PDA

View Full Version : தமிழுக்கு வீர வணக்கம்.மீனாகுமார்
28-12-2006, 05:14 PM
அண்ணா சாலை, சென்னை.
ஒரு நிமிடம் பொறு நண்பா.
சற்றே எத்திக்கும் திரும்பிப்பார்.
எங்கும் ஆங்கிலப் பலகைகள்.
மிக்க நன்றி.
தமிழ் அன்னையை வெற்றிகரமாக புதைத்துவிட்டாய்.

சென்னை - உலகின் தலைநகரமென
நாள்தோறும் மார்தட்டும் எனக்கு
வெட்கம்.
அரைக்கால் சட்டை எங்கு வேண்டுமோ
அங்கு மட்டும் மறைக்காது போன்ற
அவமானம்.

பல்லயிரமாண்டு உன்னிடமிருந்து
தப்பிப்பிழைத்தது தமிழ்.
இன்று
உன்னிடம் அதற்கு மரண தண்டனை.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும்
ஆங்கிலம் தெரியாதவர் பலப்பலர்.
நாளை
இந்தியாவில் ஆங்கிலம் தெரியாதவர்
சிறுபான்மையினர்! அவருக்கும் பெயருண்டு
கீழ்மக்களென்று.

எந்தப் பள்ளிக்கூடத்திலும் இனி
தமிழே சொல்லிக் கொடுக்காதீர்கள்.
அதுவே நம் தமிழன்னையை கொல்ல
எளிதான வழி.

விழுமின் எழுமின் என்றேன் சிலகாலம்முன்.
பலனில்லை.
எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் நாம் ?
சுடுகாடு தான் கண்ணில் தெரிகிறது.
ஒவ்வொரு தமிழனும் முன்புதியில் உணர்ந்திடுக.

சுவையில்லா ஆங்கிலத்தின் வலிமையதன் மக்களே.
வலிமை பற்றி தமிழா, உனக்கு பாடம் வேண்டுமா ?
ஆங்கிலத்தில் பேசும் மழழையும் பெரியவரையும்
மதிக்கிறாய். வணங்குகிறாய். பூஜிக்கிறாய்.

இன்றோடு அதை நிறுத்திவிடு.
உன் எண்ணத்தை சீர்படுத்து.

தமிழின் உயிர் அதன் பயன்பாட்டில்.
எல்லா புதிய தொழில்நுட்ப சொல்லுக்கும்
தமிழ் சொல்லை நிறுவிவிடு.
தமிழையே எங்கும் எப்போதும் பயன்படுத்து.

தமிழ் பேசுவோரை வணங்கிவிடு.
வித்தை பலபுரிந்து தமிழுக்கு சமர்ப்பி.
செவ்வாயில் குடியேறு. ஆங்கு
தமிழ் கற்றவர் மட்டுமே அனுமதி.

தமிழை செம்மைப்படுத்துவோரோடு சேர்.
தமிழ் கற்றுத்தரா பள்ளிகளை இங்கிலாந்து போகச்சொல்.
மெல்லத் தமிழ் இனிச் சாகும் - என்ற
வேந்தனாரின் மொழியை பொய்யாக்கிடு.

இவ்வுலகம் அழிந்தாலும் எவ்வுலகம் அழிந்தாலும்
தமிழே.. உனக்கு மரணமேயில்லை !

இளசு
29-12-2006, 07:38 PM
வாருங்கள் மீனாகுமார் அவர்களே..

பாராட்டுகள் மொழிப்பற்று, அக்கறை பறைசாற்றும் வீரக்கவிதைக்கு..


ஸ்காட்டிஷ், ஐரிஷ், வெல்ஷ் என பல மொழிகள் ஆங்கிலத்தால் கொல்லப்பட்டன..இவை அரசியலில் இங்கிலாந்துக்கு அடிமைப்பட்ட தேசமொழிகள்..

பிரஞ்சு, ஸ்பானிஷ், ஜெர்மன் - பாதிக்கப்படவில்லை. இவை அரசியலில் சவால் விட்டு தழைத்த நாடுகளின் மொழிகள்..

இந்திய அரசியலிலும் வடக்கு ஆள- இந்தி வாழும்.

ஆட்சியில் நமக்குப் பங்கென்றால் தமிழ் செம்மொழி ஆகும்..

ஆட்சி, அதிகாரம் - தமிழர் அடைய அடைய
அரசாளும் தமிழ்....!

அந்தச் செல்வாக்குதான் கலை, அறிவியல் ,மற்ற துறைகளில் தமிழை முதன்மைப்படுத்தி கோலோச்ச வைக்கும்...

leomohan
29-12-2006, 07:44 PM
அண்ணா சாலை, சென்னை.
ஒரு நிமிடம் பொறு நண்பா.
சற்றே எத்திக்கும் திரும்பிப்பார்.
எங்கும் ஆங்கிலப் பலகைகள்.
மிக்க நன்றி.
தமிழ் அன்னையை வெற்றிகரமாக புதைத்துவிட்டாய்.


தமிழே.. உனக்கு மரணமேயில்லை !


வாருங்கள் மீனாகுமார். தமிழோடு கலந்ததற்கு நன்றி. நல்வரவு

ஆதவா
29-12-2006, 10:48 PM
தமிழோடு கலந்தவரே,, தங்களை பற்றி அறிமுகம் பகுதியில் சற்று கூறுங்களேன்..

மன்மதன்
30-12-2006, 09:40 AM
ஒரு நல்ல கவிதையை கொடுத்த தாங்கள் உங்களின் அறிமுகத்தையும் கொடுங்களேன்..

இளசு
30-01-2007, 06:41 PM
ஒரு நல்ல கவிதையை கொடுத்த தாங்கள் உங்களின் அறிமுகத்தையும் கொடுங்களேன்..


இங்கே பாருங்கள்:


http://www.tamilmantram.com/vb/showthread.php?p=171132#post171132

அறிஞர்
30-01-2007, 06:47 PM
தமிழுக்கு வணக்கம் பாடின வரிகள் அருமை....

தங்களின் கையொப்பத்தில் உள்ள வார்த்தைகளும்
கவிதையில் கூறிய வரிகளும் சிந்திக்க வைக்கின்றன...

தமிழர்கள் தமிழரோடு உறவாடினாலும்....
எதிர்கால சந்ததிகு தமிழ் கற்றுக்கொடுத்தாலும்..
தமிழ் அழியாமல் காக்கலாம்...

தொடருங்கள்.. தங்களின் கவிதைகளை....

மனோஜ்
30-01-2007, 07:05 PM
தமிழின் நிலையை உயர்த்த உனர்த்தும் கவிதை அறுமை...
தற்பொழுது தமிழரிடம் 5 நிமிடம் பேசினால் எதாவது ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லாமல் இல்லை இந்த நிலை நீடித்தால் தமிழின் கதி:confused: :eek: :eek:

ஷீ-நிசி
31-01-2007, 03:40 AM
தமிழுக்காய் ஒரு கவிதை... உணர வேண்டிய உண்மைகள்.

மதுரகன்
31-01-2007, 04:28 PM
தமிழுடன் ஆரம்பித்துள்ளீர்கள்..
வெற்றிநிச்சயம்
வாழ்த்துக்கள்

sham
07-02-2007, 05:01 AM
அளவுக்கு மீறிய ஆங்கிலத்தை அழி. தமிழுக்கு மகனாயிரு. முடியவில்லையேல் செத்தொழி. எதிரிக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்லாதே.
வாசிக்கும் போழுது உண்மையாகவே தமிழ்ரத்தம் கொதிக்கிறது. ஏனெனில் வாசித்தபோது கோடிட்டதை மாற்றி வாசித்தேன். நன்றி நண்பா. சிலிர்ப்பூட்டும் கவிதைகளை தொடர்வீர் என எதிர்பார்க்கிறேன்.

சே-தாசன்
07-02-2007, 05:06 AM
அளவுக்கு மீறிய ஆங்கிலத்தை அழி. தமிழுக்கு மகனாயிரு. முடியவில்லையேல் செத்தொழி. எதிரிக்கு மகனாயிருந்து தமிழைக் கொல்லாதே.
வாசிக்கும் போழுது உண்மையாகவே தமிழ்ரத்தம் கொதிக்கிறது. ஏனெனில் வாசித்தபோது கோடிட்டதை மாற்றி வாசித்தேன். நன்றி நண்பா. சிலிர்ப்பூட்டும் கவிதைகளை தொடர்வீர் என எதிர்பார்க்கிறேன்.

ஸ்.ஸ்.ஸ்ஸ்ஸ்.... ஸ்ப்பா இப்பவே கண்ணக்கட்டுதே

pradeepkt
07-02-2007, 05:20 AM
கிருஷாந்துக்கு எங்க போனாலும் கண்ணைக் கட்டுது போல??? :D

சே-தாசன்
07-02-2007, 05:34 AM
என்ன செய்யிறது அண்ணா பழக்கமாயிடிச்சு

மனோஜ்
07-02-2007, 06:29 AM
தமிழன் அறுமை சிலறுக்கு புரிவதில்லை இந்த கவிதையை படித்தாவது உனறட்டும்

pradeepkt
07-02-2007, 07:35 AM
தமிழன் அறுமை சிலறுக்கு புரிவதில்லை இந்த கவிதையைப் படித்தாவது உனறட்டும்
மனோஜ், சரியாகச் சொன்னீர்கள். எங்கே போனாலும் தமிழன் அடிதான் வாங்குகிறான்.
சில திருத்தங்கள்.
-- அருமை சிலருக்கு உணரட்டும்.