PDA

View Full Version : ஹேப்பி நியூ இயர்...!



தமிழ் தொண்டன்
28-12-2006, 06:16 AM
பிறந்த நாள்
கொண்டாடுகிறது காலம்
மகிழ்ச்சியை பரிமாற்றம் செய்து
அதன் கை குலுக்கி
வாழ்த்துச் சொல்லுங்கள்.

அதைக் கொடு
இதை நிறைவேற்று
என்று காலத்திடம்
கவிதையில் கோரிக்கை வைத்து
சலித்து விட்டது எனக்கு.

கேட்பதற்கு மிச்சம்
ஏதும் இருக்கிறதா
இங்கு...?

மீண்டும் மறப்பதற்கு
வசதியாக தள்ளுபடி விலையில்
ஒரு புத்தாண்டு உறுதிமொழி
கேட்டுப் பார்க்கலாம்.


மீண்டும் எங்கோ
ஒரு மூலையில்
நிகழப் போகும்
வன்முறையின்
பல ரூபங்களை

என்றோ சொந்த ஊருக்கு
வரும் போர் வீரனை போல
சந்திக்க எழுகிறது காலம்

நம்பிக்கையை மட்டும்
தனது வடுக்களில்
மருந்தாய் பூசியபடி

எங்கு செல்கிறாய் நண்பா
மகிழ்ச்சியை எடுத்துக்கொள்
காயப்படும் முன்
மீண்டும் பிறந்த நாள்
கொண்டாடுகிறது காலம்.

தமிழ் தொண்டன்
28-12-2006, 06:19 AM
தலைப்பு போல இன்றைய சூழலில்
வாழ்த்துக்கள் சொல்வதால் இதையே
கவிதைக்கு தலைப்பாய் தந்துள்ளேன்.
கருத்துக்கள், விமர்சனங்கள் எதிர்நோக்கி...

meera
28-12-2006, 02:25 PM
நம்பிக்கையை மட்டும்
தனது வடுக்களில்
மருந்தாய் பூசியபடி



தமிழ் தொண்டன்,

நல்ல கவிதை.வரும் புத்தாண்டு அமைதியாய் கடக்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

ஆதவா
28-12-2006, 03:41 PM
வித்தியாசமான கோணம்.. (450 டிகிரி)

அருமையான பதிவு.. தமிழ் தொண்டனெனப் பெயர் கொண்டாதால்தான் என்னவோ கவிதை அருமையாக வருகிறது..

வாழ்த்துக்கள்

இளசு
29-12-2006, 07:29 PM
நம்பிக்கை மருந்து...
நைந்துபோகும் மனித நேயத்துக்கு
அவசியம் தேவை...

பாராட்டுகள் தமிழ் தொண்டன்..

leomohan
29-12-2006, 07:45 PM
ஆழ்ந்த கவிதை. நன்றி.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.