PDA

View Full Version : ஒற்றை சிறகு



ப்ரியன்
28-12-2006, 11:48 AM
http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Otrai_siragu.jpg

கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!

- ப்ரியன்.

leomohan
28-12-2006, 12:19 PM
அருமை நண்பா. தொடருங்கள்.

தாமரை
28-12-2006, 01:22 PM
மீரா இங்க பாருங்க உங்க கிளிக்கு யாரோ இரங்கல் கவிதை எழுதி இருக்காங்க..:eek: :eek: :eek:

meera
28-12-2006, 02:20 PM
மீரா இங்க பாருங்க உங்க கிளிக்கு யாரோ இரங்கல் கவிதை எழுதி இருக்காங்க..:eek: :eek: :eek:

அண்ணா,

இரங்கல் கவிதையாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ:eek: :eek: :eek:

ஆதவா
28-12-2006, 03:43 PM
மீரா இங்க பாருங்க உங்க கிளிக்கு யாரோ இரங்கல் கவிதை எழுதி இருக்காங்க..:eek: :eek: :eek:

செத்துப்போன நம்ம ஹக்கூ கிளியோட இறகா? இது எப்படி நம்ம பிரியன் கையில?

ஆதவா
28-12-2006, 03:43 PM
http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Otrai_siragu.jpg

கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!

- ப்ரியன்.

இறகிலேயும் உங்கள் கவிதை சிக்கிவிட்டது... வாழ்த்துக்கள்

ஆதவா
28-12-2006, 03:44 PM
கூண்டில் உதிர்ந்திட்ட
ஒற்றை சிறகு;
அடிகாற்றின் விசையில்
கனமாய் படபடத்தபடி
அரற்றிக் கொண்டிருக்கிறது
பறவையின் விடுதலை தாபத்தை!

- ப்ரியன்.

இறகிலேயும் உங்கள் கவிதை சிக்கிவிட்டது... வாழ்த்துக்கள்

இளசு
29-12-2006, 07:32 PM
எப்படி படபடத்திருக்கலாம்
எங்கெங்கு பறந்திருக்கலாம்...

ஏனிப்படி....எதனால்..??
எனக்கு மட்டும்....!!!

இறகு அரற்றுவது
எனக்கும் கேட்கிறது...
இதயம் கனக்கிறது...


பாராட்டுகள் ப்ரியன்..!

mayan
03-01-2007, 04:40 PM
மரத்திலிருந்து உதிர்ந்த
இலையொன்று
காற்றின் தீராத பக்கங்களில்
தனது கதையை எழுதிக் கொண்டிருக்கிறது..
- பிரமிள்

உங்கள் கவிதையைப் படித்ததும் இந்தக் கவிதை வரிகள் ஞாபகத்திற்கு வந்து விட்டன.

உங்கள் மற்ற கவிதைகளைப் படிக்கச் செல்கிறேன்

பென்ஸ்
03-01-2007, 04:55 PM
ப்ரியன்..
சில கவிதைகள் ஒரு வரியில் எழுதி விட்டு ஓராயிட்ரம் விமர்சனம் பெறும்....
உங்க கவிதையில் எனக்கு பிடிச்சதே என்ன தெரியுமா.. சும்மா வழ வழான்னு அளக்காம சிறு வரிகளில் வரிந்து விட்டு செல்லுவது

கூண்டு பறவை இன்னும் கூண்டில்
ஒற்றை சிறகுக்கு விடுதலை
இறந்து பிரிந்த சிறகிலும் விடுதலையின் தாகம்

என்னவன் விஜய்
17-05-2008, 10:42 PM
ஒரு இறக்கை இறக்கையில் இவ்வளவு இரசனையா?ம்.....சூப்பர்