PDA

View Full Version : ரோமச் சண்டை

ஆதவா
19-12-2006, 03:02 PM
இறுக்கி வைக்கப்பட்ட கதவுகளை
தளர்த்த விரும்பாத கைகள்
முறுக்கி யெழுந்த மீசையைத்
தடவுகின்றன.

காத்து கிடக்கின்றன அறைகள்
அதைவிட உன்னை எதிர்
பாத்துக் கிடக்கின்றன கண்கள்

எதிரிலே தெரிகிறாய் நீ
எதிரியாய்! போகட்டும்
பதிலே போதும்;
உனது வாய் திறந்து சொல்.

நிசப்தங்கள் அறையில் உருவாகிறது
உனது நாவசையாமல்
கசப்புகள் நம்முள் உருவாகிறது
நமது தோள் அசையாமல்.

என்னோடு இழைத்த ஊடல்கள்
உனக்கு நினைவிருக்கிறது.
கட்டில் ஆடல்கள் நினைவில்லை?
காமத் தேடல்கள் நினைவில்லை
உனக்கு தினமும் நமது
ரோமச் சண்டைகள் அகலவில்லை

இயற்கையாய் இழைத்த தவறாக
இருப்பின் அதை
இறக்கவிடு
இல்லையெனில் என்னை
இருக்க விடு!!

meera
20-12-2006, 05:59 AM
ஆதவன்

அழகான வரிகள்.எந்த ஒரு பிரச்சினைக்கும் நல்ல தீர்வு மனம் விட்டு பேசறது தான் இல்லயா.?

அருமை தொடருங்கள்.

ஷீ-நிசி
20-12-2006, 06:18 AM
ஆதவா... அருமை

கவிதைக்கும் தலைப்புக்கும் தொடர்பு என்ன?

ஆதவா
20-12-2006, 06:18 AM
நன்றி மீரா... இதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது... ( இந்த கவிதைக்கு நிறையபேர் திட்டினாங்கப்பா ஏன்னு தெரியல... )

ஆதவா
20-12-2006, 06:21 AM
ஆதவா... அருமை

கவிதைக்கும் தலைப்புக்கும் தொடர்பு என்ன?

ஷீ.. ரோமச் சண்டை என்றால் முடியை பிடித்து சண்டை போடுவது.. சில வரிகள் இங்கே நான் எழுதவில்லை மன்றம் தடைசெய்யமென்றும் நண்பர்கள் தவறாக எண்ணக்கூடுமென்றும்... தனிமடலில் டைப் செய்து அனுப்புகிறேன்...

முழுகவிதையும் படித்தபின்னே உங்களுக்குத் தெரியும்.

அமரன்
06-06-2007, 06:16 PM
கணவன் மனைவிக்கு இடையிலான ஊடலையும்...........
அதற்கான தீர்வாக எது இருக்கும் என்பதையும்...........
அழகாக் கூறி இருக்கின்றீர்கள் ஆதவா.
எதுகை மோனை சரளமாக இருக்கின்றது.

நன்றி மீரா... இதெல்லாம் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எழுதினது... ( இந்த கவிதைக்கு நிறையபேர் திட்டினாங்கப்பா ஏன்னு தெரியல... )

அதான் ஏன்னு அடுத்த பதிவில் சொல்லிட்டீங்கல்ல

ஷீ.. ரோமச் சண்டை என்றால் முடியை பிடித்து சண்டை போடுவது.. சில வரிகள் இங்கே நான் எழுதவில்லை மன்றம் தடைசெய்யமென்றும் நண்பர்கள் தவறாக எண்ணக்கூடுமென்றும்... தனிமடலில் டைப் செய்து அனுப்புகிறேன்...

முழுகவிதையும் படித்தபின்னே உங்களுக்குத் தெரியும்.

அந்த வரிகள் நிஷிக்கு மட்டும்தானா...... நமக்கெல்லாம் இல்லையா...?

ஆதவா
06-06-2007, 06:59 PM
நன்றி அமரன்.. அது நிசியாருக்கு அனுப்பியதாக நினைவில்லை.. எங்காவது எழுதி வைத்திருப்பேன்.. தேடி எடுத்துத் தருகிறேன்....

என்னவன் விஜய்
09-05-2008, 02:05 PM
ஆதவா......
இக்கவியை இப்படியே படிக்கவும் நன்றாகதான்ன் இருக்கின்றது.