PDA

View Full Version : புருஷன் விட்ட பெண்கள் (அ) கைவிட்டவர்கள்



ஆதவா
04-01-2007, 03:54 PM
விடிய விடிய
காத்திருக்கிறாள் இவள்.
முகட்டு வாயில்
முட்டியை வைத்து
விடிந்த பின்னாவது
எச்சில் விழுங்குவாளா?
கோர்த்த நீரை சற்று
பார்த்தவாறு துடைத்தெழ
முயற்சிப்பாள்.
சூரியனாவது இனி
தோன்றுவதாவது?
அவள் கைகளில் ஈரம்
இன்னுமிருக்கிறது அப்படியே!!

sarcharan
04-01-2007, 04:09 PM
அருமையான கவிதை

ஷீ-நிசி
04-01-2007, 04:19 PM
ஆதவா நன்றாக உள்ளது... இன்னும் தொடர்ந்திருக்கலாமோ?!

ஆதவா
04-01-2007, 06:39 PM
நன்றி சரண் மற்றும் ஷீநிசி..

கவிதையை நான் தொடர்வேனேயானால் முடிவில்லாமலே போய்விடும்.. இங்கே நீங்கள் குறிப்பிட்டது போல குறுகிய கவிதையாக இருப்பினும் எனக்கு இது போதுமென்றே அல்லது முடிவு என்றே தோன்றியிருக்கிறது...

இன்னும் இதுபோல பல கவிதைகள் எழுதுவது உங்கள் வாழ்த்து மழையில்....