PDA

View Full Version : ரஷ்யாகாரி காதல்

ஆதவா
25-12-2006, 04:23 PM
நண்பர்களே, தோழிகளே
சுவையான சம்பவங்கள் தலைப்பை இப்போதுதான் தொடுகிறேன். என் வாழ்க்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சி ஒன்றை உங்களுக்கு பகிர்ந்திட விரும்புகிறேன்

என்னைப்பற்றி அவ்வளவாக அறிமுகம் தேவையில்லை. சுமார் 3 வருடங்களுக்கு முன்பு நானும் என் தந்தையும் தொழில் தொடங்கினோம். அப்போது வீட்டிலேயே தொழில் ஆரம்பித்துவிட்டேன். தொலைபேசி இணைப்பு என் வீட்டில் தொழில் தொடங்குவதற்கு முன்பிருந்தே இருக்கிறது. அதன் வழியாக இணையம் கனெக்சன் வாங்கினேன்..

இணைய கனெக்சனை அப்பொதெல்லாம் அரட்டை அடிப்பதற்கும், மெயில் பார்ப்பதற்கும் மட்டுமேதான் உபயோகித்தேன். வேறெதுவும் தெரியாது, இப்படியிருக்கையில் அரட்டை அடிக்கும் போது பொதுவாக நாங்கெல்லாம் பெண்களையே தேடுவோம். நானும் அப்படித்தான். ஒருநாள் அரட்டையில் ஒரு பெண்ணை பிடித்தேன். எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் இருக்கும். இந்த ID யில் இருப்பது பெண்ணா இல்லை ஆணா என்று..
ஆனால் அது நிச்சயம் பெண்தான் ( உறுதிபடுத்தியது எப்படி? எனக்கே தெரியவில்லை. நேரில் பார்த்தபோது.. ) அவள் பெயர் நடாஸா என்றும் ரஷ்யாவை சேர்ந்தவள் என்றும் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டாள்..

தினமும் இரவு நேரம் அவள் அரட்டைக்கு வருவாள். என்னோடு அதிகம் பேசுவாள்.. என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பற்றி கேட்பாள். இத்தனைக்கும் என்னைவிட அவளுக்கு ஆங்கில அறிவு அதிகம். . ( ஓரளவு நல்லாவே பேசுவேன்பா) இருந்தாலும் அவள் சகித்துக்கொண்டாள்.. தமிழ்நாட்டு உணவு வகைகளை செய்வது எப்படி என்று நிறைய சொல்லிக் கொடுத்தேன். கவிதைகளின் அர்த்தங்களை ஓரளவு ஆங்கிலப்படுத்தி சொன்னேன். அவளும் கவிதை எழுதுவாள்.
( என்னுடைய மெயிலில் அவள் கவிதை இருக்கும் என்று நினைக்கிறேன் ).

ஒருநாள் முகவரி பரிமாறிக்கொண்டோம். முகமும் பார்த்துக்கொண்டோம். என் தொலைப்பேசி எண் கேட்டாள். கொடுத்தேன், அவளும் அப்படியேதான் கொடுத்தாள். ( ரெண்டுபேருமே பேசிக்கலைங்கரது அப்பறம்). எங்கள் நட்பு நீடித்தது..

கிட்டத்தட்ட 3 மாதங்களில் 100 மெயில்கள் அனுப்பினாள். ஒவ்வொன்றையும் படிக்கவே அரைமணிநேரம் ஆகிவிடும்.. பதில் மெயில் எழுதவே எனக்கு ஒருமணிநேரம் ஆகிவிடும்.
இவ்வாறு இருக்கையில் ஒருநாள் எனக்கு அந்த மெயில் கிடைத்தது.. அவள் என்னை மணம் செய்யப் போவதாக சொன்னாள். வீட்டாரின் அநுமதியோடு.. எனக்கு ஷாக் ஆகிவிட்டது.. இருப்பினும் விளையாடுகிறாள் என்று எண்ணி, பதில் எழுதினேன், நல்லவேளை காதல் கீதல் என்று எழுதாமல் எப்பொழுதும் போல எழுதினேன்.. அடுத்த மெயிலிலேயே ஏன் காதலுக்கு பதிலில்லை என்று எழுதியிருந்தாள்.. அதற்கு அது முடியாது; எனக்கும் உனக்கும் வயது பற்றாது; நீ வேற நாடு நானும் வேற நாடு ; மொழி மதம் என எல்லா வேறுபாடுகளையும் பட்டியலிட்டேன்.

அடுத்த மெயில் எனக்கு ஒற்றை வரிகளில் வந்தது.

நான் முன்பு அவளிடம் அரட்டை அடிக்கும்போது பாரதியாரைப் பற்றி பெருமையாகச் சொல்லுவேன். ஓரிடத்தில்
"கவிதை எழுதுவதால் மட்டும் அவன் கவிஞன் ஆவதில்லை; அவன் எழுதிய கவிதைபோல் நடப்பவனே கவிஞன் " என பாரதியார் சொன்னதை அவளிட சொல்லியிருக்கிறேன். நானும் அதன்படிதான் நடக்கிறேனென்றும் சொன்னேன் என் கவிதைகளை ஒன்று ," இனம், மதம், மொழி, விழி ஆகியவற்றை கடந்து வருவதே காதல்" என்று சொல்லியிருந்தேன்..

அதை அவள் மேற்கோள் காட்டினாள்..

நான் உடனே அரட்டை அடிப்பதையும் மெயில் அனுப்புவதையும் நிறுத்திவிட்டேன்..

சுமார் 1 மாத காலத்தில் 20 மெயில்கள் அவளிடமிருந்து வந்தன.. எதற்கும் பதில் அனுப்பவில்லை.

ஒருநாள் வெள்ளிக் கிழமை எனக்கு சென்னையிலிருந்து போன்... நல்லவேளையாக நான் ரிசீவரை எடுத்தேன்,, மறுமுனையில் நடாஸா...

எப்படியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.. பதற்றம் உண்டாகிவிட்டது.. என் அம்மாவுக்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவுதான். பின்னி எடுத்துவிடுவார்கள்..
அவள் ஏதோ ஹோட்டலில் தங்கியிருப்பதாகவும் உடனடியாக் சென்னை வரவேண்டும் என்றும் சொன்னாள்... நானோ இருக்கிற வேலையை விட்டுவிட்டு சென்னைக்கு வரமுடியாதென்றும், உடனே கோவைக்கு வரவேண்டும் என்றும் சொன்னேன்.

மறுநாளே அதாவது சனிக்கிழமை வந்துவிட்டாள்.. எந்நேரமும் போனுக்கு அடியிலேயே உட்கார்ந்திருந்தேன்.. ( அப்போது கைப்பேசியில்லை) போன் வந்ததும் கோவை கிளம்பினேன்.. எனக்கு உடலெல்லாம் பதற்றம். கோவையில் ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தாள். கைகால்கள் உதறலோடு முதல் முறையாக அவளை நேரில் பார்த்தேன்.. அதிலும் அவள் எனக்காகவே வந்திருந்தாள்..

அவளிடம் என்னுடைய மறுப்பை சொன்னேன். அவள் அதற்கு உடன்படவேயில்லை. எப்படியாவது மணம் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடே இருந்தாள். இத்தனை தூரம் தள்ளி வந்திருக்கும் என்னை தள்ளி வைக்காதே என மன்றாடினாள், எனக்கு அழுகையே வந்துவிட்டது. அவள் அறையில் உட்கார்ந்து சிறிது நேரம் அழுதேன்..

அப்பொழுதும் அவள் மனம் மாறவேயில்லை. இதற்கெல்லாம் இடையில் மொழிப் பிரச்சனை வேறு... அவளின் ஆங்கிலமே ஒருமாதிரியாக இருந்தது, பல விஷயங்கள் அவள் சொன்னது புரியவேயில்லை..

ஒருவாறு அவளை அனுப்பி விடுவதற்க்காகவே காதலை ஒப்புக்கொள்வதாக சொன்னேன். அவள் இன்னும் இரண்டு வாரங்கள் தங்கியிருந்துதான் போக முடியும் அதனால் வீட்டில் தங்கவேண்டினாள்... அய்யோ!! என் அம்மா அவ்வளவுதான் ருத்திரதாண்டவம் ஆடிவிடுவார் என்று சொல்ல, அவள் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்ததால் இந்தியாவை சுற்றிப் பார்த்துவிட்டு பின் செல்வேன் என்றாள். அதுவரையிலும் நிம்மதி..

அடுத்து பிறந்தது துன்பம்

என்னையும் அவளோடு அழைத்தாள்.. நான் மறுக்கவே மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டாள்... பின் ஒரு வழியாக சமாதானம் பேசி அனுப்பிவைத்தேன்.. இந்த சம்பாஷணைகள் முடியவே இரவு ஆகிவிட்டது..

அவள் ஊருக்குச் சென்று எனக்கு மெயில் அனுப்பினாள் (சுமார் ஒருமாதமிருக்கும்).. ஏனோ தெரியவில்லை. காதல் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.. எனக்கும் நிம்மதி.

அதில் விட்டதுதான்,, இப்பொழுதெல்லாம் அரட்டையே அடிப்பதில்லை

(பிகு: நண்பர்கள் யாராவது கேட்டீர்களேயானால் அவளின் திருமுகத்தைக் காட்ட விரும்புகிறேன் கூடவே அவள் கடிதமும்.. )

இளசு
25-12-2006, 06:34 PM
அந்தரங்கம் புனிதமானது..
ஆகவே பெயர், படம் வேண்டாமே ஆதவா..

பல பாடங்கள் இந்த அனுபவத்தில் - பிறர் கற்க..
பகிர்ந்தமைக்கு நன்றி...

ஆதவா
26-12-2006, 03:06 AM
அந்தரங்கம் புனிதமானது..
ஆகவே பெயர், படம் வேண்டாமே ஆதவா..

பல பாடங்கள் இந்த அனுபவத்தில் - பிறர் கற்க..
பகிர்ந்தமைக்கு நன்றி...

நன்றி இளசு அவர்களே!!!

பரஞ்சோதி
27-12-2006, 05:01 AM
ஆதவன் அவர்களே!

நான் சொல்வதை தவறாக நினைக்க வேண்டாம்.

இளசு அண்ணா சொன்னதை தான் நானும் சொல்கிறேன்.

நம்ம அந்தரங்கமான விசயங்களை வெளியே சொல்லக்கூடாது, இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் அதுவே நமக்கு துன்பம் தரும் விசயமாக மாறிவிடும். நீங்க இப்படி பகிரங்கமாக இதை சொல்லியிருப்பது, அவரது நட்பை களங்கப்படுத்துவதாக இருக்குது, மேலும் புகைப்படம் கொடுக்க நினைப்பது மிகப் பெரிய தவறு.

சில சமயம், இது போன்றவை நாம் வெளியே சொல்வதாக நமக்கு புகழ் கிடைக்கும், ஹீரோ மாதிரியான ஒரு இமேஜ் கிடைக்கும் என்று நம் மனசு சொல்லும், என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். அது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து எழுதுங்கள். முடிந்தால் இப்பதிவை நீக்க இளசு அண்ணாவிடம் சொல்லுங்க.

உங்க நலம் விரும்பும் நண்பன்,
பரஞ்சோதி

மயூ
28-12-2006, 08:59 AM
அந்தரங்கம் புனிதமானது..
ஆகவே பெயர், படம் வேண்டாமே ஆதவா..

பல பாடங்கள் இந்த அனுபவத்தில் - பிறர் கற்க..
பகிர்ந்தமைக்கு நன்றி...
நிச்சயம்!
தப்பாக நினைக்காதீங்க!! உங்களை நம்பி அவர் அனுப்பிய படத்தை அப்படி செய்வது அவ்வளவு நல்லதல்ல!! :)

ஆதவா
28-12-2006, 04:03 PM
உங்கள் எல்லாருக்கும் என் முதற்கண் வணக்கம்...

இது நடந்து மூன்று வருடங்களுக்கும் மேலாகிறது.. இக்காலத்தில் அவள் என்னை ஒருமுறைகூட அல்லது ஒரு மெயில் கூட போடவில்லை.. சுத்தமாக மறந்திருக்கக் கூடும்..

யாவருக்கும் இதில் பாதிப்பில்லை என்றறிந்துதான் இங்கே வெளியிட்டேன்.. என்னுள் பல அந்தரங்கங்கள்..... சில சொல்லத் தகுந்தவை. சில மறைக்கத் தகுந்தவை...

நிச்சயமாக படங்களை வெளியிட மாட்டேன்...

எனினும் பதில் அளித்த நண்பர்களுக்கு நன்றி...

அறிஞர்
04-01-2007, 01:31 PM
ஆதவா இது மாதிரி கதை கேட்டிருக்கேன்.. இந்த அனுபவம் வித்தியாசமாக உள்ளது.
----------
தைவானில் இருக்கும்போது, நானும் இப்படி நண்பர்களை பிடிக்க போய்.. சாட் பண்ணி போன் நம்பர் ஒரு பெங்களூர் பெண்ணுக்கு கொடுத்தேன்..

இரவில் போன் கால் வந்தது. என்னன்னு கேட்டா...

"எங்க பெற்றோருக்கு சம்மதம். உங்க அம்மா கிட்ட சொல்லிட்டிங்களான்னு" அவள்
"என்னத்த சொல்லுறது" நான்
" என்னை பற்றி" அவள்
"உன்னைப்பற்றியா!! எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்" நான்
"இல்ல நம்ம கல்யாண விசயம் பற்றி" அவள்
"என்னது கல்யாணமா... நான் சும்மா நட்பு தான் கேட்டேன். ஈமெயில் பாரு..." என்று சொல்லி போனை துண்டித்தேன்.

பிறகு ஈமெயில் சமாளிப்பு கடிதம் எழுதி தப்பித்தேன்.

ஷீ-நிசி
04-01-2007, 02:13 PM
ஆஹா.. நிறைய இரகசியங்கள் வெளியே வரும் போல இந்த திரியில...

ஆதவா
04-01-2007, 03:29 PM
ஹி ஹி எல்லாம் நம்ம வேலைதான்......

sarcharan
04-01-2007, 03:40 PM
ஹி ஹி எல்லாம் நம்ம வேலைதான்......

ஆதவன் அது என்ன location: காதலியின் கல்லறை?? பிரதீப்புக்கு விளக்கம் தேவையாம்

ஆதவா
04-01-2007, 04:01 PM
ஆதவன் அது என்ன location: காதலியின் கல்லறை?? பிரதீப்புக்கு விளக்கம் தேவையாம்

என் காதலும் காதலியும் கல்லறையில் இருக்கக் கூடாதா?

இன்று காதலின் புனிதமான சின்னமாகக் கருதப்படும் தாஜ்மஹால் கூட கல்லறைதானே!!!

காதலின் கடைசி நிலை சாதல் எனச் சொன்ன கவிஞர்கள் பலர்.. அதிலும் மேலே கல்லறை ஒன்று இருப்பதை மறந்துபோனார்கள்.

எது எப்படியோ.. செத்துப்போன காதலியின் கல்லறையில் காவலாக காத்திருக்கிறேன்.. மீண்டும் அவள் உயிர்த்தெழ...

sarcharan
04-01-2007, 04:30 PM
என் காதலும் காதலியும் கல்லறையில் இருக்கக் கூடாதா?
எது எப்படியோ.. செத்துப்போன காதலியின் கல்லறையில் காவலாக காத்திருக்கிறேன்.. மீண்டும் அவள் உயிர்த்தெழ...

ஷாஜகான்....

leomohan
04-01-2007, 04:51 PM
ஆதவா இது மாதிரி கதை கேட்டிருக்கேன்.. இந்த அனுபவம் வித்தியாசமாக உள்ளது.
----------
தைவானில் இருக்கும்போது, நானும் இப்படி நண்பர்களை பிடிக்க போய்.. சாட் பண்ணி போன் நம்பர் ஒரு பெங்களூர் பெண்ணுக்கு கொடுத்தேன்..

இரவில் போன் கால் வந்தது. என்னன்னு கேட்டா...

"எங்க பெற்றோருக்கு சம்மதம். உங்க அம்மா கிட்ட சொல்லிட்டிங்களான்னு" அவள்
"என்னத்த சொல்லுறது" நான்
" என்னை பற்றி" அவள்
"உன்னைப்பற்றியா!! எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்" நான்
"இல்ல நம்ம கல்யாண விசயம் பற்றி" அவள்
"என்னது கல்யாணமா... நான் சும்மா நட்பு தான் கேட்டேன். ஈமெயில் பாரு..." என்று சொல்லி போனை துண்டித்தேன்.

பிறகு ஈமெயில் சமாளிப்பு கடிதம் எழுதி தப்பித்தேன்.

அப்ப சுவாரஸ்யமா ஒரு புது திரி ஆரம்பிச்சுடுங்க. :)

அறிஞர்
05-01-2007, 03:06 PM
அப்ப சுவாரஸ்யமா ஒரு புது திரி ஆரம்பிச்சுடுங்க. :)
ஹிஹி ஹிஹி இது மாதிரி பல கதை இருக்கிறது.... நண்பர்கள் பதியும் போது... இது மாதிரி கதைகள் வரும்...

மன்மதன்
06-01-2007, 04:55 PM
ஆதவா.. அரே வா(வ்)...........! கிரேட் எஸ்கேப்யா..இல்லேன்னா இந்நேரம் நீங்க ரஷ்யமன்றத்தில் இருப்பீங்க இல்ல.. அறிஞர் நைஸா சொல்ல வந்ததை எடிட் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்.. ச்சோ ஸ்வீட் :D

ஓவியா
07-01-2007, 01:53 AM
ஆதவா,
ரஷ்யாகாரி நாட்டைவிட்டு ஓடி வறாபுலே என்னா மந்திரம் போட்டீங்க....

பெண் பாவம் பொல்லாதது ....பொய்யாச்சி போச்சே

ஆதவா
07-01-2007, 02:17 AM
ஆதவா.. அரே வா(வ்)...........! கிரேட் எஸ்கேப்யா..இல்லேன்னா இந்நேரம் நீங்க ரஷ்யமன்றத்தில் இருப்பீங்க இல்ல.. அறிஞர் நைஸா சொல்ல வந்ததை எடிட் பண்ணிட்டாருன்னு நினைக்கிறேன்.. ச்சோ ஸ்வீட் :D

ஆமாம் மன்மதன்... ( ஹி ஹி என்னையும் ஒரு வேளை மன்மதன்னு நினச்சுருச்சோ? ) இத்தனைக்கும் எனக்கு அப்ப 20 வயசு ஆரம்பம்... ரெம்ப சின்ன பையன். இந்த விஷயம் எனக்கும் என்னோட நண்பன் ஒருத்தனுக்கும் தவிர யாருக்கும் தெரியாது. ஆனா அவளோட இமெயில் கடிதம் போட்டாவெல்லாம் எங்க வீட்ல பாத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். இங்க எழுதனதுக்கப்பறம் எங்க வீட்ல சொன்ன, நம்ப மாட்டேங்கறாங்க.

ஆதவா
07-01-2007, 02:21 AM
ஆதவா,
ரஷ்யாகாரி நாட்டைவிட்டு ஓடி வறாபுலே என்னா மந்திரம் போட்டீங்க....

பெண் பாவம் பொல்லாதது ....பொய்யாச்சி போச்சே

அய்யோ நான் எங்க மந்திரம் போட்டேன்.. ஆனா ஒரே ஒரு தப்பு பண்ணினேன். அவங்க மெயிலுக்கு ரெப்ளை உடனே பண்ணுவேன், அதுலயும் காதல் வார்தைகளா போட்டு அனுப்புனேன்.. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு அப்ப தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அனுப்பியிருக்கவே மாட்டேன்.

பிகு: என்னோட சந்தேகம்: எனக்காக வந்திருப்பான்னு சொல்ல முடியாது. அவங்க டூரிஸ்டு விசாவுல வந்திருந்தாங்க. கண்டிப்பா ஊர் சுத்தத்தான்னு நினைக்கிறேன். அப்படியே என்னையும் பார்த்து டார்ச்சர் பண்ணலாம்னு நினைச்சிருக்கலாம் இல்லியா?

ஆதவா
07-01-2007, 02:22 AM
ஆதவா,
ரஷ்யாகாரி நாட்டைவிட்டு ஓடி வறாபுலே என்னா மந்திரம் போட்டீங்க....

பெண் பாவம் பொல்லாதது ....பொய்யாச்சி போச்சே

இதுக்கு அர்த்தம் என்னன்னு தெர்லீங்கோ!!!

ஓவியா
07-01-2007, 10:18 PM
இதுக்கு அர்த்தம் என்னன்னு தெர்லீங்கோ!!!

எந்த பொண்ணாவது உங்களையும் இப்படி நாடு விட்டு நாடு வந்து தெடறாப்புலே அலைய விட்டு இருக்கனும்...நடக்கலையே அதான் பெண் சாபம் பலிக்கலையேனு சொன்னேன்

மன்மதன்
08-01-2007, 07:52 AM
அய்யோ நான் எங்க மந்திரம் போட்டேன்.. ஆனா ஒரே ஒரு தப்பு பண்ணினேன். அவங்க மெயிலுக்கு ரெப்ளை உடனே பண்ணுவேன், அதுலயும் காதல் வார்தைகளா போட்டு அனுப்புனேன்.. இந்த மாதிரி பிரச்சனை வரும்னு அப்ப தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அனுப்பியிருக்கவே மாட்டேன்.

பிகு: என்னோட சந்தேகம்: எனக்காக வந்திருப்பான்னு சொல்ல முடியாது. அவங்க டூரிஸ்டு விசாவுல வந்திருந்தாங்க. கண்டிப்பா ஊர் சுத்தத்தான்னு நினைக்கிறேன். அப்படியே என்னையும் பார்த்து டார்ச்சர் பண்ணலாம்னு நினைச்சிருக்கலாம் இல்லியா?

வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பு. ஒரு வேளை டூரிஸ்ட் விஸாவுல உங்களை இஸ்டுக்கிட்டு போகலாம்னு வந்திருப்பாங்களோ???:rolleyes: :rolleyes:

ஆதவா
08-01-2007, 08:35 AM
எந்த பொண்ணாவது உங்களையும் இப்படி நாடு விட்டு நாடு வந்து தெடறாப்புலே அலைய விட்டு இருக்கனும்...நடக்கலையே அதான் பெண் சாபம் பலிக்கலையேனு சொன்னேன்

ஆஹா!! ஓவியா அவங்களே, யாராவது சாபம் உட்றபோராங்கப்பா!!

ஆதவா
08-01-2007, 08:36 AM
வாழ்க்கையிலே இதெல்லாம் சகஜமப்பு. ஒரு வேளை டூரிஸ்ட் விஸாவுல உங்களை இஸ்டுக்கிட்டு போகலாம்னு வந்திருப்பாங்களோ???:rolleyes: :rolleyes:

இருக்கலாம் . பேசாம போயிருக்கலாம்..

பென்ஸ்
08-01-2007, 04:24 PM
அட நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் போல இருக்கே...!!!!:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆதவா.. எப்படி மாமு எஸ்கேப் ஆவுறது..????:D :D :D

ஆதவா
08-01-2007, 05:21 PM
அட நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவன் போல இருக்கே...!!!!:rolleyes: :rolleyes: :rolleyes:
ஆதவா.. எப்படி மாமு எஸ்கேப் ஆவுறது..????:D :D :D

அதேயேன் கேக்கறீங்க.. அந்த வெள்ளகாரிச்சிய அனுப்புரதுக்குள்ள நான் பட்ட பாடு இருக்கே!! இருந்தாலும் ஒரு பெருமை என்னன்னா, என்னையும் ஒரு ஆம்பளையா மதிச்சு வெளிநாட்டுக்காரியே லவ்வரான்னா, உண்மையிலேயே நான் கொடுத்து வெச்சவன்...

எஸ்கேப் லாம் ஆகாதீங்க. டப் புனு செட்டில் ஆகிறதுக்கு பாருங்க.. ஏதோ நாந்தான் கோட்ட விட்டேன்... நீங்களாவது.....

poo
09-01-2007, 07:56 AM
சில சமயங்களில் இது நடப்பதுண்டு.. இனம்புரியா உணர்வு என்பார்களே.. அதுதான் இப்படி ஆட்டிவைக்கிறது..

ஆனாலும் ஆதவரே,நீங்கள் கொஞ்சம் ஆராய்ந்து செயல்பட்டிருக்கலாம் , வெளிநாட்டுக்காரியென்பதால் இதயமென்பது (காதல் இதயம்) இலேசாக இருந்திராது... பேசிப்பார்த்திருக்கலாம்... இன்னும் சொல்லப்போனால்... இப்போது வருத்தப்படாமல் இருந்திருக்கலாம்.. (ஆய்வின் முடிவில் அறிவானதேயென அறிய வந்திருந்தால்..) ஏனெனில்.. அவளது அந்நிலைக்கு காரணம் நீங்களும் பொறுப்புதானே!?

ஆதவா
09-01-2007, 08:54 AM

நிச்சயமாக!! எனக்கு அப்போது பேசக் கூடிய வயதில்லை.. மாறாக பயமே மேலோங்கொயிருந்தது...

ஷீ-நிசி
09-01-2007, 09:34 AM
ஆதவா, ஒருவேளை அவங்க உங்கள கலாய்த்திருப்பங்களோ..

ஆதவா
09-01-2007, 09:54 AM
ஆதவா, ஒருவேளை அவங்க உங்கள கலாய்த்திருப்பங்களோ..

இருக்கலாம்....

gragavan
09-01-2007, 10:34 AM
என்ன சொல்வதென்று தெரியவில்லை...என்னுடைய வாழ்க்கையில் இத்தனை சுவாரசியமான சம்பவங்கள் நடக்கவில்லை என்பதே உண்மை. :-(

ஆதவா
09-01-2007, 11:11 AM
என்ன சொல்வதென்று தெரியவில்லை...என்னுடைய வாழ்க்கையில் இத்தனை சுவாரசியமான சம்பவங்கள் நடக்கவில்லை என்பதே உண்மை. :-(

தப்பிச்சீங்கன்னு சொல்றதா? இல்ல வருத்தப்பட்றதா?

Mathu
10-01-2007, 10:35 PM
ஆகா கிறேட் எஸ்கேப் ஆதவா..!
ஆனாலும் ஒரு வெளிநாட்டு காறி நம்ம நாட்ட
சுற்றி பாக்க வாறா இப்படியா எஸ்கேப் ஆகிறது.
கொஞ்சம் ஆவது சுற்றி காட்டி இருக்கலாம் இல்ல ;)

ஆளுக்கொரு வாழ்க்கை, அத்தனையிலும் அர்த்தங்கள் ஆயிரம்

ஆதவா
11-01-2007, 01:35 AM

ம்ம்ம்ம்ம்ம்..... என்ன பண்றதுங்க.... இப்ப்ப வருத்தப்பட்டு என்ன பிர்யோசனம்

பரஞ்சோதி
11-01-2007, 08:07 AM
ஆதவா இது மாதிரி கதை கேட்டிருக்கேன்.. இந்த அனுபவம் வித்தியாசமாக உள்ளது.
----------
தைவானில் இருக்கும்போது, நானும் இப்படி நண்பர்களை பிடிக்க போய்.. சாட் பண்ணி போன் நம்பர் ஒரு பெங்களூர் பெண்ணுக்கு கொடுத்தேன்..

இரவில் போன் கால் வந்தது. என்னன்னு கேட்டா...

"எங்க பெற்றோருக்கு சம்மதம். உங்க அம்மா கிட்ட சொல்லிட்டிங்களான்னு" அவள்
"என்னத்த சொல்லுறது" நான்
" என்னை பற்றி" அவள்
"உன்னைப்பற்றியா!! எதுக்கு அவங்க கிட்ட சொல்லணும்" நான்
"இல்ல நம்ம கல்யாண விசயம் பற்றி" அவள்
"என்னது கல்யாணமா... நான் சும்மா நட்பு தான் கேட்டேன். ஈமெயில் பாரு..." என்று சொல்லி போனை துண்டித்தேன்.

பிறகு ஈமெயில் சமாளிப்பு கடிதம் எழுதி தப்பித்தேன்.

அறிஞரே!

சூப்பரா தான் இருக்குது. ஆனா நீங்க போன் எண் கொடுத்தது நம்ம பிரதீப்-கிட்ட என்று நினைக்கிறேன், தம்பி குரலை மாத்தி பெண் குரலில் உங்களை கலாய்த்து இருக்கார், சரி இருக்கட்டும். :D

நீங்க ஏன் இமெயில் அனுப்பணும், பேசாம உங்க ஆராய்ச்சி பற்றி மன்மதன் எழுதியதை அனுப்பியிருந்தால் போதுமே, அய்யோ சாமியோவ், தப்பிச்சோமட்டா என்று அந்த பெண் ஓடியிருப்பாரே :D

பரஞ்சோதி
11-01-2007, 08:08 AM
ஆகா கிறேட் எஸ்கேப் ஆதவா..!
ஆனாலும் ஒரு வெளிநாட்டு காறி நம்ம நாட்ட
சுற்றி பாக்க வாறா இப்படியா எஸ்கேப் ஆகிறது.
கொஞ்சம் ஆவது சுற்றி காட்டி இருக்கலாம் இல்ல ;)

ஆளுக்கொரு வாழ்க்கை, அத்தனையிலும் அர்த்தங்கள் ஆயிரம்

வாங்க மது, எப்படி இருக்கீங்க, பார்த்து பேசி ரொம்ப காலம் ஆகுது.

Mathu
11-01-2007, 08:22 AM
வாங்க மது, எப்படி இருக்கீங்க, பார்த்து பேசி ரொம்ப காலம் ஆகுது.

நலம் பரம்ஸ்.... அங்க எப்படி.

பரஞ்சோதி
11-01-2007, 08:23 AM
உடனடி பதிலுக்கு நன்றி மது.

சிறப்பாக இருக்கிறோம், மகள் சக்தியும் மிக்க நலம். வாண்டு பெண்ணோடு தான் தினமும் நேரத்தை போக்குகிறேன்.

மனோஜ்
19-01-2007, 05:14 PM
ஆதாவா அவர்களே இப்ப ஊள்ள 20வதுக்கு இது ஒரு முன் எச்சரிக்கை

ஓவியா
21-01-2007, 02:58 PM
ஆதாவா அவர்களே இப்ப ஊள்ள 20வதுக்கு இது ஒரு முன் எச்சரிக்கை

ஆமா ஆமா

அந்த பொண்ணும் அவங்க ஊரில் எச்சரிக்கை விட்டிருப்பா......do not b......indian'nu :D :D

sham
09-02-2007, 09:00 AM
என்ன சார் குண்டைத்தூக்கிப்போடுகிறீர்கள்......நான் கூட நடாசா என்ற பெண்ணை "hi5"பட்டியலில் சேர்த்துள்ளேன்.அவள் தான் இவளோ! ஆனால் இவள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறினாள்

ஆதவா
14-02-2007, 02:42 AM
என்ன சார் குண்டைத்தூக்கிப்போடுகிறீர்கள்......நான் கூட நடாசா என்ற பெண்ணை "hi5"பட்டியலில் சேர்த்துள்ளேன்.அவள் தான் இவளோ! ஆனால் இவள் பாகிஸ்தானில் இருப்பதாக கூறினாள்

பாத்துங்க.... அப்பறம் நான் வருத்தப்படறமாதிரி நீங்களும் படாதீங்க... ஏதாவது மெயில் வந்தா கப்னு புடிச்சு ரஷ்யாவில செட்டிலாகிறதுக்குண்டான வழியப் பாருங்க..... :eek: :D

அந்த நடாசாவாக இருக்க முடியாது,,..

sham
14-02-2007, 04:08 AM
ரஷ்யாகாரி சகவாசமே வேண்டாம் பா.

மயூ
14-02-2007, 04:22 AM
ரஷ்யாகாரி சகவாசமே வேண்டாம் பா.
காலடியில் தேன் இருக்கும் போது எதற்கு பக்கத்து வீட்டு சீனி டப்பா????

சரியா ஷாம்?? :cool: :rolleyes:

pradeepkt
14-02-2007, 04:32 AM
காலடியில் தேன் இருக்கும் போது எதற்கு பக்கத்து வீட்டு சீனி டப்பா????

சரியா ஷாம்?? :cool: :rolleyes:
அந்த நேர்முகத் தேர்விலிருந்து வந்ததில் இருந்து மயூரேசனுக்குப் பழமொழிகள் எல்லாம் அத்துப்படி ஆகிவிட்டது போல... :rolleyes:

மயூ
14-02-2007, 04:42 AM
அந்த நேர்முகத் தேர்விலிருந்து வந்ததில் இருந்து மயூரேசனுக்குப் பழமொழிகள் எல்லாம் அத்துப்படி ஆகிவிட்டது போல... :rolleyes:
அனுபவம் வார்த்தைகளாகக் கொட்டுகிறதே !!! :cool:

sham
14-02-2007, 04:47 AM
ஆத்த மனையாள் அகத்திலிருக்க இவ்வாறு நடந்தால், காய்த்த பலாவில் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம்பழத்திற்கு மயூ அண்ணா இடறுற்றது போலாகிவிடும். இல்லையா அண்ணே.

சே-தாசன்
14-02-2007, 04:53 AM
ஆத்த மனையாள் அகத்திலிருக்க இவ்வாறு நடந்தால், காய்த்த பலாவில் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம்பழத்திற்கு மயூ அண்ணா இடறுற்றது போலாகிவிடும். இல்லையா அண்ணே.

என்னாங்கடா இது? அப்பிடியே சொன்னதற்கு விளக்கத்தையும் தந்தால் நல்லது.

மயூ
14-02-2007, 04:53 AM
ஆத்த மனையாள் அகத்திலிருக்க இவ்வாறு நடந்தால், காய்த்த பலாவில் கனியுண்ண மாட்டாமல் ஈச்சம்பழத்திற்கு மயூ அண்ணா இடறுற்றது போலாகிவிடும். இல்லையா அண்ணே.
ஏதோ எல்லாம் தமிழில சொல்லுற மாதிரி இருக்குது... ஒன்னுமாப் புரியேல...
இதத்தான் கனியிருக்கக் காய் கவர்தற்று என்று சொன்னவார்களாக்கும்.. :)

pradeepkt
14-02-2007, 05:20 AM
ஏதோ எல்லாம் தமிழில சொல்லுற மாதிரி இருக்குது... ஒன்னுமாப் புரியேல...
இதத்தான் கனியிருக்கக் காய் கவர்தற்று என்று சொன்னவார்களாக்கும்.. :)
எங்க பக்கம் சொலவடை ஒன்றுண்டு...
கிளி மாதிரி பெண்டாட்டி வீட்டில் இருந்தாலும் **** மாதிரி ***** ஒண்ணு வேணுமாம் மயூரேசனுக்குன்னு!!! :D
இதுக்குப் பதில் சொன்னா, நான் இதை பண்பட்டவர் பகுதிக்கு மாத்திருவேன் :D

மயூ
14-02-2007, 08:00 AM
மயூரேசன் நட்சத்திரமாகப் பறக்கிறார்!!! :) :D

Mathu
14-02-2007, 08:37 AM
மயூரேசன் நட்சத்திரமாகப் பறக்கிறார்!!! :) :D

அப்படி தான் எனக்கும் தெரிகிறது மயூரேசன் ஆனால் தெரிவது
வால் நட்சத்திரம்

;) :p ;)

மயூ
14-02-2007, 10:51 AM
ஏதோ இன்று விடிந்ததில் இருந்து கடியாய்தான் இருக்குது... பரவாயில்லை கடியுங்க.....!!!!
அப்புறம் வால்நட்சத்திரம் பொல்லாதது.. அது மோதித்தான் உலகில் டைனோசரே அழிந்தது.... ஆமா நினைவிருக்கட்டும். :D

sham
15-02-2007, 05:45 AM
என்ன மயூ அண்ணே! தெருக்கூத்துக்கூட பழகினீர்களா? சொல்லவேயில்லை. பரவாயில்லை நன்றாகவுள்ளது...........

ஆதவா
15-02-2007, 07:23 AM
என்ன மயூ அண்ணே! தெருக்கூத்துக்கூட பழகினீர்களா? சொல்லவேயில்லை. பரவாயில்லை நன்றாகவுள்ளது...........

அண்ணன் வளைஞ்சு நெளிஞ்சு லாவகமா கைய கீழருந்து மேல கொண்டு போற அழகு இருக்கே!!!! அது அவங்களுக்கு கூட வராதுப்பா!:D

மதி
15-02-2007, 07:43 AM
எவங்க?

ஆதவா
15-02-2007, 08:18 AM
எவங்க?

தெருக்கூத்து ஆடறவங்க

ஓவியன்
15-02-2007, 08:33 AM
உண்மையைக் கூறி இருக்கின்றீர்கள், நான் ஒன்று கேட்கலாமா?

அந்த பெண் உங்கள் மீது தனக்கு மிக்க காதல் என்று கூறிய போது உங்கள் மனதிலே அவ்வாறான எண்ணங்கள் தலை காட்டவில்லையா?

மயூ
15-02-2007, 08:36 AM
என்ன மயூ அண்ணே! தெருக்கூத்துக்கூட பழகினீர்களா? சொல்லவேயில்லை. பரவாயில்லை நன்றாகவுள்ளது...........
தெருக்கூத்து இப்படி வெள்ளைக் காரங்கள் ஆடுவாங்களா??? என்னப்பா பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டு இப்படி விளக்கம் இல்லாம சின்னப்புள்ளத்தனமா....!!!!! :rolleyes:

ஓவியா
17-02-2007, 10:02 PM
உண்மையைக் கூறி இருக்கின்றீர்கள், நான் ஒன்று கேட்கலாமா?

அந்த பெண் உங்கள் மீது தனக்கு மிக்க காதல் என்று கூறிய போது உங்கள் மனதிலே அவ்வாறான எண்ணங்கள் தலை காட்டவில்லையா?

சரியான கேள்வி

சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்

அகப்பை காலியென்றால் சட்டியும்காலிதான் ;)

சில வேளைகளில் இது ஒரு புரியாத புதிர்

ஆதவா
18-02-2007, 01:18 AM
உண்மையைக் கூறி இருக்கின்றீர்கள், நான் ஒன்று கேட்கலாமா?

அந்த பெண் உங்கள் மீது தனக்கு மிக்க காதல் என்று கூறிய போது உங்கள் மனதிலே அவ்வாறான எண்ணங்கள் தலை காட்டவில்லையா?

அது ஒரு இந்தியப் பெண்ணாக இருக்கும் பஷத்தில் நீங்கள் சொல்வது சரியே!! என்னுடைய வயதும் காரணமாக இருக்கலாம் அல்லவா?

தங்கவேல்
29-05-2007, 11:08 AM
ஆதவன் ஏன் கவிதையா எழுதி குவிக்கிறார் என்று இப்போதானே தெரிந்தது.. அவரும் அந்த பெண்ணை காதலித்கு இருப்பார் போல... மனசில் இருக்கிறது தானே கவிதையா வரும் ??

ஓவியா
31-05-2007, 08:24 PM
ஆதவன் ஏன் கவிதையா எழுதி குவிக்கிறார் என்று இப்போதானே தெரிந்தது.. அவரும் அந்த பெண்ணை காதலித்கு இருப்பார் போல... மனசில் இருக்கிறது தானே கவிதையா வரும் ??

அப்படி போடுங்க அருவாவ,

காதல் இருக்கு, ஆனால் இல்லனு பூசணிய நெல்லுக்குள்ளே மறைப்பதே வேலையாப்போச்சே!!!

ஆதவா
01-06-2007, 02:16 AM

ஏங்க தூக்கிட்டு இருக்கிற திரிய தட்டி எழுப்புறீங்க???? காதலும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது... என்னைப் போய் யாருங்க லவ்வப் போறாங்க..?????

மயூ
04-06-2007, 02:54 PM
ஏங்க தூக்கிட்டு இருக்கிற திரிய தட்டி எழுப்புறீங்க???? காதலும் கிடையாது மண்ணாங்கட்டியும் கிடையாது... என்னைப் போய் யாருங்க லவ்வப் போறாங்க..?????
ஹி.. ஹி... கிளப்பில சேர்ந்துக்குங்க ஆதவா..!!!
பெண்கள் கடைக் கண் பார்வைகிட்டார் சங்கம்!!! :cool008:

சக்தி
04-06-2007, 03:47 PM
என்னையும் சேர்த்துக்கங்கப்பு

ஆதவா
05-06-2007, 12:57 AM
பெ.க.க.பா.ச

இன்னும் இதை சுருக்க முடியுமா?

அக்னி
12-06-2007, 01:38 AM
அழகிய அனுபவப் பகிர்வு...
ஆனால்,
நட்பாகவேனும் தொடர்ந்திருக்கலாம் என்று ஆதங்கப்படுகின்றேன் ஆதவா...
பின்னூட்டங்களும் அருமை...

ஆதவா
12-06-2007, 01:54 AM
நன்றி அக்னி. மன்றத்திலும் சரி வாழ்விலும் சரி எனக்கு மறக்கமுடியாத திரி இது.. என்னதான் இருந்தாலும் என்னைக் காதலித்தவள் ஆயிற்றே... அதனால்தான் அவள் இட்ட கடிதங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை இன்னும் பாதுகாத்துவருகிறேன்.

ஓவியன்
22-06-2007, 11:45 PM
ஹி.. ஹி... கிளப்பில சேர்ந்துக்குங்க ஆதவா..!!!
பெண்கள் கடைக் கண் பார்வைகிட்டார் சங்கம்!!! :cool008:

நீங்க கிளப் வேலை மன்றத்துக்கு அடிக்கடி வரமாட்டேன் என்ற போது என்னவோ எதோனு தப்பா நினைச்சுட்டேன் மயூர், இப்ப தானே நீர் என்ன கிளப்பிலே இருக்கிறீர் எண்டு விளங்குது! :sport-smiley-018:

ஓவியா
23-06-2007, 01:38 AM
நன்றி அக்னி. மன்றத்திலும் சரி வாழ்விலும் சரி எனக்கு மறக்கமுடியாத திரி இது.. என்னதான் இருந்தாலும் என்னைக் காதலித்தவள் ஆயிற்றே... அதனால்தான் அவள் இட்ட கடிதங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை இன்னும் பாதுகாத்துவருகிறேன்.

என்ன ஒரு அன்பு. மெய் சிலிர்க்குதுலே.

மயூ
23-06-2007, 02:37 PM
நீங்க கிளப் வேலை மன்றத்துக்கு அடிக்கடி வரமாட்டேன் என்ற போது என்னவோ எதோனு தப்பா நினைச்சுட்டேன் மயூர், இப்ப தானே நீர் என்ன கிளப்பிலே இருக்கிறீர் எண்டு விளங்குது! :sport-smiley-018:

அப்படி நினைக்கின்றீரா.. பொறும் சாம்பிளுக்கு சில ஃபொட்டோக்கள் அனுப்பி வைக்கிறன் பாரும்... :icon_cool1:

maxman
02-07-2007, 08:00 PM
ஈசல் வாழ்க்கை போல் ஆகிவிட்டது உங்கள் காதல்,

ச*ரி இப்போதாவ*து உங்களுக்கு காத*ல்/காத*லி கிடைத்த*தா என்று விள*க்க*வும்

நன்றி

மயூர் உங்கள் உவமை அருமை!

மயூ
05-07-2007, 10:00 AM
அறிஞர் வந்து பூட்டினாலே தவிர இந்தத் திரியை யாரும் மூட மாட்டார்கள் என்று தெரியுது...!!! :D

பென்ஸ்
05-07-2007, 10:37 AM
அறிஞர் வந்து பூட்டினாலே தவிர இந்தத் திரியை யாரும் மூட மாட்டார்கள் என்று தெரியுது...!!! :D

அடப்பாவி... இப்ப என்ன முடிவோட அலையுறே...???

அன்புரசிகன்
05-07-2007, 10:39 AM
அடப்பாவி... இப்ப என்ன முடிவோட அலையுறே...???

தவறு. மூடிவோடு அலைகிறார்... :p :p :p

அமரன்
05-07-2007, 10:40 AM
தவறு. மூடிவோடு அலைகிறார்... :p :p :p

இதுவும் தவறு மூடியோடு அலைகின்றாய்.:p :p :p

பென்ஸ்
05-07-2007, 10:44 AM
ஒரு சொட்டுக் கடலும் நீ
ஒரு பொட்டு வானம் நீ
ஒரு புள்ளி புயலும் நீ பிரம்மித்தேன்!!!

எனக்கு எதோ புரியுற மாதிரி தெரியுது....
உங்களுக்கு...???

ஓவியன்
05-07-2007, 10:55 AM
எனக்கு எதோ புரியுற மாதிரி தெரியுது....
உங்களுக்கு...???

ம்ம்ம்!!!

கொஞ்சம்!!

இன்னும் கிளறினால் மிச்சமும் புரியும்!.:sport-smiley-014:

ஆதவா
07-07-2007, 11:49 AM
ஹி இஹி

ஓவியன்
07-07-2007, 11:56 AM
அப்படி நினைக்கின்றீரா.. பொறும் சாம்பிளுக்கு சில ஃபொட்டோக்கள் அனுப்பி வைக்கிறன் பாரும்... :icon_cool1:

ஆமா இப்படி எத்தனை பேர் கிளம்பிட்டீங்க? :music-smiley-012:

என் கூடத்தான் ஓமான் நாட்டுச் சுல்தானோட நான் விருந்து சாப்பிடுற மாதிரி ஒரு போட்டோ இருக்கு!. :sport-smiley-018:

அதற்காக அவரோட நான் விருந்துக்க்கு போனேன் என்று சொல்லலாமா? :icon_shout:

விகடன்
12-08-2007, 06:32 AM
ஆதவனின் வெள்ளை உள்ளம் யாமறிந்தோம். ஆனால் இதுவே ஒரு காலத்தில் தேவையில்லாத பிரசினைகளை உருவாக்கலாம். பிரச்சினை இல்லாதவிடத்தில் குறை சொல்வதற்கு யாரும் எப்படியும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆகையால் இப்படிப்பட்ட விடயங்களை தவிர்ப்பது உங்களிற்கு நல்லது என்று நினைக்கிறேன்.

வாழ்க வளமுடன்

ஆதவா
12-08-2007, 06:45 AM

நன்றிங்க... எதிர்காலத்தில் இதேமாதிரி ஒன்று நிகழ்ந்தால் நிச்சயம் அதை சரியாக கெட்டியாக பயன்படுத்திக் கொள்வேன்... (அன்னிக்கு மட்டும் எனக்கு வயசு அதிகமாயிருந்திருந்தால் இந்நேரம் ரஷ்யாவில்....) அய்யோ அய்யோ!! போச்சே போச்சே...

ஓவியன்
12-08-2007, 06:47 AM
பரவாயில்லை ஆதவா!
இப்போதும் ஒண்ணும் பெரிதாகக் கெட்டுப் போகவில்லையென்றுதான் நினைக்கிறேன், நான் வேணும்னா உதவி பண்ணட்டுமா? :wub:

விகடன்
12-08-2007, 06:35 PM
ஆதவா.
எதற்கும் மின்சாரக்கனவு படம் ஞாபகத்திலிருப்பது நல்லது.

ஆதவா
12-08-2007, 06:40 PM
ஆதவா.
எதற்கும் மின்சாரக்கனவு படம் ஞாபகத்திலிருப்பது நல்லது.

எதுக்க்குங்க? ஷாக்" அடிக்கிறதுக் கா?

விகடன்
12-08-2007, 06:43 PM
இப்படி குத்திக்கேட்டால்????

விராடன் பாவம் இல்லையா.
அவரை விட்டுடுங்க.

அக்னி
12-08-2007, 08:16 PM
(அன்னிக்கு மட்டும் எனக்கு வயசு அதிகமாயிருந்திருந்தால் இந்நேரம் ரஷ்யாவில்....) அய்யோ அய்யோ!! போச்சே போச்சே...

பசுமை நாடிய பயணங்கள் தொடரும். படித்து முடித்ததும் ரஷ்யா வேண்டுமா என்று முடிவு எடுங்கள்...

தப்பித்தீர்கள் ஆதவரே... கவலை வேண்டாம்...

சூரியன்
16-09-2007, 03:31 PM
பாத்து இருந்துக்கங்க ஆதவா. அடுத்தது யாரு வரப்போராங்களோ?

ஜெயாஸ்தா
16-09-2007, 05:02 PM
இந்தியாவுக்கும் ரஷயாவுக்கும் எப்போதுமே ஒரு இனம்புரியா தொடர்புஉண்டும்... ஆதவா அது உங்கள் விசயத்திலும் மெய்யாகிவிட்டது.

ஆதவா
18-09-2007, 07:07 AM
பார்வவயிட்ட சூரியன், ஜெ.எம் அவர்களுக்கு நன்றிகள்.

mukilan
18-09-2007, 10:57 AM
நேற்றோ இன்றோ தினமலரில் கண்டேன். ரஸ்யப் பெண்கள் திருமணம் செய்து கொள்ள இந்தியக் கணவர்கள் தான் ஏற்றவர்கள் என ஒரு பிரபல் பெண் எழுத்தாளர் கூறியுள்ளார். இந்தியர்கள் பொறுப்பாக நடந்து கொள்வதிலும் மக்கள் தொகைப் பெருக்கத்திற்கும் ஏற்றவர்களாம். (நம்ம பெருமையெல்லாம் எதில இருக்கு பாருங்க) அதான ரஸ்ய மங்கை ஆதவாவை வா வெனத் துரத்துகிறாரோ?

ஆதவா
18-09-2007, 11:05 AM

வாங்க முகிலன்...... உங்களைப் பார்த்தே ரொம்ப நாளாச்சு... இப்போத்தான் என்னோட அருமை பெருமையெல்லாம் இன்னொரு மன்ற நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன்..... இப்போ தலையால அடிச்சுட்டு இருக்கேன்.... எனக்குன்னு கிடைச்ச வாய்ப்பை அப்பவே கோட்டை விட்டுட்டேனே!!

தளபதி
18-09-2007, 12:33 PM
இதை நினைத்து ஒரு கவிதை எழுதிடுங்க, பிறகு ஒரு "U" வளைவு போட்டு, (புதுசா!!) உங்க துணைவி எப்படியிருக்கணும் என்று கவிதை எழுதுங்க!! ஒவ்வோரு காலத்தில் ஒவ்வொரு மாதிரி அனுபவங்கள் வந்த வண்ணம் இருக்கும். எதையும் பின்னோக்கி சென்று மாத்தமுடியாது. வேண்டுமானால் நினைத்துப்பார்த்து சந்தோசப்படலாம். போனதையே நிறைய நினைத்துக் கொண்டிருந்தால் இப்போது கிடைக்கும் அனுபவங்களை நாம் மனதில் இருத்திக் கொள்ள முடியாமல் போக வாய்ப்பு இருக்கிறது.

நீங்கள் ஆதவன்!! உங்கள் ஒளி எப்போதும் நிரந்தரம்.

ஆதவா
18-09-2007, 12:42 PM

துணைவி.. எப்படியிருக்கணும்னு கவிதை எழுதுவதை விட ஒரு கட்டுரையா போட்டுடலாம்.. கவிதைன்னு வார்த்தை சுருக்கி அடக்கி எழுத இந்த விஷயங்கள் ஆகாது, போனதையே நினைத்துக் கொண்டிருக்கமாட்டேன். என்றென்றும்.... நடப்பது நன்மைக்கு என்று புரிந்துவைத்துக் கொண்டிருக்கிறேன்

நேரம் அமைந்தால் நிச்சயம் எழுதுகிறேன். நன்றி தளபதி...

சுகந்தப்ரீதன்
18-09-2007, 01:25 PM
எஸ்கேப் லாம் ஆகாதீங்க. டப் புனு செட்டில் ஆகிறதுக்கு பாருங்க.. ஏதோ நாந்தான் கோட்ட விட்டேன்... நீங்களாவது.....

ஆதவர... அழுது அனுப்பிவிட்டு அட்வைசா பன்னுரீங்க...இருந்தாலும் ஒரு பொண்ண இப்படியா பாடுபடுத்துறது? அதுசரி இன்னும் உங்க ரெண்டுபேருக்கும் தொடப்பிருக்குதா? அலோ அப்படியெல்லாம் பாக்காதிங்க..கடித தொடர்பத்தான் சொன்னேன்...!