PDA

View Full Version : பாடும் நிலாவுக்கு (SPB) ஒரு கவிதை



தமிழ் தொண்டன்
23-12-2006, 12:43 PM
ஆந்திரம் என்றால்
காரம் என்பார்கள்
இந்த ஆந்திர
குயிலிசை மட்டும்
அட எப்போது கேட்டாலும்
இனிக்கிறது

உன் குரலுக்கு
வயது நாற்பதாமே
கணக்கில் ஏன் பிழை
நீ என்றும்
எனக்கு 16 தானே.

உன் குரல் கேட்ட பின்பு
நானும் காற்றினை
காதல் கொண்டேன்
குழலை போல

உன் உருவததை பார்த்து
இகழ்பவர்கள் அய்யோ பாவம்
அவர்களுக்கு எப்படி தெரியும்
நீ குரலுடன் நடிப்புத் தொழிலையும்
சேர்த்தே சுமப்பதால் தான்
இந்த கனம் என்று

நீ என்னை தூங்க வைத்த இரவுகள்
எத்தனை என்று கணக்கிட சொன்னால்
கட்ட பொம்மன் வசனம் தான்
பதிலாய் நான் உரைப்பேன்

எத்தனை நட்சத்திரங்கள் வந்தாலும்
போனாலும் நீ மட்டும் தானே
பாடும் நிலா

நீ இல்லா அமாவாசை
இசை வானத்தை
படைக்கும் சக்தியை மட்டும்
அந்த பிரம்மன் இழந்து போகட்டும்..!

meera
23-12-2006, 02:31 PM
தமிழ் தொண்டன்,

இசை குயிலுக்கு அழகான பா.

தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

இளசு
24-12-2006, 10:26 AM
நீ என்னை தூங்க வைத்த இரவுகள்
எத்தனை என்று கணக்கிட சொன்னால்


ரசித்து லயிக்க வைத்தவற்றை
மனசார வாயாரப் பாராட்டும்
இனிய குணம் சொல்லும் அழகுக் கவிதை..


'நல்லா இருக்கு' என்னும் இரு சொல்லில் இருக்கு
வாழ்க்கை இனிப்பதன் சூட்சுமம்..

நல்லா இருக்கு கவிதை தமிழ் தொண்டன்..
பாராட்டுகள்!

பிச்சி
24-12-2006, 11:57 AM
எனக்கு உண்மைய்லேயெ SPB னா புடிக்கும்.... கவிதை நல்லா இருக்கு. ரொம்ப நல்லா ரசிச்சு எழுதிருகீங்க