PDA

View Full Version : தேடல்



jpl
24-12-2006, 02:37 PM
கன்றினுக்கு தாய்இரங்கா சேய் போல
இரஞ்சுகிறேன் தாயின் மடி தேடி.
தேடியலைந்து கிடைக்கப் பெற்ற திரவியம் போல்
நாடிப் பெற்றேன் உன்னத உணர்வினை.
உணர்வில் உணர்ந்த சுகவாரினை நனவில்
உணர்ந்து உணரும் நாளினை அறிய
அறியும் விதம் அறிவித்து அறியா வண்ணம்
நெறியன்றி காத்திருத்தல் ஓரு பிணையோ....
பிணைப்பில் பற்று கொண்டு உணர்ந்து உணரா
இணைப்பில் மயங்கும் மணம் நாடியது...
நாடியமணம் விரும்பிய வண்ணம் ஓடி
தேடிய தேடலின் பூர்த்தி எவ்விதம்..
எவ்விதம் என்று உணராநிலையில் உணர்வில்
இவ்விதம் என்று உரைக்க வில்லையோ...
இல்லா நிலையில் லிருக்கும் உணர்தலில் மணம்
சொல்லா மொழியின் உணர்வின் விளக்கம்
விளங்கா மௌனபாஷையின் வார்த்தை வரிவடிவம்
களங்கா தடாகத்தின் ஓசையென...
ஓசையின் உள்நாதமாய் ஒலிக்கும் கீதம்
ஆசையின் அப்பாற்பட்டதா?உட்பட்டதா....

இளசு
25-12-2006, 07:07 PM
ஜெயபுஷ்பலதா..

பலமுறை வாசித்தேன் - இரண்டு நாட்களாய்..


1) அந்தாதி முறையை அழகாய்க் கையாண்டமைக்கு வாழ்த்துகள்..

2) களங்கா தடாகத்தின் ஓசை என உங்கள் முத்திரை வரியால்
மீண்டும் ஒரு உள்ளார்ந்த கவிதானுபவம்... நன்றி...

3) மௌனம் மட்டுமே பரிமாறக்கூடிய பரிபாஷை செய்திகளை
நுண்ணிய வரிகளால் கோடிட்டுக் காட்டி, மீதியை உணரவைத்த
கவிநுட்பத்துக்குப் பாராட்டுகள்...

4) தேடிய தேடலின் பூர்த்தி எவ்விதம்..??????
வாழ்வின் அடிநாதக்கேள்வி.. அடிநாதமே அந்தக் கேள்வியும்..அதன் மூலமான தேடலும்...
எல்லாருக்கும் (எனக்குமான) கேள்வி..
விடையில்லாக் கேள்வி..

என் அடிமனதின் ஒத்த அதிர்வின் மகிழ்ச்சி....

jpl
26-12-2006, 02:31 AM
நன்றி இளசு.மிகவும் அனுபவித்து லயித்து படித்தது உங்கள் வார்த்தைகளில் புரிகின்றது.இதைவிட வேறு ஒரு இன்பம் படைப்பவர்களுக்கு உண்டோ?மேலும் படைக்க உத்வேகம் கிடைக்கின்றது.
மீண்டுமொரு முறை நன்றி.

அமரன்
16-08-2007, 07:30 AM
ஆகா என்னே ஒரு அழகான கவிதை. பலமுறை படிக்கத்தூண்டியது. எனது சின்னமூளைக்கு புரிவது கடினமாக இருந்தது. அண்ணனின் பின்னூட்டத்தைப் படித்துவிட்டும் மீண்டும் கவிதையை படித்தால் அமிர்தமாகத் தெரிகிறது. பாராட்டுக்கள்.அந்தாதிக்கவிதை எனக்குப் புதுசு. அறிமுகப்படுத்தியமைக்கு விஷேடமான நன்றி. தொடருங்கள்

leomohan
16-08-2007, 07:44 AM
வாருங்கள் ஜேபிஎல். நீண்ட நாளுக்கு பிறகு வந்திருக்கிறீர்கள். கலக்கல் கவிதையுடன். தொடர்ந்து பங்களியுங்கள். நாங்கள் எல்லோரும் இங்கு தான் இருக்கிறோம்.

இலக்கியன்
16-08-2007, 03:47 PM
அழகான வரிகள் கொண்டு கவி சமைத்தீர் வாழ்த்துக்கள்

ஆதவா
16-08-2007, 07:37 PM
புஷ்பலதா மற்றும் இளசுவின் பதிவுகளுக்கு நிகர் எனது எந்த ஒரு பதிவும் இல்லை.... வாழ்த்துக்கள்...

(அந்தாதின்னா என்னாங்க?)

இளசு
16-08-2007, 07:39 PM
அந்தம் − முடிவு
ஆதி − தொடக்கம்


ஒரு வரி அல்லது சரணம் முடியும் அதே சொல்லில்
அடுத்த வரி அல்லது சரணம் தொடங்குவது...

ஆதவா.. எளிய எடுத்துக்காட்டு:
மூன்றுமுடிச்சு படத்தில் கவியரசர் எழுதிய


1) வசந்தகால நதிகளிலே..

2) ஆடிவெள்ளி தேடி உன்னை

இருபாடல்கள் இருக்கின்றன..

ஆதவா
16-08-2007, 07:52 PM
நன்றி இளசு அண்ணா... இதை படித்து மறந்து போயிருக்கிறேன்.... இப்போது ஞாபகம் படுத்திவிட்டீர்கள்... மிகவும் நன்றி... எதிர்காலத்தில் இப்படி ஒரு கவிதை நிச்சயம் எழுதுவேன்..

இளசு
16-08-2007, 07:55 PM
... எதிர்காலத்தில் இப்படி ஒரு கவிதை நிச்சயம் எழுதுவேன்..

உன்னால் எதுவும் முடியும் தம்பி!

ஆதவா
16-08-2007, 07:58 PM
உன்னால் எதுவும் முடியும் தம்பி!

உங்கள் வாழ்த்து இருக்க,
இருக்கும் என்னிடம் பல திறமைகள்
நன்றி அண்ணா...

இளசு
16-08-2007, 08:01 PM
இந்த இனிய நேரத்தில்
இக்கவி படைத்த
இனிய ஜெயபுஷ்பலதா அவர்களை
என் விழிகள் தேடுகின்றன..

வாருங்கள் கவியரசியே..
தாருங்கள் இன்னும் இன்னும் கவிமாலைகளை!
சூட நம் மன்றம் காத்திருக்கிறது!

ஷீ-நிசி
17-08-2007, 03:17 AM
அந்தாதினா.. இதானா..... எனக்கும் கூட.. இளசு அவர்களின் விளக்கத்திற்குப் பின்னரே தெரிந்தது... தொடருங்கள்!

jpl
21-08-2007, 04:13 PM
நன்றி அனைவருக்கும் உரித்த*தாகுக...

paarthiban
21-08-2007, 04:17 PM
அந்தாதி அருமை ஜெபிஎல் அவர்களே

உங்கள் திறமையான படைப்புகளை அதிகம் வாசிக்க ஆவல். தருவீங்கதானே/ நன்றி. வணக்கம்

jpl
21-08-2007, 04:20 PM
நன்றி பார்த்தீபன்...

ஓவியன்
22-08-2007, 02:05 AM
ஆழமான ஒரு கவிதைக்கு அழகான ஒரு தெளிவான விமர்சனம்.........
அருமை ஜெயபுஸ்பலதா அவர்களே − பாராட்டுக்கள்....

தொடர்ந்து மன்றம் இணைந்திருங்கள்..........

கஜினி
13-10-2007, 08:06 AM
கவிதைகளைப் படிக்கும்போது மனம் லயிக்க வேண்டும் என்று சொல்கிறது இந்தக் கவிதை...
நான் லயித்தது உண்மை
எவ்வளவு தெளிவா எழுதியிருக்கீங்க. உண்மையான தேடல் இருப்பவர்களுக்கு மட்டும் கிடைக்கும் வரிகள் இவை.
ஏதுமில்லா அமைதிநிலையை அடைய நீங்கள் எடுத்துக்கொண்ட தேடல் அருமை.

வாழ்த்துக்கள் லதா அவர்களே. இன்னும் நிறையா நிறையாக கொடுங்கள். நன்றி.

ஆதவா
05-12-2007, 03:30 PM
நன்றி இளசு அண்ணா... இதை படித்து மறந்து போயிருக்கிறேன்.... இப்போது ஞாபகம் படுத்திவிட்டீர்கள்... மிகவும் நன்றி... எதிர்காலத்தில் இப்படி ஒரு கவிதை நிச்சயம் எழுதுவேன்..

சொன்னதை செய்துவிட்டேன்.... கீழே கண்படலம் என்று தொடங்கும் பா....

நன்றி இளசு அண்ணா, ஜேபிஎல் அம்மா..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13586

அறிஞர்
05-12-2007, 04:02 PM
அருமையான கவிதை..

இருமுறை படித்து... பின் நம் நண்பர்களின் கருத்துக்களை படித்த பின்னும் புரிய முடிகிறது..... அருமையான நடை...

இன்னும் பல கவிதைகளை தாங்கள் தர வாழ்த்துக்கள்..

jpl
06-12-2007, 03:06 AM
நன்றி ஓவியன்,கஜினி,அறிஞரே..