PDA

View Full Version : மிச்சம் மீதி கடிகள்



gayathri.jagannathan
03-01-2007, 06:29 AM
என்ஜினீரிங் காலேஜூல படிச்சா என்ஜினீர் ஆகலாம்... ஆனா பிரெசிடன்சி காலேஜூல படிச்சா பிரெசிடன்ட் ஆக முடியாது...

ஆட்டோக்கு ஆட்டோ ன்னு பேரு இருந்தாலும், manuala தான் டிரைவ் பண்ணனும்...


தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்... ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது....

வாழை மரம் தார் போடும்..... ஆனா அதை வச்சு ரோடு போட முடியுமா (என்ன கொடுமை சார் இது?!!!)


ஹாண்ட் வாஷ் என்றால் கை கழுவுவது... பேஸ் வாஷ் என்றால் முகம் கழுவுவது......... அப்போ பிரெயின் வாஷ் ன்னா பிரெயினை கழுவுவதா?

டீ கப்பில் டீ இருக்கும்... அப்போ வோர்ல்டு கப்பில் வோர்ல்டு இருக்குமா?

செல் மூலமா எஸ்.எம்.எஸ் அனுப்பலாம்.... ஆனா எஸ்.எம்.எஸ் மூலமா செல் அனுப்ப முடியாது....

பால் கோவா பாலில் இருந்து பண்ணலாம் ... ஆனா ரசகுல்லா ரசத்தில் இருந்து பண்ண முடியாது...

பல் வலி வந்தா பல்ல பிடுங்கலாம்...அப்போ கால் வலி வந்த கால பிடுங்க முடியுமா? இல்ல தலை வலி வந்தா தலையத்தான் பிடுங்க முடியுமா?

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்

சன்டே அன்னைக்கு சண்டை போடலாம்..... ஆனா மண்டே அன்னைக்கு மண்டைய போட முடியாது....

ஆதவா
03-01-2007, 08:54 AM
ஆட்டோக்கு ஆட்டோ ன்னு பேரு இருந்தாலும், manuala தான் டிரைவ் பண்ணனும்...

அருமை

பென்ஸ்
03-01-2007, 05:32 PM
காயத்ரி....
நம்ம மன்றத்திலை இந்த மாதிரி விஷ்யமேல்லாம் சந்தைக்கு வாறதுக்கு முன்னாலையே வந்திரும்....
தோன்டி பாருங்க இது, இதேமாதிரி, இன்னும் நல்லா பல கடிகள் இருக்கு....
வாசித்து... அதுக்கு மேலையும் என்னவேல்லாம் இருக்கோ அதை போட்டு தாக்குங்க...

paarthiban
03-01-2007, 05:52 PM
அய்யோ தாங்கலீங்க சாமீகளா .காப்பாத்துங்க காயத்ரி கிட்ட இருந்து

இளசு
03-01-2007, 07:48 PM
'கடி' காயத்ரின்னு பட்டமே கொடுக்கலாம் போல...
அப்ப்ப்ப்ப்பா.. செம்ம்ம்ம்ம்ம கடீஈஈஈஈஈஈஈ!

மன்மதன்
04-01-2007, 03:54 AM
தாங்கலை சாமி.....:D

sarcharan
04-01-2007, 04:26 AM
தாங்கலை சாமி.....:D

பல பேரு மெடிக்கல் பில் claim பண்ண உதவிய காயத்ரி வாழ்க....

அறிஞர்
04-01-2007, 01:09 PM
காயத்ரி இன்னும் தங்களுக்கு தெரிந்த புதிய கடிகளை கொடுங்கள்.
----
பழைய பதிப்புக்களை பாருங்கள்.. உங்களுக்கு இணையான கடி வீரர்கள் இங்கு இருக்கிறார்கள்.

ஓவியா
07-01-2007, 01:22 AM
ரசித்தேன்

நன்றி காயூ