PDA

View Full Version : வா! வந்து முத்தமிடு!



lenram80
25-12-2006, 01:18 PM
முத்தங்களே! அன்பின் உச்சங்களே!
உதடுகள் கொண்டாடும் தீபாவளிகளே!
இதழ்கள் பரிமாறும் இன்சுவை விருந்துகளே!
பூ இதழ்கள் கொளுத்திப் போடும் மத்தாப்புக்களே!

உதடுகள் செதுக்கும் உருவமில்லா சிற்பங்களே!
இதழ்கள் எழுதும் எழுத்தில்லா இதிகாசங்களே!
ஆசை மனிதனின் அன்பு பாஷைகளே!
அடி மன அன்பின் அளவுகோல்களே!

ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும்
உதடுகள் ஒட்டடை அடிக்கப்படுகின்றன!
கோபுர உதடுகளில் கும்பாபிஷேகம் நடத்தப்படுகின்றன!

அலை, அணு, அனல் இல்லாமல் - மின்சார உற்பத்தி வேண்டுமா?
செலவே இல்லாமல் சின்ன அணுகுண்டின் அதிர்வு வேண்டுமா?
சத்தமே இல்லாமல் யுத்தம் - எப்படி நடக்கும் என்கிறாயா?
வா! வந்து முத்தமிடு!

இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கரிப்பு, காரிப்பு, கசப்பு
ஆறிலும் அடங்காத அதிசய சுவை வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!

உன்னைச் சுற்றி பூமி சுற்ற வேண்டுமா?
நின்ற பொருள் அசையவும்,
அசையும் பொருள் நிற்கவும் - செய்த
சிவ பெருமான் நீயாக வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!

முகத்தில் மட்டும் மழை பொழிய வேண்டுமா?
உணவே இல்லாமல் உயிர் வாழ வேண்டுமா?
உயிர் என்ற மலையின் உச்சி தொட வேண்டுமா?
வா! வந்து முத்தமிடு!

இறுதியாய்,
மரமாய், மலையாய், மலராய் பிறக்காமல்
மனிதனாய் பிறந்ததற்கேனும்
வா! வந்து முத்தமிடு!

கொஞ்சம் பொறு!
நீங்கள் இருவரும் முத்தத்தை ஆரம்பிப்பதற்கு முன்,
ஒரு முன்னறிவிப்பு!
உதடுகள் உராய்ந்து தீப்பொறி பறந்தால்,
கவலையை விடு!
இருக்கவே இருக்கிறது தீயணைப்புத்துறை!

இதுவரை இந்த அனுபவம் இல்லாத நானே
இப்படி எழுதுகிறேன் என்றால்,
அனுபவித்த அதிஷ்டசாலிகளே!
கன்னித் தமிழில் காவியம் படைக்க
தலைப்பு இதோ தந்துவிட்டேன்!!!

-லெனின்-

இளசு
27-12-2006, 08:40 PM
முத்தங்கள் பற்றி சலிக்காமல் மன்றத்தில் பதிக்கப்பட்ட கவிதைகளின்
எண்ணிக்கை - காதலர் முத்தங்களின் எண்ணிக்கையும் விஞ்சும் லெனின்..

உங்களின் இக்கவிதைக்குப் பாராட்டாய் பழைய முத்தங்களை - முத்தக்கவிதைகளை இங்கே கோர்க்கிறேன்..

புதியனவும் சேர்ந்து இங்கு முத்தத்திருவிழா களை கட்டட்டும்..

இளசு
27-12-2006, 08:41 PM
அணைக்கட்டு இல்லாமலேயே
என்னைத் தேக்கி விடுகிறது
உன் வெட்கம்......
பசித்து கிடக்கும் வயல் வெளிகளில்
பரிதவித்து நிற்கிறது
என் முத்தம்....


எழுதியவர்க்கு சமர்ப்பணம்


http://www.tamilmantram.com/vb/showthread.php?t=283

இளசு
27-12-2006, 08:45 PM
முத்தம்

உதிர்ந்த இலைகள்..
வெப்ப காற்று...
வெறுமை...
உலர்ந்த உதடு.
பாலையே உனை
தவறாக பொருள் கொண்டனரே
என் மக்கள்.

வெள்ளை(ளி) முடி முகத்தில்
வெள்ளமாய் என் தந்தையின் சிரிப்பு.
தொலைபேசியில் பேசிடும் என் தாய்,
பாச அலையாய்.....

"வாடா" என்று மட்டும் அழைத்து
சண்டையிட்ட தங்கை.
அண்ணா என்றாளே ஒவ்வொரு
உரையாடலிலும்....

வெப்பம் போல் என்னுள்
அவள் மேலான காதல்
என்னுள் எத்தனையோ
சுக பிரளயங்கள்...

உச்சி வெயில்
பாலையில் மண்டியிட்டு
முத்தமிடுகிறேன்...
அதிசயம் பாருங்கள்
என்னுள்
பனி மலை

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4258

இளசு
27-12-2006, 08:49 PM
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3101


பிடித்த கவிதை உன் முத்தம் என்ற இந்த லாவண்யாவின் கவிதைக்கு
ஏறத்தாழ 200 பதில்கள் குவிந்தன..




முன்னொரு நாள்
மூச்சு முட்ட
முத்தம் தந்து போனாய்...
இன்றைய சந்தித்தலில்
எழுதிய கவிதையில்
பிடித்த வரி எதுவென கேட்கிறாய்...
எப்படி கேட்பேன்
இன்னொரு முத்தம்...?


பதில்களின் பதியப்பட்ட மற்ற முத்தக் கவிதைகளைத் தேடித் தருகிறேன் - ஒவ்வொன்றாக..

மக்களும் தொடருங்கள் -- புதுப் பதிவுகளைக் கோர்த்து!

lenram80
29-12-2006, 12:23 AM
ஒன்று தெரியுமா இளசு?
எங்கே என் முத்தத்தை தடை (சென்சார்) செய்து விடுவீர்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். இப்போது தான் புரிகிறது. ஏற்கனவே இங்கே முத்த சுனாமி அடித்து மொத்தத்தையும் காலி பண்ணியிருக்கிறது என்று.