PDA

View Full Version : சிறு ஆசை



ப்ரியன்
05-01-2007, 10:33 AM
http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Siru_Aasaijpg.jpg

வான் அளக்க
மேலெழும்பிய பறலொன்று 1
நெடுந்தூர அயணத்தினிடையில் 2
ரக்கை குவித்து
வந்தமர்கிறது கரையில்;
நதியை பருகித்
தீர்த்திடும் சிறு ஆசையோடு!

- ப்ரியன்.

1 பறல் - பறவை
2 அயணம் - பயணம்

பென்ஸ்
05-01-2007, 01:08 PM
விக்கி...

உங்க கவிதை இப்போ நல்ல கவிதைகள் என்று சொல்லுவதை விட
கவிதைகளின் உதாரணம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது....

வானத்தை அளக்க பறக்க எத்தனிக்கும் பறவையிடத்து மட்டுமே
நதி நீர் என்ன, கடல் நீரையும் குடித்து தீர்த்துவிடும் பசி இருக்கும்....

முடியாத பயணமாக இருக்கட்டும்...
தீராத பசியாக போகட்டும்....
சூரியனையும் சுட்டரிக்க புறப்பட இருக்கும் அந்த மனம் போதுமே..!!!!

mayan
05-01-2007, 03:38 PM
மிக மிக நல்ல கவிதை.
உங்கள் கவிதைகளைப் பற்றி விரிவாகப் பேச ஆசைப் படுகிறேன்

ப்ரியன்
07-01-2007, 11:17 AM
விக்கி...

உங்க கவிதை இப்போ நல்ல கவிதைகள் என்று சொல்லுவதை விட
கவிதைகளின் உதாரணம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது....



நன்றி பென்ஸ்...ஆனா உதாரணம் அது இது எல்லாம் கொஞ்சம் அதிகம்...



வானத்தை அளக்க பறக்க எத்தனிக்கும் பறவையிடத்து மட்டுமே
நதி நீர் என்ன, கடல் நீரையும் குடித்து தீர்த்துவிடும் பசி இருக்கும்....

முடியாத பயணமாக இருக்கட்டும்...
தீராத பசியாக போகட்டும்....
சூரியனையும் சுட்டரிக்க புறப்பட இருக்கும் அந்த மனம் போதுமே..!!!!

உண்மை பென்ஸ் மனமிருந்தால் எதையும் சாதிக்கலாம்தான்

ஆனால் நதியை குடித்டிவதை சிறு ஆசை என முடித்ததின் காரணம் ஊகித்தீர்களா என அறிய ஆசை

ப்ரியன்
07-01-2007, 11:19 AM
மிக மிக நல்ல கவிதை.
உங்கள் கவிதைகளைப் பற்றி விரிவாகப் பேச ஆசைப் படுகிறேன்

நன்றி மயன்

நிச்சயம் பேசலாம்...இப்போது கொஞ்சம் அதிகப்படியான வேலைக்கிடையில் சிக்கி தவிக்கிறேன்...பிறகொருநாளில் பேசலாம் (ஒரு மாதம் :mad: கழித்து?)