PDA

View Full Version : தமிழ் மன்றம் - வாழ்த்துப்பாlenram80
25-12-2006, 08:56 PM
அட, இங்கே பாருங்கள்!
சத்தமே இல்லாமல் தீபாவளி
ஒவ்வொரு நாளும் கொண்டாடப்படுகிறது!

பொதுவாக கோயில்களில் தான் திருவிழா நடக்கும்!
இங்கே பாருங்கள்! கணிப்பொறிக்குள் தமிழுக்காகத் திருவிழா!

முல்லை, மல்லி,ரோஜா, கதம்பம், தாமரை, குறிஞ்சி
என அத்தனை பூக்களும் ஒன்றாக பூக்கின்றன!
இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா?
பூப்பது நிலத்திலோ, குளத்திலோ அல்ல! தமிழ் கடலில்!

வருடத்தில் ஓரேஒரு நாள் பிறந்தநாள் கொண்டாடுவதற்கே
மகிழ்கிறோமே நாம்!
இங்கே ஒவ்வொரு பதிவின் போதும்
தமிழ் அதன் பிறந்த நாளை கொண்டாடுகிறதே!
அது எவ்வளவு சந்தோஷம் கொள்கிறதோ? யார் கண்டார்?

ஏ ஐசக் நியூட்டனே!
கல்லரையில் காலம் கடத்தியது போதும்!
எழுந்து வா! விளக்கம் கொடு!
கீழ் நோக்கி இழுத்தால், அது புவியீர்ப்பு விசை!
இது என்ன விசை? இப்படி எங்களை இழுக்கிறதே?

'தயவுசெய்து இங்கு பூக்களைப் பறியுங்கள்!
இதன் கனிகளை ருசியுங்கள்!'
இப்படி ஒரு அறிவிப்பு இந்த பூங்காவில் மட்டுமே!

இந்தியாவில் இருப்பதனால் இப்படியா?
தினமும் பதிவுக் குழந்தைகளை
மளமளவென பெற்றுக் கொண்டேயிருக்கிறதே!

மற்ற வலைகளில் தமிழ் தந்திரத்தால் மாட்டுகிறது!
இந்த வலையில் மட்டும் தான், தமிழ் தானே வந்து மாட்டுகிறது!

ஒரே கல்லில் இரு மாங்காய்!
அதுவும் சில சமயங்களில்! - இது மற்ற வலை மரங்களில் பதிவுகளாய்!
ஒரு கல்லுக்கே
கொட்டோவென கொட்டுவது இந்த வலை மரத்தில் தான், பதில் பதிவுகளாய்!

மற்றவைகள், உதிரி வெடி! திரியை பற்ற வைத்தால், ஒரே ஒரு சத்தம் தான்!
இது சரவெடி! திரியை பற்ற வைத்தால், சத்தம் பல சந்ததிக்குக் கேட்கின்றது!

இந்த தமிழ் மன்றம்,
உலகத் தமிழர்களை இணைக்கும் ஒரு அர்த்தமுள்ள தொப்புள் கொடி!
தமிழன் கவலை கலைந்து ஆனந்த உறக்கம் கொள்ள அருமையான தொட்டில் மடி!
இதனால் பரவட்டும் இனி தமிழ் ஒளி!
ஆனந்தத்தில் இனி துள்ளிக் களி!

நமக்கு இல்லாத உரிமையா?
பாராட்ட நினைத்தால், இதன் தோளில் தட்டுவோம்!
தவறெனப் பட்டால், இதன் தலையில் குட்டுவோம்!

தமிழின் மணம் பரப்ப, புறப்பட்ட கணிப்பொறித் தோழி!
பயணம் நல்லபடி தொடர்ந்து, பல்லாண்டு வாழி!

வாழ்த்துக்களுடன் - லெனின் -

lenram80
25-12-2006, 09:13 PM
தமிழ் மன்றத்தின் தோளில், என் முதல் தட்டு:
என் "திருவிளையாடல்" நாடகத்தின் நகல் பதிவை, அதன் பதில் பதிவுகளோடு அப்படியே பெயர்த்து அதன் அசலோடு, சேதாரமே இல்லாமல் சேர்த்ததற்காக!

இதோ உன் தலையில், என் முதல் குட்டு:
"பதிவு" - என்ற சொல்லை பயன்படுத்தாமல், இன்னமும் "New Thread" -ஐ பயன்படுத்துவது
"பதில் பதிவு" - என்ற சொல்லை பயன்படுத்தாமல், இன்னமும் "Reply" -ஐ பயன்படுத்துவது

மேலே உள்ளது, ஏதோ என்னால் முடிந்த வாழ்த்துப்பா!
அட இப்படி, எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்கப்பா!!! :)
- லெனின் -

meera
26-12-2006, 05:50 AM
லெனின்,

தினம் தினம் பதிவுகளின் எண்ணிக்கையும்,உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரிப்பது நம் மன்றத்திற்கு கிடைத்த பெருமை.

அழகாய் இருக்கிறது தொடர வாழ்த்துகள்.

இளசு
26-12-2006, 01:06 PM
நன்றியும் பாராட்டுகளும் லெனின்...

இன்று சாமந்தி, செவ்வந்தி(விரைவில்) என இன்னும் சில மலர்களையும்
அவற்றின் உள்ளடக்கமாய் கூடுதல் இதழ்ப்பகுதிகளையும்
தலைவர் தொடுக்க, மன்ற மாலை இன்னும் வண்ணமயமாய்..


குறைகளைக் குறைக்க தொடர்ந்து அனைவரும் செயல்படுவோம்..
நிறைகளால் நிறைக்கவும்...

Mano.G.
26-12-2006, 01:45 PM
நமது மதிப்பிற்குறிய கவி பட்டுகோட்டையாரின் வாரிசோ
இந்த லெனின் , வரும்போதே தமிழுக்கு வாழ்த்து
அத்தோடு தமிழாக்க கொட்டும் கொடுத்துள்ளது
மன்றத்தின் பாலுள்ள ஈடுபாடோ?

தொடருங்கள் வாழ்த்துக்கள்
வளரட்டும் நமது தமிழ்மன்றம்


மனோ.ஜி

இராசகுமாரன்
26-12-2006, 03:45 PM
நண்பர் லெனின்,

உங்கள் வாழ்த்துப்பாவிற்கு நன்றி..!

தமிழ் மன்றம் அதன் உறுப்பினர்களின் சேவைக்காக உருவாக்கப் பட்டது. உங்கள் ஆலோசனைகள் எப்போதும் திறந்த மனத்தோடு ஏற்றுக் கொள்ளப் படுகின்றன.

ஆனால், சில ஆலோசனைகளை ஏற்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. அதற்கு தெளிவு கண்டவுடன் ஏற்கப் படும்.

நீங்கள் குறிப்பிடுபவை எவை என்று சரியாகப் புரியவில்லை. புதிய திரி திறக்கவும், பதிலளிக்கவும் உள்ள பட்டன்களை தான் அவ்வாறு கூறுகிறீர்களா? அல்லது நாங்கள் உபயோகப் படுத்தும் வார்த்தைகளை குறிப்பிடுகிறீர்களா?

பட்டன்கள் என்று தான் நினைக்கிறேன், அதற்கு எனது கருத்து பின்வருமாறு:

1) "New Thread", "Post Reply" போன்றவை இந்த மென்பொருளுடன் வரும் படங்கள். அவை மட்டுமல்ல இது போன்ற பல பட்டன்கள் படங்களாகவே இந்த மென்பொருளுடன் வரும். ஒன்றை மட்டும் மாற்றினால் போதாது, அனைத்தையும் மாற்றினால் தான் நன்றாக இருக்கும்.

2) நான் அந்த படங்களை மாற்றினால், அவ்வளவு நன்றாக இருக்காது. படங்களை திறமையான முறையில் வடிவமைக்கும் "Graphic Designer" யாராவது அவற்றை தமிழுக்கு மாற்றிக் கொடுத்து உதவினால் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப் படும்.

3) ஒவ்வொரு முறை மென்பொருள் மேம்படுத்துதல் செய்யும் போதும் படங்களில் மாற்றம் இருந்தால் அதையும் தொடர்ந்து செய்ய வேண்டும். அல்லது பிழைச் செய்திகள் வரலாம்.

4) துவக்க காலத்தில் மன்ற மென்பொருளை தமிழாக்கம் செய்ய முயற்சித்து தாமதமானது, அதனால் அதன் பிறகு மென்பொருட்களில் மாறுதல் செய்யாமல் அப்படியே உபயோகிப்பது என்று முடிவு செய்யப் பட்டது.

5) நம்மைப் பார்த்து பல மன்றங்கள் காப்பி அடித்திருக்கிறார்கள். ஒரு சில மன்றங்கள் நீங்கள் கூறுவது போல் செயல் படுகின்றன. அதற்காக நாமும் அவர்களை பின்பற்ற வேண்டுமென்பதில்லை. நமக்கு எது நன்மை பயக்குமோ அதையே எடுத்துக் கொள்வது சிறந்தது.தமிழ் மன்றத்தின் தோளில், என் முதல் தட்டு:
என் "திருவிளையாடல்" நாடகத்தின் நகல் பதிவை, அதன் பதில் பதிவுகளோடு அப்படியே பெயர்த்து அதன் அசலோடு, சேதாரமே இல்லாமல் சேர்த்ததற்காக!

இதோ உன் தலையில், என் முதல் குட்டு:
"பதிவு" - என்ற சொல்லை பயன்படுத்தாமல், இன்னமும் "New Thread" -ஐ பயன்படுத்துவது
"பதில் பதிவு" - என்ற சொல்லை பயன்படுத்தாமல், இன்னமும் "Reply" -ஐ பயன்படுத்துவது

மேலே உள்ளது, ஏதோ என்னால் முடிந்த வாழ்த்துப்பா!
அட இப்படி, எல்லோரும் சேர்ந்து வாழ்த்துங்கப்பா!!! :)
- லெனின் -

அறிஞர்
26-12-2006, 04:20 PM
பட்டுக்கோட்டை மைந்தரே.... பாஸ்டனில் என்னச்செய்கிறீர்கள்......

மன்றத்திற்கான பா அருமை.

உலகத்தமிழர்களை இணைக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட இந்த தளம், இன்னும் பலரை அன்பின் கயிறுகளால் கட்டும் என்றே நம்புகிறோம்.

lenram80
26-12-2006, 06:00 PM
வாழ்த்துப்பாவை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி.
இராஜாகுமாரனுக்கு: (பொத்தான்)அழுத்திகளை மாற்றுவதில் நடைமுறைகள் சிக்கல்கள் இருந்தால் விட்டு விடுங்கள்.

lenram80
15-01-2007, 11:39 PM
தமிழ் மன்றத்திற்கென ஒரு இலச்சியை (symbol) உருவாக்கினால் என்ன? சின்ன கேடயம் ஒன்றில் இயல், இசை, நாடகம் என்று ஏதாவது போட்டு ஒரு
சிம்பள் இருந்தால் நன்றாக இருக்கும். வாசகர்களிடமே போட்டி வைத்து, நல்லதை தேர்ந்தெடுங்கள். ரிப்பன் மாளிகைக்குப் பதில் இதை போடலாம்.

மதுரகன்
18-01-2007, 03:37 PM
அருமையான வாழத்துப்பா லெனின் ...
நானும் ஒன்றை எழுத முயற்சிக்கின்றேன்....

Narathar
18-01-2007, 05:24 PM
தட்டும் குட்டும் நன்றாகத்தான் இருந்தது.........................

மனோஜ்
18-01-2007, 05:40 PM
(லெனின்)புறட்சியாளரின் வாழ்துப்பா புறட்சியாகவே உள்ளது