PDA

View Full Version : சுனாமி!!!!



meera
19-12-2006, 08:37 AM
சுனாமி என்னும்
சூழ்ச்சிக்காரன்
சுருட்டிக்கொண்டு போனான்
சொத்துக்களை மட்டுமல்ல
சொந்தங்களையும் சேர்த்து!!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
ரசித்த அலை
விளையாடிய கடற்கரை - இன்று
பூதத்தை பார்த்ததொரு
பயத்தை தருகிறது.

மாண்டவர் மாண்டுவிட்டார்கள்
மற்றவர் அழுது தீர்த்துவிட்டு
அமைதியானார்கள்......

ஆனால் - நான்
பார்க்கும் முகங்களில்
எல்லாம் - என்
பெற்றோரின் முகம்
தேடி தேடி.......

நம்பிக்கை வை!
நடக்குமென்பது
நிஜமா? - என்
நம்பிக்கை நிஜமாகுமா?:confused: :confused:

ஷீ-நிசி
19-12-2006, 08:44 AM
அருமை மீரா...

meera
19-12-2006, 08:48 AM
நன்றி ஷீ

மதி
19-12-2006, 01:26 PM
உண்மையிலேயே சுனாமியால் சொந்தங்களை இழந்தவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. ஆனால் என்றேனும் அவர் தம் நம்பிக்கை பலிக்கட்டும். நல்ல கவிதை மீரா..!

ஆதவா
19-12-2006, 01:53 PM
சுனாமி என்னும்
சூழ்ச்சிக்காரன்
சுருட்டிக்கொண்டு போனான்
?:confused: :confused:

மீரா எனக்கு இந்தமாதிரி கவிதை எழுதுவது பிடிக்கவில்லை... இதுபோல் கவிதை எழுதக்கூடாதென்றே நினைக்கிறேன்.. (கவிதை அருமை; ஆனால் இனி எழுத வாய்ப்பு கூடாதென்றே சொல்லுகிறேன் ) அதேசமயம் இச்சம்பவங்களில் சற்று உதவியும் செய்திருக்கிறேன்... ( எங்கள் ஊரிலிருந்து துணிகள் ஏகப்பட்டது சென்றன.. அவைகளுக்கு சொற்ப காரணமாக இருந்தேன்) .. ஆனால் கவிதை மட்டும் எழுத முற்பட்டதில்லை... இறைவன் மேலிருந்து சிரிப்பதை கீழிருந்து கவிதையால் அழுவது எனக்கு பிடிக்கவில்லை...

அறிஞர்
19-12-2006, 02:13 PM
சுனாமி என்னும்
சூழ்ச்சிக்காரன்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்
ரசித்த அலை
விளையாடிய கடற்கரை - இன்று
பூதத்தை பார்த்ததொரு
பயத்தை தருகிறது.
?:confused: :confused:
அருமையான கவிதை மீரா...
சொந்தங்களை தொலைத்து விட்டோம்....
ரசித்த அலைகள் பயத்தை தருகிறது.

ஷீ-நிசி
19-12-2006, 02:23 PM
ஆதவா... கவிதை எழுதுவதே உள்ளத்தின் வெளிப்பாடுதான்...

வேதனைகள்,
பலருக்கு விழியில் வழிகிறது...
சிலருக்கு மொழியில் வழிகிறது..

மீரா மொழியில் அழுகிறார்!!

அவ்வளவே!!

நம்பிகோபாலன்
19-12-2006, 02:56 PM
அருமை

gandhi
20-12-2006, 04:40 AM
"இதுவரை உன்னயும் தாயென்றேன்,
இன்று என் தாயை நீயே எடுத்துக்கொண்டாய்....
ஏன்?
உன்னை விட அவள் மேல் நான்
அதிக பாசம் வைத்ததால்
பொறாமையோ உனக்கு?
உன்னை தாயென சொல்லித்தந்தவளையே
மரிக்கச்செய்தாய், இனி
உன்னை தாயென சொல்வேனோ?"

ஒரு சேயின் கண்ணீர்........ கவிதையாய்,
அருமை மீரா.

அன்புடன்,
காந்தி.

meera
20-12-2006, 05:34 AM
மீரா எனக்கு இந்தமாதிரி கவிதை எழுதுவது பிடிக்கவில்லை... இதுபோல் கவிதை எழுதக்கூடாதென்றே நினைக்கிறேன்.. (கவிதை அருமை; ஆனால் இனி எழுத வாய்ப்பு கூடாதென்றே சொல்லுகிறேன் ) அதேசமயம் இச்சம்பவங்களில் சற்று உதவியும் செய்திருக்கிறேன்... ( எங்கள் ஊரிலிருந்து துணிகள் ஏகப்பட்டது சென்றன.. அவைகளுக்கு சொற்ப காரணமாக இருந்தேன்) .. ஆனால் கவிதை மட்டும் எழுத முற்பட்டதில்லை... இறைவன் மேலிருந்து சிரிப்பதை கீழிருந்து கவிதையால் அழுவது எனக்கு பிடிக்கவில்லை...


ஆதவன்,

உங்க ஆதங்கம் புரியுது.ஆனா,இது மாதிரி கவிதைகள் யாரும் சந்தோஷமா எழுத மாட்டாங்க இல்லயா?.சன் டி வி அரட்டை அரங்கம் நிகழ்ச்சில ஒரு 4 வயது குழந்தையை காட்டி அதோட அம்மா,அப்பா எங்க இருக்காங்கனு தெரியலை,தெரிஞ்சவங்க சொல்லுங்கனு சொல்லிட்டு இருந்தாங்க.அப்போ மனசுல ஒரு பாரம்.அது கவிதையா வெளிவந்தது அவ்வளவே.

நானும் கடவுளை வேண்டிக்கறது இது தான்,இப்படி ஒரு சம்பவம் இனிமேல் நடக்ககூடாதுனு தான்.

meera
20-12-2006, 05:36 AM
நன்றி மதி மற்றும் அறிஞர் சார்.

meera
20-12-2006, 05:38 AM
நன்றி நம்பிகோபாலன்,காந்தி.