PDA

View Full Version : இலஞ்சம் ஒழிய,



ஷீ-நிசி
22-12-2006, 04:25 AM
கொடுப்பவர் நிறுத்த வேண்டுமா? வாங்குபவர் நிறுத்த வேண்டுமா?

மன்ற நண்பர்களே.... நாட்டில் இன்று இலஞ்சம் எல்லா இடங்களிலும் பரவிவிட்டது.. குறிப்பாக நம் இந்திய திருநாட்டில் இது இல்லாமல் எதுவுமே நகராத நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.... அரசியலிலும் சரி தனி மனித வாழ்விலும் சரி இன்று இதன் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கிறது...

இலஞ்சத்திற்கு
பிள்ளையார் சுழிப் போட்டவர்கள்
பிள்ளையார் சுழிப் போடுவதற்கே
இலஞ்சம் வாங்கியவர்கள்

உங்கள் கருத்துக்களை அலசுங்கள்...

கொடுப்பவரின் குற்றமா.... வாங்குபவரின் குற்றமா...
என்ன செய்தால் இதை சரி செய்ய முடியும்...
இலஞ்சத்தை ஒழிக்க வழிகள் தான் என்ன?

யாருக்கு தெரியும்... மிக அற்புதமான யோசனைகள் மிக சாதாரணமான இடங்களிலிருந்தும் தோன்றலாம்

அன்புடன்

ஷீ-நிசி

ஆதவா
22-12-2006, 05:47 AM
ஷீ.. எப்படி இந்த மாதிரி...? இன்னிக்கு நைட் ஒரு புடி புடிச்சரலாம்

ஷீ-நிசி
22-12-2006, 05:56 AM
ஆதவா... இது ஒரு முக்கியமான பிரச்சினை. உங்கள் கருத்துக்களை பதியுங்கள்...

இளசு
22-12-2006, 06:48 AM
துப்புரவுப்பணியை வீட்டிலிருந்து
தொடங்கச் சொல்கிறார் கலாம்..

மகன்கள் -மகள்களை கையில்
துடைப்பம் எடுங்கள் என்கிறார் கலாம்..

ஷீ-நிசி
22-12-2006, 08:05 AM
வீட்டுக்குள்ளிருந்துனா?

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் இளசு அய்யா

ஆதவா
22-12-2006, 09:02 AM
வீட்டுக்குள்ளிருந்துனா?

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள் இளசு அய்யா

அதாவது நம் இல்லதிலிருந்து.. (அட அதத்தான் அவருஞ்சொன்னாரு)

நாம் கொடுப்பதை நிறுத்திவிட்டால் லஞ்சம் குறையும்னு சொல்றார்னு நினைக்கிறேன்

aren
23-12-2006, 02:08 AM
இதுக்குக் காரணம் சிஸ்டம்தான். சிஸ்டம் மாறவேண்டும். 10000 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் விற்பவர் காசோலையையோ அல்லது கிரெடிட் கார்ட் மூலமாகவோதான் பெறமுடியும் என்று ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும். அப்பொழுதுதான் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் அதை உபயோகிக்கமுடியாமல் போகும். அதுபோல் வங்கியில் 10000 ரூபாய்க்குமேல் கரன்சியில் எடுக்கவோ அல்லது கட்டவோ கூடாது என்று சட்டம் கொண்டுவரவேண்டும். அப்படி அதற்குமேல் தேவைபட்டால் அதற்கான காரணத்தை எழுத்துமூலம் சொல்லவேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவரவேண்டும்.

இப்படி சில கெடுபிடிகள் கொண்டுவந்தால், காசோலை மூலம் லஞ்சம் கொடுக்கமுடியாது. அப்படி கொடுப்பதாக இருந்தால் கொடுப்பவர்கள் 10000 ரூபாய்க்குள்தான் கொடுக்கமுடியும். அதுபோல் வங்கியிலிருந்து நிறைய 10000 ரூபாய் அளவில் மக்கள் கட்டினாலும் வெளியே எடுத்தாலும் அந்த கணக்கை கண்காணிக்கவேண்டும்.

இப்படி பல விஷயங்கள் செய்தால் தானாகவே லஞ்சம் குறைந்துவிடும் என்பது என் நம்பிக்கை.

அதுபோல் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டால் அவர்களுடைய சொத்து மொத்தத்தையும் பறிமுதல் செய்யவேண்டும். மேலும் அவர்கள் புதிதாக தொழில் செய்யமுடியாத அளவில் அவர்களுக்கு தடை விதிக்கவேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால் கொஞ்சம் மக்கள் பயந்து லஞ்சம் வாங்காமல் வேலை செய்வார்கள். இந்தியா செழிக்க வழியிருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
23-12-2006, 02:28 AM
அருமையான யோசனை ஆரென்.... ஆனால் வங்கியில் 1000 ரூபாய்க்கு மேல் பணம் கட்டினால் எழுத்து பூர்வமாக விளக்கவேண்டும் என்கிறீர்கள், நம்மவர்கள் போலியாக ஒரு காரணம் எழுதுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்....

aren
23-12-2006, 02:57 AM
அருமையான யோசனை ஆரென்.... ஆனால் வங்கியில் 1000 ரூபாய்க்கு மேல் பணம் கட்டினால் எழுத்து பூர்வமாக விளக்கவேண்டும் என்கிறீர்கள், நம்மவர்கள் போலியாக ஒரு காரணம் எழுதுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்....

10000 ரூபாய்க்கு மேல் தேவைபட்டால் அவர்கள் காரணத்தை சொல்லவேண்டும். எவ்வளவு நொண்டி சாக்கு சொல்லமுடியும். இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் விஜயம் செய்வார்கள். பிரச்சனை இன்னும் பெரிதாகும், அதனால் மக்கள் கொஞ்சம் பயப்படுவார்கள் என்று நம்புகிறேன்.

லஞ்சம் வாங்கிய பணத்தை செலவு செய்யமுடியவில்லையென்றால் வாங்கிய பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள். அதனாலேயே அந்த இடத்தை கட்டுப்படுத்தினால் லஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது.

இன்னொரு பக்கமாக யோசித்தால், கருப்பு பணத்தை குறைத்தால் லஞ்சம் குறையும் என்று நம்புகிறேன். எப்படி கருப்பு பணத்தை குறைப்பது என்று யோசித்தால் இதற்கு வழி கிடைக்கும். கருப்பு பணம் எப்படி சேருகிறது என்று பார்க்கவேண்டும். அதிக வரி விதிப்பதால் மக்கள் வரியேப்பு செய்கிறார்கள். அதனால் அங்கே கை வைத்தால் கருப்பு பணம் குறையும். அதுபோல் இப்பொழுது வர இருக்கும் வாட் வரி மூலம் கருப்பு பணம் குறைய வாய்ப்பிருக்கிறது. வியாபாரிகள் ரசீது கொடுக்காமல் இனிமேல் இருக்கவேண்டாம். ஆகையால் வரி ஏய்ப்பு குறைய வாய்ப்பிருக்கிறது. கருப்பு பணத்தின் புழக்கமும் குறைய வாய்ப்பிருக்கிறது.

கரிகாலன் அண்ணன் வந்து அருமையாக விளக்கமாக எழுதுவார் என்று எதிர்பார்க்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

guna
23-12-2006, 03:10 AM
துப்புரவுப்பணியை வீட்டிலிருந்து
தொடங்கச் சொல்கிறார் கலாம்..

மகன்கள் -மகள்களை கையில்
துடைப்பம் எடுங்கள் என்கிறார் கலாம்..

இளசு அண்ணா எந்த கருத்தை மையமாக கொண்டு, இப்படி சொன்னீங்க என்று தெரிய இல்லை..

குணா புரிந்து கொண்டதன் படி, இந்த இலஞ்சம் வாங்கும் & கொடுக்கும் பழக்கமும் வீட்டிலிருந்து தன் ஆரம்பம் ஆகிறது. ஆகவே இதை அழிப்பதையும் அங்கிருந்தே ஆரம்பிக்க வேண்டும்..

எடுத்துகாட்டாக, சிறு குழந்தைகள் குறும்பு செய்யும் போது, நல்ல பிள்ளையா நடந்து கொண்டால், அம்மா சாக்லெட் வாங்கி தருவேன்'னும், பரிட்சயில நல்ல மதிப்பெண்கள் வாங்கினாள் பரிசாக விளையாட்டுப் பொருட்கள் வாங்கி தருவதாகவும் பெற்றோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம்..
மறுமுறை, பிள்ளைகளே வாயை திறந்து, நான் நல்ல மர்க் வாங்கினா, எனக்கு இது வேனும், அது வேனும்னு கேட்க ஆரம்பிச்சுடுவாங்க..

சின்னதா இருகரச்ச சின்னதா கேட்பாங்க, வளர்ந்த பிறகு, அதாவது பெரிய பதவிக்கு வந்த பிறகு பெருசா கேட்பாங்க..
அவங்க கேட்காடாலும் கூட, ஆசை காட்டி பழக்க பட்டவர்கள் ஆசை காட்ட தானே செய்வார்கள்..

நல்ல பிள்ளையாக இருக்க வேண்டியது குழந்தைகளின் கடமை, அல்லது நல்ல விதமாக வளர்க வேண்டியது பெற்றோர்களின் கடமை..
படிக்கும் குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டியது அவர்களின் கடமை, எனவே அவர்களின் கடமையை சரி வர செய்ய பழகிக் கொடுக்காமல், அவர்கள் விரும்பும் பொருட்களை ஆசை காட்டி, கடமையை செய்ய சொல்லி பழகிக் கொடுத்து விடுகிறோம்..
தங்கள் கடமையை சரி வர செய்ய கூலி எதிர்பார்தே வளர்ந்து விட்ட பிறகு, செல்லும் இடம் எல்லாமே நிழலை போலே இந்த பழகமும் தொடர்ந்துவிடும்..


நன்பர்களுக்கு உதவி செய்த பிறகு, ட்ரிட் எதிர்பார்பதும் கூட ஒரு வகை இலஞ்சம்னே குணா கருதுகிறேன்..
ஆபத்து அவசர வேளைகளில் நன்பர்களுக்கு உதவி செய்வது நமது கடமைகள்ல ஒன்று இல்லயா? பிறகு எதற்காக செய்த உதவிக்கு ட்ரிட் கேட்கறாங்க..
சின்ன சின்னதா செய்யர தவறுகளை யாரும் கண்டு கொள்வதில்லை, அதுவே வளர்ந்து பெரிய அளவிலே நடகரச்ச, எல்லாரும் அதை பத்தி பேசுகிறோம், சரி செய்ய வழி தேடுகிறோம்..

இனி வரும் சமுதாயத்தை, கடமையை செய்ய கூலி எதிர்பார்காமல் பழக்கவும், வளர்ந்து விட்டவர்களை, நன்பர் ஆரென் சொல்வதை போலே சில கடுமையான சட்டங்கள் வழியாகவும் மாற்றப் பார்கலாம்..

குணா

ஷீ-நிசி
23-12-2006, 03:47 AM
வீட்டிலிருந்தே தொடங்கலாம் என்பது சரிதான்...
உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல், நீங்கள் அவசரமாக அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறீர்கள்.... நிறைய பேர் ஏற்கெனவே token வாங்கிக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்... உங்களுக்கு தெரியும், கதவண்டையில் இருக்கும் கம்பவுண்டரை கவனித்தால் உள்ளே போய்விடலாம் என்று... பிள்ளை வேறு அழுது கொண்டிருக்கிறது... ஏற்கெனவே காத்திருப்பவர்களில் சிலரும் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் உங்கள் முறை வரும்வரை காத்துக்கொண்டிருப்பீர்களா, அல்லது பிள்ளைக்காகத்தானே என்று கம்பவுண்டரை கவனித்துவிட்டு (இலஞ்சம்) உள்ளே மருத்துவரிடம் செல்வீர்களா?

மயூ
23-12-2006, 04:40 AM
வீட்டிலிருந்தே தொடங்கலாம் என்பது சரிதான்...
உங்கள் பிள்ளைக்கு காய்ச்சல், நீங்கள் அவசரமாக அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்கிறீர்கள்.... நிறைய பேர் ஏற்கெனவே token வாங்கிக்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள்... உங்களுக்கு தெரியும், கதவண்டையில் இருக்கும் கம்பவுண்டரை கவனித்தால் உள்ளே போய்விடலாம் என்று... பிள்ளை வேறு அழுது கொண்டிருக்கிறது... ஏற்கெனவே காத்திருப்பவர்களில் சிலரும் பிள்ளைகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் உங்கள் முறை வரும்வரை காத்துக்கொண்டிருப்பீர்களா, அல்லது பிள்ளைக்காகத்தானே என்று கம்பவுண்டரை கவனித்துவிட்டு (இலஞ்சம்) உள்ளே மருத்துவரிடம் செல்வீர்களா?
மனந்திறந்து சொல்கின்றேன்! அந்தச் சந்தர்ப்பத்தில் பலரும் சில சில்லறைதானே என்று வீசிவிடுவர்.. ஆனால் அதே நபர் தன்னால் கொடுக்க முடியாத அளவு லஞ்சம் பணத்தை யாரிடமாவது கொடுக்க வேண்டும் என்று ஆகுமிடத்து லஞ்சம் ஊழல் என்று ஊளை இடுவர்!!!
இதுவே டிப்பிக்கல் மனித இயல்பு

ஷீ-நிசி
23-12-2006, 05:10 AM
மனந்திறந்து சொல்கின்றேன்! அந்தச் சந்தர்ப்பத்தில் பலரும் சில சில்லறைதானே என்று வீசிவிடுவர்.. ஆனால் அதே நபர் தன்னால் கொடுக்க முடியாத அளவு லஞ்சம் பணத்தை யாரிடமாவது கொடுக்க வேண்டும் என்று ஆகுமிடத்து லஞ்சம் ஊழல் என்று ஊளை இடுவர்!!!
இதுவே டிப்பிக்கல் மனித இயல்பு


நாம் அங்கே நிறுத்த ஆரம்பிக்க வேண்டும் இலஞ்சத்தை......

வண்டி பார்க்கிங் பண்ணின இடத்தில் நீ திரும்ப எடுக்கும்பொழுது ஓடிவந்து உன் வண்டியை தூக்கிபிடித்து உதவுபவனுக்கு நன்றி சொல்.
இரண்டு ரூபாய் கொடுக்காதே... ஏனென்றால் அதுதான் அவனுடைய வேலை... நாம் இப்படி செய்வதால் இன்னொருவன் இவனை உதவிக்காக அழைத்துக்கொண்டிருப்பான்... இவன் காதில் கூட வாங்கமாட்டான்.. காரணம் இவன் அறிவான், அந்த மனிதர் 1 ரூபாய் கூட தரமாட்டார் என்று.... நாம் உதவி என்ற போர்வையில் நாம் தரும் 2 ரூபாய், இன்னொருவனிடம் இதை எதிர்பார்க்கவைக்கிறது... முடிவில்... பணம் தருபவனுக்கு மட்டுமே வேலை செய்வான்... பணம் தராதவனின் உதவி கேட்கும் சத்தங்கள் இவன் காதில் விழாது...

இங்கே நிறுத்த வேண்டும்

இளசு
24-12-2006, 10:22 AM
வீட்டுக்குள்ளிருந்துனா?

கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்

ஜூ.வி (27 - 12-06) இதழிலிருந்து......


கண்ணில் ஒரு வலி இருந்தால் கனவுகள் வருவ தில்லை என்பது கவிஞர் வைரமுத்துவின் வரிகள். இந்தப் பாடல் வரிகளை சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கேட்டிருப்பார் போலும். இந்தியாவை வல்லரசாக்கும் கனவைத் தொடர்ந்து காண முடியாமல் இந்தியாவில் இருக் கும் ஊழல் அவரை உறுத்தியிருக்கக் கூடும். எனவே மாணவர்களிடம் ஊழல் ஒழிப்புக்குப் பாடுபடுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். அதாவது தங்களுடைய பெற்றோர் லஞ்ச, ஊழலில் ஈடுபடாமல் தடுக்கும் பணியில் குழந்தைகள் இறங்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்.

சமூகத்தில் இருக்கும் பல அவலங்களை நீக்குவதற்கு இனி முதிய தலைமுறையால் இயலாது என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கக் கூடும். அல்லது குழந்தைகளுக்குப் புதிய ஆத்திச்சூடியும் பாப்பா பாட்டும் தந்த பாரதியின் வழிமுறை அவரைக் கவர்ந்திருக்கலாம். வேறு வார்த்தைகளில் சொல்வதாக இருந்தால், லஞ்சத்தையும் ஊழலையும் அகற்றுவதற்குப் போராட வேண்டும் என்ற அவரது கோரிக்கை மாணவர்களால் மட்டுமே அமைதியாகக் கேட்கப்படும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். ......

மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியான ராப்ரி தேவியின் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் இவ் வளவு வசதிகள் எப்படி வந்தன என்று கேட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை.

ஷீ-நிசி
08-01-2007, 04:28 AM
மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவியான ராப்ரி தேவியின் குழந்தைகள், தங்கள் பெற்றோரிடம் இவ் வளவு வசதிகள் எப்படி வந்தன என்று கேட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை.


கேட்டால் மட்டும் என்ன சொல்லிவிடபோகிறார்கள்? அது அவர்கள் பிள்ளைகளுக்கே நன்றாக தெரியும்