PDA

View Full Version : யுனிகோடு தமிழ் டைப் செய்ய



vijayan_t
27-12-2006, 11:12 AM
யுனிகோடு தமிழ் டைப் செய்ய
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
பயன் படுத்துகின்றேன். அப்ளிகேஷன் புரோக்ரம்கள் தேடிப்பார்த்ததில் குறள் கிடைத்தது, ஆனால் யுனிகோடு தமிழ் வின்டோஸ் எக்ஸ்பி யில் சரியாக வரவில்லை. MS-IME முயற்சி செய்தேன் அதில் phonetic பலகை இல்லை. எனவே எளிமையான முறையில், ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் எழுதலாமென்று இருக்கின்றேன். phonetic யுனிகோடு தமிழ் டைப் செய்ய , வேறேதும் இலவச புரோகிராம்கள் இருந்தால் சொல்லுங்களேன்.

இராசகுமாரன்
27-12-2006, 12:00 PM
நண்பரே,

நமது மன்றத்தில் அதிகமானவர்கள் தமிழில் தட்டச்சு செய்ய உபயோகப் படுத்துவது "எகலப்பை" (eKalappai) என்னும் மென்பொருள்.

இது அஞ்சல்(Phonetic) (http://thamizha.com/modules/mydownloads/visit.php?cid=3&lid=3), பாமினி, tamilnet99 என்று 3 விசைப் பலகைகளில் தனித் தனியாக கிடைக்கிறது.

கிடைக்குமிடம் இங்கே: http://thamizha.com/modules/mydownloads/viewcat.php?op=&cid=3

Gurudev
17-01-2007, 12:47 PM
How to Type Tamil in Word Using English Keyboard

முதலில் Unicode சம்பந்தமான சில கட்டுரைகளை கீழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ணி படித்து அது சம்பந்தமான உங்கள் அறிவை மேம்படுத்துங்கள்.

http://www.tamilnation.org/digital/Tamil%20Fonts%20&%20Software.htm

அடுத்து http://www.ezilnila.com/software.htm. என்ற தளத்தில் மென்பொருட்கள் என்ற பகுதியில் காணப்படும் எ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0) என்ற மென்பொருளை டவுண்லோட் பண்ணி உங்கள் கணணியில் நிறுவுங்கள்.

அடுத்து TSCu Paranar என்ற Font ஐ கிழ்க்காணும் லிங்கை கிளிக் பண்ணி அத்தளத்திலிருந்து டவுண்லோட் பண்ணி உங்கள் கணனியில் நிறுவுங்கள். அல்லது Google பண்ணி வேறு தளத்திலிருந்தாவது டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும். இது ஒரு Unicode Font. எந்த செயலியிலும் இந்த Font சிறப்பாக வேலை செய்யும்
http://www.minnalfm.com/font.htm

எ-கலப்பை 2.0 மென்பொருளின் Help ஐ படித்தால் ஆங்கில பலகையில் எப்படி தமிழையும் ஆங்கிலத்தையும் மாறி மாறி type பண்ணுவது என அறிந்து கொள்ளலாம்.

இப்போது Start --> All Programs --> Tavultesoft Keyman for Thamizha என்பவற்றை கிளிக்பண்ண Keyman என்ற மென்பொருள் இயங்க ஆரபிக்கும், அதே நேரம் Task Bar ன் இடது கை மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட icon காணப்படும். அல்லது டெஸ்க்ரொப்பில் K என்ற எழுத்துக்கொண்ட icon காணப்பட்டால் அதை கிளிக் பண்ணியும் இந்த மென்பொருளை இயக்கலாம்.

Word ஐ திறவுங்கள். Format Tool Bar ல் Font மாற்றும் இடத்தில் TSCu Paranar தேர்ந்துவிடுங்கள். இப்போது ஆங்கில் பலகையில் Amma என தட்ட தமிழிலில் அம்மா என திரையில் தெரியும். எந்த Key ஐ தட்ட எந்த எழுத்து தமிழில் வரும் என்பதை எ-கலப்பை 2.0 மென்பொருளின் Help ஐ படித்து தெரிந்து கொள்ளலாம். Type பண்ணும்போது முதலில் ஆங்கில எழுதுகள் தான் வரும். உடனே ALT+2 Keys ஐ தட்டிவிட்டு தொடர்ந்தால் எழுத்துகள் தமிழில் வரும். ALT+2 Key ஐ தட்டியவுடன் Task Bar ன் இடது கை மூலையில் K என்ற எழுத்துக்கொண்ட Icon இல் உள்ள K மறைந்து ஆ என்ற எழுத்து காணப்படும்.

நான் பல காலமாக Word ல் தமிழில் இதே முறையில் தட்டி பின் அதை கொப்பி பண்ணித்தான் இணையத்தில் Paste பண்ணி பதிவு செய்கின்றேன். போகப்போக தமிழிலும் ஆங்கிலம் போல தட்ட முடியும். இப்படி Word ல் தமிழில் தட்ட வருவது Unicode தமிழ் எழுத்துகள்தான்.

எ-கலப்பை 2.0 மென்பொருளை லோட்பண்ணி வைத்துக்கொண்டு தமிழ்மன்றம் வெப்பக்கத்தின் பதிவு பெட்டியிலும் தமிழில் தட்டலாம். Yahoo, Hotmail ஆகியவற்றின் Compose அல்லது Reply பெட்டிகளிலும் இப்படி தமிழில் தட்டலாம்


சுருக்கம்.
1. எ-கலப்பை 2.0 மென்பொருளை நிறுவுதல்
2. TSCu Paranar என்ற Font ஐ நிறுவுதல்
3. Keyman நிறுவனத்தாரின் எ-கலப்பை 2.0 மென்பொருளை லோட்பண்ணுதல்
4. Word ஐ திறந்து TSCu Paranar என்ற Font ஐ தேர்ந்துவிட்டு Type பண்ணுதல்
5. தமிழிலில் எழுத்து வரவேண்டுமெனில் ALT+2 Keys ஐ தட்டிவிட்டு Typing ஐ தொடர்தல்
6. இடையில் ஆங்கில எழுத்து வேண்டுமெனில் ALT+1 Keys ஐ தட்டிவிட்டு Typing ஐ தொடர்தல்

இளசு
17-01-2007, 09:34 PM
வருக குருதேவ் அவர்களே

உங்கள் ஆர்வமான பங்களிப்பால் கவனம் ஈர்க்கிறீர்கள்.

தமிழ் எழுத்துரு, கணினி பற்றிய உங்கள் பதிவுகள் பயனுள்ளவை.

பாராட்டும்..நன்றியும்.


தொடர்ந்து உற்சாகமாய்ப் பங்காற்ற வாழ்த்துகள்...

omnlog03
22-01-2007, 03:18 AM
மிகவும் னண்ரி

ஷீ-நிசி
22-01-2007, 04:09 AM
மிகவும் னண்ரி

'ந' type செய்திட

n-a = ந

Gurudev
22-01-2007, 12:50 PM
Romanised Keyboard இதுதான். Romanised தமிழ் கீபோட் எதுவும் நூறு வீதம் சுத்தம் என கூறமுடியாது என்பதுதான் எனது அபிப்பராயம். சில குறைபாடுகள் இருந்தாலும் அதை அனுபவத்தின் மூலம் சரிசெய்து கொள்ளமுடியும்.

மெய் எழுத்தின் மேல் உள்ள குற்றை நீக்க a என்ற ஆங்கில எழுத்தை வலது பக்கம் Cursor நிற்கும்போது தட்டவேண்டும். சிலவேளைகளில் இது வேலை செய்யாவிடின் Cursor ஐ வலது புறம் நிறுத்தி Backspace ஐ தட்டுங்கள். அப்போது மெய் எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகிவிடும். அதாவது குற்று நீக்கப்பட்டு விடும்.

எடுத்தவுடன் திறன் பெற்றிடமுடியாது. போகப் போக கண்டிப்பாக சரிவரும். முயலுங்கள்.

http://img264.imageshack.us/img264/8103/keyboard7le.jpg

skumar78
20-04-2007, 11:03 AM
குருதேவ் வினாக்களுக்கு நீங்கள் விடையளிக்கும் முறை மிக தெளிவாகவும் விளக்கமாகவும் எளிதாகவும் இருக்கிறது பயனுள்ள தகவல்களை தருவதற்கு நன்றி

ஓவியா
22-04-2007, 05:43 PM
குருதேவ் அவர்களுக்கு மிக்க நன்றி.

அருமையாக விளக்கமளிக்கின்றீர்கள் குருதேவ். நல்ல எழுத்து வளம்.

அடிக்கடி மன்றம் வந்து எழுதுங்கள். நாங்கள் வாசித்து மகிழ்கிறோம்.

இணைய நண்பன்
22-04-2007, 06:25 PM
யுனிகோடு தமிழ் டைப் செய்ய
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
பயன் படுத்துகின்றேன். அப்ளிகேஷன் புரோக்ரம்கள் தேடிப்பார்த்ததில் குறள் கிடைத்தது, ஆனால் யுனிகோடு தமிழ் வின்டோஸ் எக்ஸ்பி யில் சரியாக வரவில்லை. MS-IME முயற்சி செய்தேன் அதில் phonetic பலகை இல்லை. எனவே எளிமையான முறையில், ஒரு அப்ளிகேஷன் புரோகிராம் எழுதலாமென்று இருக்கின்றேன். phonetic யுனிகோடு தமிழ் டைப் செய்ய , வேறேதும் இலவச புரோகிராம்கள் இருந்தால் சொல்லுங்களேன்.

இதில் முயற்சித்துப்பாருங்கள்

http://www.suratha.com/leader.htm

vijayan_t
23-04-2007, 12:31 AM
தகவலுக்கு நன்றி Vista அவர்களே, நீங்கள் சுட்டிய தளம் நன்றாக இருக்கின்றது. யுணிகோடு தமிழ் டைப்செய்ய ஒரு அபிளிகேஷன் புரோகிராம் தயரித்து உள்ளேன். http://tvijayan.tripod.com என்ற எனது தளத்தில் "kanithamil.exe" என்ற பெயரில் வெளியிட்டு உள்ளேன்.
அதன் மூல நிரலை சீர்படுத்தி நமது தமிழ் மன்றத்திலேயே திறந்த மூல நிரலாக வெளியிட விருப்பமாயிருக்கின்றேன்.

பாரதி
23-04-2007, 01:13 AM
தகவலுக்கு நன்றி Vista அவர்களே, நீங்கள் சுட்டிய தளம் நன்றாக இருக்கின்றது. யுணிகோடு தமிழ் டைப்செய்ய ஒரு அபிளிகேஷன் புரோகிராம் தயரித்து உள்ளேன். http://tvijayan.tripod.com என்ற எனது தளத்தில் "kanithamil.exe" என்ற பெயரில் வெளியிட்டு உள்ளேன்.
அதன் மூல நிரலை சீர்படுத்தி நமது தமிழ் மன்றத்திலேயே திறந்த மூல நிரலாக வெளியிட விருப்பமாயிருக்கின்றேன்.

உங்கள் பரந்த மனப்பான்மைக்கு பாராட்டுக்கள் விஜயன்.

ஒரு விண்ணப்பம்: மென்பொருளுக்கு 'கணித்தமிழ்' என்ற பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் 'யுனித்தமிழ்' என்ற பெயர் பொருத்தமாக இருக்குமோ என்று தோன்றுகிறது.

உங்கள் ஆர்வத்திற்கும் ஆக்கத்திற்கும் என்னால் இயன்றதை செய்ய தயாராக இருக்கிறேன் நண்பரே.

ஓவியா
24-04-2007, 02:51 AM
பாராட்டுக்கள் விஜயன்.

இணைய நண்பன்
24-04-2007, 04:50 AM
மிகவும் நன்றாக இருக்கிறது.உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

vijayan_t
24-04-2007, 07:39 AM
மிக்க நன்றி பாரதி, ஓவியா மற்றும் vista அவர்களே.
மூலத்தை அப்படியே வெளியிட்டுவிடலாமா? இல்லை அதில் என்ன செய்திருக்கின்றேன் என்பதை ஒரு விளக்கிவிட்டு சந்தேகங்களை களைந்துவிட்டு பிறகு வெளியிடலாமா, ஒரு கருத்து சொல்லுங்கள். மேலும் GPL தமிழ் படிவம் எங்கேனும் கிடைக்கின்றதா என்ற தகவல் தெரிந்தாலும் சொல்லுங்கள்.

pradeepkt
24-04-2007, 09:07 AM
அடடே விஜயன்.
இது மட்டுமல்ல, பல அருமையான மென்பொருள்களும் வைத்திருக்கிறீர்களே... மிக்க நன்றி...

மனோஜ்
25-04-2007, 08:50 AM
மனோஜ்

உங்கள் மென்பெருள் மூலம் தட்டச்சு செய்த எனது பெயர் அருமையாக வேலைசெய்கிறது
உங்கள் பணி உண்மையில் சிறந்தது நன்றி விஜயன்

சுட்டிபையன்
25-04-2007, 08:58 AM
http://www.suratha.com/leader.htm
http://www.suratha.com/reader.htm இதில் சகல விதமன எழுத்துருக்களும் உள்ளன, உதாரனம் யுனிகோட், திரிஸ்கி, பாமினி, வெப் உலகம் தொடக்கம் சகல பிரபலமான பத்திரிகை எழுத்துருக்கள்
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
http://www.higopi.com/ucedit/Tamil.html
http://www.suratha/com/vanni.zp நேரடியாக தட்டச்சு செய்வதற்கான கீ மன் மென் பொருள் நான் பாவிப்பது இதுதான்

vijayan_t
25-04-2007, 12:18 PM
மிக்க நன்றி பிரதீப், மனோஜ், சுட்டிபையன் அவர்களே

இராசகுமாரன்
25-04-2007, 12:31 PM
தகவலுக்கு நன்றி Vista அவர்களே, நீங்கள் சுட்டிய தளம் நன்றாக இருக்கின்றது. யுணிகோடு தமிழ் டைப்செய்ய ஒரு அபிளிகேஷன் புரோகிராம் தயரித்து உள்ளேன். http://tvijayan.tripod.com என்ற எனது தளத்தில் "kanithamil.exe" என்ற பெயரில் வெளியிட்டு உள்ளேன்.
அதன் மூல நிரலை சீர்படுத்தி நமது தமிழ் மன்றத்திலேயே திறந்த மூல நிரலாக வெளியிட விருப்பமாயிருக்கின்றேன்.

விஜயன்,

உங்கள் கணித்தமிழ் மென்பொருள் மிகச் சிறிய அளவில் (140 kb) ஒரே கோப்பாக நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்!!

சில ஆலோசனைகள்:

1) 'ஒள' மற்றும் 'ஃ' தட்டச்சு செய்தால் வரவில்லை, அது உதவி அட்டையிலும் இல்லை.
2) வழக்கமாக 'sri' அடித்தால் 'ஸ்ரீ' வரும், உங்கள் மென்பொருளில் 'Srii' அடிக்க கடினமாக வேண்டியுள்ளது.
3) மற்ற எழுத்துக்களின் கோர்வையையும் அஞ்சல் கோர்வை போல் இருந்தால் எளிதாக இருக்கும்.
4) உதவி அட்டையில் எழுத்துக் கோர்வையை பார்த்துக் கொண்டே தட்டச்சு செய்ய முடிவதில்லை, அது இருந்தால் நல்லது.
5) நகல் எடுத்து ஒட்டுதல் பலர் இது போன்ற மென்பொருட்களில் செய்யும் வேலை, அது இருந்தால் நல்லது.
6) எழுத்து அளவு சிறியதாக உள்ளது, அதை கூட்டும்/குறைக்கும் வசதி இருந்தால் நல்லது.

உங்கள் தளத்தில் உள்ள 'K7Tense" என்ற மென்பொருளும் நன்றாக உள்ளது, அடிப்படையில் தமிழில் படிக்காதவற்களுக்கு தட்டச்சு செய்ய மிக உதவியாக இருக்கும்.

vijayan_t
25-04-2007, 02:14 PM
நன்றி ராசகுமாரன் அவர்களே, நீங்கள் சுட்டிய தகவல் ரெம்ப பயனுள்ளதாக இருக்கின்றது. சரி பன்னிவிடுகின்றேன்.

vijayan_t
08-05-2007, 03:28 PM
யுணிகோடு தமிழ் தட்டச்சு செய்யும் மூல-நிரலை திறந்த மூலமாக வெளியிடத்தக்க மாற்றங்களை செய்து முடித்துவிட்டு தமிழ் மன்றத்தில் வெளியிட தயாராக உள்ளேன். ஆனால் நான் கீழ் சொன்ன சிறு பிரச்சினைகளினால் வெளியிட முடியாமல் இருக்கின்றேன்.

எனது மூல நிரலில் கோப்புகளின் பெயர்கள் யுணிகோடு-தமிழில் உள்ளன, அதை யுணிகோடுக்கு ஒத்துழைக்காத win-zip கொன்டு சுருக்க முடியவில்லை. winrar சுருக்கினால் தமிழ் மன்றத்தில் ஏற்றமுடியவில்லை.
மாதிரி திட்ட-நிரலானது, Visual Studio திட்டமாக இருப்பதால் சுருக்காமல் வெளியிட முடியாது.

மன்ற நிர்வாகிகள் யாரேனும் உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

பாரதி
08-05-2007, 04:25 PM
யுணிகோடு தமிழ் தட்டச்சு செய்யும் மூல-நிரலை திறந்த மூலமாக வெளியிடத்தக்க மாற்றங்களை செய்து முடித்துவிட்டு தமிழ் மன்றத்தில் வெளியிட தயாராக உள்ளேன். ஆனால் நான் கீழ் சொன்ன சிறு பிரச்சினைகளினால் வெளியிட முடியாமல் இருக்கின்றேன்.

எனது மூல நிரலில் கோப்புகளின் பெயர்கள் யுணிகோடு-தமிழில் உள்ளன, அதை யுணிகோடுக்கு ஒத்துழைக்காத win-zip கொன்டு சுருக்க முடியவில்லை. winrar சுருக்கினால் தமிழ் மன்றத்தில் ஏற்றமுடியவில்லை.
மாதிரி திட்ட-நிரலானது, Visual Studio திட்டமாக இருப்பதால் சுருக்காமல் வெளியிட முடியாது.

மன்ற நிர்வாகிகள் யாரேனும் உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

பாராட்டக்கூடிய உங்கள் முயற்சிக்கு விரைவிலேயே மன்ற நிர்வாகம் தீர்வு காணும் என்று நம்புவோம் நண்பரே... மிக்க மகிழ்ச்சி.

ஆதவா
08-05-2007, 07:27 PM
முதலில் வாழ்த்துக்கள் விஜயன்....

சுருக்குதல் பிரச்சனைக்கு நிர்வாகி உதவி செய்வார் என்று நினைக்கிறேன்

அறிஞர்
08-05-2007, 11:03 PM
இராசகுமாரன் கவனிப்பார்... அன்பரே..

இராசகுமாரன்
09-05-2007, 04:50 AM
எனது மூல நிரலில் கோப்புகளின் பெயர்கள் யுணிகோடு-தமிழில் உள்ளன, அதை யுணிகோடுக்கு ஒத்துழைக்காத win-zip கொன்டு சுருக்க முடியவில்லை. winrar சுருக்கினால் தமிழ் மன்றத்தில் ஏற்றமுடியவில்லை.

நண்பரே,

தமிழ் மன்றத்தில் எங்கு பதிவேற்றம் செய்ய முயற்சித்தீர்கள்? என்ன பிழைச் செய்தி வந்தது என்று கூற முடியுமா?

நான் winrar மூலம் உருவாக்கிய .rar extension உள்ள ஒரு கோப்பை நமது eBooks --> Miscellaneous பகுதியில் ஏற்றினேன் எந்த வித பிரச்சனையும் இல்லையே?

அந்த பகுதியில் தானே முயற்சி செய்தீர்கள்? ஏற்ற முயற்ச்சிக்கும் கோப்பின் Extention என்ன?

winzip, winrar இரண்டின் வேலையையும் PowerArhiver செய்வதால், அதையே நான் உபயோகிக்கிறேன். நீங்களும் உபயோகித்து பார்க்கலாமே?(இது இலவச மென்பொருளில்லை, trial version மூலம் வேலை நடக்கும், முதலில் சோதித்துப் பாருங்கள், பிறகு தேவையென்றால் code கொடுக்கிறேன்)

vijayan_t
09-05-2007, 05:05 AM
கோப்பின் கடைப்பெயர் RAR ஆகும்.
நான் Quick Reply பகுதியில் Go Advanced மூலம் Manage Attachments வழியாக முயற்சி செய்தேன். ஆதில் Upload Errors மற்றும் Invalid File என்ற பிழைச்செய்தி வருகின்றது.

இராசகுமாரன்
09-05-2007, 06:09 AM
Manage attachment வசதியின் மூலம் சில தொந்தரவுகள் உள்ளன, அதனால் இந்து போன்ற மென்பொருட்களுக்காக நமது மின்புத்தக பகுதியின் Miscellaneous பகுதியை பயன் படுத்தவும் அதன் சுட்டி இதோ (http://www.tamilmantram.com/vb/downloads.php?do=cat&id=3) கீழே:

http://www.tamilmantram.com/vb/downloads.php?do=cat&id=3

விரைவில் உங்கள் மென்பொருளை எதிர்பார்க்கிறோம்.

Manage attachment சுட்டி நீக்கப் படுகிறது.

மலர்
09-05-2007, 06:32 AM
கணினி பற்றிய உங்கள் பதிவுகள் பயனுள்ளவை

vijayan_t
09-05-2007, 11:49 AM
ராசகுமாரன் அவர்களே நான் ஏற்ற விரும்புவது e-book அல்ல. ஒரு மெபொருளின் மூல-நிரல் திரட்டு, மாதிரி திட்ட-நிரல் மறும் அது குறிதத விளக்கவுரை கோப்புகள்.

சரி அனைத்தையும் ஒரு நெருக்கப்பட்ட கோப்பில் பதிந்து தற்பொழுதுக்கு e-book இடத்திலேயே வெளியிட்டு அதற்கான விளக்கத்துக்கு தனி திரி ஒன்று ஆரம்பிக்கின்றேன்.

vijayan_t
09-05-2007, 11:51 AM
Miscellaneous பகுதியில் எனது கோப்பினை ஏற்றினேன் ஆனால் அது பதிவிறக்கப்பகுதிக்கு வரவில்லை? என்ன காரனம் என்று தெரியவில்லை.

vijayan_t
09-05-2007, 12:19 PM
மூலநிரலை தற்சமயத்துக்கு எனது இனையதளத்தில் வெளியிட்டு, அது குறித்த திரி ஒன்றை தமிழ்மன்றத்தில் ஆரம்பித்து இருக்கின்றேன்.
சுட்டி இதோ.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=203685#post203685

எனது தமிழ் நிரலாக்கத்தின் முதல் முயற்சி
விஜயன்

அறிஞர்
09-05-2007, 12:26 PM
விஜயனின் முயற்சிகள் எல்லாம் வெற்றியை தரட்டும்.

vijayan_t
09-05-2007, 01:27 PM
மிக்க நன்றி அறிஞர் அவர்களே

இராசகுமாரன்
10-05-2007, 11:28 AM
Miscellaneous பகுதியில் எனது கோப்பினை ஏற்றினேன் ஆனால் அது பதிவிறக்கப்பகுதிக்கு வரவில்லை? என்ன காரனம் என்று தெரியவில்லை.

இந்த வசதியை துஷ்பிரயோகம் செய்வதை தடுக்க, நிர்வாக உறுப்பினர்களில் யாராவது ஒரு அதை அங்கீகரிக்க வேண்டும் அப்போது தான் பதிவேற்றம் செய்யப் பட்டவை மற்றவர்களுக்கு தோன்றும்.

நான் அதை அங்கீகரித்து விட்டு, இறக்கிப் பார்த்தேன், இதனுள் அனைத்தும் C++/VB கோப்புகளாக உள்ளதே?

vijayan_t
10-05-2007, 01:02 PM
திரு இராசகுமாரன் அவர்களே, இது குறிபிட்ட அந்த மென்பொருளின் மூல நிரலாகும். மூல நிரலானது C++ கொன்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இதைவைத்து மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ 2005 மூலம், மென்பொருளை உருவாக்கலாம். மேலும் இதை மூலமாக வைத்து உபயோகிப்பாளர்களே தாங்கள் விரும்பியவன்னம் தமிழ்-தட்டச்சும் மென்பொருட்களை உருவாக்கலாம்.
இது விசுவல் சி++ நிரலாக்கம் தெரிந்தவர்களுக்குமட்டும்தான் பயன்படும்.