PDA

View Full Version : உரிமையுடன் வம்பிழு!lenram80
30-12-2006, 11:04 PM
கொலுசு போட்ட குழந்தை என் முன்னால் ஓடியது!
இதைக் கேட்டு என்னவளைப் பார்த்து நான் கேட்டேன்
'நீ சிரித்தாயா?' - என்று!

இதைக் கேட்டு, மகிழ்ச்சியில்
உண்மையிலேயே சிரித்தாள் என்னவள்!
சிரிப்பொலியைக் கேட்டு, நான் கேட்டேன்
'நாய் குரைத்ததா?' - என்று!

அப்போது காட்டினாயே ஒரு பொய் கோபம்!
அது போதுமடி எனக்கு!
இந்த ஜென்மத்துக்கு எனக்கு வராது அன்பு தாகம்!

----------- *x*------------

சாப்பிட்டுவிட்டு 'தங்கமான ருசி' என்றேன்!
அப்போது என் தலையில் முத்தமிட்டாள்!
'நான் சொன்னது தண்ணீரை' என்றேன்!
இப்போது அதே தலையில்
செல்லமாய் குட்டினாளே ஒரு குட்டு!
'இது தான் சூப்பர்' என்றேன், அவள் கன்னத்தைத் தொட்டு!

----------- *x*------------

"ஏங்க, என் கவிதைய கேளுங்களேன்" என்றாய்!
ஏதோ படித்தாய்! உண்மையிலே நான் கவனித்தது உன் கவிதையை அல்ல!

கவிதை சொல்லும் போது கபடியாடிய உன் உதடுகளை!
தொட்டில் ஆடிய உன் காது கம்மல்களை!
எம்பி எம்பிக் குதித்த உன் புருவங்களை!
கரகாட்டம் ஆடிய உன் கைகளை!

கடைசியாய் உன் தொண்டைக் குயில் கூவாமல் நிறுத்தியபோது,
உன் கண்கள் என்னை 'களவாணிப்பயல்! கவனிக்கவேயில்லை" என நினைத்த போது
"எப்படிங்க இருக்கு?" என்றாய் எதிர்பார்ப்போடு!
நான் பயங்கரமாகச் சிரித்துவிட்டு,
"உன் காமெடிக் கதைவசனம் சூப்பர். கவிதையைச் சொல் இப்போது" என்றேன்!

"போடா!" என்று பொய் கோபம் காட்டி திரும்பி நின்று,
"கவிதையே கவிதை வாசிக்கிறதே என்று சமாதானம் செய்யாதே!" என்றாய்!

அருகில் வந்து நான் சொன்னேன், "அடி அதிகப்பிரசிங்கியே!
உன்னை என்றைக்கடி நான் கவிதை என்று புகழ்ந்திருக்கிறேன்?" என்றேன்!
ஆச்சரியம் தாங்காமல் விழித்தாய்.

"உன் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒரு இதிகாசமடி!
உன் ஒவ்வொரு அசைவும் ஒரு காப்பியமடி!
அப்படி இருக்கையில் உன்னை எப்படிடி ஒரே ஒரு
கவிதையோடு ஒப்பிட முடியும்?" என்றேன்.
"எப்படிடா இதெல்லாம்?" என்றாய் கன்னத்தைக் காட்டி!
நேரம் காலம் தெரியாமல் என்னை வாட்டி!

----------- *x*------------

பக்கத்து வீட்டுப் பையன், படி இறங்கிப் போகும் போது
"ஆண்டி! நல்லாயிருக்கிங்களா?" என்று கேட்டுப் போனான்.
இதை நான் கவனித்ததால்,
"என்னங்க என்னை போய் ஆண்டிங்கிறான்? " என்றாய்.

"உன்னை ஆண்டின்னா சொன்னான் அந்தப் பயல்?
(யோசித்து விட்டு)சரி விடு.
பாட்டின்னு உண்மையெ சொல்லாமே, ஆண்டின்னு சொன்னானே
அதுக்கு ஆனந்தப் படு" என்றேன்!

உன் கையில் இருந்த பேனாவை, என்னைக் குறிபார்த்து
வேண்டுமென்றே விலக்கி வீசினாய்.
தாவிப்பிடிக்கலாம் என நினைத்து தாவினேன்.
ஆனால் பேனாவை பிடிக்க முடியவில்லை!

அசட்டுத் தனமாய் உன்னை அண்ணாந்து பார்த்தேன்!
"தாத்தாவெல்லாம் தாவி பிடிக்க முடியாது" என்றாய்,
சிரிப்புப் பந்தல் போட்ட சின்ன இதழ்களின் வழியே!

----------- *x*------------

"ஏங்க! Zooக்குப் போவலாமா?" என்றாய்!
"அனிமல்ஸ் பாக்க எதுக்கு அங்கே போகணும்?
இங்கேயே பார்க்கலாம்" என்றேன்.
"எப்படி?" நீ கேட்க
"இப்படி" என கண்ணாடியை உன் முகம் முன்னாடி காண்பித்தேன்!
கோபித்துக் கொண்டு பூஜை அறைக்கு ஓடினாய்!

சமாதானப் படுத்த சாமிதான் துணை என நினைத்து
"கோயிலுக்குப் போகலாமா?" என்றேன்!
"என் சாமி இங்கேயே இருக்கிறான்" என்றாய்!
"ஓ.. தூணிலும் துரும்பிலும் இருக்கிறானென்றால் எங்கே காட்டு?" என்றேன்!
கண்ணாடியை என் முகம் முன்னாடி காண்பித்தாய்!

எனக்குப் புரிந்தது இந்த உறவின் புனிதம்!
ஆனந்த வாழ்க்கைக்கு அன்பு தான் அடிப்படைக் கணிதம்!

ஆதவா
31-12-2006, 04:26 AM
கொலுசு போட்ட குழந்தை என் முன்னால் !


லெனின் நெறய அநுபவம் போலத் தெரிகிறதே!...

காதல் என்பது மணத்திற்குபின் எவ்வாறு வருமென்பதைச் சொல்லிவிட்டீர்கள்..
செல்லச் செல்லச் சண்டைகள், நம் கவிதை உவமைகளை வாழ்க்கையில் காட்டினால் எப்படியிருக்குமென்பதைச் சொல்லியிருக்கிறீர்கள்
இந்த மாதிரியான வாழ்க்கைக் கவிதைகள் வானம் போலத்தான்.. முடிவில்லாதது.

வசனங்கள் இங்கே தவிர்க்க முடியாததுதான் என்றாலும் சற்று நீளத்தைக் குறைத்திருக்கலாம்

எனக்குப் புரிந்தது இந்த உறவின் புனிதம்!
ஆனந்த வாழ்க்கைக்கு அன்பு தான் அடிப்படைக் கணிதம்!

இந்த வரிகளை கொஞ்சம் கவனிக்கவும்.. காதலனுக்கு இந்த உறவு புரியாமலா இவ்வளவு விளையாடியிருக்கிறான்...
ஒருவேளை மேலும் மேலும் புரிந்து கொண்டிருப்பானோ??

அசத்தலான காதல்தம்பதியின் காதல் கவிதை அருமை..
இக்கவிதைபோலவே நாளும் என்வீடும் உம்வீடும் இருக்க வேண்டுகிறேன்..

வாழ்த்துக்களுடன்
ஆதவன்

இளசு
31-12-2006, 07:45 AM
லெனின்

அருமை, இனிமை.

சம்சாரம் சங்கீதம் என்பது சொலவடை..
இனிய குறும்பான கவிதை என்று நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்..


தொட்டிலாடும் கம்மல்கள்..
பெண் = பல இதிகாசங்கள்..

ரசித்து முறுவலிக்க வைத்த வரிகள் பல..


பாராட்டுகள்!

ஓவியா
02-01-2007, 06:55 PM
லென்ராம்,

என்னம்மா இருக்கு கவிதை!!!!!, சும்மா கொண்ணு பொட்டுடீங்கா...:eek:

வாழ்த்துக்கள்...:D


ரசிச்சு படிச்சேன்...அத்தனையும் அன்பின் அமிர்தமாய் இருக்கு ராம்

(முக்கியமா) பாராட்டுக்கள்...:)

நம்பிகோபாலன்
02-01-2007, 07:55 PM
புரிதல் காதலின் வெற்றி -- கவிதை தூள்

lenram80
07-01-2007, 01:15 PM
நன்றி ஆதவா, இளசு, ஓவியா, நம்பிகோபாலன்

ப்ரியன்
22-01-2007, 11:14 AM
வம்பு என்பதன் இன்னொரு பொருள் அறிவீங்களா?

ஷீ-நிசி
22-01-2007, 11:37 AM
சமாதானப் படுத்த சாமிதான் துணை என நினைத்து
"கோயிலுக்குப் போகலாமா?" என்றேன்!
"என் சாமி இங்கேயே இருக்கிறான்" என்றாய்!
"ஓ.. தூணிலும் துரும்பிலும் இருக்கிறானென்றால் எங்கே காட்டு?" என்றேன்!
கண்ணாடியை என் முகம் முன்னாடி காண்பித்தாய்!

இந்தக் கவிதை எங்கு படிக்க நேர்ந்தாலும் எப்போதும் என்னை பரவசத்தில் ஆழ்த்தும் வரிகள். வாழ்த்துக்கள் லெனின்.

leomohan
22-01-2007, 03:39 PM
அற்புதம் லெனின். மேலும் தொடரட்டும் கவிதை மழை.

மதுரகன்
22-01-2007, 05:42 PM
ஐஐஐஐஐஐஐயோ
எவ்வளவு பாராட்டினாலும் தகும் லெனின்
பாராட்டுக்கள்..