PDA

View Full Version : ரிவைண்ட்



lenram80
07-01-2007, 01:23 AM
26 | 23 | 18 | 10
டோயொடா கார் | ஹீரோ ஹோண்டா பைக் | ஹர்குலிஸ் சைக்கிள் | நுங்கு ரோதை வண்டி
ஜீன்ஸ் பேண்ட் | சார்ட்ஸ் | கட்டம் போட்ட கைலி| அண்ணன் போட்டுக் கொடுத்த கால்சட்டை
அரோ பென் | பால்பாய்ண்ட் பென் | ஹீரோ பேனா| சிலேட்டுக் குச்சி
செல் போன் | கார்ட்லெஸ் போன் | லேண்ட்லைன் போன்| தீப்பெட்டி, நூல் போன்
ரிபொக் ஷூ | ப்ளாட்ஃபாம் ஷூ | மே ஃபில்ட் செறுப்பு |சிங்கப்பூர் தாத்தா கொடுத்த சின்ன பூட்ஷ்
லேப்டாப் | கம்ப்யூட்டர் | டிவி | இலங்கை வானொலி
கான் ஃப்லேக்ஸ் | உடுப்பி பொங்கல் | ஹாஸ்டல் களி | அம்மா வைத்த அமிர்தம்
ராடோ | டைடன் | ஏதோ ஒரு எலக்ட். வாட்ச் | காலத்தைப் பத்தி கவலையே இல்லை

வாழ்க்கையை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால்,
வயது ஆக ஆக வசதிகள் அதிகம் தான்!
அதை விட மன அசதிகள் தான் அதிகம்!!

எனக்கு என்றும் பிடித்தது, இன்றும் மணக்கும் பத்து!
குறும்பு விதைத்து கும்மாளம் விளைந்த சொத்து!
சொத்து பத்து எதுவும் இல்லாமல்,
சொர்க்கங்களை சொந்தப்படுத்தியது எனக் கத்து!

எப்போது நினைத்தாலும் இனிக்கும் வாழ்க்கை!
கவலையே இல்லாத கடவுள் வாழ்க்கை!
சந்தோஷம் சாரலடித்த சங்கீத வாழ்க்கை!
சிறிய பொருள்களைக் கொண்டு பெரிய வாழ்க்கை!

பெண்கள் பின்னால் அலைந்ததில்லை!
காலநிலை பற்றி கவலைப் பட்டதில்லை!
தானாகவேயன்றி, சிந்தித்துச் சிரித்ததில்லை!
பக்கத்துக்காரனுக்காக பம்மியதில்லை!
தோல்விகளை, தோல்விகள் என்று எண்ணாததால் துவண்டதில்லை!
பணத்தைப் பற்றி பயந்ததில்லை!
ஆக மொத்தம் இப்போது உள்ள கெட்ட நெஞ்சமில்லை!
ம்ம்ம்...செய்த குறும்புகளுக்கும் பஞ்சமில்லை!!

அடம் பிடிக்காமல், அப்பாவிடம் அடி வாங்காமல் சாப்பிட்டதில்லை!
பாட்டியிடம் கதை கேட்காமல் படுத்ததில்லை!

அடிப்பாள். அணைப்பாள். கொஞ்சம் குளம்பினாலும் உலகமே அம்மா தான்!
அப்படியே இருந்திருக்கலாம். இப்போது வாழ்வதெல்லாம் சும்மா தான்!

ஆதவா
07-01-2007, 02:54 AM
26 | 23 | 18 | 10

ரெம்ப நேரம் யோசித்தேன் வாசித்தேன்.. காலம் இறங்குவது நேசித்தேன்.

வாழ்க்கையை கொஞ்சம் திருப்பிப் பார்த்தால்,
வயது ஆக ஆக வசதிகள் அதிகம் தான்!
அதை விட மன அசதிகள் தான் அதிகம்!!

மறுக்கமுடியாத உண்மை.. நீங்கள் குறிப்பிட்ட உச்ச கட்ட வசதி என்னிடம் மட்டுமல்ல எல்லாரிடமும் இருக்கும்.. கூடவே அசதியும்...


பெண்கள் பின்னால் அலைந்ததில்லை!

நிஜமாவா?



அடிப்பாள். அணைப்பாள். கொஞ்சம் குளம்பினாலும் உலகமே அம்மா தான்!
அப்படியே இருந்திருக்கலாம். இப்போது வாழ்வதெல்லாம் சும்மா தான்!


கொன்னுட்டீங்க.. அநேகமா அம்மாவ பிரிஞ்சு ரஷ்யாவுல இருக்கீங்க போல..

lenram80
07-01-2007, 10:18 PM
நன்றி ஆதவா! எப்போதும் என் கவிதைகளை அலசுப் பார்ப்பதற்கு.

[QUOTE=ஆதவா;166219]ரெம்ப நேரம் யோசித்தேன் வாசித்தேன்.. காலம் இறங்குவது நேசித்தேன்.
புதுக் கவிதையை புதிய தோற்றத்தில் வார்த்தைகளைக் குறைத்துக் கொடுக்கலாம் என நினைத்து எழுதியது.

நிஜமாவா?
10 வயசுயேலே பெண்கள் பின்னால் அலைந்தீர்களா, என்ன?

ஆதவா
08-01-2007, 03:42 AM
நல்ல கவிதைதானே!! அதனாலேயே அலசுகிறேன்... இரண்டுமுறை மூன்று முறை படிக்கவைத்து பிரமிக்க வைக்கிறது...

அபாரம் லெனின்..

(லெனின் உங்க சொந்த பெயரா!!! என்ன அருமையான பெயர் தெரியுங்களா? )

Mathu
08-01-2007, 06:32 AM
நேற்று இருந்த சுகம் இன்று கிடைப்பதில்லை
கடந்ததை நினைத்து ஏங்க தான் முடியும்.

நியமான எண்ணங்கள் லெனின்.

இவரின் கவிதையில் இங்கிருந்த ஒருவரின் சாயல் தெரிகிறதே......

ஆதவா
08-01-2007, 07:16 AM
நேற்று இருந்த சுகம் இன்று கிடைப்பதில்லை
கடந்ததை நினைத்து ஏங்க தான் முடியும்.

நியமான எண்ணங்கள் லெனின்.

இவரின் கவிதையில் இங்கிருந்த ஒருவரின் சாயல் தெரிகிறதே......

யாருங்க அது?

meera
08-01-2007, 02:48 PM
லெனின்,

வித்தியாசமா இருக்கு.முதல்ல படிக்கும் போது கொஞ்சம் தலை சுத்தி போச்சு.அந்த ஆரம்பம் தான்.

பாராட்டுகள்.

ஷீ-நிசி
08-01-2007, 03:33 PM
அடிப்பாள். அணைப்பாள். கொஞ்சம் குளம்பினாலும் உலகமே அம்மா தான்!
அப்படியே இருந்திருக்கலாம். இப்போது வாழ்வதெல்லாம் சும்மா தான்!

திருமணமானவர்கள் ரசிக்கும் வரிகள்

பென்ஸ்
08-01-2007, 04:04 PM
இன்று எனக்கு கல்லூரி வாழ்க்கை அழகாய்...
கல்லூரியில் பள்ளி வாழ்க்கை அழகாய்...
பள்ளியில் பத்து வயது வாழ்க்கை அழகாய்..
பத்து வயதில் அம்மா இடுப்பில் இருந்த நாட்கள் அழகாய்...

வாழ்வின் அழகான நாட்களை அசை போடும் போது ஒவ்வொன்றிலும் ஒரு சுகம் இருக்கதான் செய்யும்...

சுருக்கமா சொன்னா "வாழ்க்கை ஒரு டிரக்கிங் மாதிரி... ஏறும் போது வலியாய், கஷ்டமாய்.. உச்சியை அடைய துடிக்கும் மனம்... உச்சியை அடையும் போது ஒரு குஷி இருக்கும் தான்... ஆனாலும் கடந்து வந்த பாதையில் கிடைத்த சுகமான வலிகள் அழகாய் மாறிவிடும்"

அன்று அப்பாவிடம் அடி வாங்கி அழுத நான் இன்று அந்த கணங்களை நினைத்து புல்லரித்து போவதுண்டு.
அம்மாவிடம் ஒருமுறையேனும் பழையது போல் கோப பட சொல்லி கொஞ்சுவதுண்டு...
எது வாங்கி வந்தாலும் எனக்கு தந்து விட்டு சாப்பிடும் அண்ணாவிடம் பழையது போல் எக்காட்டி விட்டு வீட்டை சுற்றி கொண்டு ஓட சொன்னால், உதைப்பான்...

அன்று வருத்தமடைய செய்தவைக்காக கூட இன்று ஏங்கும் மனம் அல்லவா இது லெனின்...
அம்மாவின் அரவனைப்பையும் முத்தங்களையும் வேண்டாம் என்றா சொல்லும்..????

மதுரகன்
08-01-2007, 04:04 PM
அசத்திவிட்டீர்கள் லெனின்...
தானாகவேயன்றி, சிந்தித்துச் சிரித்ததில்லை!
பக்கத்துக்காரனுக்காக பம்மியதில்லை!
தோல்விகளை, தோல்விகள் என்று எண்ணாததால் துவண்டதில்லை!

அற்புதம்..
இதையும் கேளுங்கள்..
கடந்து சென்ற வாழ்க்கை ஒரு கவிதைப்புத்தகம் போன்றது
அதில் சிலபக்கங்களை வெறுமனே கைகளாலும்
சில பக்கங்களை இதயத்தாலும் புரட்டிச்செல்கிறோம்..

இளசு
08-01-2007, 10:54 PM
லெனின்,

மிக அழகான கவிதை.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7199

இந்தத் திரியில் ஏன் பழைய பாடல்களை ரசிக்கிறோம் எனக் கேட்டிருப்பார் நண்பர் விஜயன்..

ஏன் பாடல்கள் இரவு 11 மணிக்கு நம் நெஞ்சத்தை இன்னும் ஆழமாய்க் கிள்ளுகின்றன?


சிறுபருவத்தில் கவலைகள் சிறிது...
இரவில் வெளிச் சலனங்கள் குறைவு..

அந்தக் காலத்தில் அனுபவித்தவை - அந்தப் பருவத்தின்
நிர்ச்சலன மனத் தெளிவால் தித்தித்தவை..

இன்றைவிட நாளை நாம் இன்னும் சேறாக
இன்று - இதோ இந்த மன்றத்துச் சொல்லாடல்
நாளை நினைவில் தேனாய் இனிக்கும்..


அந்த இனிப்புகளை மனக்கூட்டில்
சேகரித்து அசைபோட்டு சப்புக்கொட்டுவது
கவிஞர்களின் பல பரிமாணங்களில் முக்கியமானது.


பாராட்டுகள் ..


------------------------

இனிய பென்ஸ்...

இம்முறையும் நான் எழுத நினைத்ததை அப்படியே சொல் பிசகாமல்
முன்னாலேயே எழுதிவிட்டுப் போனதை வன்மையாய்க் கண்டிக்கிறேன்..

அப்புறம்.. நான் என்னத்தை எழுதுறதாம்?

lenram80
09-01-2007, 12:57 AM
நன்றி
கொஞ்சம் வித்தியாசமாக எழுத நினைத்தேன். (புதுப் பரிணாம புதுக் கவிதை)
பாராட்டுக்கள் தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள்.