PDA

View Full Version : ஆழிப் பேரலைகள் (சுனாமி)



தமிழ் தொண்டன்
22-12-2006, 05:58 AM
உன்னை சக்களத்தி என்று இகழாமல்
சிவனின் சிரத்தில் வைத்து நித்தம்
அழகு பார்த்து மகிழ்ந்ததால் தானா
அன்று நீ சினம் கொண்டு
சீறி எழுந்தாய்?

சீதையை சிறை வைத்த தேசத்தில்
எம் தமிழன் சிந்திய கண்ணீர்
உன்னில் உப்பாய் உறைந்தது
கண்டு மனம் வருந்தி தானோ
அன்றே கரை தாண்டி
கொதித்தெழுந்தாய் ?

வென்ற தோற்ற
காதல்களின் அடையாளமாக
மணல் வெளி எங்கிலும்
பாதச் சுவடுகள்

இயற்கை என்னும் மருத்துவச்சி
உன்னில் இருந்து பல செல்வங்களை
வெளிக்கொணர முயன்ற பிரசவம்
தோற்று போனதால் பிறந்து விட்ட
துயரத்தின் அடையாளச் சுவடு
தானா நீ?

எங்கள் பசிக்காக
உன் வளத்தை
சுரண்டி விட்டோம்
என்று கருதி நீ
வருடக் கணக்கில்
உண்ணாவிரதம்
இருந்தாயோ?

உன் அகோரப் பசிக்குப்
பருக்கையாய் எங்கள்
கரையில் ஒதுங்கிய
பிணங்கள்.

அழித்த நகரமும்
வளமும் போதாதா
உனக்கு?

வருடம் இரண்டு
கடந்த பின்னும்
கரை வேட்டியால்
கரை சேர்க்க
முடியாத வாழ்க்கையை
இன்னும் கரை ஓரம்
தேடுகின்றனர் சிலர்

குனிந்து கிளிஞ்சல் பொறுக்கும்
சின்னஞ்சிறு குழந்தை போல.

நாளைய பொழுதேனும்
நல்லதாய் விடியட்டும்
இனி எங்கள் வலைகளில்
மீன்கள் மட்டுமே தங்கட்டும்.

ஷீ-நிசி
22-12-2006, 06:07 AM
கவிதை அருமை நண்பரே.. எப்படி இருக்கீங்க... அறிமுகம் பகுதியில் சென்று உங்களை மன்றத்தினருக்கு அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்..

அன்புடன்
ஷீ-நிசி

இளசு
22-12-2006, 06:27 AM
வருக தமிழ்த் தொண்டன் அவர்களே..
பேரழிவை ஏற்படுத்திய பேரலையின் நினைவுநாள் வருகிறது..
உங்கள் கவிதை அந்நாளின் காயத்தின் வடுக்களை வருடுகிறது..

கருவிகள் நிறுவப்படட்டும்.
கரையோரக் காவல் நிலையங்கள் அமையட்டும்.


பெரிய புயலானாலும் 5 பேர் மட்டுமே மரணம் - அமெரிக்காவில்..

பேரழிவு மேலாண்மை, முன்னறிதல், தகவல் தொடர்பால்
இனி அலை வந்தாலும் பசி அடங்காமல் திரும்பட்டும்...

ஆதவா
22-12-2006, 06:52 AM
அருமையான (இன்னொரு) சுனாமி கவிதை கொடுத்த தொண்டருக்கு பாராட்டுக்கள்

யாருப்பா தலிவரு?

ஆதவா
22-12-2006, 06:55 AM
வருக தமிழ்த் தொண்டன் அவர்களே..
பேரழிவை ஏற்படுத்திய பேரலையின் நினைவுநாள் வருகிறது..
உங்கள் கவிதை அந்நாளின் காயத்தின் வடுக்களை வருடுகிறது..

...

அய்யா இளசு!!!! நீர் எந்த நாட்டில் இருக்கிறீர்கள்?

சுனாமியால் இறந்து போனவர்களுக்கு முழுக்க முழுக்க அரசுதான் காரணமென்கிறீரா? கிடையவே கிடையாது.
நம் மக்களும் ஒரு காரணம்...
கரையோரத்தில் வீடுகட்டினால், சுனாமி என்ன, எனாமி கூட வந்தாலும் தாங்கமுடியாது...
மாற்று வீடு என்று நீங்கள் பதில் எழுதலாம். ஆனாலும் நம்மவர்களுக்கு எங்கே போயிற்று புத்தி?

ஷீ-நிசி
22-12-2006, 08:00 AM
ஆதவா அது என்ன எனாமி... கொஞ்சம் விளக்குங்கள்

ஆதவா
22-12-2006, 09:00 AM
ஆதவா அது என்ன எனாமி... கொஞ்சம் விளக்குங்கள்

எமன்
எமனி
எனிமி (Enemy)
எனாமி...

தமிழ் தொண்டன்
22-12-2006, 10:12 AM
யார் தலைவர் என்று கேள்வி எழுப்பிய அன்பு நண்பரே, எனக்கு தலைவன் தலைவி (ஏனெனில் தமிழ்த் தாய் தானே அதனால் தலைவி என்றேன்) எல்லாமே என் தாய் மொழியாம் அன்னைத் தமிழே

leomohan
22-12-2006, 10:19 AM
அருமையான கவிதை கிருஷ்ணன். நெஞ்சை உருக்கி கடல்தாயை நேரடியாக பார்க்கும் சுடு கேள்விகள் சுட்டன நெஞ்சை.

ஆதவா
22-12-2006, 10:38 AM
யார் தலைவர் என்று கேள்வி எழுப்பிய அன்பு நண்பரே, எனக்கு தலைவன் தலைவி (ஏனெனில் தமிழ்த் தாய் தானே அதனால் தலைவி என்றேன்) எல்லாமே என் தாய் மொழியாம் அன்னைத் தமிழே



அட.... சும்மா சொன்னேங்க... தமிழ் தொண்டன் னு இருந்ததால கேட்டேன்...

(ஹலோ@! கோயம்புத்தூரிலிருந்து இந்த குசும்பு கூட பண்ண்ல னா எப்படி?)

நம்பிகோபாலன்
22-12-2006, 03:17 PM
அன்று வருடியது கடல் அலைகள் அல்ல காவு அலைகள்...

மயூ
23-12-2006, 04:34 AM
வருக தமிழ்தொண்டன்!!
ஆழிப் பேரலை முடிந்து என்னுமொரு ஆண்டு நிறைவும் வரப்போகின்றது!!!
ஆண்டவா வேண்டாம் என்னுமொரு துன்பம் இதுபோல!