PDA

View Full Version : நிலவுக்குப் போகலாம் வாருங்கள்lenram80
28-12-2006, 03:17 AM
பயணத்திற்கு முன் சில பயனுள்ள அறிவிப்பு:
---------------------------------------
-நிலவில் காற்று & நீர் கிடையாது. ஆக, நிலவில் (காற்று இல்லாத இடத்தில்) மனிதனுக்குக் காது கேட்காது.
-பூமியின் நிழல், நிலவின் மீது படுவதால் தான், வளர் பிறையும், தேய்பிறையும் நடக்கின்றன.
-சூரிய குடும்பத்தில் தற்பொழுது 8 கோள்கள் தான் இருக்கின்றன. புளுட்டோவை கோள் வரிசையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
-ஒரு பொருளின் எடை 1/6 தான் நிலவில் இருக்கும். அதாவது, பூமியில் 60 கிலோ, நிலவில் 10 கிலோ தான்.

பயணியுங்கள் இப்போது:
---------------------

முந்தாநாள் வரை முழுக்கறுப்பு - அமாவாசையாய்!
பதினைந்தே நாளில் பளபளப்பு - பவுர்ணமியாய்!
நிலவே, என்ன முகப்பசை உபயோகிக்கிறாய்?

எந்த முட்டாள் பயல்,
மொத்த மாவையும் ஒன்றாய் சேர்த்து, ஓரேஒரு லட்டு செய்து
அதையும் எல்லோருக்கும் எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்தவன்?

நிலவே,சொல்வதைக் கேள்!
எத்தனை முறை உலகத்தைச் சுற்றினாலும் உனக்குக் கிடைக்காது.
யானைமுகன் அந்த ஞானப்பழத்தை எப்போதோ சாப்பிட்டுவிட்டான்!

நாங்கள் உன்மேல் காலடி வைத்ததும் கத்தினாயா?
மன்னித்து விடு!
காற்றில்லா இடத்தில் மனிதனுக்கு காது கேட்காது!

உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?
உன்னுடம்பை தானே கொஞ்சம் கொஞ்சமாய்
நின்று நிதானமாய் தன் நிழல் வாயின் மூலம்
தின்று தீர்க்கிறது, இந்த திமிர் பிடித்த பூமி!
பிறகு ஏன் இதையே சுற்றிச்சுற்றி வருகிறாய்?

என்னது?
மனிதன் ஏதாவது தருவான் என்றா
உடல் தேய்ந்தாலும் பரவாயில்லை என்று
உலகத்தைச் சுற்றுகிறாய்?
அடப்பாவமே!
இவன் எச்சில் கையால் கூட காக்காய் விரட்டமாட்டான்!
உன்னிடம் வந்த பின்பும், அள்ளாமல் இருக்கிறானே!
அதற்கு ஆனந்தப் படு!

குருதி பாயும் இதயம் இருந்தும் இங்கே அரக்க குணம்!
ஈரமே இல்லாத உனக்கு எப்படித் தான் இவ்வளவு இரக்க குணமோ?
மனிதன் உதவி கேட்காமலேயே, ஒளி கொடுக்கிறாயே!

ஆம். நீ சொல்வது சரி தான்!
குடிகாரன் தான் அந்தக் கதிரவன்!
சாயங்காலம் ஆனால் போதும்,
சாராயம் குடித்துவிட்டு எங்கு போய் சாய்கிறானோ?
ஏதோ, நீ கொடுக்கும் வெளிச்சத்தில் தான்
பூமி பாதை மாறாமல் பயணிக்கிறதோ?

சரி, இரவில் உன் வீட்டில் தங்குகிறான் சூரியன் என்கிறாய்.
பகலில் எங்கு போய்கிறான் தெரியுமா, உன் ஏகபத்தினி விரதன்?
உன் சகக்கழுத்தி* பூமியோடு சந்தோஷமாய் இருக்கிறான்.
பொறு!
நீ கோபப்படுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
உன்னைச் சேர்க்காமல், எங்களுக்குத் தெரிந்தே அவனுக்கு எட்டு மனைவிகள்!
இதை மானிடன் நான் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிறாயா?
அடுத்தவனைப் போட்டுக் கொடுப்பதில் எங்களுக்கு அலாதி சுகம்!

'உடற்பயிற்சி செய்யாமலேயே உடல்எடை குறைக்கலாம் வாருங்கள்'
என்று விளம்பரம் கொடுத்து எங்களை வலைக்கப் பார்க்கிறாயா?
முதலில் நீராலும், காற்றாலும் உன்னை நிரப்பு!
பிறகு பார்!
கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு வந்து கும்மாளம் அடிக்கிறோம்!

*சகக்கழுத்தி - சக்காளத்தி (நடைமுறைத் தமிழில்), ஒன்றிற்கு மேற்பட்ட தாரங்கள் (உரைநடை தமிழில்)

மயூ
28-12-2006, 03:54 AM
வித்தியாமான சிந்தனைகள் வரிகள்!!
பாராட்டுக்கள் அன்பரே!!!
காற்றால் சந்திரன் தன்னை நிரப்பக் கூடாது என்னது அடியேனின் வேண்டுகோள் பின்பு அங்கும் நம்மவர் கொட்டம் போட்டு அத்தனையையும் கெடுத்துவிடுவரே!!!
யொசிக்கும் போது புல்லரிக்கும் விடயங்களில் அண்டவெளியும் ஒன்று!! அதற்கப்பால் என்ன உண்டு என்பது பற்றி மனிதனுக்கு கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை

ஆதவா
28-12-2006, 03:48 PM
நண்பரே அருமையான கவிதைதான்.. மனித இனத்தையே தாக்குவது போலல்லவா உள்ளது?

இங்கு சில நல்லவர்களும் உள்ளார்கள் ( நாந்தான்..ஹி ஹி )

அல்லிராணி
28-12-2006, 04:23 PM
பயணத்திற்கு முன் சில பயனுள்ள அறிவிப்பு:
---------------------------------------
-நிலவில் காற்று & நீர் கிடையாது. ஆக, நிலவில் (காற்று இல்லாத இடத்தில்) மனிதனுக்குக் காது கேட்காது.
-பூமியின் நிழல், நிலவின் மீது படுவதால் தான், வளர் பிறையும், தேய்பிறையும் நடக்கின்றன.
-சூரிய குடும்பத்தில் தற்பொழுது 8 கோள்கள் தான் இருக்கின்றன. புளுட்டோவை கோள் வரிசையிலிருந்து நீக்கிவிட்டார்கள்.
-ஒரு பொருளின் எடை 1/6 தான் நிலவில் இருக்கும். அதாவது, பூமியில் 60 கிலோ, நிலவில் 10 கிலோ தான்.

பயணியுங்கள் இப்போது:
---------------------

முந்தாநாள் வரை முழுக்கறுப்பு - அமாவாசையாய்!
பதினைந்தே நாளில் பளபளப்பு - பவுர்ணமியாய்!
நிலவே, என்ன முகப்பசை உபயோகிக்கிறாய்?
எந்த முட்டாள் பயல்,
மொத்த மாவையும் ஒன்றாய் சேர்த்து, ஓரேஒரு லட்டு செய்து
அதையும் எல்லோருக்கும் எட்டாத தூரத்தில் தூக்கி எறிந்தவன்?
நிலவே,சொல்வதைக் கேள்!
எத்தனை முறை உலகத்தைச் சுற்றினாலும் உனக்குக் கிடைக்காது.
யானைமுகன் அந்த ஞானப்பழத்தை எப்போதோ சாப்பிட்டுவிட்டான்!

நாங்கள் உன்மேல் காலடி வைத்ததும் கத்தினாயா?
மன்னித்து விடு!
காற்றில்லா இடத்தில் மனிதனுக்கு காது கேட்காது!

உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லையா?
உன்னுடம்பை தானே கொஞ்சம் கொஞ்சமாய்
நின்று நிதானமாய் தன் நிழல் வாயின் மூலம்
தின்று தீர்க்கிறது, இந்த திமிர் பிடித்த பூமி!
பிறகு ஏன் இதையே சுற்றிச்சுற்றி வருகிறாய்?

என்னது?
மனிதன் ஏதாவது தருவான் என்றா
உடல் தேய்ந்தாலும் பரவாயில்லை என்று
உலகத்தைச் சுற்றுகிறாய்?
அடப்பாவமே!
இவன் எச்சில் கையால் கூட காக்காய் விரட்டமாட்டான்!
உன்னிடம் வந்த பின்பும், அள்ளாமல் இருக்கிறானே!
அதற்கு ஆனந்தப் படு!

குருதி பாயும் இதயம் இருந்தும் இங்கே அரக்க குணம்!
ஈரமே இல்லாத உனக்கு எப்படித் தான் இவ்வளவு இரக்க குணமோ?
மனிதன் உதவி கேட்காமலேயே, ஒளி கொடுக்கிறாயே!

ஆம். நீ சொல்வது சரி தான்!
குடிகாரன் தான் அந்தக் கதிரவன்!
சாயங்காலம் ஆனால் போதும்,
சாராயம் குடித்துவிட்டு எங்கு போய் சாய்கிறானோ?
ஏதோ, நீ கொடுக்கும் வெளிச்சத்தில் தான்
பூமி பாதை மாறாமல் பயணிக்கிறதோ?

சரி, இரவில் உன் வீட்டில் தங்குகிறான் சூரியன் என்கிறாய்.
பகலில் எங்கு போய்கிறான் தெரியுமா, உன் ஏகபத்தினி விரதன்?
உன் சகக்கழுத்தி* பூமியோடு சந்தோஷமாய் இருக்கிறான்.
பொறு!
நீ கோபப்படுவதற்கு முன் இன்னும் கொஞ்சம் சொல்லிவிடுகிறேன்.
உன்னைச் சேர்க்காமல், எங்களுக்குத் தெரிந்தே அவனுக்கு எட்டு மனைவிகள்!
இதை மானிடன் நான் ஏன் உன்னிடம் சொல்ல வேண்டும் என்கிறாயா?
அடுத்தவனைப் போட்டுக் கொடுப்பதில் எங்களுக்கு அலாதி சுகம்!'

உடற்பயிற்சி செய்யாமலேயே உடல்எடை குறைக்கலாம் வாருங்கள்'
என்று விளம்பரம் கொடுத்து எங்களை வலைக்கப் பார்க்கிறாயா?
முதலில் நீராலும், காற்றாலும் உன்னை நிரப்பு!
பிறகு பார்!
கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு வந்து கும்மாளம் அடிக்கிறோம்!

*சகக்கழுத்தி - சக்காளத்தி (நடைமுறைத் தமிழில்), ஒன்றிற்கு மேற்பட்ட தாரங்கள் (உரைநடை தமிழில்)

நிலவு இரவில் வந்து அல்லி மொட்டு செவியினை மலர்த்தி ஓதிச் சென்ற பதில்கள்..

எனக்கு மேக்கப் போடவும் கலைக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது...
ஒரு நாள் ஜொலிக்க 14 நாட்கள் மேக்கப், 14 நாட்கள் கலைப்பு..யாரோ கமலாமே 5 மணி நேரம் மேக்கப் போடுவதாகச் சொல்கிறீர்களாமே.. அவரெல்லாம் என் முன் தூசு.

எந்த புத்திசாலி வானத்தில் வைத்த அந்த லட்டை மெதுவாய் மெதுவாய் கபளீகரம் செய்தது???தின்பதாவ்து சிந்தாமல் தின்றானா? நட்சத்திரமாய் சிதறச் சிதற..

பழம் போனால் போகட்டும்.. கொட்டையாவது கிடைக்குமா என்றுதான்...

நான் கத்தவில்லை.. உன் ஷூ நாத்தம் தாங்காமல் தூ எனத் துப்பினேன்.. நீ புழுதி என துடைத்து விட்டுக் கொண்டாயே..

பழிக்குப் பழி வாங்கத்தான்.. சூரியனை மறைத்து கிரகணம் என்று கிறுக்குப் பிடிக்க வைத்ததை மறந்தாயோ???

மனிதன் தரமாட்டான் என்று உறுதியாய் தெரியும்.. தொரும்ப வரமாட்டான் என்று உறுதியில்லையே! அள்ளி வந்தானே ஆர்ம்ஸ்ட்ராங்.. சந்திரப்புழுதி... மனிதனுக்காக ஒளி தரவில்லை.. பாவம் சிற்றுயிர்கள் இவன் டார்ச் டார்ச்சரில் தாங்காதே எனத் தான்.. இதமான ஒளி.. ரத்தம் பாய்வதால்தான் ரத்த வெறி.. நான் பற்றற்றவன் எதையும் அதிகம் கவரமாட்டேன்..(நிலவிற்கு ஈர்ப்பு விசை குறைவு)
குருதி பாய்வதால்தானே இரத்த வெறி..

கதிரவன் என் கணவனல்ல.. எனக்கு கடன் கொடுத்தவன்.. வசூலுக்காக அவன் துரத்த நான் ஓட அவன் அருஇல் வர நான் மறைய.. இதெல்லாம் நான் சொல்லி உனக்கு விளங்க வேண்டுமா?

அவன் குடித்து விட்டு சாய்வதில்லை.. என்னைத் தேடித்தேடி பைத்தியமாய் உலகெங்கும் வலம் வருகிறான்..

அவன் என்னைத் தேடி முகம் சிவக்க கோபத்துடன் அலைவதை பார்த்து விஜய்காந்தஒ கண்ட ஜெயலலிதா போல் குடிகாரன் என்றீர்களே.. போங்கள் பொல்லாத ஆளு நீங்கள்...
பூமி கூடத் தள்ளாடுகிறது புரியுமா உங்களுக்கு (Wobling in the Axis)..
தள்ளாட்டதில் இருந்தால் தள்ளாட்டம் தெரியவா போகிறது?? (ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை)

சகக் கழுத்தி அல்ல சகக் கிழத்தி (கிழத்தி - மனைவி)..
எல்லாம் ஒரு போங்குதான்.. பூமியை நான் சுற்ற பூமி என்னைப் பார்க்க ஆசைப்பட்டு சுற்றிசுற்றி என்னோடு இணைந்து சூரியனைச் சுற்ற இதை அந்த எட்டுப்பேரும் சுற்றி சுற்றி வேடிக்கைப் பார்க்க.. சுறியன் தலைசுற்றி பால்வீதியில் பம்பரமாய் சுற்றி கருந்துளை நோக்கி நகர.. கருந்துளையும் சுற்றிச் சுற்றி அணுவைப் பிளந்து தன்னுள் அடக்க...
ஒளி வெள்ளத்திற்குப் பின் இப்படி ஒரு இருட்டான சரித்திரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. வாயைப் பிளந்து கொண்டு பார்க்காதே உள்ளே ஈ சுற்றிச் சுற்றி வருகிறது...

நீரும் வேண்டாம் நீரும் வேண்டாம்.. காற்றும் வேண்டாம் உங்கள் கழிவுகளும் வேண்டாம்.. நான் சலனமின்றி வாழ்கிறேன்...

lenram80
28-12-2006, 05:18 PM
நண்பரே அருமையான கவிதைதான்.. மனித இனத்தையே தாக்குவது போலல்லவா உள்ளது?

இங்கு சில நல்லவர்களும் உள்ளார்கள் ( நாந்தான்..ஹி ஹி )

நன்றி மயூரேசன் இப்படியே மக்கட்தொகை & ஆகாய அறிவியல் போனால், நிலவில் தங்குவது வெகுநாட்களில்லை.
நன்றி ஆதவா. நல்லவர்கள் லிஸ்டில் தமிழ் மன்ற ஆட்கள் அத்தனை பேரும் இருக்கிறார்கள். கவலை விடுங்கள்.

lenram80
28-12-2006, 05:42 PM
நிலவு இரவில் வந்து அல்லி மொட்டு செவியினை மலர்த்தி ஓதிச் சென்ற பதில்கள்..

எனக்கு மேக்கப் போடவும் கலைக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது...
ஒரு நாள் ஜொலிக்க 14 நாட்கள் மேக்கப், 14 நாட்கள் கலைப்பு..யாரோ கமலாமே 5 மணி நேரம் மேக்கப் போடுவதாகச் சொல்கிறீர்களாமே.. அவரெல்லாம் என் முன் தூசு.

எந்த புத்திசாலி வானத்தில் வைத்த அந்த லட்டை மெதுவாய் மெதுவாய் கபளீகரம் செய்தது???தின்பதாவ்து சிந்தாமல் தின்றானா? நட்சத்திரமாய் சிதறச் சிதற..

பழம் போனால் போகட்டும்.. கொட்டையாவது கிடைக்குமா என்றுதான்...

நான் கத்தவில்லை.. உன் ஷூ நாத்தம் தாங்காமல் தூ எனத் துப்பினேன்.. நீ புழுதி என துடைத்து விட்டுக் கொண்டாயே..

பழிக்குப் பழி வாங்கத்தான்.. சூரியனை மறைத்து கிரகணம் என்று கிறுக்குப் பிடிக்க வைத்ததை மறந்தாயோ???

மனிதன் தரமாட்டான் என்று உறுதியாய் தெரியும்.. தொரும்ப வரமாட்டான் என்று உறுதியில்லையே! அள்ளி வந்தானே ஆர்ம்ஸ்ட்ராங்.. சந்திரப்புழுதி... மனிதனுக்காக ஒளி தரவில்லை.. பாவம் சிற்றுயிர்கள் இவன் டார்ச் டார்ச்சரில் தாங்காதே எனத் தான்.. இதமான ஒளி.. ரத்தம் பாய்வதால்தான் ரத்த வெறி.. நான் பற்றற்றவன் எதையும் அதிகம் கவரமாட்டேன்..(நிலவிற்கு ஈர்ப்பு விசை குறைவு)
குருதி பாய்வதால்தானே இரத்த வெறி..

கதிரவன் என் கணவனல்ல.. எனக்கு கடன் கொடுத்தவன்.. வசூலுக்காக அவன் துரத்த நான் ஓட அவன் அருஇல் வர நான் மறைய.. இதெல்லாம் நான் சொல்லி உனக்கு விளங்க வேண்டுமா?

அவன் குடித்து விட்டு சாய்வதில்லை.. என்னைத் தேடித்தேடி பைத்தியமாய் உலகெங்கும் வலம் வருகிறான்..

அவன் என்னைத் தேடி முகம் சிவக்க கோபத்துடன் அலைவதை பார்த்து விஜய்காந்தஒ கண்ட ஜெயலலிதா போல் குடிகாரன் என்றீர்களே.. போங்கள் பொல்லாத ஆளு நீங்கள்...
பூமி கூடத் தள்ளாடுகிறது புரியுமா உங்களுக்கு (Wobling in the Axis)..
தள்ளாட்டதில் இருந்தால் தள்ளாட்டம் தெரியவா போகிறது?? (ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை)

சகக் கழுத்தி அல்ல சகக் கிழத்தி (கிழத்தி - மனைவி)..
எல்லாம் ஒரு போங்குதான்.. பூமியை நான் சுற்ற பூமி என்னைப் பார்க்க ஆசைப்பட்டு சுற்றிசுற்றி என்னோடு இணைந்து சூரியனைச் சுற்ற இதை அந்த எட்டுப்பேரும் சுற்றி சுற்றி வேடிக்கைப் பார்க்க.. சுறியன் தலைசுற்றி பால்வீதியில் பம்பரமாய் சுற்றி கருந்துளை நோக்கி நகர.. கருந்துளையும் சுற்றிச் சுற்றி அணுவைப் பிளந்து தன்னுள் அடக்க...
ஒளி வெள்ளத்திற்குப் பின் இப்படி ஒரு இருட்டான சரித்திரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. வாயைப் பிளந்து கொண்டு பார்க்காதே உள்ளே ஈ சுற்றிச் சுற்றி வருகிறது...

நீரும் வேண்டாம் நீரும் வேண்டாம்.. காற்றும் வேண்டாம் உங்கள் கழிவுகளும் வேண்டாம்.. நான் சலனமின்றி வாழ்கிறேன்...

நன்றி அல்லியே! என் கவிதைக்கு நீங்கள் அளித்த விரிவான பதில் பதிவுக்காக.
என் நோக்கமே, நாம் கவிதை கொடுக்கும் போது, நம் கற்பனைகளோடு, சில தகவல்களையும் சொல்ல வேண்டும் என்பது தான்.
அறியியல், வரலாறு, பொருளாதார மற்றும் பிற தகவல்கள் கவிதைகளோடு கலந்தால், வாசகனுக்கு கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து.

இந்தக் கவிதையை வரிவரியாக... இல்லை (அறிவியலைக் கலக்கலாம்) அணுஅணுவாக ஆராய்ந்ததற்கு, இதோ என் பணியாட்கள்
ப்ரோட்டான்கள் & எலக்ட்ரான்கள் மூலம் நன்றியை கொடுத்து அனுப்புகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் வரிகளில் நான் ரசித்தது:
நகைச்சுவை: பழம் போனால் போகட்டும்.. கொட்டையாவது கிடைக்குமா என்றுதான்...
உண்மை: ரத்தம் பாய்வதால்தான் ரத்த வெறி.. நான் பற்றற்றவன் எதையும் அதிகம் கவரமாட்டேன்..
தகவல்:பூமி கூடத் தள்ளாடுகிறது புரியுமா உங்களுக்கு (Wobling in the Axis)... . இன்று தான் இது எனக்குத் தெரியும். நன்றி
சிறந்த ஒப்புமை: தள்ளாட்டதில் இருந்தால் தள்ளாட்டம் தெரியவா போகிறது?? (ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கை).
மறுப்பு/மாற்றுக்கருத்து: சகக் கழுத்தி அல்ல சகக் கிழத்தி (கிழத்தி - மனைவி)..சகக்கழுத்தி என்றால் சகமாக கழுத்தை நீட்டியவள் என்று பொருள். என் தமிழ் ஆசான் சொன்னது. எனவே, சகக்கழுத்தி என்பதும் சரி.
ரசனை: நீரும் வேண்டாம் நீரும் வேண்டாம்.. காற்றும் வேண்டாம் உங்கள் கழிவுகளும் வேண்டாம்.. நான் சலனமின்றி வாழ்கிறேன்...
நீயும் வேண்டாம் - எனச் சொல்லும் நீரும் வேண்டாம். இது அடுக்குத் தொடர் இல்லை. (இரண்டு ஒரே வாக்கியங்கள். அர்த்தம் வேறு.இதற்கு என்ன பெயர் தமிழ் இலக்கணத்தில்?)

ஆதவா
28-12-2006, 11:27 PM
நிலவு இரவில் வந்து அல்லி மொட்டு செவியினை மலர்த்தி ஓதிச் சென்ற பதில்கள்..சகக் கழுத்தி அல்ல சகக் கிழத்தி (கிழத்தி - மனைவி)..
எல்லாம் ஒரு போங்குதான்.. பூமியை நான் சுற்ற பூமி என்னைப் பார்க்க ஆசைப்பட்டு சுற்றிசுற்றி என்னோடு இணைந்து சூரியனைச் சுற்ற இதை அந்த எட்டுப்பேரும் சுற்றி சுற்றி வேடிக்கைப் பார்க்க.. சுறியன் தலைசுற்றி பால்வீதியில் பம்பரமாய் சுற்றி கருந்துளை நோக்கி நகர.. கருந்துளையும் சுற்றிச் சுற்றி அணுவைப் பிளந்து தன்னுள் அடக்க...
ஒளி வெள்ளத்திற்குப் பின் இப்படி ஒரு இருட்டான சரித்திரம் இயங்கிக் கொண்டிருக்கிறது.. வாயைப் பிளந்து கொண்டு பார்க்காதே உள்ளே ஈ சுற்றிச் சுற்றி வருகிறது...[/B]

அய்யோ அய்யோ!!! அல்லிராணியிடம் அள்ளிக்கொள்ள எவ்வளவு அறிவு....

தாமரை
29-12-2006, 01:40 AM
நீயும் வேண்டாம் - எனச் சொல்லும் நீரும் வேண்டாம். இது அடுக்குத் தொடர் இல்லை. (இரண்டு ஒரே வாக்கியங்கள். அர்த்தம் வேறு.இதற்கு என்ன பெயர் தமிழ் இலக்கணத்தில்?)
ஒரே வார்த்தைக்கு இரு பொருள் வருமானால் சிலேடை.. ஒரே வார்த்தை இருமுறை வருமானால் அடுக்குத்தொடர்.. ஒரு வார்த்தையும் அதன் எதிர் வார்த்தையும் முரண்பட்ட அர்த்ததை தந்து (Pretty Ugly!!)
(பயங்கரமான சிரிப்பு) அடுத்தடுத்து வந்தால் முரண் தொடர் எனவே
நீரும் வேண்டாம் நீரும் வேண்டாம்.. சிலேடைத் தொடர்...

அல்லிராணி
29-12-2006, 02:12 AM
நாம் கவிதை கொடுக்கும் போது, நம் கற்பனைகளோடு, சில தகவல்களையும் சொல்ல வேண்டும் என்பது தான்.
அறியியல், வரலாறு, பொருளாதார மற்றும் பிற தகவல்கள் கவிதைகளோடு கலந்தால், வாசகனுக்கு கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும் என்பது என் கருத்து.பூமிக்கு மையத்தில் இரும்பானாலான் கரு உள்ளதைப் போல் நிலவினில் இல்லை.. இரும்பு இதயம் கொண்ட பூமியே என்று கூட நான் விளித்திருக்கலாம்..

பூமியில் எரிமலைகளும் பனிமலைகளும் பனிமலைகளில் எரிமலைகளும் உண்டு..

கவிதைகளை படித்து வியந்து மனக்கண்முன் படமாய் ஓடவிட்டால்தான் பதில் வரும் என்பது நீங்கள் அறியாததல்ல..

அதனால்தான் உங்களின் இந்த அதே எண்ணங்கள் என்பதில்களிலும் ஊடுருவி நிற்கின்றது..

மேலும் தொடர முயற்சி செய்யுங்கள்.. இன்னும் கோடிக்கோடி தகவல்கள் வரலாம்..

செல்வரே இரட்டைக் கிளவியை விட்டு விட்டீரே ஏன் கிழத்தி அருகில் இருக்கிறாரோ???:D :D

meera
29-12-2006, 05:10 AM
லெனின்,

நல்ல சிந்தனை.நிலவு இரவில் வந்து அல்லி மொட்டு செவியினை மலர்த்தி ஓதிச் சென்ற பதில்கள்..

எனக்கு மேக்கப் போடவும் கலைக்கவுமே நேரம் சரியாக இருக்கிறது...
ஒரு நாள் ஜொலிக்க 14 நாட்கள் மேக்கப், 14 நாட்கள் கலைப்பு..யாரோ கமலாமே 5 மணி நேரம் மேக்கப் போடுவதாகச் சொல்கிறீர்களாமே.. அவரெல்லாம் என் முன் தூசு.

நீரும் வேண்டாம் நீரும் வேண்டாம்.. காற்றும் வேண்டாம் உங்கள் கழிவுகளும் வேண்டாம்.. நான் சலனமின்றி வாழ்கிறேன்...

அல்லியக்கா,வார்த்தை வரமாட்டேங்குது ம்ம்ம்ம் புடிச்சுட்டேன் சூப்பரு சூப்பரு சூப்பரு சூப்பரு:D :D :D

இளசு
29-12-2006, 07:13 PM
லெனினின் அறிவியல் செய்திகள் சொல்லும் புதுக்கவிதையும்
அல்லிராணி அவர்களின் சுவையான பின்னூட்டமும்..
செல்வனின் oxymoron - முரண்தொடர் விளக்கமும்...

இப்பதிவை மிக ரசித்து மதிக்க வைக்கின்றன..பாராட்டுகள்..

leomohan
29-12-2006, 07:47 PM
*சகக்கழுத்தி - சக்காளத்தி (நடைமுறைத் தமிழில்), ஒன்றிற்கு மேற்பட்ட தாரங்கள் (உரைநடை தமிழில்)

ரசித்தேன்.

இளசு
29-12-2006, 07:55 PM
வாழ்க்கைப் போர்க்களத்தில் கூடுதல் சதிராட வந்த
சகக் களத்தி என்றாலும் சரிதான்..!!!!!!!

gandhi
02-01-2007, 07:46 AM
விண்கலங்கள் வேண்டாம் கவிஞனுக்குமட்டும்,
விரும்புகையில் விண்வெளிக்குப்போய் வருவான் அவன்....
நிரூபித்துவிட்டீர்கள் கவிதையால்....அருமை.

அன்புடன்,
காந்தி.

தாமரை
02-01-2007, 08:37 AM
வாழ்க்கைப் போர்க்களத்தில் கூடுதல் சதிராட வந்த
சகக் களத்தி என்றாலும் சரிதான்..!!!!!!!
களத்திரம் என்றால் திருமணம்.. சகக் களத்திரம் என்றால் ஒருவரை மணமுடித்தவர் என்று அர்த்தம் வரலாம்..:D :D :D

என்னவன் விஜய்
17-05-2008, 10:37 PM
நிலவுக்கு அறி(?)வுரை .ரொம்ப ரசனையாக இருக்கின்றது.அதை விட
சகக் களத்தி - சகக்கழுத்தி - சக்காளத்தி - சகக் கிழத்தி சிறப்பாக உள்ள்ள்து