PDA

View Full Version : நீ விதைத்த கருவிற்கு பதில் சொல்...



ஆதவா
26-12-2006, 08:13 PM
http://mazaithuli.fundataz.com/images/karu.JPG



என் கண்களிலிந்து உடைந்து விழும்
முத்துக்களை, உன் சிரிப்புகளால்
பொறுக்கிக் கொண்டாய்.
என்னுயிர் இருக்கும் வரை
உன்னை என் கண்களில்
பொத்தி வைப்பேன் என்றாய்
எனக்குத் தெரிந்தவரை
நீ உயிரோடுதான் இருக்கிறாய்
எனக்கு விடை வேண்டாம்
உன் கைகளில் இருக்கும்
என் கண்ணீருக்கு பதில் சொல்
எதிரொலிக்கும் அப் பதிலோடே
இறந்து போவேன்.....

iniya
26-12-2006, 08:27 PM
ஆதாவா நல்லா இருக்கு கவிதை ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்

தாமரை
27-12-2006, 04:46 AM
என் கண்களிலிந்து உடைந்து விழும்
முத்துக்களை, உன் சிரிப்புகளால்
பொறுக்கிக் கொண்டாய்.
என்னுயிர் இருக்கும் வரை
உன்னை என் கண்களில்
பொத்தி வைப்பேன் என்றாய்
எனக்குத் தெரிந்தவரை
நீ உயிரோடுதான் இருக்கிறாய்
எனக்கு விடை வேண்டாம்
உன் கைகளில் இருக்கும்
என் கண்ணீருக்கு பதில் சொல்
எதிரொலிக்கும் அப் பதிலோடே
இறந்து போவேன்.....




ஆனந்தக் கண்ணீர் கண்டேன்
சிரித்தேன்..
கனவுகளில் கோட்டை கட்டி
முத்தாய் பொக்கிஷமாய்
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
மகிழ்ந்திருந்தேன்..

கண்ணீரைச் சேகரித்து
கண்வழிப் பாய்ச்சி
காதல் பயிர்வளர்த்து
பொத்தி வைத்த உமிக்குள்
அரிசி இல்லை
அற்பப் பதர்..!

பதறித் துடிக்கும் இமை
கேலி செய்யும் இளமை
கையை கட்டிவிட்ட இயலாமை..

கண்ணீருக்கு பதிலா
கண்மணிக்கு பதிலா
கண்மணியின் சொந்தக்காரி என்
கண்மணிக்கு பதிலா

இதழ்கோடியில் ஒரு
சோகப்புன்னகை..
இதயக்கோடியில் ஒரு
காயத்தின் வலி..

உன் கண்ணீரில்
என் பாவங்கள் கரையுமா
இல்லை அதிகரிக்குமா?
கேள்விக்குப் பதில்
கேள்வியாகுமா?
கேட்பது கேட்கிறது..
கேட்டது கேட்கவில்லையா?

meera
27-12-2006, 05:48 AM
ஆதவா,

இதயம் வலிக்கிறது.உணர்ந்து எழுதிய உணர்வு.அருமையான கவிதை.

meera
27-12-2006, 05:55 AM
ஆனந்தக் கண்ணீர் கண்டேன்
சிரித்தேன்..
கனவுகளில் கோட்டை கட்டி
முத்தாய் பொக்கிஷமாய்
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
மகிழ்ந்திருந்தேன்..

கண்ணீரைச் சேகரித்து
கண்வழிப் பாய்ச்சி
காதல் பயிர்வளர்த்து
பொத்தி வைத்த உமிக்குள்
அரிசி இல்லை
அற்பப் பதர்..!

பதறித் துடிக்கும் இமை
கேலி செய்யும் இளமை
கையை கட்டிவிட்ட இயலாமை..

கண்ணீருக்கு பதிலா
கண்மணிக்கு பதிலா
கண்மணியின் சொந்தக்காரி என்
கண்மணிக்கு பதிலா

இதழ்கோடியில் ஒரு
சோகப்புன்னகை..
இதயக்கோடியில் ஒரு
காயத்தின் வலி..

உன் கண்ணீரில்
என் பாவங்கள் கரையுமா
இல்லை அதிகரிக்குமா?
கேள்விக்குப் பதில்
கேள்வியாகுமா?
கேட்பது கேட்கிறது..
கேட்டது கேட்கவில்லையா?

அண்ணா,

பதில் கவிதை அருமை.

வழக்கம் போல கடைசில என்ன சொல்லவரீங்கனு புரியலை.:eek: :eek: :eek:

தாமரை
27-12-2006, 07:11 AM
அண்ணா,

பதில் கவிதை அருமை.

வழக்கம் போல கடைசில என்ன சொல்லவரீங்கனு புரியலை.:eek: :eek: :eek:
ஆதவன் பதில் சொல்வார்.. பொறுங்கள்

இளசு
27-12-2006, 09:29 PM
கேள்விக்குறியின் அடியில்
கண்ணீர்ப்புள்ளி...

நாயகியின் கேள்விக்கு
நாயகனின் பதில் கேள்வி..

இயலாமையா?
முன்னரே பதர் என்று அறியாமையா?

கவிஞர்கள் தொடரட்டும்..
காதல் வே(கே)ள்விகள் வளரட்டும்...

ஆதவா
28-12-2006, 03:52 PM
ஆதாவா நல்லா இருக்கு கவிதை ரொம்ப உணர்ந்து எழுதி இருக்கிறீர்கள்

இனியவ, தோழியே நன்றி...

ஆதவா
28-12-2006, 03:56 PM
ஆனந்தக் கண்ணீர் கண்டேன்

உன் கண்ணீரில்
என் பாவங்கள் கரையுமா
இல்லை அதிகரிக்குமா?
கேள்விக்குப் பதில்
கேள்வியாகுமா?
கேட்பது கேட்கிறது..
கேட்டது கேட்கவில்லையா?

தாமரைக் கேள்விக்குத்
தாமறையாய் பதிலளித்த
தாமரைச் செல்வரே!
தாம றைந்த கவிதைக்கு
தாமத பதிலுக்கு மன்னிக்க
தா விடையெனக் கேட்ட
தாமரை மீராவே
தாமரை கவி வரிகள்
புரியவில்லை...

தாமரை
28-12-2006, 05:13 PM
தாமரைக் கேள்விக்குத்
தாமறையாய் பதிலளித்த
தாமரைச் செல்வரே!
தாம றைந்த கவிதைக்கு
தாமத பதிலுக்கு மன்னிக்க
தா விடையெனக் கேட்ட
தாமரை மீராவே
தாமரை கவி வரிகள்
புரியவில்லை...
இந்தக் கோணத்தில் சிந்தனையை தட்டி விட்டுப் பாருங்கள் புரியும்..

சில கண்ணீரில் பாவங்கள் கரைகின்றன..
சில கண்ணீரில் பாவங்கள் வளர்கின்றன..
உன் கண்ணீர் துடைக்க
எனக்கில்லை அருகதை என
ஒரு சேதி எட்டிப் பார்க்கிறதே புரிகிறதா?

நான் ஏன் ஆரம்பத்தில் ஆனந்தக் கண்ணீர் என்று சொன்னேன்? யோசியுங்கள்..

அல்லிராணி
29-12-2006, 02:16 AM
இந்தக் கோணத்தில் சிந்தனையை தட்டி விட்டுப் பாருங்கள் புரியும்..

சில கண்ணீரில் பாவங்கள் கரைகின்றன..
சில கண்ணீரில் பாவங்கள் வளர்கின்றன..
உன் கண்ணீர் துடைக்க
எனக்கில்லை அருகதை என
ஒரு சேதி எட்டிப் பார்க்கிறதே புரிகிறதா?

நான் ஏன் ஆரம்பத்தில் ஆனந்தக் கண்ணீர் என்று சொன்னேன்? யோசியுங்கள்..

செல்வரே ஆதவர் இளைஞர்.. அவர் டி.வி. சீரியல்கள் பார்ப்பதில்லை.. செல்வித் தொடர் ரஞ்சனியை அவருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை..
கொஞ்சம் பூடகமாய் சொல்வதை விட்டு விளக்கமாய் சொல்லி விடுங்கள்..

ஆதவா! ஒரு சமூக கருத்தை மையமாய் கொண்டு பதிலுக்கு பதில் ஆரம்பிக்கவும்.. உங்களுக்கு நிறைய எண்ணங்கள் இருக்கும் கருத்தாய் இருத்தல் நலம்.. நானும் ஆட்டத்திற்கு வருகிறேன்

ஆதவா
02-01-2007, 11:59 AM
செல்வரே ஆதவர் இளைஞர்.. அவர் டி.வி. சீரியல்கள் பார்ப்பதில்லை.. செல்வித் தொடர் ரஞ்சனியை அவருக்கு தெரிந்திருக்க ஞாயமில்லை..
கொஞ்சம் பூடகமாய் சொல்வதை விட்டு விளக்கமாய் சொல்லி விடுங்கள்..

ஆதவா! ஒரு சமூக கருத்தை மையமாய் கொண்டு பதிலுக்கு பதில் ஆரம்பிக்கவும்.. உங்களுக்கு நிறைய எண்ணங்கள் இருக்கும் கருத்தாய் இருத்தல் நலம்.. நானும் ஆட்டத்திற்கு வருகிறேன்

நன்றி அல்லி அவர்களே! உண்மையிலேயே அவர் பதில் எனக்குப் புரியவில்லை.. நிறையதடவை படித்துப்ப் பார்த்துவிட்டேன்.. (ம்ம்ம் ஒத்துக்கறேன்பா!! எனக்கு கொஞ்ஞ்ஞ்சம் அறிவு கம்மி.)

செல்வித் தொடர் ரஞ்சனியை எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. ஆகவே செல்வரே!! கொஞ்சம் விளக்குங்க!!!

நம்பிகோபாலன்
02-01-2007, 06:02 PM
காதலி தவறுகள் செய்வது காதலின் இயல்பு

காதலியின் கண்ணீரை என்றும் பார்க்க விரும்பாதவனே உண்மையான காதலன்

அருமையான கவிதை

ஓவியா
02-01-2007, 06:12 PM
ஆதவா,
இது என்ன!!!

கவிதை அருமையாக இருகின்றது...:)

வாழ்த்துக்கள்

ஆதவா
03-01-2007, 03:07 AM
ஆதவா,
இது என்ன!!!

கவிதை அருமையாக இருகின்றது...:)

வாழ்த்துக்கள்

மிக்க நன்றி... உங்கள் எல்லாரின் வாழ்த்து = என் தமிழென்ற கண்ணுக்கு தெளிவான பார்வை....

என்னவன் விஜய்
17-05-2008, 07:00 PM
ஆதவா கவிதை கற்கடக்கரை போல் சோகமாகவும் ரசனையாகவும் இருந்தது. தாமரையண்ணாவின் பதில் கவிதையும் ரொம்ப இரசனையாக இருந்தது, ஆனால் கடைசி வரை மீராவின் கேள்விக்கு பதிலே இல்லை(எனக்கும் புரியலே)

சுகந்தப்ரீதன்
16-06-2008, 12:45 PM
, ஆனால் கடைசி வரை மீராவின் கேள்விக்கு பதிலே இல்லை(எனக்கும் புரியலே)
உண்மைதான் விஜய்.. மீராக்கா கேள்விக்கு தாமரையண்ணா நேர்லியே பதில் சொல்லியிருப்பாரோ என்னவோ...அதான் பதினெட்டு மாசமா இங்க பதிலையே காணும்..??

தாமரை
16-06-2008, 12:49 PM
ஆனந்தக் கண்ணீர் கண்டேன்
சிரித்தேன்..
கனவுகளில் கோட்டை கட்டி
முத்தாய் பொக்கிஷமாய்
சேர்த்து வைத்து சேர்த்து வைத்து
மகிழ்ந்திருந்தேன்..

கண்ணீரைச் சேகரித்து
கண்வழிப் பாய்ச்சி
காதல் பயிர்வளர்த்து
பொத்தி வைத்த உமிக்குள்
அரிசி இல்லை
அற்பப் பதர்..!

பதறித் துடிக்கும் இமை
கேலி செய்யும் இளமை
கையை கட்டிவிட்ட இயலாமை..

கண்ணீருக்கு பதிலா
கண்மணிக்கு பதிலா
கண்மணியின் சொந்தக்காரி என்
கண்மணிக்கு பதிலா

இதழ்கோடியில் ஒரு
சோகப்புன்னகை..
இதயக்கோடியில் ஒரு
காயத்தின் வலி..

உன் கண்ணீரில்
என் பாவங்கள் கரையுமா
இல்லை அதிகரிக்குமா?
கேள்விக்குப் பதில்
கேள்வியாகுமா?
கேட்பது கேட்கிறது..
கேட்டது கேட்கவில்லையா?


கணவன் - காதலன் விலகி விட்டான் அதுவும் கருவான பிறகு...

அன்பு மிகுந்த கணவன் / காதலன் மாறவும் ஒரு காரண இருக்கலாமல்லவா?

அதைச் சொல்ல முயன்றிருக்கிறேன்..

நீ கருவுற்றிருக்கிறேன் என்று சொன்ன பொழுது ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாய்.. நானும் மகிழ்ந்தேன், நினைவுகளையும் கனவுகளையும் சேர்த்து நம் இனிய வாழ்வினைப் பற்றி ஆயிரம் கோட்டைகள் கட்டினேன்.

இந்த ஆனந்தக் கண்ணீருக்கு காரணமான அந்தக் கருவுக்குள் இருப்பது அரிசி இல்லை பதர் என்பது தெரிந்து விட்டது.. எப்படித் தெரியுமா?

கேலி செய்யும் இளமை
கையை கட்டிவிட்ட இயலாமை..

நீ கண்ணீருக்குப் பதில் கேட்கிறாய். உன் கருவில் இருக்கும் கண்மணிக்குப் பதில் கேட்கிறாய்..

என்னால் இயலாது என இப்போதுதானே அறிந்து கொண்டிருக்கிறேன்.. என் பதில்...


இதழ்கோடியில் ஒரு
சோகப்புன்னகை..
இதயக்கோடியில் ஒரு
காயத்தின் வலி..

இப்பொழுது நீ விடும் கண்ணீரில் என்னை அறியாத நான் செய்த பாவம் அதிகரிக்குமா குறையுமா? நீ கேள்வி கேட்டாய்.. (நீ விதைத்த கருவிற்கு பதில் சொல்?) நானும் அதற்கு பதிலாய் கேள்விதான் கேட்கிறேன்.. (நான் விதைத்ததா? என..)


செல்வி தொடரில், ரஞ்சனி கருவுற்றிருப்பார். அவரின் கணவர் தகுதியில்லாதவர் என்று மெடிகல் ரிபோர்ட் வைத்திருப்பார், பல நாட்கள் இதே கேள்வியும் பதிலும் தான் அப்போது ஓடிகிட்டு இருந்தது,,,

சுகந்தப்ரீதன்
16-06-2008, 01:04 PM
மிக்க நன்றியண்ணா..!!

உடனடி பதிலிட்டு தெளிவித்தமைக்கு..!!