PDA

View Full Version : புத்தாண்டு மத்தாப்பு



SathishVijayaraghavan
03-01-2007, 02:33 AM
சுட்டிப்பைய்யன்: சார், என் தலை'ல எரும்பு ஏறுது பாருங்க..!

வாத்தியார்: அதை எடுத்து போடாம, ஏண்டா என்கிட்ட சொல்ர?

சுட்டிப்பைய்யன்: நீங்க தானே சார் சொன்னீங்க,! என் தலை'ல ஒன்னுமே ஏறலனு?

--------------------------------------------------------------

ஸ்டுடென்ட்1 : நம்ம டீச்ச்ர்க்கு என்ன ஆச்சு?

ஸ்டுடென்ட் 2 : ஏன்டா??

ஸ்டுடென்ட் 1: இப்ப தானெ பொர்ட்'ல திருக்குறள்' அவறே எழுதிட்டு, "திருக்குறள்'ள எழுதினது யாரு"னு கெக்குராரு?

--------------------------------------------------------

SathishVijayaraghavan
03-01-2007, 02:34 AM
வாத்தியார்: அமேரிக்காவை கண்டு பிடிச்சது யாரு??

சுட்டிப்பைய்யன்: அமேரிக்காவை மறைச்சி வச்சது யாரு? அத மொதல்ல சொல்லுங்க சார்..!

-----------------------------------------

டீச்சர்: படிக்கிற பசங்க ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா போதும்.


சுட்டிப்பைய்யன்: ஸ்கூல்லையா?? வீட்லையா சார்??

SathishVijayaraghavan
03-01-2007, 02:34 AM
டீச்சர்: (1)ஒரு தவளை இருக்கு,
(2) கப்பல் ஒன்னு மூழ்கிகிட்டு இருக்கு,
(3) உருளைகிழங்கு விலை ரூ 3 ஒரு கிளோ . அப்ப எனக்கு வையசு என்ன??

சுட்டிப்பைய்யன்: 32 இருக்கும் சார்.

வாத்தியார்: உனக்கு எப்படி தெரியும்?

சுட்டிப்பைய்யன்: அதுவா சார்..! , என் தங்கைகு வையசு 16, அவ ஒரு அர-லூசு, அத வச்சி தான் சொன்னேன்.

SathishVijayaraghavan
03-01-2007, 02:35 AM
நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி, ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க??

டாக்டர் : ஆமாம்,

நோயாளி : ஆனா, அந்த Tonic பாடிட்லெ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது?

டாக்டர் : ...??

------------------------------------------------------
நோயாளி: டாக்டர்..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம்..?

டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! "கொழுப்பு"..

SathishVijayaraghavan
03-01-2007, 02:36 AM
டாக்டர்: உங்க கனவருக்கு கொஞ்சம் ஓய்வு தேவை படுது.. இன்தாங்க மாத்திரைகள்...!

மனைவி: டாக்டர், இதை எப்பொ நான் அவருக்கு குடுக்கனும்?

டாக்டர்: இந்த மாத்திரைகள் அவருக்கு இல்லை, உங்களுக்காக குடுத்தது..!

-----------------------------------------------------------

டாக்டர் : முதல்ல, மீண், நன்டு, கொழி சாபிடுறதெல்லாம் நீங்க உடனடியா நிருத்தி யாகனும்..!!

நோயாளி : டாக்டர்..!! இது என்னங்க அநியாயம்..! அதுங்க சாபிடுரத போய் நான் எப்படி நிருத்த முடியும்??!

SathishVijayaraghavan
03-01-2007, 02:37 AM
டாக்டர்: காதுல பல்லி போகுற வறைக்கும் என்ன பன்னிட்டு இருந்தீங்க?

நோயாளி : மொதல்ல கரபாண் பூச்சி தான் டாக்டர் போச்சி.>!, அத புடிக்க தான் போகுதுனு நினைச்சேன்..!

------------------------------------------------------

விருந்தில் முதன் முதலில் இனிப்பு பரிமாருகிறார்களே, ஏன் என்று தெரியுமா?

திங்க தான்,..! பின்னே தலையில் தேய்த்துக்கொல்லவா வைப்பார்கள்?

--------------------------------------------------------

மனைவி யிடமும் காதலியிடமும் மறைக்க வேன்டியவைகள் எவை?


மனைவியிடம் காதலியையும்,
காதலியிடம் மனைவியையும்
மறைக்க வேன்டும்..

SathishVijayaraghavan
03-01-2007, 02:40 AM
கடவுள் ஒரு நாள் பூமிக்கு வந்தார், நம் குடிமக்களை பார்த்து பொறாமை கொன்டு, அப்படி என்ன தான் இருக்கு இந்த, TASMAC கடைக்குள்'யென்ரு காண, உள்ளே சென்று ORDER செய்தார், 5 BEER முழுவதும் முடிந்தது, ஒரு வித்தியாசமும் தெரியாததல் தொட்ர்ந்தார், 2 FULL.. அப்பொழுதும் ஒன்னும் ஆகல..

மீன்டும் ஆறம்பிதார், 2 BEER.. கடைகாரர்க்கு ஆச்ச்ரியம் தாளாமல், கேடடார்.. "யார் யா நீ??
இவளவு சாபிட்டும் உனக்கு போதை எறல? மறுபடியும் கேட்குரே? "

அதற்க்கு நம்ம கடவுள் "நான் தான் கடவுள் எனக்கு இந்த போதை ஒன்றும் செய்யாது" என்றார்.

கடைகாரர் : "தோ டா..! தொரைக்கு இப்ப தான் ஏர அரம்பிச்சி இருக்கு..! நடகட்டும்..!
நடகட்டும்..!"

மதி
03-01-2007, 02:48 AM
டேய்..
எப்படிடா.....??
பின்னுற..

இளசு
03-01-2007, 08:28 PM
அத்தனையும் கலக்கல்...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

சபாஷ் சதீஷ்!

அறிஞர்
03-01-2007, 08:33 PM
என்ன கலக்கல் மத்தாப்பு.... இப்படி வெடிக்கிறது..

இன்னும் தொடருங்கள் அன்பரே..

arun
08-01-2007, 10:09 AM
உண்மையிலேயே எல்லாம் புத்தாண்டு மத்தாப்பு தான் அனைத்து ஜோக்குகளும் அருமை பாராட்டுக்கள்

ஆதவா
08-01-2007, 10:30 AM
சதீஸ் அவர்கள் புத்தாண்டு பரிசாக ரூபாய் ஆயிரம் என் மருத்துவ செலவினங்களுக்குத் தருவார் என அறிவிக்கிறேன்..

ஓவியா
08-01-2007, 11:05 AM
நல்லா சிரித்தேன்

நன்றி சதீஷ்

மயூ
08-01-2007, 12:13 PM
ஐயோ! மத்தாப்புப் போல சீ..சீ..பைத்தியம் போல சிரி சிரி என்று சிரித்தேன் அத்தனையும் பட்டாசுக்கள்!!!

SathishVijayaraghavan
11-01-2007, 08:42 AM
சதீஸ் அவர்கள் புத்தாண்டு பரிசாக ரூபாய் ஆயிரம் என் மருத்துவ செலவினங்களுக்குத் தருவார் என அறிவிக்கிறேன்..

நண்பரே இத்துடன் ஆயிரம் ரூபாய்கான காசோலை இனைக்க முயன்றேன்... முடியவில்லை... :-)

பரஞ்சோதி
11-01-2007, 08:46 AM
ஆஹா! ஆஹா!

அட்டகாசமான சிரிப்புகள். கலக்குறீங்க கண்ணா.

வாழ்த்துகள் சதிஷ்.