PDA

View Full Version : காலப் பறவை



ப்ரியன்
26-12-2006, 08:07 AM
http://i21.photobucket.com/albums/b258/mailtoviki/Kavi/Niyabaga_Paravai.jpg

இதயதரையெங்கும்
சிதறிக்கிடக்கும்
ஞாபக மணிகளை
கொத்தி தின்றபடியே
பறந்து பயணக்கிறது
காலப் பறவை!

- ப்ரியன்.

ஆதவா
26-12-2006, 11:14 AM
அருமையான பதிவு பிரியன்... படம் நன்றாக அமைந்துள்ளது..

இளசு
26-12-2006, 11:17 AM
நல்மணியோ பதரோ பழுதோ
இப்பறவை இல்லாவிடில்
தரையின் நிலை கவலைக்கிடம்..


பறவைக்கு நன்றி..
ப்ரியனுக்குப் பாராட்டுகள்!

ப்ரியன்
26-12-2006, 12:20 PM
நன்றி ஆதவா

ப்ரியன்
26-12-2006, 12:22 PM
நல்மணியோ பதரோ பழுதோ
இப்பறவை இல்லாவிடில்
தரையின் நிலை கவலைக்கிடம்..


பறவைக்கு நன்றி..
ப்ரியனுக்குப் பாராட்டுகள்!

உண்மை இளசு...காலப் பறவை கொத்தித் தின்னாமல் போனால் இதயமெங்கும் ஞாபகக் குப்பையெங்கும் புழுக்கள் நெளிந்திருக்கும்...

mayan
03-01-2007, 04:45 PM
நல்ல கவிதை..
சில எழுத்துப் பிழைகளை தவிர்த்து விட்டால் நன்றாக இருக்கும்

மேலும் உங்களது கவிதைகளைப் படித்துத் தொடரும்...

பென்ஸ்
03-01-2007, 05:44 PM
ஏனோ என்னால் ஒத்து கொள்ள முடியவில்லை விக்கி....

காலம் ஒரு நல்ல மருந்து தான்,
காயங்களை குணபடுத்தும், வடுக்களை அல்ல....

கால பறவையும் உண்ட பழங்களின் எச்சம் தானே
எங்கோ ஒரு அனாதை மரமாய்...

கருத்து என்னால் ஏற்று கொள்ளமுடியா விட்டாலும்,
சொல்ல வந்தது அழகாக சொல்ல பட்டுள்ளது..