PDA

View Full Version : காலப் பிறழ்வு...



mayan
06-01-2007, 02:12 PM
காலப் பிறழ்வு...



ஒளி ஆண்டுகளின்
இடைவெளியில்
நானும் நட்சத்திரமும்
சந்திக்கின்றோம்
எங்களுக்கிடையிலான
பாஷை ஒளியாலானது
அது கடந்த காலத்திலிருந்து
எதிர்காலத்தையும்
நான் நிகழ் காலத்திலிருந்து
கடந்த காலத்தையும்
பார்த்துக் கொள்கிறோம்
இருவருக்குமிடையில்
காலப் பிறழ்வு நிகழ்ந்தேற
உண்மையில்
நான் இருப்பது
எந்த காலத்தில்?

பென்ஸ்
06-01-2007, 03:18 PM
மயன்...

நம்ம ஐன்ஸ்டின் குழப்ப ஆரம்பித்தார், அதுக்கு நீங்களும் ஒரு கால்
புள்ளி வைத்து மனிதனை கொடுமை படுத்துகிறீர்கள்....

ஐன்ஸ்டின் எழுதியதை படித்து புரிய முயற்ச்சிக்கிறேன்...
ஆனா சத்தியமா எதுவும் புரியலை,
ஆனா நீங்க எழுதியது எதோ கொஞ்சமாவது புரியுது...:D :D

ஆமா நான் இப்போ எதை பற்றி பற்றி எழுதிகிட்டு இருக்கேன்..!!!????:rolleyes: :rolleyes: :eek: :eek: :D :D

ஆதவா
06-01-2007, 03:53 PM
இப்படி ஒரு காலமிருந்தால் அந்த ஒளியிலேயே நான் என் பாரதியை காணுவேனே.. என்னசெய்ய. நம்மிடம் ஒளியைவிட வேகம் எதாவது உள்ளதா மனதைத் தவிர?

ப்ரியன்
07-01-2007, 11:38 AM
நன்று...ஆனால்



அது கடந்த காலத்திலிருந்து
எதிர்காலத்தையும்
நான் நிகழ் காலத்திலிருந்து
கடந்த காலத்தையும்

இதற்கு முன்னமோ பின்னமோ ஏதோ ஒரு வார்த்தை விடுபட்டதுப் போல் ஒரு எண்ணம் அதனால் என்னவோ ஐந்தாறு முறை திரும்பத் திரும்ப படிக்கவேண்டியதாயிற்று

mayan
07-01-2007, 03:38 PM
ஒரு வரி மட்டும்
விடுபட்டுள்ளது.
சேர்த்து விட்டேன்.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி