PDA

View Full Version : திருவிளையாடல்



lenram80
24-12-2006, 11:45 PM
முன்னுரை:-
பாண்டிய மன்னன் ஒரு விடுகதை போட்டு, அதற்கு பதில் சொல்லுமாறு அறிவிப்பு செய்கிறான். விடுகதை இதுதான். "பொட்டிழந்து பூவிழந்த பின்பும்
சிரிக்கிறாள் இவள். யார் இவள்?". அதற்கு தருமியின் மூலம் சிவன், இந்த பதிலை சொல்லி அனுப்பிகிறான். பதில்: "சிரிப்பு" - என்ற வார்த்தை தான்.

விளக்கம்: (பொட்டிழந்து )- "ப்" என்ற எழுத்தை இழந்து (பூவிழந்த பின்பும்) - "பு" என்ற எழுத்தை இழந்த பின்பும்
(சிரிக்கிறாள் இவள் )- "சிரிப்பு" -ல் மிச்சமிருப்பது "சிரி", இதுவும் சிரிக்கிறது. இதற்கு நக்கீரர் தவறான பதில் என்று சொல்லிவிடுகிறார். அவர் சொல்லும் விளக்கம், "விடுகதையில் இருப்பது "பூ" என்ற நெடில். ஆனால், பதிலில் உள்ளது "பு" என்ற குறில்.
இதை சிவனின் போய் தருமி சொன்னதும், சிவன் தமிழ் திருச்சபைக்கு வருகிறார். அதற்குப் பின் நடப்பவை கீழே.....

இடம்: தமிழ் திருச்சபை
பாத்திரங்கள்: அரசர், நக்கீரர்,சிவன்

சிவன்: என் பதிலை குற்றம் கூறியவன் எவன்?
நக்கீரர்: அவன், இவன் என்ற ஏகவசனம் வேண்டாம். பதிலை தப்பா சொல்லிட்டு, சவுண்டு மட்டும் நல்லா குடுக்குரே...
(அவையில் சிரிப்பலை)
சிவன்: (தொண்டையை கனைத்தவாறு) ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்....சரி..OK.OK... என்ன குற்றம் கண்டீர்கள்?
நக்கீரர்:விடுகதையில் நெடில் வருகிறது. பதிலில் குறில் வருகிறது. அது தான் குற்றம்.
சிவன்: என் கழுத்தில் இருக்கும் 'பாம்பு'-ல் இருப்பது கூட குறிலோ?
நக்கீரர்:பாம்பென்ன, காம்பு, சோம்பு, நீ என்னோடு இழுக்கும் வீம்பு, வம்பு - என எல்லாவற்றிலும் இருப்பது குறிலே அன்றி நெடில் அல்ல.
சிவன்: சத்தியமாக?
நக்கீரர்:சத்தியமாக.
சிவன்:நிச்சயமாக?
நக்கீரர்:நிச்சயமாக.
சிவன்:உன் தமிழ் புல..
நக்கீரர்: (குறிக்கிட்டு) டேய்... நிறுத்துடா... அதான் குற்றம்ன்னு சொல்லியாச்சுல்லே...அப்பறம் என்ன "ஆஹ.....ஆஹ......"ன்னு இழுக்குரே?
அரசர்: (குறிக்கிட்டு) புலவர்களே, சத்தமாக உரையாடுங்கள்.
நக்கீரர்: புலவர்களே, சாந்தமாக உரையாடுங்கள் - என்று சொல்வீர்கள் என்று பார்த்தால், சத்தமாக உரையாடுங்கள் என்கிறீர்கள்.
பிறகு அரசரை நன்றாக உற்றுப் பார்த்துவிட்டு,
நக்கீரர்: அரசே... உங்கள் காதில் இருக்கும் mp3 headphone-ஐ எடுத்துவிட்டு கேளுங்கள். நாங்கள் தொண்டைதண்ணி வத்த கத்திகிட்டு இருக்கோம். நீங்கள் என்னவென்றால்...
அரசர்:(மழுப்பலாக) OK.OK... Carry on...
சிவன்:என் முகத்தை நன்றாக உற்றுப்பார்...
நக்கீரர்:(கோபமாகி) யோவ்... முதுகை காமிச்சுகிட்டு நிக்கிரே.... எப்படிய்யா மூஞ்சியெ பாக்க முடியும்? திரும்புயா இந்த பக்கம்...
(அவையில் சிரிப்பலை)
சிவன்:0h... Sorry...Sorry...
நக்கீரர்:(சிவனின் கண்ணை பார்த்துவிட்டு) இந்த நொல்லகண்ணெ வச்சுகிட்டு தான், இத்தனை பீலாவா?
(அவையில் சிரிப்பலை)
அரசர்: நக்கீரா.. உன் பஞ்ச் டயலாக்கை சொல்லி முடியுங்கள். நான் சீக்கிரம் வீட்டுக்கு போய் மனைவியை பார்க்கவேண்டும். I mean... "மனைவி"serial பார்க்கவேண்டும்.
நக்கீரர்: (சிவனை நோக்கி) நொல்லை கண்ணை திறந்த போதும் குற்றம் குற்றமே...
சிவன்:(கடவுள் தோற்றமுடன்)ஹா..ஹா...ஹா... நக்கீரரே.. உங்கள் தமிழோடு விளையாடவே, யாம் இங்கு வந்தோம். அரசே, தாங்கள் அறிவித்தபடி, பரிசுத்தொகையை, இந்த தருமியிடம் கொடுத்து விடுங்கள். என் பங்கை நான் அவனிடம் இருந்து வாங்கிக் கொள்கிறேன்.
(அவையில் மீண்டும் சிரிப்பலை)
அரசர்:(பகீரென்று)Hello....என்னய்யா சொல்கிறீர்கள்? நான் எப்போ பரிசு அறிவிச்சேன்? நானே மாதக் கடைசியிலெ கையில காசே இல்லாம சுத்திக்
கிட்ருக்றேன். இங்கே பாருடா?
நக்கீரர்: அதெல்லாம் தெரியாது அரசே.. நீங்கள் பரிசை கண்டிப்பாக தரவேண்டும்.
அரசர்:அடப்பாவிகளா....பேசாமே அரச சபையிலேயே இருந்திருக்கலாம். பொழுது போகலேன்னு இங்கே வந்தா, தலையிலெ துண்டு போட்டுருவாங்கெ
போலருக்கே.... எஸ்கேப்....
(காணாமல் போகிறார் அரசர்)
சிவபெருமான் மீண்டும் ஒருமுறை பலமாக சிரித்துவிட்டு, "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து" தெரிவித்துவிட்டு அவரும் மறைகிறார்.

வாழ்த்துக்களுடன் - லெனின் -

guna
25-12-2006, 04:08 AM
ஆங்கில புத்தாண்டு வாழ்த்தைச் சொல்ல, லேட்டஸ் வெர்ஷன்(latest version) திருவிளையாடளா?

அமர்க்களமான கற்பனைக்கு வாழ்த்துக்கள் லெனின்..

குணா

meera
25-12-2006, 05:27 AM
லெனின்,

புத்தாண்டுக்கு புது படைப்பா???அருமையான நகைசுவை.

மதி
25-12-2006, 05:48 AM
அருமை லெனின்.

ஆதவா
25-12-2006, 06:20 AM
அருமை லெனின்... இன்னும் எதிர் பார்க்கிறோம்.

guna
25-12-2006, 06:30 AM
ஆதாவா இப்படி நீங்க இன்னும் ஒன்னு கேட்பீங்க'னு தெரிஞ்சுதான் , லெனின் இந்த பதிவையே இரன்டு முறை பதிச்சு இருக்காரு..

ஆமாம் தானே லெனின்?:confused:

svenkat
25-12-2006, 01:03 PM
ஹா ஹா!! சிரிப்பு கொஞ்சம் வரத்தான் செய்யுது.

ஆதவா
25-12-2006, 02:24 PM
ஆதாவா இப்படி நீங்க இன்னும் ஒன்னு கேட்பீங்க'னு தெரிஞ்சுதான் , லெனின் இந்த பதிவையே இரன்டு முறை பதிச்சு இருக்காரு..

ஆமாம் தானே லெனின்?:confused:

ஆஹா!! நான்கூட ரெண்டும் வேற வேறன்னு நெனச்சேனே... லெனின்.. ஏமாத்திப்புட்டீங்களே!!!!

lenram80
25-12-2006, 03:29 PM
சிரித்ததற்கு நன்றி....ஆதவா, குணா, வெங்கட்.
(குறிப்பு1 - எல்லோருக்கும்: இன்னும் கொஞ்சம் சத்தமாக சிரியுங்கள். காதில் விழவில்லை)
(குறிப்பு2-ஆதவனுக்கு: எல்லோரும் சிரிக்கவேண்டும் என நினைத்துத் தான் இரு தடவை வெளியிட்டேனே யன்றி, யாதொன்றும் அறியேன் பராபரமே!!!!)

- லெனின் -

lenram80
25-12-2006, 03:37 PM
சிரித்ததற்கு நன்றி....குணா, ராஜேஷ் & மீரா....
(குறிப்பு: இன்னும் கொஞ்சம் சத்தமாக சிரியுங்கள். காதில் விழவில்லை)
- லெனின் -

meera
26-12-2006, 06:05 AM
லெனின்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

போதுமா காதுல விழுதா?????????????

guna
26-12-2006, 08:35 AM
லெனின்

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

போதுமா காதுல விழுதா?????????????

மீரா, மலேசியாவில் இருக்கும் குணாக்கே விளங்குது, லெனின்க்கும் கண்டிப்பா விளங்கியிருக்கும்..

lenram80
26-12-2006, 06:06 PM
மீரா....சபாஷ்....சரியான போட்டி... PS வீரப்பாக்கு.....

ஒரு நிமிஷம்... இந்த என் பழைய கவிதை கூட, இங்கு பொருந்தும் எனப்படுகிறது.

இளங்கோவே! நீ இப்போது இருந்திருக்கக் கூடாதா?
இருந்திருந்தால், சிலப்பதிகாரம் படைத்திருக்கமாட்டாய்!
மீராவின் சிரிப்பைக் கேட்டு 'சிரிப்பதிகாரம்' படைத்திருப்பாய்!

(குறிப்பு: இந்த கவிதை நான் 2000-ல் எழுதியது. "சிவப்பதிகாரம்" படம் வந்த பிறகு எழுதவில்லை)

pradeepkt
01-01-2007, 08:55 AM
பார்த்தேன்... படித்தேன்... ரசித்தேன்...

ஷீ-நிசி
01-01-2007, 11:34 AM
லெனின்.... மிக அருமை.... வாழ்த்துக்கள்

அறிஞர்
04-01-2007, 01:14 PM
ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹ்ஹிஹிஹிஹிஹிஹிஹ்

என்ன லெனின் போதுமா...

புத்தாண்டு பதிப்பு.. பிரமாதம்...

Mathu
06-01-2007, 11:44 AM
படித்தோம் சிரித்தோம் ஹா ஹா.......

லெனின் MP3 என்று நினைச்சு காதில கொளுவ வேண்டியத களட்டிடீங்க போல. அத கொஞ்சம் கொளுவுங்க.....

என்னவன் விஜய்
17-05-2008, 09:50 PM
இப்படி ஒரு நகைசுவையான புத்தாண்டு வாழ்த்தா? கலக்கல்......

அனுராகவன்
22-05-2008, 01:12 AM
லெனின் அருமை..
இன்னும் தொடருங்கள்..
ஒரு பெரிய கைத்தட்டு உங்கள் படைப்புக்கு..

lenram80
22-05-2008, 01:29 AM
இதை எப்படி, எங்கே போய் விஜய் படித்தார்? ((2007 புத்தாண்டுக்கு எழுதியது))
நன்றி விஜய் & அனு அவர்களே!