PDA

View Full Version : பேரண்டத்தின் பெரு வெடிப்பு

mayan
05-01-2007, 03:40 PM
பேரண்டத்தின் பெரு வெடிப்பு

கால் இடறக் காரணமாக
இருந்த கல்லைக்
கையில்
எடுத்தேன்
காலில் ஏற்பட்ட வலி
தீயாய் எரிந்தது
கையிலிருந்த கல்லை
உற்றுப் பார்த்தேன்
பார்த்துக்
கொண்டே இருந்தேன்
பேரண்டம் வெடித்த போது
சிதறிய
நெருப்புத் துண்டமாகக்
கல் உருமாறியது
சூடு பொறுக்காமல்
கையிலிருந்த துண்டத்தைக்
கீழே போட்டேன்
அது
விழுந்த சத்தம்
பெரு வெடிப்பின்
சத்தமாகக் கேட்டது

ஆதவா
05-01-2007, 04:09 PM
பேரண்டத்தின் பெரு வெடிப்பு

கால் இடறக் காரணமாக
இருந்த கல்லைக்
கையில்
எடுத்தேன்
காலில் ஏற்பட்ட வலி
தீயாய் எரிந்தது
கையிலிருந்த கல்லை
உற்றுப் பார்த்தேன்
பார்த்துக்
கொண்டே இருந்தேன்
பேரண்டம் வெடித்த போது
சிதறிய
நெருப்புத் துண்டமாகக்
கல் உருமாறியது
சூடு பொறுக்காமல்
கையிலிருந்த துண்டத்தைக்
கீழே போட்டேன்
அது
கீழே விழுந்த சத்தம்
பெரு வெடிப்பின்
சத்தமாகக் கேட்டது

இதன் பொருள் என்னவோ ஒளிந்து கொண்டிருக்கிறது.. மயன். அதனைச் சொல்லுங்களேன்//

எனக்கு ஏன் இந்த பெயர் பிடிக்கும் தெரியுமா? மயன் என்ற பெயருக்கும் ஆதவனுக்கும் ஒரு இணைப்பு உண்டு... கண்டுபிடியுங்கள்

ப்ரியன்
06-01-2007, 05:15 AM
பேரண்டத்தின் பெரு வெடிப்பு

கால் இடறக் காரணமாக
இருந்த கல்லைக்
கையில்
எடுத்தேன்
காலில் ஏற்பட்ட வலி
தீயாய் எரிந்தது
கையிலிருந்த கல்லை
உற்றுப் பார்த்தேன்
பார்த்துக்
கொண்டே இருந்தேன்
பேரண்டம் வெடித்த போது
சிதறிய
நெருப்புத் துண்டமாகக்
கல் உருமாறியது
சூடு பொறுக்காமல்
கையிலிருந்த துண்டத்தைக்
கீழே போட்டேன்
அது
கீழே விழுந்த சத்தம்
பெரு வெடிப்பின்
சத்தமாகக் கேட்டது

அருமை மயன்...மிக நன்றாக எழுதுகிறீர்கள்...

இதை சொல்லும் அளவு தகுதிப் படைத்தவனா என்பது தெரியவில்லை தோன்றியதை சொல்கிறேன் அநுபவத்தில் பிறந்தவை இவைஇருந்தாலும்

ஒரு சொல்லை கவிதையில் ஒன்றுக்குமேற்பட்ட முறை உபயோகிக்க வேண்டாம் கட்டாயமாக தேவை என்னும் சமயம் தவிற

உதாரணம் : கல் என்ற சொல் ஒரு முறை உபயோகித்துவிட்டு பின் தொடருபவையில் அது என சொல்லலாம்

அதேப் போல் கடைசியிலிருந்து மேலே 3 வரியில் கீழே இதுவும் தேவை இல்லை என்பது என் கருத்து கீழே என்ற சொல் இல்லாமலும் பொருள் தரும் அல்லவா அதனால்.

வாழ்த்துக்கள் நல்ல கவிதை இன்னும் தாருங்கள்

மயூ
06-01-2007, 06:11 AM
மயன் என்பது யாவா, சுமத்திரா தீவுகளில் சூரியனுக்கு வழங்கிய பெயர் சரியா ஆதவன்?
இந்தக் கவிதை என் பார்வையில் ஒரு கணவன் தன் மனைவி பற்றிச் சொல்லுவதென்று நினைக்கின்றேன். கடைசியில் அவளை விட்டெறிவோம் என்றெண்ணி எறிந்த பின்னே அது எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பதை வரிகள் கூறுகின்றன.

RRaja
06-01-2007, 06:39 AM
வித்தியாசமான பார்வைகள்; நன்றாக இருக்கின்றன.
உண்மையான விளக்கம் மாயூரேசன் சொல்வது தானா?

அதேப் போல் கடைசியிலிருந்து மேலே 3 வரியில் கீழே இதுவும் தேவை இல்லை என்பது என் கருத்து கீழே என்ற சொல் இல்லாமலும் பொருள் தரும் அல்லவா அதனால்

இல்லை ப்ரியன்; மயன், இங்கே சிறு கல்லுக்கும் பெரு வெடிப்புக்குமான ஒப்பீட்டை இந்த வரியில் விளக்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஆதவா
06-01-2007, 06:41 AM
மயன் என்பது யாவா, சுமத்திரா தீவுகளில் சூரியனுக்கு வழங்கிய பெயர் சரியா ஆதவன்?
இந்தக் கவிதை என் பார்வையில் ஒரு கணவன் தன் மனைவி பற்றிச் சொல்லுவதென்று நினைக்கின்றேன். கடைசியில் அவளை விட்டெறிவோம் என்றெண்ணி எறிந்த பின்னே அது எவ்வளவு பெரிய தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பதை வரிகள் கூறுகின்றன.

இருக்கலாம். ஆனால் பண்டைய காலத்தில் மயன் என்ற சூரிய வழிபாடு ஒன்று வழக்கத்தில் இருந்துள்ளது. (இன்றும் செவ்விந்தியர்கள் மயன் வழிபாடு செய்கின்றனர். )

கவிதைத் தலைப்பாவது நீங்கள் சொன்னமாதிரி இருந்திருக்கலாம். எனக்கு சுத்தமாக பொருள் விளங்கவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அருமையாக அமர்ந்திருக்கிறது.

இதை கணவன் மனைவி என்றும் காதலன் காதலி என்றும் இன்னும் பலவாறு கொள்ளலாம். மயன் மனதில் என்ன இருக்கிறது?

சொல்லுங்க மயன்

ஷீ-நிசி
06-01-2007, 06:44 AM
பேரண்டத்தின் பெரு வெடிப்பு

கால் இடறக் காரணமாக
இருந்த கல்லைக்
கையில்
எடுத்தேன்
காலில் ஏற்பட்ட வலி
தீயாய் எரிந்தது
கையிலிருந்த கல்லை
உற்றுப் பார்த்தேன்
பார்த்துக்
கொண்டே இருந்தேன்
பேரண்டம் வெடித்த போது
சிதறிய
நெருப்புத் துண்டமாகக்
கல் உருமாறியது
சூடு பொறுக்காமல்
கையிலிருந்த துண்டத்தைக்
கீழே போட்டேன்
அது
கீழே விழுந்த சத்தம்
பெரு வெடிப்பின்
சத்தமாகக் கேட்டது

வார்த்தைகள் அழகுதான், ப்ரியன் சொல்வது போல அவசியம் இல்லாவிட்டால் ஒரே வார்த்தையை உபயோகிப்பது கவிதையின் சுவையைக் கெடுக்க வாய்ப்புள்ளது

கவிதை விளங்கவேயில்லை
தவறாக நினைக்க வேண்டாம். இந்த கவிதை எழுதக் காரணம்?

ப்ரியன்
06-01-2007, 06:44 AM
இல்லை ப்ரியன்; மயன், இங்கே சிறு கல்லுக்கும் பெரு வெடிப்புக்குமான ஒப்பீட்டை இந்த வரியில் விளக்கியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

உண்மை ராஜா மயன் அதைத்தான் சொல்லவருகிறார்,ஆனால் நான் தேவையில்லை என்று சொன்னது அந்த 'கீழே' என்ற அந்த ஒற்றைச் சொல்லைத்தான்..அந்த வார்த்தை மட்டும் தவிர்த்து படித்துப் பாருங்கள் அப்போது அதே அர்த்தம் கிடைக்கும் ...முடிந்த மட்டும் சுருக்கமாகச் சொல்லுதல்தான் கவிதையில் அழகே.

ப்ரியன்
06-01-2007, 06:46 AM
கவிதை விளங்கவேயில்லை
தவறாக நினைக்க வேண்டாம். இந்த கவிதை எழுதக் காரணம்?

ஹஹஹ :) விளங்காமல் போக ஏதுமில்லை என்று நினைக்கிறேன் நான் :) மிக எளிதான கவிதையே ஒரு முறைக்கு இரு முறை படித்துப்பாருங்கள்

ஷீ-நிசி
06-01-2007, 06:58 AM
ஹஹஹ :) விளங்காமல் போக ஏதுமில்லை என்று நினைக்கிறேன் நான் :) மிக எளிதான கவிதையே ஒரு முறைக்கு இரு முறை படித்துப்பாருங்கள்

கவிதையின் மையப் பொருள் என்னவென்று உங்களால் ஊகிக்க முடிகிறது?

ப்ரியன்
06-01-2007, 07:00 AM
கவிதையின் மையப் பொருள் என்னவென்று உங்களால் ஊகிக்க முடிகிறது?

ஊகிப்பதற்கு எதும் இல்லை குறிப்பால் ஏதும் சொல்லவில்லை...மயன் நீங்களே சொல்லிடுங்களேன் விளக்கத்தை...

ஷீ-நிசி
06-01-2007, 07:05 AM
ஹஹஹ :) விளங்காமல் போக ஏதுமில்லை என்று நினைக்கிறேன் நான் :) மிக எளிதான கவிதையே ஒரு முறைக்கு இரு முறை படித்துப்பாருங்கள்

ஊகிப்பதற்கு எதும் இல்லை குறிப்பால் ஏதும் சொல்லவில்லை...மயன் நீங்களே சொல்லிடுங்களேன் விளக்கத்தை...

இவன் ப்ரியன், உங்களுக்கு புரிகிறது என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது புரியவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

மயூ
06-01-2007, 07:06 AM
இருக்கலாம். ஆனால் பண்டைய காலத்தில் மயன் என்ற சூரிய வழிபாடு ஒன்று வழக்கத்தில் இருந்துள்ளது. (இன்றும் செவ்விந்தியர்கள் மயன் வழிபாடு செய்கின்றனர். )

ஆதவன் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம் எனக்கு ஞாபம் இல்லை.. பொறுங்கள் விக்கிப்பீடியாவில் தேடிவிட்டு வருகின்றேன்.:D

மயூ
06-01-2007, 07:10 AM
http://en.wikipedia.org/wiki/Mayan
http://www.crystalinks.com/mayangods.html
தேவையெனில் இங்கே சென்று பாருங்கள் ஒரே குளப்பம்!!!

ப்ரியன்
06-01-2007, 07:21 AM
இவன் ப்ரியன், உங்களுக்கு புரிகிறது என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது புரியவில்லை என்று சொல்ல வருகிறீர்களா?

புரியாத அளவுக்கு ஏதும் இல்லை என்று சொல்கிறேன்

ஆதவா
06-01-2007, 07:28 AM
http://en.wikipedia.org/wiki/Mayan
http://www.crystalinks.com/mayangods.html
தேவையெனில் இங்கே சென்று பாருங்கள் ஒரே குளப்பம்!!!

மயூர், பெரிய பேராவாக இருக்கும் போல... இரவுதான் படிக்கவேண்டும்...
இருப்பினும் சுமாராக பார்த்தவிதத்தில் சூரியக் கடவுள் என்ற வார்த்தை அங்கங்கே அடிபடுகிறது... கவ்னியுங்கள்..

mayan
06-01-2007, 07:31 AM
அருமை மயன்...மிக நன்றாக எழுதுகிறீர்கள்...

இதை சொல்லும் அளவு தகுதிப் படைத்தவனா என்பது தெரியவில்லை தோன்றியதை சொல்கிறேன் அநுபவத்தில் பிறந்தவை இவைஇருந்தாலும்

ஒரு சொல்லை கவிதையில் ஒன்றுக்குமேற்பட்ட முறை உபயோகிக்க வேண்டாம் கட்டாயமாக தேவை என்னும் சமயம் தவிற

உதாரணம் : கல் என்ற சொல் ஒரு முறை உபயோகித்துவிட்டு பின் தொடருபவையில் அது என சொல்லலாம்

அதேப் போல் கடைசியிலிருந்து மேலே 3 வரியில் கீழே இதுவும் தேவை இல்லை என்பது என் கருத்து கீழே என்ற சொல் இல்லாமலும் பொருள் தரும் அல்லவா அதனால்.

வாழ்த்துக்கள் நல்ல கவிதை இன்னும் தாருங்கள்

அந்த கீழே எனும் வார்த்தையை வைப்பதா
எடுப்பதா என்ற தயக்கத்திற்கு நடுவில்தான்
அதை வைத்தேன்.
நீங்கள் சொல்வது போல் அது தேவையில்லைதான்.

திருத்தி விட்டேன்..

நன்றி இவன் ப்ரியன்

பின் குறிப்பு: சொல்வதை ஏன் தயக்கத்தோடு சொல்ல வேண்டும்.
தாராளமாகச் சொல்லலாம். நான் எழுதிப் பழகத்தான் இந்த மன்றத்திற்கு வந்தேன்.
ஆகையால் எல்லாக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்கிறேன்.

ஆதவா
06-01-2007, 07:34 AM
புரியாத அளவுக்கு ஏதும் இல்லை என்று சொல்கிறேன்

இதற்கு என்ன அளவுகோலென்று எனக்குத் தெரியவில்லை பிரியன். புரிந்தும் புரியாமலா அல்லது புரியாமல் புரிந்துமா என்று ஒரே குழப்ப நிலையில் இருக்கிறேன். அல்லது இருக்கிறோம். மயனின் வரிகளுக்கு அவர்தான் விளக்கம் தரவேண்டும் யாதெனில் நாம் பலவாறு நினைக்கலாம். மயன் மனதில் என்ன இருக்க முடியும் எனவும் நினைக்கவேண்டுமல்லவா? இது சாதாரணமாக எனக்கு உங்களுக்கு மற்றும் ஷீ-நிசிக்கும் புரிந்திருக்கும். எளிய தமிழல்லவா? அர்த்தம் நம் மனதை பொருத்தது. பொருள் அதாவது கவிதையின் உட்கரு விளங்கவில்லை என்று நாங்கள் சொல்லுகிறோம்.

ப்ரியன்
06-01-2007, 07:35 AM
பின் குறிப்பு: சொல்வதை ஏன் தயக்கத்தோடு சொல்ல வேண்டும்.
தாராளமாகச் சொல்லலாம். நான் எழுதிப் பழகத்தான் இந்த மன்றத்திற்கு வந்தேன்.
ஆகையால் எல்லாக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்கிறேன்.

நல்லது மயன் :)...விமர்சனங்களை செதுக்கும் உளியாய் நினைப்பவர்களைவிட காயம் செய்யும் உளியாய் பார்ப்பர்கள் அதிகம் அதனால்தான் தயக்கம்

ஆதவா
06-01-2007, 07:36 AM
அந்த கீழே எனும் வார்த்தையை வைப்பதா
எடுப்பதா என்ற தயக்கத்திற்கு நடுவில்தான்
அதை வைத்தேன்.
நீங்கள் சொல்வது போல் அது தேவையில்லைதான்.

திருத்தி விட்டேன்..

நன்றி இவன் ப்ரியன்

பின் குறிப்பு: சொல்வதை ஏன் தயக்கத்தோடு சொல்ல வேண்டும்.
தாராளமாகச் சொல்லலாம். நான் எழுதிப் பழகத்தான் இந்த மன்றத்திற்கு வந்தேன்.
ஆகையால் எல்லாக் கருத்துக்களையும் கவனத்தில் கொள்கிறேன்.

கருத்துக்களை பண்பான மனதுடன் ஏற்கும் உங்களை நான் வரவேற்கின்றேன் மயன்.

ப்ரியன்
06-01-2007, 07:40 AM
எளிய தமிழல்லவா? அர்த்தம் நம் மனதை பொருத்தது. பொருள் அதாவது கவிதையின் உட்கரு விளங்கவில்லை என்று நாங்கள் சொல்லுகிறோம்.

ஒரு கவிதை நம் மனநிலையோடு ஒத்துப் போவதே அக்கவிதையின் மாபெரும் வெற்றி ஆதவா...நீங்கள் அக்கவிதையை வாசித்ததும் என்ன உணர்கிறீர்களோ அதுவே அக்கவிதையின் உட்கரு என்பது என் நிலை...சரி நீங்கள் இந்த கவிதையின் கருவாய் என்ன உணர்கிறீர்கள் எனச் சொல்லுங்கள்..நானும் நான் உணர்ந்த கருவினைச் சொல்கிறேன் மயனும் அவர் உட்கருவை அடுத்துச் சொல்லட்டும் ஒத்துப் போகிறதா எனப் பார்ப்போம் :)

mayan
06-01-2007, 07:47 AM
கவிதை என்பது ஒரு தளம்.
இலக்கியத்தோடு சேராத, ஆன்மீகத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியது.
ஆன்மிகம் என்றவுடன் மதம் சார்ந்தது என்று நினைக்கத் தோன்றும்.
அப்படி அல்ல. ஆன்மிகம் என்பது ஒரு வகை தேடல் (தமிழில் தேய்ந்து உருக்குலைந்து போன
வார்த்தைகளில் இதுவும் ஒன்று) சார்ந்த ஞானம்.
ஒரு பொருளை அது ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறது.
கவிதை என்பதும் அதைப் போலத்தான்.

இந்தக் கவிதை உங்களோடு எத்தனை நெருக்கமாக அல்லது தூரமாக இருக்கிறது?
இது முதல் கேள்வி.
பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை எனும் பதில் மிக மிக நேர்மையான பதில்.
இது முதல் கட்டம்.
ஏன் பிடித்திருக்கிறது (அ) பிடிக்கவில்லை என்று தொடர்ந்து பயணிப்பது அடுத்த கட்டம்.

இந்தக் கவிதை meta physics (சரியான தமிழ் வார்த்தை வேண்டும்) பற்றிப் பேசுவதால்
பிடித்திருக்கலாம். அல்லது இதன் வார்த்தை அமைப்புகளில் ஒரு வசீகரம் இருந்திருக்கலாம்.
ஏதோ ஒரு வகை உணர்வை தூண்டியிருக்கலாம்.

தெருவில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த
பெரு வெடிப்பைக் கண்டடைதல். (ஒரு வகை தரிசனம்)
அவ்வளவுதான் இந்தக் கவிதை.
இதற்கு மேலும் உங்களுக்குச் சில விசயங்கள் தோன்றுகிறதா?
அதற்கு இந்தக் கவிதையின் அமைதிதான் காரணம்.
அமைதி (வேறொரு பொழுதில் விரிவாகப் பேசலாம்)இருக்க இருக்கத்தான் கவிதை உயிர்ப்புடன் இருக்கும்.
(இவன் ப்ரியனின் கவிதைகளில் அந்த வகை அமைதி இருப்பதால் தான் எனக்குப் பிடித்த கவிதைகளாக
இன்னும் நெருக்கமாக என்னிடம் வந்தன.)

ப்ரியன்
06-01-2007, 08:03 AM
அருமையான விளக்கம் மயன்...நன்றி

தெருவில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த
பெரு வெடிப்பைக் கண்டடைதல். (ஒரு வகை தரிசனம்)
அவ்வளவுதான் இந்தக் கவிதை.

இதை இதை மட்டுமே நான் உணர்ந்தேன்...மயன் எழுதிய கவிதைப் போல் வேறு ஒன்று எங்கோ எப்போது படித்தது...

கடலின் கவிதைக்கு
கற்றலின் அவசியமில்லை
சாத்தியமான வெற்றிடம்
துளிமௌனத்துடன் அமர
கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை

- பாம்பாட்டிச் சித்தன்.

இந்த கவிதையை வாசித்துப் பாருங்கள் இந்த கவிதை மறைவாய் சொல்லுவது ஏதும் இல்லை

> கடலின் கவிதைக்கு
> கற்றலின் அவசியமில்லை

கடல் எழுதும் கவிதையை வாசிக்க கற்றல் அவசியமானதாக இல்லை

> சாத்தியமான வெற்றிடம்
> துளிமௌனத்துடன் அமர

(மக்கள்) தொந்தரவுகள் அதிமில்லா இடம் பார்த்து மெளனமாய் நாம் உட்கார

> கடலெழுதுகிறது
> மூளைக்குள் கவிதையை

கடல் நேரடியாக் கவிதை எழுதுகிறது அதன் கவிதையை (அழகை) நம் மூளைக்குள்..அதனால் கற்றல்
தேவை இல்லை என்கிறார் பாம்பாட்டி சித்தன்..

அவ்வளவுதான் கவிதை...

இதை ஒட்டிய கருத்தாடலை இந்த திரியில் தொடர்வதைவிட வேறொரு திரி தொடங்கி பேசினால் நன்றாக இருக்கும்

மயூ
06-01-2007, 08:08 AM
என்னவெல்லாமோ யோசிக்க வைத்த நீங்கள்...

.. போங்கள் அசத்திவிட்டீர்கள்.

ஆதவா
06-01-2007, 08:47 AM
நல்லது மயன் :)...விமர்சனங்களை செதுக்கும் உளியாய் நினைப்பவர்களைவிட காயம் செய்யும் உளியாய் பார்ப்பர்கள் அதிகம் அதனால்தான் தயக்கம்

நீங்கள் இப்படி தயக்கம் செய்தீர்களேயானால் நல்ல கவிதை செதுக்க முடியுமா? கவிதை என்பதே ஒரு மொழியின் அழகு. அதைச் செய்பவர்களுக்கும் தெரியாமல் பிழை ஏற்படின் அதை நிறை செய்வதில் தயக்கம் தேவையில்லை. மொழியின் வளர்ச்சி அங்கேயும் உண்டு.

நீங்கள் பிழை சொல்லுவதினால் பிறருக்கு தலைக்கனம் ஏறலாம். "இவனென்ன பெரிய கவிஞனா குறை சொல்ல" என்று கூட நினைக்கலாம். அதற்குத் தகுதியானவன் இவனில்லை என்று கூட நினைக்கலாம். அவர்கள் எப்படியோ நினைக்கட்டும். பின்னூட்டம் என்பது வெறும் பாராட்டுக்காகவோ அல்லது பாராட்டுக்கு நன்றி சொல்லவோ மட்டுமே அல்ல. இந்த மாதிரி சில பிழைகளை எடுத்துக்கூறவும்தான். தகுதி பார்த்தோமேயானால் எவரும் குறை சொல்லமுடியாது. என்னை பொருத்தவரை நம் மன்றத்தில் எவரும் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.

உளி இறங்க இறங்க கைகளில் காயம் படுவதுண்டு அதற்காக சிலை வடிப்பது நிற்குமானால் அவன் கலைஞனல்ல.

முதலில் பிழை சொன்ன இவன்பிரியனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். அதை ஏற்றுக்கொண்ட மயனுக்கும் அஃதே.

ஆதவா
06-01-2007, 08:55 AM
கடலின் கவிதைக்கு
கற்றலின் அவசியமில்லை
சாத்தியமான வெற்றிடம்
துளிமௌனத்துடன் அமர
கடலெழுதுகிறது
மூளைக்குள் கவிதையை

- பாம்பாட்டிச் சித்தன்.

இது சாதாரணமாக விளங்குகிறது. ஒருவேளை உங்கள் விளக்கம் காரணமாகவும் இருக்கலாம்.

தெருவில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த
பெரு வெடிப்பைக் கண்டடைதல். (ஒரு வகை தரிசனம்)
அவ்வளவுதான் இந்தக் கவிதை.

இது முன்னமே உணர்ந்திருந்தாலும் வேறு கருத்துக்காகவே யாம் தேடினோம் மயன். இருப்பினும் நீங்கள் சொன்ன அளவிற்கு நான் நினைக்கவில்லை.

நேரிடையான கருத்தடங்கிய கவிதை.
இன்னும் இதுபோல உங்களிடம் எதிர்பார்க்கிறேன்

ஷீ-நிசி
06-01-2007, 11:09 AM
கவிதை என்பது ஒரு தளம்.
இலக்கியத்தோடு சேராத, ஆன்மீகத்திற்கு இணையாக வைக்கப்படவேண்டியது.
ஆன்மிகம் என்றவுடன் மதம் சார்ந்தது என்று நினைக்கத் தோன்றும்.
அப்படி அல்ல. ஆன்மிகம் என்பது ஒரு வகை தேடல் (தமிழில் தேய்ந்து உருக்குலைந்து போன
வார்த்தைகளில் இதுவும் ஒன்று) சார்ந்த ஞானம்.
ஒரு பொருளை அது ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறது.
கவிதை என்பதும் அதைப் போலத்தான்.

இந்தக் கவிதை உங்களோடு எத்தனை நெருக்கமாக அல்லது தூரமாக இருக்கிறது?
இது முதல் கேள்வி.
பிடித்திருக்கிறது அல்லது பிடிக்கவில்லை எனும் பதில் மிக மிக நேர்மையான பதில்.
இது முதல் கட்டம்.
ஏன் பிடித்திருக்கிறது (அ) பிடிக்கவில்லை என்று தொடர்ந்து பயணிப்பது அடுத்த கட்டம்.

இந்தக் கவிதை meta physics (சரியான தமிழ் வார்த்தை வேண்டும்) பற்றிப் பேசுவதால்
பிடித்திருக்கலாம். அல்லது இதன் வார்த்தை அமைப்புகளில் ஒரு வசீகரம் இருந்திருக்கலாம்.
ஏதோ ஒரு வகை உணர்வை தூண்டியிருக்கலாம்.

தெருவில் இருந்து எடுக்கப்பட்ட கல்லில் பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த
பெரு வெடிப்பைக் கண்டடைதல். (ஒரு வகை தரிசனம்)
அவ்வளவுதான் இந்தக் கவிதை.
இதற்கு மேலும் உங்களுக்குச் சில விசயங்கள் தோன்றுகிறதா?
அதற்கு இந்தக் கவிதையின் அமைதிதான் காரணம்.
அமைதி (வேறொரு பொழுதில் விரிவாகப் பேசலாம்)இருக்க இருக்கத்தான் கவிதை உயிர்ப்புடன் இருக்கும்.
(இவன் ப்ரியனின் கவிதைகளில் அந்த வகை அமைதி இருப்பதால் தான் எனக்குப் பிடித்த கவிதைகளாக
இன்னும் நெருக்கமாக என்னிடம் வந்தன.)

உட் கரு அருமை மயன்