PDA

View Full Version : எளிய முறையில் ஜாவா - வருகிறது...

kavitha
21-12-2006, 09:53 AM
இந்தத்திரியில் ஜாவா மொழியை இயன்ற அளவு எளியமுறையில் விளக்கலாம் என்று இருக்கிறேன். புதியவர்களுக்கு இந்தத்திரி மிக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். நம் தளத்தில் மென்பொருள்வல்லுனர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பும் உங்கள் அனைவரது ஊக்கமும் இத்தொடரை வளர்க்கும் என்ற நம்பிக்கையுடன்... உங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

ஷீ-நிசி
21-12-2006, 09:58 AM
ஆஹா!.. கவிதா நல்ல முயற்சி.. அனைவருமே கற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்

pradeepkt
21-12-2006, 10:01 AM
கவிதா, நடத்துங்க உங்க ராஜாங்கத்தை. நானும் அவ்வப்போது ஜோதியில் ஐக்கியம் ஆகிக்கறேன்...

ஆதவா
21-12-2006, 10:06 AM
முதலில் வரவேற்கிறோம்,, நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை
ஜாவா ன்னா இன்னா கவி மேம்...ம்ம்ம்ம் சொல்லுங்க பாப்போம்ம்//

paarthiban
21-12-2006, 10:32 AM
கவிதாவுக்கு நன்றி. சீக்கிறமா ஆரம்பிங்க கவிதா

leomohan
21-12-2006, 10:43 AM
இந்தத்திரியில் ஜாவா மொழியை இயன்ற அளவு எளியமுறையில் விளக்கலாம் என்று இருக்கிறேன். புதியவர்களுக்கு இந்தத்திரி மிக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். நம் தளத்தில் மென்பொருள்வல்லுனர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பும் உங்கள் அனைவரது ஊக்கமும் இத்தொடரை வளர்க்கும் என்ற நம்பிக்கையுடன்... உங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

அருமையான முயற்சி. யாராவது php சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்.

ஷீ-நிசி
21-12-2006, 10:45 AM
PHP னா என்னனு சொல்லுங்க முதல்ல....

பென்ஸ்
21-12-2006, 10:53 AM
அட இந்த முயற்சியை இப்பதான் தொடங்குறிங்களா????
இதை முதலிலையே செய்திருக்கலாமே..... !!!!
(எவ்வளவு நல்லவிஷயமாக இருந்தாலும் குறை சொல்லனுமேன்னுதான்)....

நல்ல விஷயம் இது...

கவிதா அவர்கள் கற்றுகொடுக்கும் போது மென்பொருள் நண்பர்கள் நடைமுறை உதாரணங்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்...
நான் கூட கற்றுகொள்வேனே...(சரியா டீச்சர் )

leomohan
21-12-2006, 12:49 PM
PHP னா என்னனு சொல்லுங்க முதல்ல....

இது இணையமெங்கும் வியாபித்திருக்கும் ஒரு திறவுமூல மென்பொருள். கீழ்கண்ட Combination-ல் தான் அதிகபடியான தளங்கள் அமைந்துள்ளன. இவை மைக்ரோஸாஃப்டுக்கு ஒரு சவுக்கடி.

Web server - Apache
Database Server - My SQL
Front End - Php (PHP)

இவை மூன்றும் திறவுமூல மென்பொருள் Open Source ஆதலால் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.

மேலும் HTML அறியாதவர்களும் அழகான இணையதளங்களை அமைக்க Content Management System (CMS) உதவுகிறது. இதுவும் இலவசமாக கிடைக்கும் மென்பொருள். இவையெல்லாம் இணையத்தில் புரட்சி என்றே சொல்லவேண்டும்.

மென்பொருள் பற்றி ஒரு மண்ணும் தெரியாமல் சுலபமாக www.etheni.com (http://www.etheni.com) தளத்தை முழுமையாக அமைத்திருக்கிறேன் என்றால் அதற்கு மேல் சொன்ன மென்பொருட்களே காரணம்.

PHP இன்னும் தெரிந்தால் நன்றாக Fine-tuning செய்ய ஏதுவாக இருக்கும்.

மன்மதன்
21-12-2006, 07:28 PM
நல்ல முயற்சி. பாராட்டுகள்.

இளசு
21-12-2006, 07:37 PM
வாழ்த்தும் ஊக்கமும் கவீ..

காத்திருக்கிறோம்..

நன்கு திட்டமிட்டு தொடங்கி, முழுமையாய் முடிக்க வாழ்த்துகள்!

mukilan
21-12-2006, 08:15 PM
கவிதாயினி தமிழ்ப்புலமை மற்றுமல்ல ஜாவாப் புலமையும் உள்ளவரா? அறியாமல் இருந்துவிட்டேனே. தொடருங்கள் சகோதரி காத்திருக்கிரேன். அ ஆ விலிருந்து கற்றுக் கொள்ள. எனக்கு கணிணி மொழி ஏதுமே தெரியாது.

kavitha
22-12-2006, 02:42 AM
அனைவரின் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. இளசு அண்ணா சொன்னது போல நன்கு திட்டமிட்டு முழுமையாகவும் எல்லோருக்கும் புரியும் வகையில் நடைமுறை உதாரணங்களுடனும் விளக்குகிறேன். இனி ஒன்றுவிட்ட திங்கட்கிழமையில் இப்பதிவைத்தொடர்ந்துக் காணலாம்.

யாராவது php சொல்லித் தந்தால் நன்றாக இருக்கும்.
__________________
அன்புடன்

மோகன்

நம்ம பாரதியைப் பிடிங்க... டிமிக்கி கொடுக்கிறார்.
(என்னுடைய வேண்டுகோளும் பாரதி..)

ஷீ-நிசி
22-12-2006, 02:50 AM
மோகன் சார். அப்படினா இதுல அதாவது php வகைல linux சேராதா?

ஓவியா
02-01-2007, 05:40 PM
இந்தத்திரியில் ஜாவா மொழியை இயன்ற அளவு எளியமுறையில் விளக்கலாம் என்று இருக்கிறேன். புதியவர்களுக்கு இந்தத்திரி மிக உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன். நம் தளத்தில் மென்பொருள்வல்லுனர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களது ஒத்துழைப்பும் உங்கள் அனைவரது ஊக்கமும் இத்தொடரை வளர்க்கும் என்ற நம்பிக்கையுடன்... உங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.

வணக்கம் கவிதா,
அனைவரும் நலமே காண்க,

வெகு நாட்களுக்கு பின் தங்களின் எழுத்து மழையில் நாங்கள் நனைவதை சொல்ல வார்த்தை இல்லை.....(உங்களுடைய சில கவி விமர்சனங்களை நான் படித்ததுண்டு.....அருமை.....பாராட்டுகிறேன்)

இந்த முயற்சிக்கு ஒரு வாழ்த்துக்கள்.......:D

வணக்கம் டீச்சர்.
ஊக்கமும்..ஒத்துழைப்பும்....உண்டு...

meera
03-01-2007, 05:03 AM
கவிதா,
நானும் வரேன் நானும் வரேன்.ஜாவா கத்துக்கவும் எனக்கு தெரிந்ததை பகிர்ந்து கொள்ளவும் வருகிறேன்.சீக்கிரமா ஆரம்பீங்க.

jpl
03-01-2007, 01:54 PM
இதோ நானும் வந்து விட்டேன்.ஜாவா படிக்க.

ஓவியா
03-01-2007, 04:02 PM
என்னா இது !!!!
பத்து நாளா டீச்சர காணலையே!!!!

பென்ஸ்
03-01-2007, 04:02 PM
அனைவரின் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி. இளசு அண்ணா சொன்னது போல நன்கு திட்டமிட்டு முழுமையாகவும் எல்லோருக்கும் புரியும் வகையில் நடைமுறை உதாரணங்களுடனும் விளக்குகிறேன். இனி ஒன்றுவிட்ட திங்கட்கிழமையில் இப்பதிவைத்தொடர்ந்துக் காணலாம்.

அட ரெண்டு மூனு கூட விட்டு போச்சு...:D :D

Mathu
06-01-2007, 12:13 PM
என்ன கவீ பூஜை போட்டதோட சரியா.....

ஓ மாதம் இருமுறை மட்டும் தான் மலருமா ஜாவா.

சரி காத்திருக்கிறோம்.

leomohan
06-01-2007, 06:48 PM
மோகன் சார். அப்படினா இதுல அதாவது php வகைல linux சேராதா?

Apache, MySQL, php இவை மூன்றும் Windows, Linux இயங்கு தளங்கலிலும் அமைக்கலாம்.

நம் கணினியிலே செய்து பார்ப்பதற்கு விண்டோஸ் நல்லது. லினக்ஸ் சற்று போராடவேண்டும். ஆனால், லினக்ஸில் வேலை செய்போரின் அறிவு நுட்பமும் அதிகம் இருப்பதை கண்டிருக்கிறேன்.

நான் விண்டோஸ் ஜாதி. ஆனால் லினக்ஸ் விரும்பி. :)

தமிழ்சுவடி
07-01-2007, 01:27 AM
இது ஒரு நல்ல முயற்சி. ஆகவே இதை காலம் தாழ்த்தாமல் விரைவில் தொடங்குவீர்கள் என நம்புகிறேன்.

உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஓவியா
07-01-2007, 01:41 AM
என்ன கவீ பூஜை போட்டதோட சரியா.....

ஓ மாதம் இருமுறை மட்டும் தான் மலருமா ஜாவா.

சரி காத்திருக்கிறோம்.

மது நலமா??
வாங்க, பதிவை கண்டு ஆனந்தமடைந்தேன்

Mathu
07-01-2007, 12:23 PM
மது நலமா??
வாங்க, பதிவை கண்டு ஆனந்தமடைந்தேன்

நலம் ஓவியா....

இனி கொஞ்சம் இங்கும் பார்க்கலாம் இந்த ஆண்டு இடம் கொடுக்கும்
என்று நினைக்கிறேன்

:p :p

kavitha
13-01-2007, 04:37 AM
என்ன கவீ பூஜை போட்டதோட சரியா.....

ஓ மாதம் இருமுறை மட்டும் தான் மலருமா ஜாவா.

சரி காத்திருக்கிறோம்.

ஆமாம் மது. ஆனால் திங்களுக்காக காத்திருந்தால் புதுவருடப்பிறப்பு, பொங்கல் என்று விடுமுறையாக இருக்கிறது. எனவே மாதமிருமுறை என்ற கணக்கில் வெளியிடுகிறேன். இன்று முன்னுரை மட்டும். இங்கே பாருங்கள்: http://www.tamilmantram.com/vb/showthread.php?p=167088#post167088

இளசு
31-01-2007, 09:13 PM
கவிதாயினி தமிழ்ப்புலமை மற்றுமல்ல ஜாவாப் புலமையும் உள்ளவரா? அறியாமல் இருந்துவிட்டேனே. தொடருங்கள் சகோதரி காத்திருக்கிரேன். அ ஆ விலிருந்து கற்றுக் கொள்ள. எனக்கு கணிணி மொழி ஏதுமே தெரியாது.

அன்பு முகிலன்,

கவீ இரண்டு பாடங்கள் நடத்தியாயிற்று..
இடையில் பிறந்தநாள் வாழ்த்தும் பெற்றாயிற்று..

ஆயிரமாவது பதிவுடன் ஆஜர் கொடுங்கள் முகிலன்...:)

அறிஞர்
31-01-2007, 10:04 PM
தொடங்குங்கள் கவி...

எனக்கும் பிரயோனமாக இருக்கும்.

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 10:24 AM
நல்லதோர் பதிவு நானும் கலந்து கொள்கிறேன் உங்களோடு
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ஸ்ரீதர்
17-11-2010, 10:45 AM
ஆஹா அருமையான விஷயம்.. இன்னொரு சமாசாரம் கத்துக்கலாம்.. நன்றி சகோதரி !!

ஸ்ரீதர்
17-11-2010, 10:48 AM
மேலும் HTML அறியாதவர்களும் அழகான இணையதளங்களை அமைக்க Content Management System (CMS) உதவுகிறது. இதுவும் இலவசமாக கிடைக்கும் மென்பொருள். இவையெல்லாம் இணையத்தில் புரட்சி என்றே சொல்லவேண்டும்.

மோகன் சார் , இந்த cms மென்பொருள் தரவிறக்க லிங்க் தரமுடியுமா.. கூகிளாண்டவர் சரியா சொல்ல மாட்டேன்கிறார்..