PDA

View Full Version : கோப்பை மோகங்கள்



ஆதவா
22-12-2006, 06:10 PM
ஊர்த்தி வைத்த கோப்பையிலே
ஒரு கோடி இன்பங்கள்
சேர்த்தி வைத்த அழகெல்லாம்
முந்தானை விஷங்கள்
பார்த்த போது அறிந்தேன்
அழகுப் பதுமைகள்
வேர்த்த போதுதான் தெரிந்தது
பெண்களின் விஷமங்கள்

கோப்பையிலே நடனமாடும்
அழகு சிலைகள்
வேப்பிலை சாறாய் கசந்தாலும்
வெட்கும் யுவதிகள்; உயிர்
காப்பதிலே எவ்வளவு சிரத்தைகள்
பார்ப்பதிலே தெரிந்ததா? பாது
காப்பில்லா படுக்கையறைகள்.

மூர்க்கத் தனத்திலே மிஞ்ச
மஞ்சத்துப் பெண்கள்
பார்வதியா? சிவனா? கள்ளன்
கொடுத்த கள்ளிலே ஒருமித்த கடவுள்கள்
சேர்ந்த் மனையாள் சொல்லும்
சொல்லிலே பல விஷங்கள்
சோர்ந்த உடலை குளிர்விக்க
இந்த பாட்டில் தேவதைகள்

காதலித்த பாவத்தினால் இந்த
இன்பமய கருமங்கள்
பூதவுடல் மண்ணில் சேர
இப்போதே ஆரம்பங்கள்
சாதமுங் கசந்ததினால் உடல்
ஒட்டா தூய்மைகள்
வேதனை அளிக்கும் கோப்பை
சுக துக்கங்கள்

என்று தீருமோ கோப்பை
அழகிகளின் நிர்வாண ஆட்டங்கள்
நின்று போகாதோ அந்த
விழிகளின் ஓட்டங்கள்
எண்ணும் போதே கனவினில்
இந்த யுவதிகளின் தாகம்
மண் மூடும்போதே விலகாதா
கோப்பைகளின் மோகம்?

மன்றம் மன்னிக்க... சில வார்த்தைகள் தேவையானதால் உபயோகிக்கப்பட்டன,...

இளசு
24-12-2006, 11:45 AM
கண்ணதாசன் என்ற வைரத்துக்கு பல பட்டைகள்..
அதில் ஒரு பட்டை இவ்வகை ..

அந்த வகைக் கவிதைகளை நினைவுபடுத்துகிறது இந்தக்கவிதை..

இது ஒரு கடந்துபோகும் நிலையே...மேகம் போல்..
இல்லையா ஆதவா அவர்களே..

ஆதவா
29-12-2006, 03:52 PM
கண்ணதாசன் என்ற வைரத்துக்கு பல பட்டைகள்..
அதில் ஒரு பட்டை இவ்வகை ..

அந்த வகைக் கவிதைகளை நினைவுபடுத்துகிறது இந்தக்கவிதை..

இது ஒரு கடந்துபோகும் நிலையே...மேகம் போல்..
இல்லையா ஆதவா அவர்களே..


ஆம்,,,, மேகம் போல கடந்தாலும் பரவாயில்லை... இது பனி போல...

மெல்ல மெல்ல உருகி உருக்கி,, கடைசியில் திரவநிலையாக்கிவிடும் (ஒன்றுமில்லாதநிலை)

நன்றி இளசு அவர்களே....

ஷீ-நிசி
30-12-2006, 01:05 PM
ஏக்கம் தெரிகிறது உங்கள் கவியில் ஆதவா... நன்றாக உள்ளது

ஆதவா
30-12-2006, 01:20 PM
ஏக்கம் தெரிகிறது உங்கள் கவியில் ஆதவா... நன்றாக உள்ளது

ஹாஹ்ஹா....:D

அமரன்
07-06-2007, 04:12 PM
குடியைக் கெடுக்கும் குடியை நிறுத்துமாறு கவிதை வடிவில் சொல்லியிருக்கின்றீர்கள். அருமை ஆதவா. தற்போது மட்டுமல்ல எப்போதும் தேவையான ஒரு விடயம். திரைக்கதை மன்னன் பாக்யராஜ் பாணியில் அமைந்து சிந்திக்க வைக்கின்றது. நன்றிகலந்த பாராட்டுகள்.
இளசு அவர்கள் கண்ணதாசனை குறிப்பிட்டதால் இக்கேள்வி. தவறாக நினைக்க வேண்டாம். கண்ணதாசனின் பாடல்கள் பல அவர் அப்போதிருந்த சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டவை என அறிந்திருக்கின்றேன். உங்கள் யதார்த்தமான இக்கவிதை.........

ஆதவா
07-06-2007, 06:56 PM
நன்றி அமரன் அவர்களே! பழைய கவிததயான இதை தோண்டி எடுத்தமைக்கு எனது நன்றிகள்...... உங்கள் விமர்சனம் பாராட்டத்தக்கது.

ஓவியா
07-06-2007, 07:02 PM
அருமையான கவிதை.

ஆதவா ஒரு நல்ல சிந்தனைவாதி.

பாராட்டுக்கள்.

ஆதவா
09-06-2007, 02:22 PM
நன்றிங்க.