PDA

View Full Version : கலைந்து போன மொழி



mayan
03-01-2007, 02:50 PM
கலைந்து போன மொழி

அவள் என் மகளாய்
இருந்த போதிலும்
நாங்கள்
பேசும் மொழிகள்
வேறு வேறு
அவள் மழலையில்
பேசுகிறாள்; சிரிக்கிறாள்
அழுகிறாள்; வாழ்கிறாள்
என் ஞாபகத்தில்
தூசு படர்ந்த காகிதமாக
எங்கோ இருந்த மழலை
ஒரு கனவெனக் கலைந்து போனது
அவள் எனக்கு
மகளாக பிறந்ததற்குப் பின்பா?
அல்லது முன்பா?

meera
03-01-2007, 02:57 PM
மயன்,

முதல் கவிதையே மனசை தொட்டது.என்னவோ இந்த கவிதை படிக்கும் போது கொஞ்சம் மனசு வலிக்குது.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

பென்ஸ்
03-01-2007, 05:46 PM
புரியலையே மயன்....

புரிந்தும்.. புரியாமலும்

இளசு
03-01-2007, 07:59 PM
பாராட்டுகள் மயன்..


மழலை மூன்றுமுறை
அன்னை- தந்தையிடம் முதலில்
மகன் - மகளிடம் இடையில்
பேரன் - பேத்தியிடம் முடிவில்..

இடையில் மறந்திருக்கிறோம்
அது மறைந்துவிடுவதில்லை...

mayan
04-01-2007, 04:35 PM
கவிதையைப் பாராட்டிய மற்றும் விமர்சித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்...

என்னவன் விஜய்
17-05-2008, 10:57 PM
கலைந்து போன மொழி

அவள் என் மகளாய்
இருந்த போதிலும்
நாங்கள்
பேசும் மொழிகள்
வேறு வேறு
அவள் மழலையில்
பேசுகிறாள்; சிரிக்கிறாள்
அழுகிறாள்; வாழ்கிறாள்
என் ஞாபகத்தில்
தூசு படர்ந்த காகிதமாக
எங்கோ இருந்த மழலை
ஒரு கனவெனக் கலைந்து போனது
அவள் எனக்கு
மகளாக பிறந்ததற்குப் பின்பா?
அல்லது முன்பா?

புரியவில்லை
யாரின் நினைவுகள்?(மழலை என்றால் தத்தி நடை போடும் குழந்தைதானே.அதனால் எங்கள் மழலை பருவம் எமக்கு நினைவு வராதல்லவா? தவறா?)

ஆதவா
19-06-2008, 11:01 AM
புரியவில்லை
யாரின் நினைவுகள்?(மழலை என்றால் தத்தி நடை போடும் குழந்தைதானே.அதனால் எங்கள் மழலை பருவம் எமக்கு நினைவு வராதல்லவா? தவறா?)

விஜய்.. இது மிக எளிதான கவிதைதான்.

நாயகன் தன் குழந்தையைப் பார்க்கும் போது, தானும் ஒரு குழந்தையாக இருந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறான்... அந்த ஞாபகம் எப்போது ஏற்பட்டது என்ற கேள்வியை நமக்கு வைக்கிறார்.........

மிக அழகிய கவிதை மயன்..................