PDA

View Full Version : விஸ்டா வருகின்றார்!!!!மயூ
28-12-2006, 03:47 AM
அந்தா வருது இந்தா வருது என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டு இருந்த விஸ்டா ஆபரேட்டிங் சிஸ்டம் கடைசியாக உத்தியோக பூர்வமாக ஜனவரி 30 ல் வர உள்ளது.

இதில் சிறப்பான விடையம் என்னவெனில் விஸ்டாவுடன் ஆபீஸ் 2007 ம் இணைக்கப்பட்டுள்ளதாம். ம்ஹூம்... எல்லாம் மைக்ராசாப்டின் சந்தைப்படுத்தல் தந்திரம். இதே வழியில்தான் அன்று நெட்ஸ்கேப் நவிகேட்டர் வீழ்த்தப்பட்டது.

http://www.geekland.org/picture_library/ms_vista.jpg
பிருத்தானியா மைக்ராசாப் அமைப்பின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஃபிரேசர் கருத்துத் தெரிவிக்கயில் இந்த இயங்குதளம் மைக்ராசாப்ட்டின் மற்றய இயங்கு தளங்களைவிட மிக வேகமாக விற்றுத் தீர்க்கும் என்று கூறினார். அத்துடன் அடுத்த சில வருடங்களில் 100 மில்லியனுக்கு அதிகமான கணனிகளில் விஸ்டா இயங்குதளம் பயன்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

விஸ்டா இயங்குதளத்தின் எதிர்கால வெற்றிக்கு பிரதானமாக மூன்று செயற்பாடுகள் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

1. Underlying Engineering (Encryption, Capability)
2. Functionality (e.g. Integrated search ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் வசதி)
3. Graphics Its visually stunning கண்களைக் கொள்ளை கொள்கின்றது.

விஸ்டாவின் பயன்படும் வரைகலை மக் ஓஸ் போன்று அழகானதாகவும் பயனருக்கு இலகுவில் கையாளக் கூடியதாகவும் இருப்பதாகக் கருதப்படுகின்றது. வின்டோசுக்கு முதலே மக் ஓ.ஸ் வரைகலை பயனர் இடைமுகத்தைப் (Graphical User Interface) பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளியான விஸ்டா பீட்டாவின் மூலம் மைக்ரோசாப்ட் இந்த இயங்குதளத்தில் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளது.

எது எதுவாயினும் முறையான டெஸ்டிங் செய்யாமல் எந்த நிறுவனமும் கண்ணை மூடிக்கொண்டு விஸ்டாவிற்கு மாறாது என்பதுதான் உண்மை.

vijay-dk
28-12-2006, 09:59 PM
தகவலுக்கு மிக்க நன்றி...நான் அண்மைகாலமாக விஸ்டா பீட்டாவை என் கணணியில் பாவித்து வருகிறேன்...மிக அருமையாக இருக்கிறது...

ஆதவா
28-12-2006, 11:29 PM
விஸ்டாவா??? முதல்ல விலைய சொல்லுங்கப்பா!!!

pradeepkt
01-01-2007, 09:55 AM
விஸ்டாவின் அல்டிமேட் எடிஷன் அறுநூறு அமெரிக்க டாலர்கள் என்று கேள்வி.

இந்த முறை மும்பை சென்ற போது இன்னும் வெளிவராத விஸ்டாவையே கேட்வே ஆஃப் இந்தியா பக்கத்தில் தெருவில் போட்டு நூற்றைம்பது ரூபாய்க்கு விற்பதை என் கண்ணால் பார்த்தேன்.

ஆதவா
01-01-2007, 10:23 AM
விஸ்டாவின் அல்டிமேட் எடிஷன் அறுநூறு அமெரிக்க டாலர்கள் என்று கேள்வி.

இந்த முறை மும்பை சென்ற போது இன்னும் வெளிவராத விஸ்டாவையே கேட்வே ஆஃப் இந்தியா பக்கத்தில் தெருவில் போட்டு நூற்றைம்பது ரூபாய்க்கு விற்பதை என் கண்ணால் பார்த்தேன்.

அது பீட்ட விஸ்டா வாக இருக்கும்... இது Microsoft லேயே இலவசமாக கிடைக்கும்

ஷீ-நிசி
01-01-2007, 11:23 AM
நான் பீட்டா விஸ்டாவை உபயோகித்துள்ளேன்.... புகைப்படங்களை slide show-ல் பார்க்கும்போது வியந்தேன்....வெறுமனே பார்க்கும் slide show-ல் இப்படியும் ஒரு புதுமையை புகுத்த முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன்.

ஆதவா
01-01-2007, 12:19 PM
நான் பீட்டா விஸ்டாவை உபயோகித்துள்ளேன்.... புகைப்படங்களை slide show-ல் பார்க்கும்போது வியந்தேன்....வெறுமனே பார்க்கும் slide show-ல் இப்படியும் ஒரு புதுமையை புகுத்த முடியுமா என்று ஆச்சரியப்பட்டேன்.

அது ரெம்ப ஸ்லோ பா

Gurudev
18-01-2007, 11:56 AM
அதன் விலையும் அப்படி அதேபோல் எடையும் அப்படியாமே. எதற்கும் அவசரப்படக்கூடாது. ஓட்டை ஒடிசல்கள் எல்லாம் பார்த்துப்பார்த்து அடைத்து முழுமையான கனியாக வெளிவர சில வருடங்கள் ஆகலாம். அப்போது விலையும் குறைந்து விடும். ஏன் அவசரம்?

அதுமட்டுமல்ல Vista விற்கு ஒத்திசைவான டிறைவர்கள், மென்பொருட்கள், உதவி கட்டுரைகள், பிரைச்சனைக்குரிய தீர்வுகள் என்பன தற்போது இணையத்தில் கிடைப்பதில்லை. இவை வெளிவர சில வருடங்கள் ஆகலாம். எனவே விஷட்டாவிற்கு அவசரம் வேண்டாம்.

pradeepkt
19-01-2007, 06:04 AM
அது பீட்ட விஸ்டா வாக இருக்கும்... இது Microsoft லேயே இலவசமாக கிடைக்கும்
இல்லைங்க... அது வெளிவராத ஆனால் கம்பெனிகளுக்குக் கொடுக்கப் பட்ட முழு விஸ்டா. இந்த பைரஸி மார்க்கெட்டில் இந்தியாவுக்குச் சீக்கிரம் முதலிடம் கிடைத்துவிடும் என்று கேள்வி.

Mano.G.
19-01-2007, 07:51 AM
திருட்டு வீசிடி, பைரஸி சாப்ட்வேருக்கு பெயர்போன மலேசிய
சைனா பஜரில் எம் எஸ் விஸ்டா இன்னமும் வரவில்லை.
இங்கு கெடுபுடி பயங்கரமாக உள்ளது.

மனோ.ஜி

மனோஜ்
20-01-2007, 07:31 AM
விஸ்டா பீட்டா எந்த தலத்தில் பதிவிறக்கம் செய்ய முடியும்

மயூ
20-01-2007, 09:03 AM
நிச்சயமாக மைக்ராசாப்ட் தளத்தில் பணம் செலுத்திப் பதிவிறக்கலாம் என்று நினைக்கின்றேன்!

மனோஜ்
20-01-2007, 06:18 PM
இலவசமாக எங்கு கி்டைக்கும் மயூரேசன் அதசெல்லுங்க
சுட்டிய தாங்க

மயூ
21-01-2007, 04:24 AM
இலவசமாக எங்கு கி்டைக்கும் மயூரேசன் அதசெல்லுங்க
சுட்டிய தாங்க
ஜனவரி 30 தானே வெளிவருது??? கொழும்பில் வந்ததும் 150 ரூபாவிற்கு வாங்கிவிடலாம் :eek:

மனோஜ்
21-01-2007, 07:11 AM
முதல்ல எனக்கு ஒரு காப்பி தந்தருனு மரந்திரதிங்க
மயூரேசன்

மயூ
21-01-2007, 11:57 AM
முதல்ல எனக்கு ஒரு காப்பி தந்தருனு மரந்திரதிங்க
மயூரேசன்
பிரதீப்பு அண்ணா பாத்தியளா! மைக்ரோசாப்ட் என்ன நிலமைக்கு உள்ளாகுதெண்டு! :D :D