PDA

View Full Version : மாளாக் காதல்



jpl
22-12-2006, 12:45 PM
பாதச் சுவடு பதியா பாதையில்
தலையசைத்து வரவேற்கும்
பெயர் தெரியா பச்சையினங்கள்
வானவில்லும் கடன் வாங்க,
வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சி,

சிற்றருவி சலசலக்கும் தெள்ளிய
பாதம் தழுவி,கானாறாய் ஓட,
மின்னும் வெள்ளித் தகடாய்
தங்கத் தகடாய் நீரில் ஒளிர
ஜாலம் காட்டி நீந்தும் மீன்கள்,

வானாளாவிய கற்பகத்தருவினில்
புள்ளினங்கள் பண்ணிசைக்க
மெல்லியதாய் உணர்ந்தறியா
மணம் நாசியை நிறைக்க,
எழில் கொஞ்சி நிற்கிறாள்
இளமங்கையாய் இயற்கையன்னை.

அறிஞர்
22-12-2006, 01:38 PM
இயற்கையன்னையின் சிறப்புகள் பல

ரசிக்க தெரிந்தவர் ரசிக்கின்றனர்.
----
அருமை லதா.. இன்னும் கொடுங்கள்...

ஆதவா
22-12-2006, 01:51 PM
வாருங்கள் பெண் கவிஞரே,, அதானே பார்த்தேன்.. இயற்கையை இப்படி ரசிச்சி எழுத பெண்ணால்தானே முடியும் (கவிஞர்களே மன்னிக்க)

அருமையான இயற்கையான கவிதை
கலக்குங்க...

ஷீ-நிசி
22-12-2006, 01:53 PM
வானாளாவிய கற்பகத்தருவினில்
புள்ளினங்கள் பண்ணிசைக்க
மெல்லியதாய் உணர்ந்தறியா
மணம் நாசியை நிறைக்க,
எழில் கொஞ்சி நிற்கிறாள்
இளமங்கையாய் இயற்கையன்னை.


இந்த பகுதி முழுவதுமே மிக அருமை

இளசு
22-12-2006, 02:38 PM
மனிதன் பாதத் தடத்தில்
பின் புல்லும் முளைப்பதரிது..

வனவிலங்குகள் மேய்வதால்
அந்நிலை வருவதில்லை..


பாதமறியா பச்சைவனம்..
வெள்ளி ஓடை.. கானாறு..
தங்கமீன்..புள்ளிசை..காற்றே வாசமாய்...



ரசிக்க ரசிக்க அலுக்காத இரண்டு:

மழலையின் புன்னகை மின்னும் கன்னக்கதுப்பு..
கன்னிமை மாறா இயற்கையின் பல வண்ணச் சிரிப்பு..


அருமையாய் ஒரு வன அனுபவம் இதை வாசிக்கையில்..

நன்றியும் பாராட்டும்.. ஜெயபுஷ்பலதா அவர்களுக்கு..

நம்பிகோபாலன்
22-12-2006, 02:49 PM
பெண்ணே உனக்குதான் இயற்க்கையின் மேல் எவ்ளோ காதல் -- அருமை

meera
22-12-2006, 02:52 PM
தோழி,

இயற்கையை வர்ணித்த அழகு அழகு தான்.

தொடருங்கள் தோழி.காத்திருக்கிறோம் உங்கள் கவிதைக்காக.

jpl
23-12-2006, 01:34 AM
ஆதரித்த நல் உள்ளங்கள் அறிஞர்,ஆதவா,ஷீ-நிசி,இளசு,நம்பிகோபலன்,மீரா
அனைவருக்கும் நன்றி நன்றி....

அன்புரசிகன்
16-08-2007, 07:26 AM
வானாளாவிய கற்பகத்தருவினில்
புள்ளினங்கள் பண்ணிசைக்க
மெல்லியதாய் உணர்ந்தறியா
மணம் நாசியை நிறைக்க,
எழில் கொஞ்சி நிற்கிறாள்
இளமங்கையாய் இயற்கையன்னை.

கற்பக தருவை குறிப்பிட்டு எமது வீட்டுச்சூழலைலின் நினைவலையை தட்டியெழுப்பிவிட்டீர்கள்...

இயற்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொருநோக்குடன் ஆராய்வார்கள்...

இளமங்கையாக கவி வார்திருக்கும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

இலக்கியன்
16-08-2007, 03:48 PM
இயற்கை அன்னையைப்போற்ரும் கவி வர்ணஜாலம் வாழ்த்துக்கள்

paarthiban
16-08-2007, 05:07 PM
அருமையான இயற்கை வருணனை. அழகான கவிதை. பாராட்டுக்கள் ஜேபிஎல் அவர்களே

அமரன்
16-08-2007, 05:13 PM
இயற்கை பங்கை நினைத்து இக்கவிநங்கை விசிறிய கவிமுத்து மின்னுகிறது. பாராட்டுக்கள்.

ஓவியன்
19-08-2007, 07:07 PM
இயற்கையே அழகு
அது இந்தக் கவிதையில்
இன்னமும் அழகு.........

தேர்ந்தடுத்த வார்த்தைகள்
சொல்லி நிற்கின்றன
கவிதையின் சிறப்பு......

jpl
21-08-2007, 04:11 PM
பாராட்டிய நல் உள்ளங்களுக்கு நன்றி...