PDA

View Full Version : வருக இரண்டாயிரத்து ஏழு



mgandhi
29-12-2006, 06:47 PM
கடந்த இரண்டாயிரத்து ஆறில் எத்தனை
மாற்றங்கள் ஏமாற்றங்கள்-இனி
வரும் புத்தாண்டு இரண்டாயிரத்து ஏழில்
அணு ஆயுதத்தை ஒழித்தும்
பயங்கர வாதத்தை வேர்அறுத்தும்
இலங்கைத் தமிழர் வாழ்வுதனில்-நிரந்தர
நிம்மதியை கொடுக்கவும்-வருக
புத்தாண்டு இரண்டாயிரத்து ஏழு

கடந்த ஆண்டின் கசப்புகளெல்லாம்
வரும் ஆண்டின் படிக்கட்டுகளாக்கி
நிகழும் இந்த ஆண்டினை-வரும்
ஆண்டின் சரித்திரம் ஆக்குவோம்!

இளசு
29-12-2006, 07:10 PM
பாராட்டுகள் காந்தி..

நம்பிக்கைதான் எல்லாம்...

நம்பிச் செயல்படுவோம்.. நல்லவை நடக்கட்டும்!

ஆதவா
29-12-2006, 10:51 PM
ஒவ்வொரு வருடமும் ஒரு கவிதை..... அந்த கவிதையில் ஆயிரம் விதைகள். ஆனால் ஒன்றுகூட மலர்வதில்லை.. பின்னெதற்கு விதைக்கவேண்டும் என நினைப்பவன் நான்..

தங்கள் கவிதை அருமையாக இருக்கிறது அதே சமயம் புத்தாண்டு கவிதையென்றாலே கோரிக்கை கவிதைபோல இருப்பது பழைய ரகம்... மாற்றுங்கள்

kavitha
30-12-2006, 06:35 AM
புத்தாண்டே வருக! வருக!
பழமை மடமைகளைத் தள்ளி
புதுமை மேன்மைகளை அள்ளி
நித்தம் புதுமைப் படைத்திட
புத்தாண்டே நீ வருக!
நித்தம் மகிழ்ச்சியை
அனைவருக்கும் வாரித் தருக!!