PDA

View Full Version : விடுதலை தந்த ஓவியம்gragavan
19-12-2006, 05:52 PM
விடுதலை (http://gragavan.blogspot.com/2006/10/blog-post.html)


விடுதலை (http://gragavan.blogspot.com/2006/10/blog-post.html) என்ற தலைப்பில் தேன்கூடும் (http://www.thenkoodu.com), தமிழோவியமும் (http://www.tamiloviam.com) நடத்திய போட்டியில் நீங்கள் எனக்கு...இல்லையில்லை..என்னுடைய கதைக்கு இரண்டாம் பரிசு வாங்கித் தந்தீர்கள் அல்லவா. அதற்காக தமிழோவியத்தில் சிறப்பு ஆசிரியராக இருக்கப் பணித்தார்கள். அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க சில பதிப்புகளை இட்டுள்ளேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அருட்பெருங்கோவைத் (http://arutperungo.blogspot.com/)தெரிந்திருக்கும் அனைவருக்கும். காதலை வாங்கி முத்தம் கொடுக்கிறவர். கவிதைப் பித்தன். அதிலும் மையல் ததும்பும் கவிதைகளை அள்ளித் தெளிக்கின்ற கவிஞர். காதற் குளியல் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைக் குளியல் இங்கே (http://www.tamiloviam.com/unicode/12140608.asp).

நான் எழுதிய வலைப்பதிவுகளில் சிறந்தது என்று கேட்டால் எனக்குத் தெரியாது. அனைத்தும் எனது பூக்கள். பாகுபாடு கிடையாது. ஆகையால்தான் ஐம்பது நூறுக்கெல்லாம் பதிவு போடவில்லை. என் பிள்ளைகள் அனைவரும் எனக்கு ஒன்றுதான். ஆனாலும் படிக்கின்றவர்களின் பார்வையில் சில பதிவுகள் என்ற வகையில் சில பதிவுகளை இங்கே (http://www.tamiloviam.com/unicode/12140614.asp) பட்டியலிட்டுள்ளேன்.

பாரு பாரு நல்லாப் பாரு பயாஸ்கோப்பு படத்தப் பாரு....ஆமாங்க நான் எடுத்த சில புகைப்படங்கள். உங்கோளோடு இங்கே (http://www.tamiloviam.com/unicode/12140603.asp) பகிர்கிறேன்.

காதல்...மனிதனுக்கு மட்டும் வருமா? விலங்குகளுக்கும் வருமா?இங்கே (http://www.tamiloviam.com/unicode/12140612.asp) ஒரு காட்டிற்கே வந்திருக்கிறதே! படித்துப் பாருங்கள். படிக்கப் படிக்க மயக்கும் என்பதற்கு உத்திரவாதம்.

அடுப்படியில் வந்திருக்க வேண்டிய குறிப்பு இது. அசைவக் குறிப்பு. பெயர் கோசணி. இங்கே (http://www.tamiloviam.com/unicode/12140606.asp) கிடைக்கும். இது என்னுடைய கண்டுபிடிப்பு. என் நண்பர்கள் பலர் மெச்சிய குறிப்பு.

ஜிரா என்றால் தமிழ் இல்லாமலா? முருகன் இல்லாமலா? இதோ...திருக்குற்றாலக் குறவஞ்சி இங்கே (http://www.tamiloviam.com/unicode/12140610.asp).
வாய்ப்பளித்த தமிழோவியத்திற்கும் தேன்கூட்டிற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றி பல.

அன்புடன்,
கோ.இராகவன்

gragavan
19-12-2006, 05:53 PM
இந்த html உரல்கள் வரமாட்டேன் என்கிறதே...யாரேனும் உதவுங்களேன். :-(

இளசு
19-12-2006, 11:45 PM
வாழ்த்துகள் ராகவன்..

உங்கள் கதை பரிசு பெற்றமைக்கும்..

தமிழோவியம் ஆசிரியர் ஆனதற்கும்..


பெரிய பதிப்புகள் பதிப்பதில் இருந்த சிக்கலை இன்றுதான்
தலைவர் இராசகுமாரன் சரி செய்தார்..


இந்த யூஆரெல் சிக்கலை அறிஞரின் பார்வைக்கு கொண்டுசெல்கிறேன்..

gragavan
20-12-2006, 04:05 AM
வாழ்த்துகள் ராகவன்..

உங்கள் கதை பரிசு பெற்றமைக்கும்..

தமிழோவியம் ஆசிரியர் ஆனதற்கும்..


பெரிய பதிப்புகள் பதிப்பதில் இருந்த சிக்கலை இன்றுதான்
தலைவர் இராசகுமாரன் சரி செய்தார்..


இந்த யூஆரெல் சிக்கலை அறிஞரின் பார்வைக்கு கொண்டுசெல்கிறேன்..நன்றி இளசு அண்ணா. இந்த முறை பதியும் பொழுதும்....ஒரு பயந்தான். எங்கே வெறும் பதிவாக வருமோ என்று. நல்லவேளை. ஆனால் உரல்களின் ஹெச்டிஎம்எல் சரியாக வரவில்லை. நான் ஏதேனும் தவறாகச் செய்திருக்கலாமோ!

தாமரை
20-12-2006, 04:29 AM
இந்த html உரல்கள் வரமாட்டேன் என்கிறதே...யாரேனும் உதவுங்களேன். :-(
உரலில் தலை கொடுத்து விட்டு உலக்கைக்கு பயந்தால் எப்படி???

மயூ
20-12-2006, 04:59 AM
இந்த html உரல்கள் வரமாட்டேன் என்கிறதே...யாரேனும் உதவுங்களேன். :-(
forum களில் html tags வேலை செய்வதில்லை என்று நினைக்கின்றேன்
{வலைப்பதிவு (http://thamizhblog.blogspot.com)}என்பதைப் பயன்படுத்திப் பாருங்கள்.

kavitha
20-12-2006, 05:36 AM
வாழ்த்துக்கள் ராகவன் அண்ணா. உங்கள் வலைப்பூவையும் இன்று தான் பார்த்தேன். நன்றாக வடிவமைத்திருக்கிறீர்கள்.

pradeepkt
20-12-2006, 06:09 AM
வாழ்த்துகள் ராகவா... எப்படியாச்சும் உரலை மீட்டுருங்க.

மதி
20-12-2006, 07:50 AM
இராகவரே..
வாழ்த்துக்கள்....

அறிஞர்
20-12-2006, 01:06 PM
எனக்கு சரியாக வருகிறதே... இந்த பதிப்பை சரிசெய்கிறேன்

அறிஞர்
20-12-2006, 02:09 PM
எங்கள் நண்பர் (மன்றத்தின் தூண்) மற்ற இடங்களில் பிராகாசிப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது...

இது தங்களின் முதல் படிதான் இராகவா...

இன்னும் உயர வேண்டிய தூரம் எவ்வளவோ உள்ளது.

இன்னும் நிறைய படியுங்கள், எழுதுங்கள்..... எங்களால் இயன்ற உதவியை தருகிறோம்.

meera
20-12-2006, 02:59 PM
ராகவன்,

உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.

வாழ்த்துகள்.

ஓவியா
20-12-2006, 03:26 PM
வாழ்த்துகள் ராகவன்..

இன்னும் நிரைய காவிங்கள் படைக்க வாழ்த்துக்கள்

ஆதவா
20-12-2006, 03:42 PM
ஆகா நம்மாளு வானத்தை தொட்டுட்டாரா? அய்யா ராகவரே நீங்க இறைத்த நட்சத்திரங்களை ஒவ்வொண்னா படிக்கிறேன்... அப்றம் வாழ்த்துக்கள் ராகவன்.. முதலில் html கோடு நேராக இல்லாததால படிக்கவேயில்ல...