைவெளிக்குபின், வாருங்கள் தம்பி, சுகமா மதுரகன்?

மறவாமல்
http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=91
தங்களின் அறிமுகத்தினை கொடுத்து, சுட்டிகளையும் இணைத்து செல்லுங்கள்.

நன்றி.

மதுரகன்
06-05-2007, 05:47 PM
தகவலுக்கு நன்றி ஓவியா அக்கா...

ஓவியா
06-05-2007, 05:49 PM
மது அங்கு நீ கொடுக்கும் சுட்டிகளும் கவிதைகளும் மக்களுக்கு உன் அற்புதமான் கவிதையின் சுவையை அறிய இன்னும் சுலபமாக இருக்கும். முதல் வாழ்த்து அக்காவோடதான். வாழ்த்துக்கள் ராசா.

மதுரகன்
06-05-2007, 06:01 PM
வாழ்த்துக்கள் ராசா
ராசாவா எந்த ஊருக்கு ஏற்கனவே ஆள் நொந்திருப்பது போதாதா..?

ஓவியா
06-05-2007, 06:03 PM
ராசாவா எந்த ஊருக்கு ஏற்கனவே ஆள் நொந்திருப்பது போதாதா..?


என்ன ஆசுலே, அழத அழாதலே,

மருத்துவ பட்ட படிப்பு எப்ப தொடங்குதுலே?

மதுரகன்
06-05-2007, 06:06 PM
மருத்துவப்படிப்பு தொடங்க இன்னும் இரண்டு மாதம் இருக்கு...
அதற்கிடையில் எத்தனை பிரச்சனைகள் அதைக்கூறவே தனித்திரி வேண்டும்....

மதுரகன்
02-01-2010, 09:22 AM
நான் மன்றத்தில் இணைந்து நான்கு வருடங்களை பூர்த்தி செய்யப்போகும் இந்த வேளையில் என்னுடைய அஞ்ஞாதவாசத்தை கலைத்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். அதற்கு முன் இங்கு யாருக்காவது என்னை நினைவிருக்கிறதா ????

அன்புரசிகன்
02-01-2010, 10:44 AM
உங்கள் அவதார் நன்றாக ஞாபகப்படுத்துகிறது. வவுனியாவிலிருந்து வருபவர் என்று ஞாபகம் உள்ளது. கவிதை எல்லாம் எழுதுவீங்களே....... :D

அமரன்
02-01-2010, 10:59 AM
நான் மன்றத்தில் இணைந்து நான்கு வருடங்களை பூர்த்தி செய்யப்போகும் இந்த வேளையில் என்னுடைய அஞ்ஞாதவாசத்தை கலைத்துக்கொள்ளலாம் என எண்ணுகிறேன். அதற்கு முன் இங்கு யாருக்காவது என்னை நினைவிருக்கிறதா ????

வாங்க டாக்டர்.

எப்படி இருக்கீங்க..

சுகந்தப்ரீதன்
02-01-2010, 11:18 AM
என்ன மதுரகன் இப்படி கேட்டுட்டீங்க...?! உங்களை எப்படி மறக்க முடியும்..?! ஆமாம் உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கிறதா..?!

சிவா.ஜி
02-01-2010, 11:50 AM
உங்களையும் உங்கள் கவிதைகளையும் மறக்கமுடியுமா? நன்றாக நினைவிருக்கிறது. மீள் வருகைக்கு வாழ்த்துகள்.

மதுரகன்
03-01-2010, 05:22 AM
அதே வன்னியின் புதல்வன்தான் அன்பு ரசிகன் நன்றாகவே ஞாபகம் வைத்திருக்கிறீர்கள்....
இன்னும் டாக்டர் ஆகவில்லை தற்போதுதான் மூன்றாவது வருடத்தில் நான் அமரன்...
சுகந்த பரீதன், சிவா நான் மறக்கவில்லை.. நான் பதிப்புக்களை இடாவிட்டாலும் ஒவ்வொரு வாரமும் மன்றத்திற்கு வந்து பார்வையிட்டுக்கொண்டுதான் இருந்தேன் அதைத்தான் அஞ்ஞாதவாசம் என்றேன்..
இங்கு பொதுவாக இணைய உலாவு நிலையங்களினூடாகவே பார்வையிடுவதால் யுனிகோட் இன்றி பதிவிட முடிவதில்லை. ஏனெனில் என்னுடைய கணினியை இங்கு கொண்டு வரவில்லை நான் வீட்டிலேயே விட்டுவிட்டேன்...
தற்போது ஒரு நண்பன் வீட்டிலிருந்து பதிவுகளை இடுகின்றேன்.
நண்பர்கள் ஆதவா, ஷீ-நிஷி போன்றோர் இருக்கிறார்களா...?

அன்புரசிகன்
03-01-2010, 05:45 AM
நண்பர்கள் ஆதவா, ஷீ-நிஷி போன்றோர் இருக்கிறார்களா...?
இருக்கிறார்கள். ஆனால் இருக்கிறதில்லை...:lachen001:

வியாசன்
03-01-2010, 07:02 AM
மதுரகன் நீங்கள் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ்பறவையா? விழவிழ எழுவோம் வாழ்த்துக்கள் உங்கள் படிப்பை முடித்துவிட்டு பாவப்பட்ட மக்களுக்காக கைகொடுங்கள். எங்கள் கரங்களும் உங்கள் கரங்களுடன் இணையும்

ஜனகன்
03-01-2010, 08:44 AM
ஹாய் மது! நான் மன்றத்தில் புதியவன். என்னைப்பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை.ஆனால் உங்கள் பக்கம் சென்று பார்க்கும் பொது நீங்கள் மன்றத்தில் பழைய மாணவன் என தெரிய வந்தது.நன்றாக கவிதை எழுதுவீர்கலாமே? இடைக்கிடை இங்கேயும் எடுத்து விடுறது.உங்கள் படிப்பை செவனே முடித்து, நாட்டுக்கு சேவை செய்ய எனது வாழ்த்துக்கள்.
அன்புடன் ஜனகன்.

ஓவியன்
03-01-2010, 09:02 AM
என்ன டாக்டர் இப்படி ஒரு கேள்வி.... :D

நீங்கள் கை வைத்த பல கவிதைத் திரிகள் இன்னமும் உங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனவே..... :):)

ஓவியன்
03-01-2010, 09:04 AM
ஒண்டு மட்டும் சொல்லுறேன் மயூ கூட சேர்ந்தா செருப்பால அடி வாங்கிறது நிச்சயம்:D

மயூ இதனைக் கவனிக்கலையா.....?? :D:D:D

நேசம்
04-01-2010, 05:31 AM
அசத்தலான அறிமுகத்துடன் வரும் மதுரகன் அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்

மதுரகன்
06-01-2010, 02:49 PM
நன்றி அனைவருக்கும் , அப்படி எங்கயாவது தேடினா சொல்லுங்கோ ஓவியன்.
என்ன நேசம் காலம் நேரம் தெரியாம வரவேற்கிறீங்க நன்றி நன்றி ...