PDA

View Full Version : தொலைய விரும்புகிறேன்!



நிலா
29-04-2003, 10:33 PM
என்னவனே!
காட்சி தர மறுக்கும் கடவுள் நாடி ஓடுகிறாய்!
நட்பு தர மறுக்கும் நண்பனை நாடுகிறாய்!
உன்னைவிட்டு ஓடும் சமூகத்தை தேடுகிறாய்!
நீ தேடுவதில் சுகம் காணுகிறாயோ?

உனைத்தேடி வருகின்றான் சூரியன்!
கூரைக்குள் மறைகின்றாய்!
மழை சீண்ட வரும்போது
குடை கொண்டு தவிர்க்கின்றாய்!
அலை தீண்ட வருகையிலே
கரைதேடி விரைகின்றாய்!
காதல் தர நான்வந்தேன்
என்னை நீ புறக்கணித்தாய்!
விரும்பி வரும் எதையும் நீ விரும்புவதில்லையோ?

ஆகையால்
நான் தொலைய விரும்புகிறேன்
நீ தேடி வருவாய்தானே?

lavanya
30-04-2003, 12:24 AM
என்னம்மா நிலா... க(வி)தை அங்கே சுத்தி இங்கே சுத்தி எங்கேயோ போய்க்கிட்டிருக்கு....

நிலாப்ரியன்
30-04-2003, 01:13 AM
கவிதை நன்றாக எங்கேயோ உதைக்கின்றதே!

Narathar
30-04-2003, 05:41 AM
அவளுக்கு சொல்லிவையுங்கள்
நீ விரும்பும் குதிரையை விட
உன்னை விரும்பும் கழுதை மேல் என்று!!!!

நிலா
30-04-2003, 09:19 PM
என்னம்மா நிலா... க(வி)தை அங்கே சுத்தி இங்கே சுத்தி எங்கேயோ போய்க்கிட்டிருக்கு


அம்மா லாவண்யா குடும்பத்தில் குழப்பத்தை உண்டுபண்ணிடுவ போலயிருக்கே?

lavanya
30-04-2003, 11:54 PM
எல்லோர்க்கும் அக்கா.... உங்களுக்கு அம்மாவா...? கஷ்டம்டா சாமி......

lavanya
30-04-2003, 11:56 PM
அவளுக்கு சொல்லிவையுங்கள்
நீ விரும்பும் குதிரையை விட
உன்னை விரும்பும் கழுதை மேல் என்று!!!!


அருமை நாரதரே... எங்கிருந்து கிடைக்கிறது உங்களுக்கு இந்த
உவமையெல்லாம்....?

gans5001
01-05-2003, 02:52 AM
காதலில் மட்டுமே இப்படிக்கவிதை பிதற்றல்கள் சாத்தியம்

madhuraikumaran
01-05-2003, 03:40 AM
காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி நிலா. அதை மட்டிலுமே வைத்துக் கொண்டு மற்றவைகளை ஒதுக்கி விட முடியாது.

poo
01-05-2003, 07:46 AM
நிலாவின் படைப்புகள் ஜொலிக்கிறது... பாராட்டுக்கள்!!!

பாரதி
01-05-2003, 02:26 PM
கவிதை நன்று. வாழ்த்துக்கள்.

பாரதி

aren
01-05-2003, 05:12 PM
ஆனால் நிலா அவர்கள் சொல்வது உண்மையே. நமக்கு எளிதாக கிடைக்கும் எதையுமே மனிதர்கள் விரும்புவதில்லை. ஆனால் கிடைக்காத விஷயங்களை தேடிப் போய்க்கொண்டே இருப்பார்கள்.

உங்கள் வரிகளுக்கு நாரதரின் உவமை அருமை.

நிலா
01-05-2003, 09:49 PM
காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி நிலா. அதை மட்டிலுமே வைத்துக் கொண்டு மற்றவைகளை ஒதுக்கி விட முடியாது


அந்த ஒரு பகுதி சரியா அமைஞ்சா வாழ்க்கையே சந்தோஷமாகிவிடும் இல்லையா? மற்றவைகளை ஒதுக்கனும்னு நான் சொல்லலையே?




அவளுக்கு சொல்லிவையுங்கள்
நீ விரும்பும் குதிரையை விட
உன்னை விரும்பும் கழுதை மேல் என்று!!!!
_________________


சொன்னேன் அவள்" எறும்பு ஊற கல்லும் தேயும்னு சொல்றா"

Narathar
02-05-2003, 05:41 AM
அருமை நாரதரே... எங்கிருந்து கிடைக்கிறது உங்களுக்கு இந்த
உவமையெல்லாம்....?

எனக்கொருத்தி சொன்னாள் அன்னாளில்......... ஹீ ஹீ!!!

Narathar
02-05-2003, 05:47 AM
சொன்னேன் அவள்" எறும்பு ஊற கல்லும் தேயும்னு சொல்றா"

அதற்கு ஒரு எறும்பு போதாது
ஓராயிரம் எறும்புகள் வேண்டுமென்று சொல்லுங்கள் அவளிடம்!!!!

Nanban
29-05-2003, 07:31 AM
தேடிச் சேமிக்கும் செல்வமே சிறந்தது -
தேடாமலே கிட்டும் சிறப்புகள்
மதிப்பிழக்கும்
அரசியல்வாதியின் தோள் துண்டைப் போல.......

prabha_friend
29-05-2003, 10:56 AM
இதுதான் மனிதனின் மனோபாவம் . அவன் பாவம் .

பாலமுருகன்
02-06-2003, 09:49 AM
கையில் வென்னையை வைத்துகொண்டு நெய்யுக்கு அலைவது போல் உள்ளது. இல்லாத பொய்யான ஒன்றைத்தானே நோக்கி இந்த உலகம் சுழன்று கொண்டிருக்கிறது.

பாலமுருகன்

முத்து
02-06-2003, 09:59 AM
நல்ல கவிதை... பாராட்டுக்கள் நிலா....(பி.கு. இனிமேல் லாவண்யாவை அம்மா என்று கூப்பிடாதீர்கள்..கோபப்படுகிறார்கள்...பாருங்கள்.. :) )

puppy
08-01-2004, 09:11 PM
தொலைந்து போ தொலைய விரும்புகிறேன்.........அப்புறம் என்ன நிலா

விகடன்
06-06-2008, 09:42 AM
தொலைந்துபோக விதைத்திட்ட காரணங்கள் அழகு.
எல்லாவற்றிற்கும் ஒரு வரியில் சொல்லிவிட்டு சூரியனுடன் மட்டும் மல்லுக்கட்டியிருக்கிறீர்கள்!!!

உண்மைதான்.
நிலாதானே நீங்கள்.சூரியனிற்கு அடுத்தவரல்லவா????

shibly591
06-06-2008, 09:53 AM
இதை எனது சொந்த நோக்கங்களுக்கு பயன்படுத்த அனுமதிப்பீங்களா நிலா...?

எனக்காக எழுதியது போலவே இருக்கு..ம்ம்ம்

விகடன்
06-06-2008, 12:31 PM
நீங்களும் தொலையப்போகிறீர்களா?