PDA

View Full Version : தாயின் பரிவு



jpl
23-12-2006, 01:41 AM
மையிருளில் மணம் வீசும் பாரிஜாத
நுகர்வு தந்த சுகந்தம்
காலளவு நீரில் படகாய் மிதக்கும்
நுட்ப குளுமையின் சுகிர்ப்பு
காம்பாய்ந்த மலரினைத் தொடுக்கும்
விரலின் நுட்பமாய் வாசனை
சோக நினைவலையில் மீண்டபின்
வரும் லயிப்பின் நிச்சலனம்.

அருமையான தமிழ் வார்த்தையின்
வெளிபாடே
உணர்வுகளின் உந்தலில் உள்ளத்தில்
வருவதுதானே
சேயின் தஹிப்பை உணர்ந்த
தாயின்பரிவு
அமுத ஊற்றாய் சுரந்து
நிறைந்தது.

meera
23-12-2006, 05:54 AM
ஜெயபுஷ்பலதா,

அருமையான கவிதை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் தோழி.

இளசு
24-12-2006, 10:37 AM
மையிருளில் மணம் வீசும் பாரிஜாத
நுகர்வு தந்த சுகந்தம்

இருளில் மலரும் மலர்களில்
மல்லிகை போல இந்த பாரிஜாதம்..


காலளவு நீரில் படகாய் மிதக்கும்
நுட்ப குளுமையின் சுகிர்ப்பு


ஆமாம்..
.முழுக்க முழுகும் நீர் தரும் உணர்வு வேறு..
முழங்கால் நனைக்கும் நீரில் அளையும் சிலிர்ப்பு வேறு..


காம்பாய்ந்த மலரினைத் தொடுக்கும்
விரலின் நுட்பமாய் வாசனை

இருந்தும் இல்லாதது..
கண்டொளி விளையாட்டு காட்டும்
நுட்ப வாசம்.. ஆஹா..


சோக நினைவலையில் மீண்டபின்
வரும் லயிப்பின் நிச்சலனம்.

அழுது தூங்கும் குழந்தை..
தூக்கத்தில் தேம்புமே அந்த ஞாபகம்..

அருமையான தமிழ் வார்த்தையின்
வெளிப்பாடே
உணர்வுகளின் உந்தலில் உள்ளத்தில்
வருவதுதானே

இதைச் சொல்ல உங்கள் கவிதை வரிகளே
இனிய எடுத்துக்காட்டு..


சேயின் தஹிப்பை உணர்ந்த
தாயின்பரிவு
அமுத ஊற்றாய் சுரந்து
நிறைந்தது


இதைப் படித்து என் மனதில்
ரசனை சுரந்தது போல்..

----------------------------------------------


வரிக்கு வரி செதுக்கி எழுதிய
அழகிய கவிதை...
அருமை.. ஜெயபுஷ்பலதா!

jpl
24-12-2006, 11:55 AM
நன்றி இளசு நன்றி அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்.இதை விட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும்.

jpl
24-12-2006, 11:55 AM
ஜெயபுஷ்பலதா,

அருமையான கவிதை. தொடர்ந்து எழுத வாழ்த்துகள் தோழி.

நன்றி மீரா

இளசு
24-12-2006, 12:17 PM
அனுபவித்து எழுதியிருக்கின்றீர்கள்..


உண்மைதான்..

கண்ணுக்குத் தெரியும் பகல் நேர
பூக்கள் வீசி, நாசியைத் தாக்கும் அனுபவம் வேறு..

மையிருளில் காற்றில் வரும் சுகந்தம்
மனதை மயக்கி வருடும் மோனம் வேறு...

காம்பாய்ந்த விரல் சுமக்கும் அரும்பு மணம் போல

'ஐஸ்பாய்'- (கண்டொளி) விளையாட்டு போல
நுண்ணிய அனுபவங்களைத் தேடி ரசிக்க வைக்கும்
உங்கள் கவிதை பாணி - கவர்கிறது...


படைக்கும் உங்களுக்குத்தான் எங்கள் நன்றிகள் சேரவேண்டும்..

நன்றி ஜெயபுஷ்பலதா!

பிச்சி
24-12-2006, 12:23 PM
நல்ல கவிதை,,,தோழி

ஷீ-நிசி
24-12-2006, 12:50 PM
சுகமான கவிதை

இளசு
22-08-2007, 05:53 AM
மறந்ததைப் பரிவுடன் சுட்டியமைக்கு நன்றி ஜெயபுஷ்பலதா ..

மீண்டும் வாசிக்கும் சுகம் கிடைத்தது இன்று! நன்றி!

leomohan
22-08-2007, 06:03 AM
நல்ல கவிதை லதா அவர்களே. தொடர்ந்து எழுதுங்கள்.

சிவா.ஜி
22-08-2007, 06:51 AM
தெள்ளிய தமிழில் தெளித்த வரிகள்.அழகான கவிதை.வாழ்த்துக்கள் ஜெய புஷ்பலதா.

அமரன்
22-08-2007, 07:02 AM
தாயின் பரிவை எத்தனையோ கவிதைகளில் படித்தாலும் திகட்டாத ஒன்று. இக்கவிதையும் ஒரு திகட்டாத விருந்து. படித்துமுடித்ததும் அகன்றுவிட நினைத்தால் மறுமடியும் படி என சுண்டி இழுக்கின்றன வரிகள். பாராட்டுக்கள் ஜெயபுஷ்பலதாக்கா.

இலக்கியன்
22-08-2007, 05:45 PM
நல்ல கவிதை வாழ்த்துக்கள் ஜெயபுஷ்பலதா,

பூமகள்
22-08-2007, 06:17 PM
அழகான கவி.. இதமான தாயின் பரிவில் நானும் மாறிப்போனேன் பிஞ்சுக் குழந்தையாய்..

அழகான தமிழாடல்... வாழ்த்துக்கள் சகோதரி... !

அக்னி
23-08-2007, 02:34 PM
இளசு அண்ணாவின் பின்னூட்டத்தில், விளக்கம் கொண்டேன்...
வார்த்தைகளின் நுட்பக் கோர்வை,
மனதில் நீக்குகின்றது சோர்வை...
தொடரும் கவிதைகளை எதிர்பார்த்து,
தொடுத்த கவிதைக்கு வாழ்த்துக்கள் பல...

jpl
04-05-2013, 06:19 PM
நன்றி தோழி.

jpl
04-05-2013, 06:20 PM
நன்றி ஷீ-நிசி

jpl
04-05-2013, 06:21 PM
நன்றி மோகன்.

jpl
04-05-2013, 06:23 PM
நன்றி சிவா.ஜி

jpl
04-05-2013, 06:24 PM
நன்றி அமரன்..

jpl
04-05-2013, 06:27 PM
நன்றி இலக்கியன்.

jpl
04-05-2013, 06:28 PM
நன்றி பூமகள்

jpl
04-05-2013, 06:29 PM
வாழ்த்துக்களுக்கு நன்றி அக்னி

கீதம்
05-05-2013, 04:31 AM
தாயின் பரிவை சிசுவாய் உணர்தல் சுகம். அந்த உணர்வை சிசுவால் மீண்டும் அனுபவிப்பது அதனிலும் சுகம்.

மென்சிறகுகளால் கோதுவது அந்தப்பரிவுக்குள் ஒளிந்திருக்கும் நுண்ரசனையை எடுத்தியம்பிய வரிகள் யாவுமே சுகம்.

காம்பாய்ந்த மலரினைத் தொடுத்த விரல்களில் ஒட்டிக்கொண்ட வாசம் - வியக்கவைக்கிறது உங்கள் நுட்புலனறிவை!

பாராட்டுகள் லதா. இனியும் தொடரட்டும் இதுபோல் இன்கவிச்சரம்!

jpl
06-05-2013, 01:34 PM
தாயின் பரிவை சிசுவாய் உணர்தல் சுகம். அந்த உணர்வை சிசுவால் மீண்டும் அனுபவிப்பது அதனிலும் சுகம்.

மென்சிறகுகளால் கோதுவது அந்தப்பரிவுக்குள் ஒளிந்திருக்கும் நுண்ரசனையை எடுத்தியம்பிய வரிகள் யாவுமே சுகம்.

காம்பாய்ந்த மலரினைத் தொடுத்த விரல்களில் ஒட்டிக்கொண்ட வாசம் - வியக்கவைக்கிறது உங்கள் நுட்புலனறிவை!

பாராட்டுகள் லதா. இனியும் தொடரட்டும் இதுபோல் இன்கவிச்சரம்!

பாராட்டுகளுக்கு நன்றி கீதம்..

கும்பகோணத்துப்பிள்ளை
13-05-2013, 02:28 AM
மெல்லிய நுண்னுணரவை வரிகளாய் வடித்துள்ளிர்கள் வாழ்த்துகள்!

பிள்ளைகளின் தகிப்பைவிட தவிப்புணர்பவர் தாயன்றியாருமிலர்!

ஏனோ எனக்கு இவ்வமயம் கவிராயரின் குற்றாலக்குறவஞ்சியில் வரும் இப்பாடல் நினைவலையில் மிதக்கிறது

ஈயறியாப்பூந்தேனே எழுத்தறியா மறைபொருளே
காயறியாச்செழுங்கனியே கற்பகத்தின் பசுங்கொழுந்தே
தாயறியாக் கருவிலிருந்தே அமுதூட்டும் தாய்த்துணையே
நீயறியாச்செயலுமுண்டோ நிகலபரம் பரமுர்த்தி!

jpl
14-05-2013, 01:46 AM
மெல்லிய நுண்னுணரவை வரிகளாய் வடித்துள்ளிர்கள் வாழ்த்துகள்!

பிள்ளைகளின் தகிப்பைவிட தவிப்புணர்பவர் தாயன்றியாருமிலர்!

ஏனோ எனக்கு இவ்வமயம் கவிராயரின் குற்றாலக்குறவஞ்சியில் வரும் இப்பாடல் நினைவலையில் மிதக்கிறது

ஈயறியாப்பூந்தேனே எழுத்தறியா மறைபொருளே
காயறியாச்செழுங்கனியே கற்பகத்தின் பசுங்கொழுந்தே
தாயறியாக் கருவிலிருந்தே அமுதூட்டும் தாய்த்துணையே
நீயறியாச்செயலுமுண்டோ நிகலபரம் பரமுர்த்தி!

அகம் மணக்கும் குறவஞ்சியின்
அழகான உவமையை களிக்கூர
அமைத்தமைக்கு நன்றி..கும்பகோணத்துப்பிளை..