PDA

View Full Version : கர்ப்பகால சர்கரைநோய்



mgandhi
04-01-2007, 05:08 PM
ССஏழு சதவீதம்ТТ. பேறு காலத்தின்போது நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் இந்தியப் பெண்களின் எண்ணிக்கை இது. உலக சுகாதார நிறுவனம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ள இந்த எண்ணிக்கை அதிகரித்து விடும் காலங்களில் ஆபத்து உண்டு!ТТ என்று எச்சரிக்கும் தொனியில் சொல்கிறார் பிரபல டயாபடீஸ் நிபுணர் டாக்டர் சேஷையா.
ССடயாபடீஸ் 1, 2 என்று இரண்டு வகை. ஆனால், பேறு காலத்தில் டயாபடீஸ்_1 வகைதான் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தவகை டயாபடீஸ் இருக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் டயாபடீஸ் வரும் ஆபத்து அதிகம். தவிர, பிறக்கும் குழந்தைக்கு உடலில் நிறைய கோளாறுகள் இருக்கும்.
உடலில் அமினோ அமிலங்களின் பொஸிஷனில். ஏற்படும் மாறுதலும் டயாபடீஸ் உண்டாக ஒரு காரணம். உதாரணமாக கிளைஸின் அல்லது Сபுரோலைன்Т என்ற அமினோ அமிலம் இருக்க வேண்டிய இடத்தில் (றிஷீsவீtவீஷீஸீ) அஸ்பார்ட்டிக் அமிலத்தைச் செலுத்தினால் போதும். டயாபடீஸ் பாதிப்பைக் குறைத்துவிடுவதோடு, கட்டுப்படுத்தவும் முடியும். இதற்காகவென்றே ஹார்மோன் புதிதாக Сநோவோ ரேப்பிட்Т என்ற நீ இன்சுலின் அஸ்பார்ட் வந்துவிட்டது!ТТ என்று ஆறுதலாகச் சொல்லும் டாக்டர் சேஷையா, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் இன்சுலினை விட, இதன் செயல்பாடு வேகமானது என்கிறார்.
ССவழக்கமாகப் பயன்படுத்தப்படும் இன்சுலின் உணவு எடுத்துக் கொள்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பு உடலில் போட்டுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இன்சுலின் எளிதில் ரத்தத்தோடு உறிஞ்சப்படும். ஆனால், நோவோ ரேப்பிட் அப்படி அல்ல. உடலில் செலுத்தியவுடன் எளிதில் உறிஞ்சப்பட்டுவிடும்.
ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்த நோவோ ரேப்பிட் பயன்படுத்தப்பட்டு வருவது சிறப்பு. இதனால் பிறக்கும் குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் வராது.
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் உணவு உட்கொண்ட பின்னர், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எகிறும். ஆனால் நோவோ ரேப்பிட் காரணமாக தாயின் உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவு அதிகரிக்காது. மாறாக குறையும். கருக்குழாயிலும் பாதிப்பு எதுவும் வராது. இதனால் கருவிலேயே குழந்தை இறப்பதும் தடுக்கப்படும்!ТТ _ ஆறுதலாகச் சொல்கிறார் டாக்டர் சேஷையா.
நன்றி குமுதம் ஹெல்த்

роЕро▒ро┐роЮро░рпН
16-01-2007, 03:37 PM
இது பேறுகாலத்தின் போது மகளிரனைவருக்கும் வருவது.

மாத்திரைகளை உட்கொள்வதை விட... உப்பும், சர்க்கரையும் குறைத்துக்கொண்டாலே நல்லது.